வியாழன், 10 நவம்பர், 2016

தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்தான திராவிட இயக்கத்தின் கொள்கை என்ன?

பெரியார் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவரா?

தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்தான திராவிட இயக்கத்தின் கொள்கை என்ன?
-----------------------------------------------------------------

நம் நாட்டில் திராவிட மக்களுக்குள்ளாகவே திராவிடர் , ஆதித்திராவிடர் என்கிற ஒரு பிரிவு இருக்கிறது என்பதோடு, ஆதித்திராவிட சமூகம் மிகப்பெரும் எண்ணிக்கை கொண்ட சமூகமாக இருந்து வருகிறது. திராவிட நாட்டில் எப்படி வெளியிலிருந்து வந்த ஆரியர்களுக்குத் திராவிட மக்கள் தீண்டப்படாதவர்களாக இருக்கிறார்களோ, அப்படி திராவிடர்களுக்கு ஆதித் திராவிடர்கள் அதைவிட மேம்பட்ட தீண்டத்தகாதவர்களாய் இருக்கிறார்கள். இந்த நிலைமை திராவிட சமுதாயத்துக்கே ஒரு பெரும் மானக்கேடான நிலைமையாகும் என்பதோடு, திராவிடர்களை ஆரியர்கள் தீண்டப்படாத மக்கள் என்று வகுத்திருப்பதையும், நடத்துவதையும் அரண் செய்கிறது. ஆகையால், ஆதிதிராவிடர் என்ற பெயரே மாற்றப்பட்டு, இருவரும் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்கின்ற பெயராலேயே வழங்கப்பட வேண்டுமென்பதும், திராவிடருக்கும் ஆதிதிராவிடருக்கும் சமுதாயத்துறையிலுள்ள எல்லா வித்தியாசங்களும் பேதங்களும் ஒழிந்து, ஒரே சமூகமாக ஆகவேண்டும் என்பதும் எனது ஆசை. இந்த இரு நோக்கங்களும் ஜஸ்டிஸ் கட்சியின் நோக்கங்களில் பட்டதென்பது எனது அபிப்பிராயமாதலால் கட்சியின் பேரால் இவைகளைச் சொல்லுகிறேன்.

உத்தியோகம், கல்வி முதலிய விஷயங்களில் ஆதித் திராவிடர்கள் என்பவர்களுக்கு தனிச் சலுகை காட்டி, சீக்கிரத்தில் நம்மோடு சரி சமத்துவம் அடையும்படிக்கான நிலைமையை ஏற்படுத்த வேண்டியது நம் கட்சியின் தனிப்பட்ட கடமைகளில் ஒன்று.

- தந்தை பெரியார்
(குடியரசு 25.08.1940)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக