இந்தியாவிற்கு அதற்கே உரித்தான முற்றிலும் பாரதீய மான ஒரு நாகரிகம் உண்டு. அதனுடைய அடிப்படை, வேதங் களும் உபநிஷத்துக்களுமாகும், இந்த வேத நாகரிகத்தை ஆக்கிரமித்து அழிப்பதைத் தான் முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களும் பிறகு கிறிஸ்தவர்களும் செய்தனர்- இவை கள்தானே இந்து வகுப்புவாதிகளான சரித்திர ஆசிரியர்களின் வாதங்கள்.
இந்து சரித்திரத்தின் அடிப்படையில் தான் பாரதீய மயமாக்குவது என்ற கோஷத்தை ஜனசங்கத்தினர் (இன்றைய பாஜகவினர் எழுப்பியுள்ளனர்.
இந்த வாதத்திற்கு சரித்திர உண்மை களுடன் எவ்விதப் பொருத்தமுமில்லை என்பதை இதுவரை எடுத்துக்காட்டிய விஷயங்கள் தெளிவுபடுத்துகின்றன. வேதங்களும், உபநிஷத்துக்களும் எழுதப் படுவதற்கு முன்னாலேயே, அவைகளின் மூலம்வெளிப்படுத்தப்பட்டிருப்பதைவிட உயர்ந்த ஒரு சமுதாயமும் நாகரிகமும் சிந்து சமவெளிப்பிரதேசங்களில் வளர்ந்து இருந்தது என்று மறுக்க முடியாத முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தொல் பொருள் ஆராய்ச்சிகளின் விளைவாக இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இத்தகைய தடயங்கள் கிடைக்காது என்று கூறமுடியாது (சமீப காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டவைகளில் ஏதாவது ஆரியர்களின் வருகைக்கு முன்னால் இருந்தவையா என்பதை பரிசீலிக்க வேண்டியுள்ளது) எப்படியிருந்தாலும் வேத நாகரிகத்தை விட புராதனமானதும் அதைவிட உயர்ந்த நிலையை அடைந்தது மான ஒரு பாரதீய நாகரிகம் சிந்து நதியின் பிரதேசத்தில் உருவாகியிருந்தது என்பது மறுக்க முடியாது.
அப்படியானால் பாரதீய மயமாக்குவது வேத நாகரிக காலம் வரை பின் சென்றால் போதாது. சிந்து சமவெளி நாகரிகம் வரையாவது செல்ல வேண்டும் என்றாகிறது.
சிந்து சமவெளி நாகரிகம்தான் ஆரம்ப கால பாரதீய நாகரிகம் என் பதை மட்டுமல்ல வரலாறு நிரூபிப்பது மிகப் புராதனமானதென்றும் சிறப்பிக்கப்படுகின்ற வேத நாகரிகம் கூட பின்னால் வந்த இஸ்லாமிய நாகரிகத்தையும் கிறிஸ்தவ நாகரிகத் தையும் நவீன பூர்ஷ்வா நாகரிகத்தை யும் போலவே அந்நியர்கள் இந்தியா வில் இறக்குமதி செய்த சரக்கு என் பதைக்கூட சரித்திர உண்மைகள் தெளிவு படுத்துகின்றன.
பாரதீய மதவாதக்காரர்களின் கடுமையான எதிர்ப்புக்கு இரையானவர்களல்லவா. அன்னிய மதங்களான இஸ்லாமையும் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றக் கூடியவர்கள். ஆனால் வேத நாகரிகத்தை உருவாக்கிய மக்கள் பகுதியினரும்பிறகு இஸ்லாமிய கிறிஸ்தவ மதங் களை உருவாக்கியவர்களும் எல்லாம் ஆரம்ப சரித்திர கால கட்டத்தில் ஒரே நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள்தான் ஆரியர்கள் என்ற பொதுப்பெயரில் அறியப்படுகின்ற மக்கள் பகுதியினரில் ஒரு பிரிவினர் மேற்கு நோக்கிச் சென்றனர்.
அவர்கள்தான் புராதன கிரீஸினுடைய வும், ரோமினுடையவும் நாகரிகங்களை உருவாக்கியவர்கள். வேறொரு பிரிவினர் கிழக்கு நோக்கிச் சென்றனர். சிந்து சமவெளி நாகரிகத்தை அழித்து தங்களது வேத நாகரிகத்தை உருவாக்கினர் மேற்கு நோக்கிச் சென்ற முதல் பிரிவினரிலிருந்து அய்ரோப்பாவும் கிழக்கு நோக்கிச் சென்ற இரண்டாவது பிரிவினரிலிருந்து இந்தியாவும் உருக் கொண்டது. இவை இரண்டிற்குமிடையில் மேற்காசியாவில் இஸ்லாமிய நாகரிகமும் வளர்ந்து வந்தது. இது தான் உண்மை.
- இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்
(இந்திய வரலாறு ஒரு மார்க்சிய கண்ணோட்டம்)
(இந்திய வரலாறு ஒரு மார்க்சிய கண்ணோட்டம்)
-விடுதலை ஞா.ம.,6.2.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக