அரப்பா நாகரிக தோலாவீரா நகரம்
சுனாமியால் அழிந்திருக்கலாம் ஆய்வில் தகவல்
சுனாமியால் அழிந்திருக்கலாம் ஆய்வில் தகவல்
குஜராத் மாநிலத்தில் உள்ள அரப்பா நாகரிக காலத்தைச் சேர்ந்த தோலாவீரா துறைமுக நகரம், சுனாமி எனும் ஆழிப் பேரலையால் அழிந்திருக்கலாம் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தோலாவீரா நகரம் குறித்து கோவா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய கடலியல் ஆய்வு நிறுவன(என்அய்ஓ) விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
அவர்களது கண்டுபிடிப்புகள் குறித்து என்அய்ஓவின் இயக்குநர் டாக்டர் நக்வி, கோவா தலைநகர் பனாஜியில் கூறிய தாவது:
சிந்து சமவெளி நாகரிகம் எனப்படும் அரப்பா நாகரிகத்தின் 5 ஆவது மிகப் பெரிய அகழ்வாய்வுப் பகுதியான தோலா வீரா, அரப்பா மக்களின் மிகப் பெரிய துறைமுக நகரமாகவும் இருந்துள்ளது.
சிந்து சமவெளி நாகரிகம் எனப்படும் அரப்பா நாகரிகத்தின் 5 ஆவது மிகப் பெரிய அகழ்வாய்வுப் பகுதியான தோலா வீரா, அரப்பா மக்களின் மிகப் பெரிய துறைமுக நகரமாகவும் இருந்துள்ளது.
தற்போதைய அகழ்வாய்வுப்படி, 1500 ஆண்டுகளுக்கு தழைத் தோங்கி, வளமாக இருந்த தோலாவீரா குடியிருப்புப் பகுதி, 3 பகுதிகளைக் கொண்டது. அவை அரண் மனை, மத்திய நகரம், கடை நகரம் ஆகும்.
சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன் பிருந்த அந்த நகரத்தின் தனித்தன்மையே அதன் தடிமனான சுவராகும். சுமார் 14 முதல் 18 மீட்டர் உயரம் கொண்ட தடிமனான அந்த சுவர், புயல் காற்று, சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளில் இருந்து அரப்பா மக்கள் தங்களைக் காத்துக் கொள்வதற்காக கட்டப்பட்டது தெள்ளத் தெளிவாகிறது.
தோலாவீராவில் உள்ள தடிமனான சுவரைக் காணும்போது, அரப்பா மக்கள், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் குறித்து அறிந்திருப்பதோடு, அவர்கள் கடலோர பேரிடர் மேலாண்மையில் முன்னோடிகளாகத் திகழ்ந்திருந்தனர் என்பதும் தெரியவருகிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க போர் மற்றும் பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திய காலத்தில்கூட இதுபோன்ற தடிமனான சுவர் இருந்ததில்லை. ஆகவே, சுனாமி குறித்து மக்கள் அறிந்து கொண்டு, பாது காப்புச் சுவரை அமைத்திருந்ததாகவே கருதப்படுகிறது.
மேலும் தோலாவீரா நகரத்தின் குறைந்தபட்சம் ஒரு பகுதியாவது சுனாமியால் அழிந்திருக்கக் கூடும் என்று தெரிய வருவதாக நக்வி கூறினார்.
-விடுதலை ஞா.ம.,3.9.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக