வியாழன், 17 அக்டோபர், 2024

வரலாற்றுத் திரிபுகளை முறியடித்து உண்மை வரலாற்றை உலகிற்குக் காட்டுவோம்!- மஞ்சை வசந்தன்

 

வரலாற்றுத் திரிபுகளை முறியடித்து உண்மை வரலாற்றை உலகிற்குக் காட்டுவோம்!- மஞ்சை வசந்தன்

2024 அக்டோபர் 1-15 முகப்பு கட்டுரை

இந்திய வரலாற்றை வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களோடு மட்டும் தொடர்புபடுத்திக் காலவரையறை செய்யப்பட்டு வந்த காலக்கட்டத்தில், இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு அதற்கும் முந்தையது. அது நகர நாகரிக வரலாறு, அறிவியல் சார்ந்த, வணிகம் சார்ந்த, மக்களை முன்னிறுத்திய வரலாறு என்று அனைவருக்கும் அறிவித்த பெருமை இந்தியத் தொல்லியல் துறையின் தலைவராகப் பணியாற்றிய ஜான் மார்ஷலையேச் சேரும்.

ஜான் மார்ஷல்

“சிந்து, பஞ்சாப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், முதிர்ந்த பண்பாட்டோடு, அருமையாகக் கட்டியெழுப்பிய நகரங்களில் உயர்தரமான கலை, கைவினைத் திறன்களோடும், வளமான எழுத்தறிவோடும் வாழ்ந்துள்ளனர்” என்ற ஜான் மார்ஷலின் கருத்து, இந்தியத் துணைக்கண்ட வரலாற்று போக்கைப் புரட்டிப்போட்டது. இந்திய வரலாற்றுக்குப் புதிய முகவரி அளித்த அந்த ஜான் மார்ஷலுக்கு முழு உருவச்சிலை திறப்பதென்ற தமிழ்நாடு அரசின் முடிவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது; சாலப் பொருத்தமானது. அவர் ஆய்வின் நூற்றாண்டு கொண்டாடப்படும் நேரத்தில் எடுத்த இம்முடிவு சிறப்பும் வாய்ந்தது.

‘இந்தியத் தொல்லியல் துறை ‘திராவிடக் கருதுகோள்’ (Dravidian Hypothesis) என்ற ஆய்வு நோக்கி நகர்ந்தது. சிந்துவெளிப் பண்பாட்டின் அறிவிப்புக்குப் பின்னர் நேர்ந்த மிகப் பெரிய மாற்றம் இது. ‘ஆரியர்களுக்கு முற்பட்ட தொல்குடிகள் காலத்தில், ஹிந்து மதம் என்று தற்போது அறியப்படும் கோட்பாடோ, வேறு சமயச் சிந்தனைகளோ தோன்றவில்லை. நன்றியின்பாற்பட்ட வழிபாடே பயன் கருதி செய்யப்பட்டது. அத்தகைய தொல்குடியினரின் தாய்த்தெய்வ வழிபாடு, குறிப்பாக, பூமித்தாய் வழிபாடு மிக வலுவானது; மிக ஆழமாக வேரூன்றியது. இந்தியாவிலும் சரி, வேறு எங்கும் சரி… ஆரியர்களிடம் பெண் வழிபாடு இல்லை. பெண்களை கடவுளர் கூட்டத்தின் தலைமை இடத்துக்குத் தாய்த்தெய்வமாக முதல் நிலைக்கு உயர்த்தியதாய் சான்றுகள் எதுவும் இல்லை’ என்றும்
ஜான் மார்ஷல் எழுதியுள்ளார்.

1924 டிசம்பரில் சுனிதி குமார் சாட்டர்ஜி, திராவிடக் கருதுகோளைத் தெளிவாக முன்வைத்தார். 1925 தொடக்கத்தில் இதற்கு மாற்றாக இந்தோ-ஆரியக் கருதுகோள்களும் தோன்றின.

தொல்லியல், மொழியியலைவிட மரபணு ஆய்வுகள் துல்லியமானவை என்கிற கருத்து பரவலாக இப்போது நிலவுகிறது. இந்தியத் துணைக்கண்ட மக்களின் தொன்மையான மரபணுத்தொகுதி தொல் தென்னிந்திய மூதாதையர் (AASI) என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இம்மக்களுடன் ஈரானிய வேளாண், வேட்டைக்குடியினரின் குருதிக் கலப்பால் ஹரப்பா பண்பாடு உருவானது. இந்தக் ஹரப்பா பண்பாட்டு மக்கள் ஏற்கெனவே இங்கிருந்த தொல்தென்னிந்திய மூதாதையருடன் கலந்து தென்னிந்திய மரபணு மக்கள்தொகை உருவானது.

இதைப் போலவே ஹரப்பா பண்பாட்டு மக்களுடன் ஸ்டெப்பி (புல்வெளி) மேய்ச்சல் பண்பாட்டினர் கலந்து, தொல் வட இந்திய மூதாதையர்கள் தோன்றினார்கள். இன்றைய தெற்காசிய மக்கள்தொகை இந்த இரண்டு மக்கள்தொகையும் கலந்து உருவானதே.
கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, பொற்பனைக் கோட்டை, வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் நடைபெறும் அகழாய்வுகள் புதிய வெளிச்சம் தருகின்றன. சிந்துவெளித் தடயங்கள், சங்க இலக்கிய மீள்நினைவுப் பதிவுகள், தமிழ்நாடு அகழாய்வுத் தடயங்கள் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் நின்று பேசுகின்றன’’ என்று தொல்லியல் அறிஞர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் பதிவுகள் இப்போது கவனத்தில் கொள்ளத்தக்கவை.

சிந்து சமவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு விழா

சிந்துவெளி (திராவிட நாகரிக) பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் சென்னை- பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 24.09.2024 மாலை 6.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

திராவிடர் கழகமும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யமும் இணைந்து நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விழாவிற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார்.

தமிழினத் தலைவர் கலைஞருக்கு நூற்றாண்டு! சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு! – ‘குடிஅரசு’ இதழின் நூற்றாண்டு! அந்த வரிசையில் சிந்துச் சமவெளி பண்பாட்டின் பெருமையை உலகுக்கு உணர்த்திய நாள் 20.9.1924. இதுதான் தமிழ் – தமிழர் பண்பாட்டுப் பெருமையை உலகம் அறிந்த நாளாகும். இதனை உலகுக்குச் சொன்னவர் ஜான் மார்ஷல். இந்திய தொல்லியல் துறையின் அன்றைய இயக்குநர் அவர். அப்படி அறிவிக்கப்பட்ட நூற்றாண்டும் இப்போது கொண்டாடப்படுகிறது.

சிந்துவெளி நாகரிகத்தின் தொன்மைகளை, சிறப்புகளை வேத காலத்திற்கும் முற்பட்ட நாகரிகம் எனப் பிரகடனப்படுத்திய சர்.ஜான் மார்ஷல் அவர்களின் உருவப்படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார்.

கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர்

கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்றார். நூற்றாண்டு தொடக்க விழாவில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், வரலாற்றுப் பேராசிரியர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் முனைவர் பெ.ஜெகதீசன் தொடக்கவுரையாற்றினார்.

பேராசிரியர் ஜெகதீசன் தொடக்கவுரை

சர்.ஜான் மார்ஷலுக்கு முன்பு வரலாற்றை கட்டி யமைத்தவர்கள் ஆரியம் கலந்த நிலையினைத் தான் உருவாக்கினர். இத்தகைய போக்கிற்கு வித்திட்டவர் வில்லியம் ஜோன்ஸ். வரலாற்றுத் துறை அறிஞர் ஏ.எல்.பாதம் போன்றவர்கள் சமஸ்கிருத ஆதிக்கப் போக்கிற்கு எதிராக உண்மைக் கருத்தினை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். பொருZளாதாரப் பேராசிரியராக விளங்கிய கில்பர்ட் ஸ்கேட்டர் இந்தியாவின் தென்பகுதி பற்றி ஆய்வு செய்து திராவிடத்தின் சிறப்பு பற்றி பதிவு செய்துள்ளார். அத்தகைய அறிஞர் பெருமக்களின் ஆய்வுப் பாரம்பரியம் தேடப்பட்டு திராவிட நாகரிகம் பற்றிய உண்மைகள் கருத்தாக்கங்கள் பலப்படுத்தப்பட வேண்டும்’’. இவ்வாறு பெ.ஜகதீசன் பேசினார்.

