திராவிடர் இனம்

செவ்வாய், 26 ஜூலை, 2022

பார்ப்பனர் - ஆரியர்களே என்பதற்குச் சான்றுகள்



  May 28, 2022 • Viduthalai

“மொழி ஞாயிறு” ஞா.தேவநேயப்பாவாணர் 

(பார்ப்பனர்கள் - ஆரியர்களே, என்பதை விளக்கி - பாவாணர் அவர்கள் தந்துள்ள ஆராய்ச்சி விளக்கங்கள் இது; அவரது சிறப்பு வாய்ந்த நூலான ‘ஒப்பியன் மொழி’ நூலிலிருந்து எடுக்கப்பட்டது.)

(1) உருவம் - நிறம் : பார்ப்பனர் வடக்கேயுள்ள குளிர்நாட்டி னின்றும் வந்தவராதலின், தமிழ்நாட்டிற்கு வந்த புதிதில் மேனாட் டாரைப்போல் வெண்ணிறமாயிருந்தனர்; பின்பு வெயிலிற் காயக் காயச் சிறிது சிறிதாய் நிறமாறி வருகின்றனர்.

‘கருத்தப் பார்ப்பானையும் சிவத்தப் பறையனையும் நம்பக் கூடாது’ என்பது பழமொழி. பார்ப்பனருக்குரிய நிறம் வெள்ளை யென்பதும், வெயிலிற்காயும் பறையனுக்குரிய நிறம் கருப்பென் பதும் இவர் இதற்கு மாறான நிறத்தினராயிருப்பின் அது பிறவிக்குற்றத்தைக் குறிக்குமென்பதும் இதன் கருத்து.

குடுமி : பண்டைத் தமிழருள் ஆடவர் (புருஷர்) குடுமி வைத்திருந்தனரேனும், பார்ப்பனரைப்போல மிகச் சிறிய உச்சிக்குடுமி வைத்திருந்ததாகத் தெரியவில்லை. பெண்டிர் இன்றுபோலத் தலைமயிர் முழுவதையும் வளரவிட்டனர். ஆடவர் சுற்றிவரச் சிறிது ஒதுக்கிக்கொண்டனர். ஆடவர் முடி சிறிதாயும், பெண்டிர் முடி பெரிதாயுமிருந்ததினால், இவை முறையே குஞ்சியென்றும், கூந்தலென்றும் கூறப்பட்டன. குடுமி என்பது உச்சிப் பாகத்தி லுள்ளதைக் குறிக்கும்.

“அன்னாய் வாழிவேண்டன்னை நம்மூர்ப்

பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்

குடுமித் தலைய மன்ற

நெடுமலை நாட னூர்ந்த மாவே”  

என்னும் அய்ங்குறுநூற்றுச் செய்யுளில் (குறிஞ்சி, 202), குதிரையின் தலையாட் டத்திற்குப் பார்ப்பனச் சிறுவனின் குடுமியை உவமை கூறி யிருப்பது, அது தமிழ்ச் சிறுவனின் குடுமியினும் மிகச் சிறிதா யிருந்தமைபற்றியே.

மீசை : மீசையைச் சிரைத்துக்கொள் ளும் வழக்கம் ஆரியரதே. தமிழரிற் சிலர் மேனாட்டாரியரைப் பின்பற்றி இப்போது மீசையைச் சிரைத்துக்கொள்கின்றனர்.

(2) உடை : பார்ப்பனருள் ஆடவர் பஞ்சகச்சம் கட்டுகின்றனர்; பெண்டிர் தாறு பாய்ச்சிக் கட்டுகின்றனர். இவை தமிழர் வழக்க மல்ல. விசுவப் பிராமணரென்று தங்களைக் கூறிக்கொள்ளும் கம்மாளர், பார்ப்பனரோடு இகலிக்கொண்டே சிலவிடத்து அவரது உடுமுறையைப் பின்பற்றுகின்றனர்.

நூல் : பூணூலணிதல் பார்ப்பனர்க்கே உரியது, ‘நூலெனிலோ கோல்சாயும்’ என்னுஞ் செய்யுளும், ‘ஊர்கெட நூலைவிடு’ என்னும் பழமொழியும் இதனை வற்புறுத்தும்.

தமிழ்நாட்டு வணிகரும் அய்வகைக் கம்மியரும் பூணூல் பூண்டது, அறியாமைபற்றி ஆரிய முறையைச் சிறந்ததாகக் கருதிய பிற்காலமாகும்.

ஆரியம் தமிழ்நாட்டில் வேரூன்றிப் பார்ப்பனருக்குத் தலைமையேற்பட்டபின், பல தமிழ் வகுப்பினர் தங்களுக்கு ஆரியத் தொடர்பு கூறுவதை உயர்வாகக் கருதினர். ஆரியக் குலமுறைக்கும் திராவிடக் குலமுறைக்கும் இயையு இல்லாவிடினும், ஆரியரல்லாதவரெல்லாம் சூத்திர வகுப்பின் பாற்பட்டவர் என்னும் தவறான ஆரியப் பொதுக்கொள்கைப் படி, தமிழ ரெல்லாருக்கும் சூத்திரப் பொதுப்பட்டம் சூட்டின பிற்காலத் தில், தமிழ் நாட்டிலுள்ள வணிகர் தங்களை வைசியரென்று சொல்லிக் கொண்டால், சூத்திரப்பட்டம் நீங்குவதுடன் ஆரியக் குலத் தொடர்புங் கூறிக்கொள்ளலா மென்று, ஆரிய முறையைப் பின்பற்றி வைசியர், சிரேஷ்டி (சிரேட்டி - செட்டி) என்னும் ஆரியப் பெயர்களையும், பூணூலணியும் வழக்கத்தையும் மேற்கொண்டனர். வணிகர் செல்வமிகுந்தவராதலின் அவரது துணையின் இன்றியமையாமையையும், தமிழர்க்குள் பிரிவு ஏற்பட ஏற்பட அவரது ஒற்றுமை கெட்டுத் தங்கட்குத் தமிழ்நாட் டில் ஊற்றமும், மேன்மையும் ஏற்பட வசதியாயிருப்பதையும், பார்ப்பனர் எண்ணித் தமிழ் வணிகருக்குத் தாராளமாய் வைசியப்பட்டம் தந்தனர்.

ஆரியர்க்குள், பூணூலணிவது பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் என்னும் மேல் மூவருணத்தார்க்கும் உரியதேனும், அது ஆரியரொடு தொடர்பில்லாத தமிழர்க்குச் சிறிதும் ஏற்பதன்று. ஒவ்வொரு நாட்டிலும் மறையோர், அரசர், வணிகர், உழவர் என்னும் நாற்பாலார் உளர். அவரையெல்லாம் (சிறிது வேறு பட்ட) ஆரிய முறைப்படி முறையே பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று கொள்ளின், இங்கிலாந்திலுள்ள கந்தர்புரி (Canterbury)  அரசக் கண்காணிப்பாளரைப் (Arch Bishop) பிராமணரென்றும், மாட்சிமை தங்கிய ஆறாம் ஜியார்ஜ் மன்னரை க்ஷத்திரியரென்றும், அங்குள்ள வணிகத் தொழிலா ளரை வைசியரென்றும், உழவரையும், கூலிக் காரரையும் சூத்திர ரென்றும் கூறவேண்டும். ஆங்கிலேயர் ஒரு கலவைக் குலத்தா ரேனும், உறவுமுறையில் எல்லாரும் ஒரே குலத்தார் என்பது சரித்திரமறிந்த அனைவர்க்கும் தெளிவாய்த் தெரிந்ததே. பிராம ணர்கள் பிற நாடுகளிலுள்ளவர்களையும் ஆரியக்குல முறைப் படி பகுத்தாலும் பிராமணக் குலத்தன்மை மட்டும் தங்கட்கே யுரியதாகக் கொள்வர். அதோடு கூடியவரை எல்லாரை யும் சூத்திரரென்று பொதுப்படச் சொல்லி, பின்பு ஒரு பயனோக்கி அரசரை க்ஷத்திரியரென்றும், வணிகரை வைசியரென்றும் முன்னுக்குப்பின் முரண்படக் கூறுவது அவர் வழக்கம்.

ஆரிய - திராவிட வருண வேறுபாட்டைப் பின்னர் காண்க: 

கம்மியர் (கம்மாளர்) நெடுங்காலமாகப் பிராமணரொடு இகல்கொண்டு வருவதனால், தாமும் பிராமணரும் சமம் என்று காட்டுவதற்காகப் பூணூலணிந்து வருகின்றன ரேயன்றி வேறன்று.

தமிழ்நாட்டில் பூணூலணியும் தமிழரெல்லாம் ஏதேனும் ஒரு வணிகத் தொழிலராயும், கம்மியத் தொழிலராயுமே இருப்பர். தமிழரின் நாகரிகத்தையும், சரித்திரத்தையும் அறியாத தமிழர், ஆரிய நாகரிகத்தை உயர்ந்ததென மயங்கி, இக்காலத்தும் ஆரிய வழக்கத்தை மேற்கொள்வதால் உயர்வடையலாமென்று கருது கின்றனர். சில ஆண்டுகட்குமுன் சிவகாசி, சாத்தூர் முதலிய சில இடங்களிலுள்ள தனித் தமிழரான நாடார் குலத்தினர், புதிதாகப் பூணூலணிந்து கொண்டதுடன், தங்களை க்ஷத்திரியரென்றும் கூறிக்கொண்டனர். நாடார் குலத்தினர் வணிக குலத்தைச் சேர்ந்தவரென்பது உலக வழக்காலும், நூல் வழக்காலும் தெளிவாயறியக் கிடக்கின்றது. வைசியர், க்ஷத்திரியர் என்னும் பெயர்கள் வடசொற்களாயிருப்பதுடன், க்ஷத்திரியர் என்னும் பெயர் நாடார் குலத்திற்கு ஏற்காததாயு மிருக்கின்றது.

நூல் என்பது புத்தகத்திற்கும் இழைக்கும் பொதுப் பெயராத லின், நூலோர் என்னும் பெயர் அறிஞரையும் பார்ப்பனரையுங் குறிக்கும் இடம் நோக்கி யறிந்து கொள்க.

(3) நடை : தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில், 12ஆம் சூத்திர வுரையில், “தன்மையென்பது சாதித் தன்மை; அவையாவன பார்ப்பாராயிற் குந்திமிதித்துக் குறுநடைக் கொண்டு வந்து தோன்றலும்” என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். இத் தன்மையை இன்றும் ஆங்கில நாகரிகம் நுழையாத சிற்றூர்களிற் காணலாம்.

(4) மொழி : பார்ப்பனரின் முன்னோர் பேசிய மொழி வடமொழியாகும். வடமொழி என்பது சமஸ்கிருதம். பண்டைக் காலத்தில் வடக்கில் சமஸ்கிருதமும், தெற்கில் தமிழுமாக இரு பெரு மொழிகளே இந்தியாவில் வழங்கி வந்தன. அதனால் அவற்றுக்கு முறையே வடமொழி, தென்மொழி என்று பெயர்.

வடமொழி செயற்கையான வடிவில் மிக முதிர்ந்ததாதலின் வழக்குறாது போய்விட்டது. ஆனாலும், ஆரியப் பிராமணரின் வழியினரான பார்ப்பனர் இன்று வடமொழியைத் தம்மாலியன்ற வரை பாதுகாத்து வருகின்றனர். பிராமணர் இந்தியாவில் எந்த இடத்திலிருந்தாலும், எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் வடமொழிப் பயிற்சியை மட்டும் விடார். மற்ற வகுப்பாரோ பெரும்பாலும் தத்தம் தாய்மொழிகளையே அறிந்திருப்பர். வடமொழியின் கடினம்பற்றிச் சில பார்ப்பனர் அதைக் கல்லாதிருப்பினும், அதன்மேல் வைத்திருக்கும் பற்றில் மட்டும், அதைக் கற்றவரினும் எள்ளளவும் குறைந்தவராகார். பார்ப்பனர் பிற மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டிருப்பதும், வடமொழி வழக்கற்றவிடத்து வேறு போக்கின்றியே யன்றி வேறன்று.

பார்ப்பனர் வடமொழியைப் பேசாவிடினும் வளர்ப்பு மொழியாகக் கொண்டுள்ளமையின், அவர்க்கு வடமொழியாளர் என்று பெயர்.

மணிமேகலையில், ‘வடமொழியாளர்’ (5 : 40) என்று பார்ப்பனர்க் கும், ‘வடமொழி யாட்டி’ (13 : 78) என்று பார்ப்பனிக்கும் வந்திருத் தல் காண்க.

வடமொழிக்குத் தமிழ் நூல்களில் ஆரியம் என்னும் பெயரும் வழங்குகின்றது. இப் பெயரொன்றே பார்ப்பனரைத் திராவிடரி னின்றும் வேறான ஆரியராகக் கொள்ளப் போதிய சான்றாகும். ஆரிய நாடு, ஆரியபூமி, ஆரியாவர்த்தம் என்று சொல்லப்படுவது பனி (இமய) மலைக்கும், விந்திய மலைக்கும் இடையிலுள்ள பாகமாகும். இதுதான் ஆரியர் இந்தியாவில் முதலாவது பரவி நிலைத்த இடம். இங்கு வழங்கினதினால்தான் ஆரிய மொழிக்கு ‘வடமொழி’ யென்றுபெயர்.

வடநாட்டில், ஆரியரும், ஆரியர்க்கு முந்தின பழங்குடிகளும் பெரும்பாலும் கலந்துபோனமையின், பிற்காலத்தில் வட நாட்டார்க்கெல்லாம் பொதுவாக ‘வடவர்’ ‘ஆரியர்’ என்னும் பெயர்கள் தமிழ் நூல்களில் வழங்கிவருகின்றன.

ஆரியம் என்னும் பெயரால் தமிழ்நாட்டில்  ஒரு பொருளுங் குறிக்கப்படுவதில்லை. ஆரியக் கூத்து என்பது தமிழ்நாட்டில் இசைத் தமிழும், நாடகத் தமிழும் வழக்கற்றபின், வடநாட்டார் வந்து ஆடிய நாடகத்திறமேயன்றி, பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளபடி கழைக் கூத்தன்று.

ஆரியன் என்னும் பெயருக்கு, ஆசிரியன், பெரியோன், பூசாரியன் முதலிய பொருள்களெல்லாம் தமிழில் தோன்றினது தமிழ் நாட்டில் பார்ப்பனத் தலைமை ஏற்பட்ட பிற்காலத்தேயாகும். இப் பொருள்களும் நூல் வழக்கேயன்றி உலக வழக்காகா.

வடமொழி, தென்மொழியின் செவிலித்தாயென்றும், நற்றா யென்றும், இந்தியப் பொதுமொழியென்றும் ஆராய்ச்சியில்லாத பலர் கூறி வருகின்றனர். உலக மொழிகளில், ஆரிய மொழிகளும் திராவிட மொழிகளும் மொழிநிலையில் மிக வேறுபட்டன வாகும். திராவிடக் குடும்பம் மிக இயல்பானதும், ‘ஆரியக் குடும்பம் மிகத் திரிந்ததுமாகும். அவற்றுள்ளும், இயல்பிற் சிறந்த தமிழும் திரிபில் முதிர்ந்த வடமொழியும் மிக மிக வேறு பட்டனவாகும்.

‘விடுதலை’ - 13.02.1995

இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:07 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆரியர், பார்ப்பனர், பாவாணர்

திங்கள், 6 டிசம்பர், 2021

செம்மொழி : தமிழும் பிராகூயி மொழியும்


சிந்து _ மெகார்கர் நாகரிக மக்கள் மொழி _ பிராகூயி.

இது பாகிஸ்தான் பலுசிஸ்தானில் வழங்கிய _ வழங்கிவரும் முந்து தமிழின் வடக்குக் கிளைமொழி. 

சில நாள்களுக்கு முன்பு என்னுடைய கல்லூரிக் காலத்தில் (1968 _ 71) நான் படித்து எழுதி வைத்திருந்த ஆய்வுக் குறிப்புகளின் கோப்பு ஒன்றை வீட்டுப் பரணிலிருந்த பெட்டியிலிருந்து கண்டெடுக்க நேர்ந்தது. அத்தொகுப்பில் பல்வேறு அரிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளைக் கண்டு எனக்கே மலைப்பாக இருந்தது. இந்திய சுதந்திரத்துக்கு முன்பும், அதனை ஒட்டியும் நம் அறிஞர்கள் எத்தனை உயர்வான, நுணுக்கமான செய்திகளை எடுத்து எழுதி இருக்கிறார்கள்!

அதில் ஒன்றுதான் சர் டெனிஸ் பிரே (Sir Denys Bray) எழுதிய The Brahui Language என்ற பிராகூயி மொழியை அறிமுகம் செய்யும் நூல். உங்களுக்குப் பயன்படும், தேடுவதற்கு வசதியாயிருக்கும் என்பதால் நூல் விவரம் கூறுகிறேன்.

The Brahui Language
Part II The Bragui problem
Part III Etymological Vocabulary
by
Sir Denys Bray
Delhi. Manager of Publications,
1934, Price Rs. 7.14.

இங்கு அவர் காட்டியுள்ள பிராகூயி மொழிச் சொற்களை மட்டும் பதிவிடுகிறேன். பொதுவாக அம்மொழியை மொழியியலார் வடதிராவிடக் கிளை மொழியென வகைப்-படுத்தியுள்ளனர்.

ஆனால், உண்மையில் மலையாளம், கன்னடம் போன்ற தமிழ் வழங்கும் பகுதியிலுள்ள மொழிகளைவிட இந்த வடதிராவிடக் கிளைமொழி எனப்படும் பிராகூயி தமிழுடன் மிக நெருக்கமான மொழிப் பண்புகளைக் கொண்டுள்ளது.

இதற்குக் காரணம் அப்பகுதிக்கு ஆரியர் வந்தாலும் _ பிராகூயி மொழியில் அவர்தம் மொழியின் தாக்கம் குறைவு. சிந்து வெளிக்கு வந்த ஆரியர் பலுசிஸ்தான் போன்ற மலைப்பகுதிகளில் அதிக கவனம் கொள்ள-வில்லை. அத்துடன் இந்த பிராகூயி மக்களின் முன்னோர் சிந்துவெளிக்கு ஆரியர் வந்ததும், தாங்கள் வாழ்ந்த அரப்பா மொகஞ்சதாரோ, குஜராத்து முதலிய சிந்து நாகரிகப் பகுதியிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கே மலைப் பகுதிகளை நோக்கியும் சென்று-விட்டனர். பிறகும் அவர்கள், துவாரகை போன்ற இடங்கள் அழிவுற்றபோது அவர்கள் தமிழகம் வந்தது போல, அங்கிருந்து பாதுகாப்பான மலைப் பகுதியான பலுசிஸ்தானை நோக்கிப் புலம் பெயர்ந்தனர். அதே நிலைதான் ஆரியர் கங்கைச் சமவெளிக்கு வந்ததும் மக்கள் விந்திய மலைப் பகுதிகளை நோக்கித் திரண்ட போதும். இன்றைய கோண்டுகளும், கூயி மக்களும் நாகரிக மக்களாக இருந்து மலை மக்கள் ஆனது இவ்வாறுதான்.

பிராகூயி மக்கள் இன்னும் மரபு முறையாகவும், வாய்மொழி மரபிலும் இப்புலப்பெயர்ச்சிக்கான சான்றுகளைக் கொண்டுள்ளனர். ஆயினும், இவர்களே கி.மு.3500 _ கி.மு.3300 அளவில் பலுசிஸ்தானின் போலன் கணவாய்ப் பகுதி போலன் ஆற்றின் கச்சி சமவெளியிலுள்ள மெகார்கர் பகுதியில் இருந்து அண்மையில் 250 கி.மீ. தொலைவில் இருந்த சிந்து நதியின் சமவெளியை நோக்கிப் பெயர்ந்து சென்று அங்கு கி.மு.2800 அளவுக்குப் பிறகு முதிர் சிந்து நாகரிகத்தினை அப்பகுதியில் வளர்த்தெடுத்தனர். இன்றைய சிந்து வெளிப்பகுதியில் தமிழின மொழிகள் எவையும் வழங்கவில்லை என்றாலும் ஆரிய இடையூறு இல்லாத இடமான பலுசிஸ்தானில் இன்றளவும் தமிழின மொழியான பிராகூயி மொழி வழங்கி வருகிறது. ஆனால், பிராகூயி மக்கள் உருது _ பலுச்சி மொழியால் தாக்குண்டு இருக்கிறார்கள்.  ஆயினும், தங்கள் தமிழின மொழி இயல்பைக் காத்துக் கொண்டே வருகிறார்கள்.

இதற்குமேல், இதனை இங்கு விளக்கப் போவதில்லை. காரணம் நமது நோக்கம் அவர்களது வரலாற்றை ஆராய்வது அல்ல. மாறாக, பிராகூயி மொழியின் அடிப்படைச் சொற்களை சர்.பிரே அவர்களது வழியில் எடுத்துக்காட்டித் தமிழ்ச் சொற்களோடு ஒப்பிடுவதே. இனி, உங்கள் ஆய்வுக்கு இதனை விடுகிறேன்.

ஆங்கிலம் - தமிழ் - பொருள் 

1.    abba = papa, etc மீtநீ அப்பா   

2.    ada = address to a man  அடா

3.    a:y. = mother, sister  ஆயி 

4.    alava = certainly not  அல்லவே

5.    amba:r = Granary  அம்பாரம்

6.    amma = Mother அம்மா

7.    anda = This same அந்த

8.    anna = still  இன்னும்

9.    anno = today அன்று  

10.    ari. = mad, Rabit அறி / அரி

11.    ba = mouth வா / வாய்

12.    badali = substitute பதிலி

13.    bil = bow வில்

14.    dir = water நீர்

15.    ira. = two இரு

16.    irat = tow / double இரட்டுதல்

17.    iratti = tow together இரட்டித்த

18.    kal = water hold  கலிங்க

19.    kallar = saline soil களர்

20.    katta:r = knife கட்டாரி

21.    kot = fort  கோட்டை

22.    ku:cha = plain , low land  கச்சா

23.    kudi = hut, small house குடிசை

24.    ku:k = cry, shout கூக்குரல்

25.    kuda:m = nest கூடு, குடம்பை

26.    kha:kho = crow காக்கை

27.    khal = stone கல்

28.    kha:li = empty காலி

29.    khan = eye கண்

30.    khe:l = tribe, family கேள்

31.    malh = son மகன்

32.    ma:m:a = maternal uncle மாமா

33.    mana = sense,  மனம்

34.    mar = the tree மரம்

35.    ma:r = son, lad  மாறன்

36.    mu:si = three மூன்று

37.    musko = ancestor முன்னோர்

38.    mutkun = old  முதுவன்

39.    mut = fist  முட்டி

40.    nang = wife நங்கை

41.    ni = thou  நீ

42.    ni:l = blue நீலம்

43.    num = you நும்

44.    pa:l = omen பால்வரை

45.    palh = milk பால்

46.    pa:tti = woman head band  பட்டி

47.    patti = female  பட்டி, பெண்

48.    pattu = coarse woollen cloth பட்டு

49.    pillota = poor small child  பிள்ளை

50.    potau = bald plain பொட்டல்

51.    pu.    = worm புழு

52.    pula:v = meat with rice புலவுணா 

53.    pu:ll = flower  பூவு 

54.    pulli = nose ornament புள்ளி

55.    sum = arrow அம்பு

56.    su:ti = usurer சூதன்

57.    sha:li = unhusked rice சாலி நெல்

58.    tania = alone தனியே

59.    telh = scorpion  தேள்

60.    ten = self, myself தன்

61.    tugh = sleep தூக்கம்

62.    tughi = sleepy தூங்கி

63.    tunga:n = sound asleep தூங்கான் (தூங்ஙான் = மலையாளம்)

64.    um = also ஆம்

65.    ura = house  உறை, உறையுள்

66.    va:ta:n = prosperous  வாடாதவன்

67.    vad = cut  வெட்டு

68.    alata alla = certainly not இல்லடா இல்லை

69.    bei = grazing  மேய்

70.    alli = needle work  அல்லு 

71.    a:shiki = love  ஆசை.

72.    muru = hares முயல்

பிராகூயி சொற்கள் அனைத்துமே முழுமையாகத் தமிழுடன் இணைத்து பொருள் காணத் தக்கனவாகவே உள்ளன எனலாம். இம்மொழியே தொல்பழங்காலத்தில் வழங்கி, பலுசிஸ்தானில் போலன் ஆற்றங்கரையில் உருவான மெகார்கர் நாகரிக மொழியாகவும், பின்னர் சிந்து ஆற்றங்கரையில் சிந்துவெளி நாகரிக மக்களின் மொழியாகவும் இந்த பிராகூயி மொழியே இருந்தது என்று கருத வேண்டியுள்ளது. ஆனால், அம்மொழியைக் குறித்த சில ஆய்வாளர்களின் தவறான கருத்துகளை முறியடித்து இன்று அதனை அறிஞர்கள் வடதிராவிட மொழியென நிறுவியுள்ளனர்.

இம்மொழி பேசிய வேடர்களே கி.மு.10,000 அளவில் தோன்றிய ஹாலோசின் இதவெப்ப காலத்தில் ஆற்றுச் சமவெளிகளுக்கு வந்து ஒரே இடத்தில் நிலைத்த வாழ்வைத் தொடங்கி புதிய கற்காலத்தில் சிறந்த வேளாண் நாகரிகம் பெற்று உயர்ந்து நின்றனர். இவர்களே, இந்தியத் துணைக் கண்ட முதல் உழவர்கள். இவர்களே பின்பு கி.மு.5000 அளவில் பலுசிஸ்தானில் செம்பு உலோகம் கண்டுபிடித்து செம்புக்கற் கால chalcolithic நாகரிகர்களாக மாறி வளர்ச்சியுற்று சிந்துவெளி நாகரிகத்தினையும் தோற்றுவித்தனர்.

இக்கால நிலைகளை ஒப்பிட்டால் தமிழ்மொழி பேசிய பிராகூயி மக்கள் ஏறத்தாழ 10,000 ஆண்டுகள் ஒரே பகுதியில் வாழ்ந்து நனி நாகரிகர்களாக விளங்கினர். அப்பகுதிக்கு வந்த எத்தனையோ மொழிகள், இனங்களின் தாக்குதல்களை எதிர் கொண்டும் தங்கள் மொழியையும் பண்பாட்டையும் காத்து வாழ்ந்து வருகின்றனர். தென்னிந்தியத் தமிழ் மக்கள் அதிகமான அந்நிய மொழித் தாக்குதல்கள் இருப்பினும் தாக்குப் பிடித்துத் தங்கள் மொழித் தூய்மையைக் காத்துக் கொண்டனர். ஆனால், இந்தியத் துணைக் கண்டத்தின் நுழை வாயிலான போலன் கணவாய் அருகில் வாழ்ந்தும் பிராகூயி மக்கள் தங்களது மொழியைக் காத்து வாழ்வது வியப்புக்கு உரியதாகும்.

தங்கள் மொழியை இவ்வாறு உயிர்ப்புடன் பேணி வருவதனால்தான் பிராகூயி மொழி தனது தமிழ் இயல்பை முற்றும் தற்காத்து தகைசான்று வாழ்வதைக் காண முடிகிறது. இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் உயர் நாகரிகங்களான மெகார்கர், சிந்து நாகரிகங்களை உருவாக்கிய இத்தமிழ் பேசிய மக்கள் இந்திய நாகரிகத்தின் அடிப்படையை உருவாக்கியவர்-களாவர்.

* * *

ஆங்கில எழுத்துகளில் குறில் நெடில் இன்மையால், நெடிலைக் குறிக்க முன்னர் தமிழ் மொழியியல் நூல்களில் குறியிடுவது : போல. என்ற அடையாளமிட்டுள்னேன். சர். பிரே தன்னூலில் உரிய ஒலிக்குறியீடுகள் இட்டுள்ளார். அவர் 1934இல் எழுதிய நூலின் சில குறிப்புகள் மட்டுமே என்னிடமுள்ளது. தென்னிந்திய, மத்திய இந்திய திராவிட மொழிகள் மட்டுமே தமிழ் கற்றோரிடம் நன்கு அறிமுகமாகியுள்ளது. பிராகூயி மொழியை நன்கு அறிமுகம் செய்ய வேண்டுமென எண்ணுகிறேன்.

- உண்மை இதழ், 16-30 நவம்பர் 2021

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:26 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: செம்மொழி, தமிழ், பிராகுயி

வெள்ளி, 8 அக்டோபர், 2021

நாங்கள் ஹிந்து அல்ல... திராவிடர்!இலண்டனில் நடைபெற்ற வழக்கு!


பிரிட்டிஷ் மகாராணி இங்கிலாந்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றினார்.

இந்தியாவை ஆளும் மன்னர்கள், பாளையக்காரர்கள், ஜமீன்களுக்கு ஆண் வாரிசு இல்லை என்றால், மன்னர் மற்றும் அவருடைய மனைவி இறந்த பின்பு அந்த நிலப்பகுதி பிரிட்டிஷ் அரசுக்குச் சொந்தம் எனச் சட்டம் இயற்றினார்.

இந்நிலையில் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மன்னர் கிழவன் சேதுபதி இறந்துவிட, ராணியான பர்வதவர்த்தினி தன் சமஸ்தானத்தை ஆள முத்துராமலிங்கம் எனும் ஒரு ஆண் பிள்ளையைத் தத்தெடுத்தார். சிறிது காலத்தில் ராணியும் இறந்துவிட, இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மன்னராக முத்துராமலிங்கம் பதவியேற்கிறார்.

இதை எதிர்த்து மதுரை மாவட்டத்தின் வெள்ளைக்கார ஆட்சியர், இலண்டனில் உள்ள மகாராணி  சார்பில் நோட்டீஸ் அனுப்புகிறார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்து, முத்துராமலிங்கத்தைத் தத்தெடுத்தது சரியே எனச் சென்னை ராஜதானி நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெறுகின்றனர்!

இங்கு தான் பார்ப்பனர்கள் தங்களின் 'விஷம' விளையாட்டை தொடங்கினர். மீண்டும் அந்த வழக்கு இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு எதிராக இலண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது. 

ஹிந்து சட்டப்படி, ஒரு விதவைப் பெண் தத்தெடுக்க வேண்டுமானால் மன்னர் இறக்கும் முன்பே மன்னரின் முன் பலருடைய சாட்சிகளின் முன்னிலையில் தத்தெடுக்க வேண்டும் என ஸ்மிருதிகள் சொல்கின்றன. எனவே ஹிந்து மதப்படி முத்துராமலிங்கம் பதவி ஏற்றது செல்லாது எனக் கூறினர். 

இந்த வழக்கு 1867 ஆம் ஆண்டு இலண்டன் பிரிவியூ கவுன்சிலில் நடந்தது. இராமநாதபுரம் சமஸ்தானம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் எங்களின் சட்டம் ஆரியன் ஸ்கூல் ஆப் லா-வின் (Aryan School Of Law) கீழ் வராது. எங்களுடைய சட்டம் திராவிடியன் ஸ்கூல் ஆப் லா-வின் (Dravidian School Of Law) கீழ் வரும் என வாதாடி வழக்கில் வெற்றி பெற்றார்கள். 

முத்துராமலிங்கம் VS மதுரை ஆட்சியர் வழக்கு என மூர்ஸ் ஜர்னல் (Moores Journal) எனும் இலண்டன் பத்திரிகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கு இடம் பெற்றுள்ளது.  இந்திய ஒன்றியத்தின் சட்டப் புத்தகத்தில் "ஹிந்து குடும்பச் சட்டத்திலும்" இவ்வழக்கு இடம் பெற்றுள்ளது!

நன்றி!
வழக்கறிஞர் அருள்மொழி
இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:30 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இந்து, திராவிடர், வழக்கு

செவ்வாய், 5 அக்டோபர், 2021

நாங்கள் இந்து மதம் அல்ல..! திராவிட மதம்!!



1860இல் ராமநாதபுரம் மன்னர் இறக்கிறார்.
அவருக்கு ஆண் வாரிசு இல்லை.
மன்னருக்கு ஆண் வாரிசு இல்லையென்றால் இராணி உயிரோடு இருக்கும் வரை அதை அனுபவிக்கலாம். 
அதன் பிறகு இங்கிலாந்து அரசின் கட்டுபாட்டுக்குள் வந்து விடும் என்பது அப்போதைய (பிரிட்டிஷ்) சட்டம்.

ஆனால் இராணியாரோ கணவர் இறந்த பிறகு 
ஒரு ஆண் மகனை தத்து எடுத்து 
“முத்துராமலிங்க சேதுபதி” என பெயர் சூட்டி 
இளவரசராக்குகிறார்.

ராணி இறந்த உடன் முத்துராமலிங்க சேதுபதி மன்னராகிறார். 

இந்நிலையில் மதுரை கலெக்டர் இதை எதிர்த்து வழக்கு தொடுக்கிறார். 

அந்த வழக்கு மேல்முறையீட்டில் இங்கிலாந்து உச்சநீதி மன்றத்தில்
(Privy Council, London) நடக்கிறது.

அங்கே கலெக்டர் தரப்பு “இந்து மதத்தில் ஒருவரை தத்து எடுக்க வேண்டும் என்றால் கணவர் இறப்பதற்கு முன்பே தன் மனைவியிடம் சொல்லியிருந்தால் மட்டுமே தத்து எடுக்க முடியும்.அது தான் இந்து மத சட்டம் (மனுஸ்மிருதி )” என்று வாதிடுகிறார்.

அதற்கு எதிராக மன்னர் சேதுபதி தரப்போ 

“நாங்கள் இந்துக்கள் அல்ல; நாங்கள் திராவிட இனத்தை சேர்ந்தவர்கள்.
எங்கள் திராவிட ஆகம விதிகளின்படி “பங்காளிகள் ஒத்துக் கொண்டால் போதும்; அந்த தத்தெடுப்பு செல்லும்”

என்று வாதாடி 1868 இல் வெற்றி பெறுகிறார்.

உச்சநீதி மன்றமும் “இந்து மதம் வேறு; திராவிட இனம் வேறு; திராவிட இனம் இந்து மதத்தில் அடக்கமான ஒரு பிரிவு அல்ல”

என்ற உண்மையை உணர்ந்து, வெள்ளைக்கார கலெக்டருக்கு எதிராகவே தீர்ப்பளித்தது; எவ்வளவு நேர்மையான தீர்ப்பு அது?

---வழக்கறிஞர் அருள்மொழி
இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:18 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சேதுபதி, திராவிட மதம்

வெள்ளி, 1 அக்டோபர், 2021

வெற்றுச் சொல்லா திராவிடம்?

 

September 30, 2021 • Viduthalai

கவிஞர் கலி. பூங்குன்றன்

திராவிடர், திராவிடம் என்பது ஆரி யத்தின் அடி வயிற்றைக் கலக்கிக் கொண்டுள்ளது. இதன் தன்மையைப் பார்ப்பனர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால்தான் அந்தச் சொல்லின் வீரியத்தில் வீற்றிருக்கும் "அணுகுண்டின்" ஆபத்தைப் புரிந்து கொண்டு அலறுகிறார்கள்.

"ஆரியமா? திராவிடமா?" என்று கேட்டால் நாங்கள் ஆரியத்தின் பக்கமே என்று கூறும் எட்டப்பர்களும் வழக்கம்போல் நம் இனத்தில் தலை எடுத்துள்ளார்கள். அதை இடறித் தள்ளுவோம்!

'தினமணி' என்னும் ஏட்டில் (24.9.2021) "திராவிடம் என்பதோர் வெற்றுச் சொல்!"  எனும் தலைப்பில் நடுப்பக்கக் கட்டுரை ஒன்றை திரு. ஜெயபாஸ்கரன் என்பவர் எழுதி இருக்கிறார்.

பாறாங்கல்லை விழுங்கியவன் பஞ்சு மிட்டாய் சாப்பிட்டதாகக் கூறுவதைப்போல - அண்டப் புளுகின் அப்பனாகவும் ஆகாயப் புளுகின் பாட்டனாகவும் ஒரு தகவல் இதோ:

"தமிழ்நாட்டில் 1920களில் 'தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்!' என்ற பெயரில் தீவிரம் பெற்றிருந்தது. அரசியல் இயக்கம் ஒன்று 1944ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், சேலம் மாநகரில் நடத்தப்பட்ட அவ்வியக்கத்தின் மாநாட்டுத் தீர்மானத்தில் அது 'திராவிடர் கழகம்' என்று பெயர் மாற்றம் பெற்றது.

அப்படியொரு தீர்மானம் மாநாட்டின் உணவு இடைவேளையின்போது, ஒரு சிலரால் திட்டமிடப்பட்டு, அவசர அவசரமாக முடிவு செய்யப்பட்டதென்றும், அந்தத் தீர்மானத்தை மேடையில் நின்று படித்தவருக்கே அப்போது தான் அச்செய்தி தெரியும் என்கிற அளவுக்கு, அது தந்திரமானதாக இருந்தது என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள். அரசி யல் ஆய்வாளர்கள்" இதுதான் திராவிடம் என்பதோர் வெற்றுச் சொல்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய 'வெத்து வேட்டு' குறிப்பிட்டுள்ளது.

அரசியல் ஆய்வாளர்கள்  குறிப்பிடுகிறார்களாம். யார் அந்த அரசியல் ஆய்வாளர்கள்? குறிப்பிட ஏன் தயக்கம்? இப்படி ஆதாரமின்றி 'அத்திரிபாட்சா கொழுக்கட்டை' என்ற ரீதியில் அவாள் எழுதுவது வழமைதான்.

புகழ் பெற்ற "அண்ணா துரை தீர்மானம்" என்பது அவர்களுக்கு அவ்வளவு அலட்சியமாகப் போய் விட் டது. அந்தத் தீர்மானம் தந்தை பெரியாரிடம் அண்ணா அவர்கள் மாநாட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே தங்கி தந்தை பெரியாராலும் தீட்டப்பட்ட ஒன்று.

இரு நாள் நடைபெற்ற சேலம் மாநாட்டில் தீர்மானங்கள் விஷயாலோசனைக் கூட்டத்தி லும் விவாதிக்கப்பட்டன என்ற வரலாறு எல்லாம் தெரியாமல், இடைவேளை நேரத்தில் அவசரகதியில் நிறை வேற்றப்பட்டதாக எழுதுவது எல்லாம் அசல் போக்கிரித்தனம் அல்லவா?

அக்கிரகாரப் பேர்வழி களின் எடை மேடையின் கண்ணோட் டத்தில் அண்ணா அவர்கள்கூட சாதாரணமானவர்தானோ? பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட ஒரு மாநாட்டில் அவசர அவசரமாக உணவு இடைவேளையின் போது நிறை வேற்றப்பட்டது என்றும், தீர்மானத்தைப் படித்தவருக்கே அப்போதுதான் அந்த செய்தி தெரியும் என்றும் எழுதுகிற அளவுக்குச் செல்லுகிறார்கள் என்றால், இவர்கள் வேறு எதைத்தான் திரித்து எழுதத் தயங்குவார்கள்?

அண்ணா என்றாலே 'தினமணி' வட்டாரத்துக்கு ஒவ்வாமை எப்போதுமே உண்டு.

"முடிவை மாற்றுங்கள்" என்பது தினமணியின் தலையங்கம் (6.5.2020) அதில் ஆச்சாரியர் பெயர் வரும் போதெல்லாம் ராஜாஜி ராஜாஜி ராஜாஜி என்று மூன்று முறை குறிப்பிட்டு ஆராதனை! ஆனால் அதே தலையங்கத்தில் அண்ணா என்று எழுதிட மனம் வரவில்லை; அண்ணாதுரை - எம்.ஜி.ஆரைக் குறிப்பிடும் இடங்களிலோ எம்.ஜி.இராமச்சந்திரன்.

இதற்குப் பெயர்தான் ஆரியம் - திராவிடம் வேறுபாடு என்பது.

"எது எப்படி இருப்பினும் 'திராவிடம்', 'திராவிடர்', 'திராவிட நாடு' ஆகியவை எல்லாம் குழப்பத்திலும் சிக்கலிலும், பாதுகாப்பு உணர்விலும் தமிழுக்கும், தமிழர் களுக்கும் எதிரான ஏதோவோர் உள்ளுணர்விலும் கண்டறி யப்பட்ட வெற்று வாளாகவும் போலிக் கேடயமாகவும் வடிவமைக்கப்பட்டு, தமிழ் நாட்டில் அரசியலில் இன்றளவும் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு இருப்பதை எவராலும் மறுக்க முடியாது"

இப்படியாக தன் முதுகைத்தானே தட்டிக் கொள்வதுடன் அவரே நான்கு வரிகளை கிறுக்கி விட்டு, எவராலும் மறுக்க முடியாது என்று கித்தாப்பு வேறு!

'தினமணி'யின் இந்தக் கூற்றுக்குத் 'தினமணியைக் கொண்டே சூடு கொடுத்து விடலாம். இதோ 'தினமணி':

"தமிழ் உள்ளிட்ட 82 மொழிகளை உள்ளடங்கிய திராவிட மொழிக் குடும்பம் 4500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தமிழ்தான் மிகப் பழைமையான மொழி என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் போல சிதைந்து அழியாமல், தமிழ்மொழி தொடர்ந்து செழுமையோடு பயன்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது." ('தினமணி' 22.3.2018).

'தினமணியே' தினமணியே! திரா விடம் என்பது வெற்றுச் சொல் என்று இப்பொழுது எழுதியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டாம் - கருத்தை மாற்றிக் கொள்கிறோம் என்று கண்ணியத்தை எதிர்பார்க்கலாமா?

திராவிடம், திராவிடர் என்பதெல்லாம் தந்தை பெரியாரால் புதிதாகக் கற்பிக் கப்பட்டதில்லை. அதற்கென்று வர லாற்று ஆவணங்கள் வலிமையாக வளமையாகவே உண்டு.

மறுபடியும் 'தினமணிக்கே' வரு வோம். 'தினமணி'யின் ஆசிரியர் திரு. அய்ராவதம் மகாதேவன் "சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம்!" என்று அறுதியிட்டுச் சொன்னது வெற்றுச் சொல்தானா!

மேனாள் 'தினமணி' ஆசிரியர் அய்ராவதம் மகாதேவன்மீது இன்றைய 'தினமணி' ஆசிரியர் திருவாளர் வைத் தியநாதய்யருக்கு என்ன வஞ்சினமோ யாம் அறியோம்.

வரலாற்று ஆசிரியர்கள் என்ன சொல்லுகிறார்கள்?

“திராவிடர்களை ஆரியர்கள் வென்று விட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதிவைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரீ கங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்”.

இது ஷோஷி சந்தர்டட் எழுதிய “இந்தியா அன்றும் இன்றும்” என்னும் புத்தகத்தின் 15-ஆவது பக்கத்தில் இருக் கிறது.

"ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப் பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவி டர்கள் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட் டிருக்கிறார்கள்”.

“ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்".

(இது சி.எஸ், சீனிவாச்சாரி எம்.ஏ., & எம்.எஸ். ராமசாமி அய்யங்கார் எம்.ஏ., ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய “இந்திய சரித்திரம் முதல் பாகம்” என்னும் புத்தகத்தில் “இந்து இந்தியா” என்னும் தலைப்பில் 16, 17-ஆவது பக்கங்கள்)

"ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக்கண்டு அவர்களிடமி ருந்து பல நாகரீகங்களைக் கற்றுக் கொண் டார்கள்”.

இது எச்.ஜி. வெல்ஸ் எழுதிய “உலகத் தின் சிறு சரித்திரம்” என்னும் புத்தகத்தின் 105-ஆவது பக்கம்.

"தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசும் பாஷை”.

(சர்-ஜேம்ஸ்மர்ரே எழுதிய  அகராதி யின் பக்கம் 67)

“தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லா தார்களையே - குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி ". வைக்கப்பட்டிருக்கிறது”.

- இது ரோமேஷ் சந்திரடட் C.I.E.I.C.S  எழுதிய “புராதன இந்தியா” என்னும் புத்த கத்தில் 52-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“திராவிடர்கள் தங்கள்மீது படையெ டுத்து வந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்தது, இந்த விஷயம் ரிக் வேதத்திலிருந்து அநேக சுலோகங்களாக இருக்கின்றன."

இது டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் எம். ஏ., யின் “பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரீகமும்” என்னும் புத்த கத்தின் 22-ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“ராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திரா விடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்திரித்துக் காட்டுவதாகும்”.

(பி. சிதம்பரம்பிள்ளையின் 'திராவி டரும் - ஆரியரும்' பக்கம் 24)

ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபோது பல புதிய பிரச்சினைகள் கிளம்பின. இனத்தாலும், அரசியலாலும் மாறுபட்ட திராவிடர்கள் ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்டனர். திராவிடர்கள் நீண்டகால நாகரிகத்துடன் வாழ்ந்து வந்த படியால், இவர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் இடையே விரிந்த பெரிய பிளவு ஏற்படட்து.

(ஜவகர்லால் நேருவின் Discovery of India பக்கம் 82)

இவர்கள் எல்லாம் வரலாற்று ஆசிரி யர்களே இல்லை என்று விதண்டாவாதம் பேசப் போகிறார்களா?

(காலப் பிழையோடு, இவர்களும் ஈ.வெ.ரா. பேச்சைக் கேட்டுக் குட்டிச்சுவர் ஆனவர்கள் என்கிற அளவுக்குப் போனா லும் போவார்கள் - புகைக்க புகைக்கப் புனை சுருட்டு ஊதுவதில் இந்த உஞ்சி விருத்திகளுக்கு இணை வேறு எவர்?)

இப்பொழுது 'தினமணி'கள் அடுத்த கட்டத்துக்கு வந்தாக வேண்டும்.

மனு தர்மத்தை திராவிடர் கழகம் கொளுத்தியதுண்டு - இப்பொழுது அதே வேலையை சிண்டைத் தட்டிக் கொண்டு செய்தாலும் செய்வார்கள்.

இதோ மனுதர்மம் பேசுகிறது:

மனுதர்மம் 10ஆவது அத்தியாயம் 22 மற்றம் 44 ஆவது சுலோகங்களில் திராவிடம் என்ற சொல் உள்ளது.

விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரிய ஸ்த்ரீயினடத்தில் சல்லன் பிறக்கிறான். அவனுக்கு மல்லன், நிச்சு விநடன், கரணன், கஸன், திராவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெய ருண்டு. (அத்தியாயம் 10; ஸ்லோகம் 22)

பௌண்டரம், ஔண்டரம், திரா விடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், சீகம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களையாண்டவர்களைவரும் மேற் சொன்னபடி சூத்திரர்களாய் விட்டார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 44).

சிறீமத் பாகவதம் வேதவியாசம் எழுதி, வேணுகோபாலாச்சாரி தமிழில் மொழிபெயர்த்து, பாகவதம் பக்கம் 404இல் திராவிடம் குறிப்பிடப்பட்டுள்ளது.

'தினமணி' திருவாளர்கள் மனுதர்மத் தையும் சிறீமத் பாகவத்தையும் என்ன செய்யப் போவதாக உத்தேசம்?

தனக்குத்தானே கோலடிப்பது (Self Side Goal) என்பார்கள். அதனையும் திருவாளர் ஜெயபாஸ்கர் சாங்கோ பாங்கமாக செய்து முடித்து விட்டார். உண்மையைச் சொன்னால் அதில் முரண்பாடு கதவு திறக்க வாய்ப்பு இல்லை; பொய்யென்று தெரிந்திருந்தும் ஓரிடத்தில் சொன்னால் கடைசி வரை அதைக் காப்பாற்றுவது முயற்கொம்பே!

ராபர்ட் கால்டுவெல்லில் ஆரம்பித்து மனோன்மணியம் சுந்தரனாரை உள்ளுக் குள்அழைத்து தேசிய கீதம் பாடல் எழுதிய நோபால் கவிஞர் இரவீந்திரநாத்தையும் துணைக்கழைத்து, "திராவிடம்" எனும் நியாயத்துக்கு உண்மை வரலாற்றுக்கு முடிசூட்டு விழாவினையும் நடத்தி தனது திராவிடத்துக்கு எதிரான கருத்துக்கு முடிவுரை எழுதித் தீர்த்து விட்டாரே! நமது ஆழ்ந்த இரங்கல்!

திராவிடத்தின் உண்மையை உறுதி செய்து கொள்ள வாக்கெடுப்பு நடத்தலாம் என்று இலவசமாக ஆலோசனை கூறுகிறது 'தினமணி!'. தினமணியேகூட நடத்தலாமே! அப்படியே ராமன் கோயில் கட்டுவது, இந்து ராஜ்ஜியம், பூணூல் அணிவது, சங்கராச்சாரியார் கூறும் தீண்டாமை க்ஷேமகரமானது, உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு  (EWS) இவற்றுக்கெல்லாம்கூட வாக்கெடுப்பு நடத்துங்கள் வரவேற்கிறோம்.

திராவிடர் இயக்கம் தோற்றுவிக்கப் படுவதற்கு முன்பே "ஆதி திராவிட ஜனசபை"யை (1892) அயோத்திதாசர் தோற்றுவிக்கவில்லையா? இரட்டைமலை சீனிவாசன் "திராவிட மகாஜன சபையை" உண்டாக்கவில்லையா? (1894).

அதே இரட்டைமலை சீனிவாசன் 1906இல் தம்மால் தொடங்கப்பட்ட இதழுக்கு "ஒரு பைசா தமிழன்" என்று பெயர் சூட்டினார். இது முரண்பாடல்ல - இரண்டும் ஒரு பொருளைக் குறிக்கின்றன என்பதுதானே இதன் பொருள்.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற பார்ப்பனர் அல்லாதார் இயக்கம்தான் திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றது.

1910 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பற்றி அயோத்திதாசர் வெளியிட்ட அறிக்கை என்ன கூறுகிறது?

"இத்தேச பூர்வ சரித்திரங்கள் ஆதாரங்களை சொல்லும் இத்தேசப் பூர்வ சரித்திரங்களைக் கொண்டும் பூர்வக் குடிகளை  ஜாதி பேதமுள்ள இந்துக்களினின்று பிரித்து, ஜாதி பேதமற்ற திராவிடர்கள் என்றே எழுதும்படியான உத்தரவளிக்க வேண்டுகிறோம்" என்று கூறிடவில்லையா? ("அயோத்தியதாசர் சிந்தனைகள்" - தொகுதி 1 பக்கம் 367-368)

திராவிட நாகரிகம் குறித்து மறை மலை அடிகளார் சென்னையில் சொற் பொழிவாற்றவில்லையா? (1913)

டாக்டர் நடேசனார் திராவிட சங்க விடுதியை தோற்றுவித்ததும் (1913) திரா விடர் இல்லம் என்ற விடுதியையும் தோற்றுவித்தது எதற்காக? (1916)

கல்லூரிகளில் படிக்க வேண்டும் என் றால் சென்னைக்கு வர வேண்டும்; வசதி வாய்ப்புள்ள பார்ப்பனர் அல் லாத மாணவர்கள்கூடத் தங்கிப் படிக்க வசதியில்லை. பெரும்பாலும் பார்ப்பனர் களால் நடத்தப்படும் உணவு விடுதிகளில் 'சூத்திரர்கள்' 'பஞ்சமர்கள்' என்று கருதப் பட்டவர்கள் எடுப்பு சாப்பாடு முறையில் உணவருந்த முடியுமே தவிர, உள்ளே அமர்ந்து சாப்பிட முடியாது; இந்த நிலையில் டாக்டர் நடேசனாரின் திராவிட விடுதி இல்லம் (சென்னை திருவல்லிக்கேணி) எத்தகைய தாக்கத்தை உண்டாக்கியது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா?)

சென்னை நகர ஓட்டல்களில் பஞ்சமர்களும், நாய்களும், பெரு நோய்க் காரர்களும் நுழையக் கூடாது!" (குடிஅரசு 3.5.1936) என்ற அறிவிப்புப் பலகைகள் இருந்தன என்பது எதைக் காட்டுகிறது?

டாக்டர் நடேசனாரின் 'திராவிட விடுதி இல்லம்' என்ற விடுதியில் தங்கிப் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் யார் யார் தெரியுமா?

இரயில்வே நிலையங்களில் பிராம ணர்கள், இதராள் சாப்பிடும் இடம் இருந் ததும், அது தந்தை பெரியாரின் எதிர்ப்புக் குரலால் டாக்டர் ஏ. இராமசாமி முதலியார் இரயில்வே போர்டு உறுப்பினராக இருந்த போது ஒழிக்கப்பட்டதெல்லாம் தெரியுமா?

ஆர்.கே. சண்முகம் (பிற்காலத்தில் ஒன்றிய நிதி அமைச்சர், பாரிஸ்டர் ரெங்கராமானுஜநாயுடு, டி.எம். நாரா யணசாமி, எஸ்.ஜி. மணவாளராமா னுக்கு (பிற்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள்) சுப்பிரமணிய நாடார் (பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி) சடகோப முதலியார் (பிற்காலத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்). இவர்களுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்தது திராவிடர் இல்லம்.

திராவிடன் என்பது ஒரு கோட் பாட்டுத் தத்துவம் என்பது இன்னும் புரியவில்லையா? இல்லை புரியாதது போல வேடம் கட்டிஆட்டமா?

அறிஞர் அண்ணா அவர்கள் மாநிலங் களவை உறுப்பினராக சென்றபோது தனது கன்னிப் பேச்சில் "I belong to Dravidian Stock" என்று சொன்னதும், அதையே சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்து வேல் கருணாநிதி அவர்களும்  தற்போது முழங்கியதும் கூடவா தெரியாது.

நாடாளுமன்றத்தில் பதவிப் பிர மாணம் எடுத்த தமிழ்நாடு உறுப்பினர்கள் "பெரியார் வாழ்க!" "திராவிடம் வெல்க!" என்று முழக்கமிடவில்லையா?

இந்த உணர்வுகளின் அதிர்வு அலைகளால் தாக்கப்பட்ட பார்ப்பனர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர். அதன் ஆத்திர ஓசைதான், ஆற்றாமையின் கூக்குரல் தான் தந்தை பெரியார் பற்றியும், திராவிடம் பற்றியும், தினமணி வகையறாக்களின் வெளிப்பாடு!

திராவிடம் வெல்லும் - நாளை வரலாறு அதனைச் சொல்லும்!

வாழ்க பெரியார்!

வெல்க திராவிடம்!

இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:46 AM 1 கருத்து:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சொல் ஆய்வு, திராவிடம்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

சர். ஜான் மார்ஷல்

சர். ஜான் மார்ஷல்

சிந்துவெளி சின்னம்

சிந்துவெளி சின்னம்

கீழடி புதை பொருள்கள்

கீழடி புதை பொருள்கள்

கீழடி தமிழ் வரிவடிவம்

கீழடி தமிழ் வரிவடிவம்

கால்டுவெல் அறிஞர்

கால்டுவெல் அறிஞர்
திராவிடம்
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

  • 1917
  • அசுரர்
  • அண்ணா
  • அம்பேத்கர்
  • அமைப்பு
  • அரப்பா
  • ஆண்டாள்
  • ஆதி இந்தியர்
  • ஆந்திரம்
  • ஆய்வு
  • ஆரியமாயை
  • ஆரியர்
  • ஆரியர் - திராவிடர்
  • ஆரியர்கள்
  • இணையத்தில்
  • இந்து
  • இனம் - மொழி
  • உணவு
  • ஏ.டி.பி
  • கட்சி
  • கலைஞர்
  • காரணம்
  • கீழடி
  • கேரளா
  • சங்கராச்சாரி
  • சர். ஜான் மார்ஷல்
  • சாதனை
  • சாதி
  • சிந்து சமவெளி
  • சிந்துவெளி
  • சிந்துவெளி நாகரிகம்
  • சுபவீ
  • செம்மொழி
  • சேதுபதி
  • சொல்
  • சொல் ஆய்வு
  • சொல்லாய்வு
  • டி.எம்.நாயர்
  • டி.மாதவன்
  • தமிழ்
  • தமிழ் தேசியம்
  • தமிழர்
  • தமிழாற்றுப்படை
  • தாயுமானவர்
  • திராவிட குரல்
  • திராவிட செயற்களம்
  • திராவிட நாகரிகம்
  • திராவிட மதம்
  • திராவிட மரபு
  • திராவிட மொழி
  • திராவிட மொழிகள் நாள்
  • திராவிட லெனின்
  • திராவிடக் கருதுகோள்
  • திராவிடநாடு
  • திராவிடப் போர்
  • திராவிடம்
  • திராவிடம்- தமிழர்
  • திராவிடர்
  • திராவிடர் - தமிழர்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் நாகரீகம்
  • திருநெல்வேலி
  • திருமா
  • திருவிக
  • தீபாவளி
  • துக்ளக்
  • தேவர்
  • தொல்குடி
  • நடேசனார்
  • நீதிக்கட்சி
  • நூல்
  • நேரு
  • பங்களிப்பு
  • பட்டிமன்றம்
  • படையெடுப்பு
  • பல்கலைக்கழகம்
  • பன்னீர்செல்வம்
  • பார்ப்பன எதிர்ப்பு
  • பார்ப்பனர்
  • பாவாணர்
  • பிரகடன நூற்றாண்டு
  • பிரச்சினை
  • பிராகுயி
  • புலிகள்
  • பெரியார்
  • மரபணு ஆய்வு
  • மனித இனம்
  • மாடு
  • மாநாடு
  • மின்சாரம்
  • முன் திராவிடம்
  • வங்கம்
  • வடநாடு
  • வழக்கு
  • விளக்கம்
  • வேதம்
  • ஜான் மார்ஷல்

பக்கங்கள்

  • முகப்பு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • திராவிடன் என்று சொல்லும்பொழுதுதான் நாம் எல்லோரும் சமம் என்று பொருள்படும்
    திராவிடன் என்று சொல்லும்பொழுதுதான் நாம் எல்லோரும் சமம் என்று பொருள்படும் இந்து என்கிறபொழுதுதான் நாம் பிளவுபடுகிறோம் சட்டப்பேரவை உறுப்பின...
  • வெற்றுச் சொல்லா திராவிடம்?
      September 30, 2021  • Viduthalai கவிஞர்   கலி .  பூங்குன்றன் திராவிடர் ,  திராவிடம்   என்பது   ஆரி   யத்தின்   அடி   வயிற்றைக்   கலக்கிக் ...
  • திராவிடன் ஏன்?
    விடுதலை ஞாயிறு மலர், 12.12.15
  • திராவிடம் என்ற சொல் வந்தவழி
    1) 1857 இல் ஆதி திராவிட அறிஞர்கள் பலர்கூடி "ஆதிதிராவிடர் மகா சன சபை" என்ற சமுதாய அமைப்பைத் தொடங்கினர். 2) 1883 ஆண்டிலே "திராவ...
  • தமிழ்நாடு - கேரளா, திராவிடப் பண்பாட்டு உறவுகள்
    இந்தியத் துணைக் கண்டத்தின் தென் கோடியில் உள்ள இரு இணை மாநிலங்கள் தமிழ்நாடு மற்றும் கேரளா, அரசியல் ரீதி யாக இவை மொழிவாரியாக தனித்தனி மாந...
  • சுயமரியாதை இயக்கம் 90, நீதிக்கட்சி நூற்றாண்டு விழா
    சுயமரியாதை இயக்கம் 90, நீதிக்கட்சி நூற்றாண்டு விழா தொடங்கியது   வாழ்த்தரங்கத்தில் ஜஸ்டிஸ் மோகன், ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன், புலவர்...
  • பண்பாட்டின் வரலாறு-லோதல்: சிந்து சமவெளியின் சான்று
    பண்பாட்டின் வரலாறு -ச.தீபிகா, தொல்லியல்துறை ஆய்வு மாணவர்  1920ஆம் ஆண்டில் ஹரப்பா நாகரிகம் பற்றிய கண்டுபிடிப்பு, இந்தியத் துணைக் க...
  • திராவிடர் திருநாள் - தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் விழா
    திராவிடர் திருநாள் விழா மாட்சிகள் திராவிடர் திருநாள் முதல் நாள் நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் பாமரன், இமையம், இதழாளர் ஏ.எஸ்...
  • யூதர்கள் ஆரியர்களே!
    மகாராட்டிரத்தில் பிஜேபி ஆட்சி யூதர்களை சிறுபான்மையினர் என்று கூறி இடஒதுக்கீடு கொடுக்கிறது காரணம் என்ன? ஆரியர்கள் என்பவர்கள் பெர்சியா (ஈர...
  • திராவிடமும் தேசியமும் - புலவர் க.முருகேசன்
    வேற்றுமொழிச் சொல்லான வடசொல் ஒலிவடிவிலும், எழுத்துவடிவிலும் மாறுப்-பட்டிருப்பதால் அதைத்தமிழில் கையாளும்-போது தமிழின் ஒலி வடிவம் மா...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (2)
    • ▼  ஜூன் (2)
      • தாயுமானவர் பாடலில் ‘திராவிடம்’ ஆய்வாளர் ராஜசேகர் ப...
      • திருநெல்வேலி – தமிழ் தலைவர்கள் மாநாடு (நவம்பர் 30,...
  • ►  2025 (2)
    • ►  மார்ச் (2)
  • ►  2024 (10)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (2)
  • ►  2023 (10)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2022 (5)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (1)
  • ►  2021 (9)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2020 (30)
    • ►  டிசம்பர் (4)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (5)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (1)
  • ►  2019 (26)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (7)
    • ►  ஜூலை (5)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (1)
  • ►  2018 (30)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (13)
  • ►  2017 (23)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (3)
  • ►  2016 (41)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (7)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2015 (47)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (22)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (1)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2014 (3)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.