பேரா. கருணானந்தம் உரை

திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் அ.கருணானந்தம் தனது உரையில்,
வேத கால நாகரிகத்தை தூக்கிப் பிடித்திட இல்லாத வழியினை ஓடாத சரஸ்வதி நதியை வேத சரஸ்வதி நாகரிகம் என சிந்துவெளி நாகரிகத்தை திரிபு செய்திட முனைந்து வருகிறார். இதை வரலாற்று விழிப்புடன் தடுத்திட வேண்டும். சர். ஜான் மார்ஷல், சிந்து வெளி நாகரிகத்தை ஆரியர் அல்லாத (Non Aryan), ஆரியருக்கு முந்தைய (Pre Aryan) நாகரிகம் என குறிப்பிட்டார். ரிக் வேதத்தில் எந்த நாகரிகமும் குறிப்பிடப்பவில்லை. எதிரிகளை, புரங்களில் வாழ்பவர்களை குறிப்பிடுகின்றன. புரங்களில் வாழ்ந்தவர்கள் – கோட்டையில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் என கருதப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உழவுத் தொழில் செய்திட கட்டப்பட்ட தடுப்பணையை ஆரியர்கள் பூசண பாம்பு என கருதி இடிக்க முற்பட்டனர். கதை கட்டினர்.

கடல் கடந்து செல்லுதல் என்பது ஆரியத்திற்கு புறம்பானது. கடல் கடந்து வணிகம் செய்வது திராவிடம் சார்ந்தது. “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது தமிழர் முதுமொழி. ‘திராவிட’ என்பது தமிழ்நாட்டிற்கு மட்டும் – இந்தியாவிற்கு மட்டும் உரியது அல்ல. கருப்பர் என்பது திராவிடர் அடையாளமே. அன்றைக்கு சிந்து சமவெளி பற்றிய மொழி அறிஞர் ஹென்றி ஹிகர்ஸ் பாதிரியார் அண்மையில் பல்கலைக்கழகத்தில் 1940களில் உரையாற்றிய பொழுது மாணவராக
இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் பாதிரியாரிடம் புத்தகத்தில் செய்யப்பட வேண்டிய பொழுது ‘நான் ஸ்பெயின் நாட்டு திராவிடன்’ (I am a Dravidian from Spain) என குறிப்பிட்டு கையொப்பம் இட்டாராம்.

தொடர்ந்து திராவிட நாகரிகத்தின் மேன்மை, சிறப்பு, மாற்ற முடியாத அளவில் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு க.கருணானந்தன் தனது உரையில் குறிப்பிட்டார்.

ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் உரை

சிந்து வெளி நாகரிகம், திராவிடர் நாகரிகம் என்று சர்.ஜான் மார்ஷல் அவர்களால் அறிவிக்கப்பட்டதன்
நூற்றாண்டு விழா முக்கயமானது. சர்.ஜான் மார்ஷல் அவர்களின் சிந்து வெளி குறித்த அறிக்க இந்திய வரலாற்றில் மிக முதன்மையான அங்கம். அந்த அறிக்கையின்றி இந்திய வரலாறு முழுமை பெறாது. அந்த அறிக்கையின் பதிவின்றி இந்திய வரலாற்றை ஏற்க இயலாது.

வேத காலமே நாகரிகத்தின் தொடக்கம் என்று தப்பான வரலாற்றைப் பரப்பிக் கொண்டிருந்த நிலையில் மார்ஷலின் அறிக்கைதான் உண்மையை உலகிற்குக் காட்டியது. ஆரியர்கள் பேசிவந்த திரிபு வரலாற்றை – மோசடி முயற்சிகளைத் தகர்த்து சரியான வரலாற்றைத் தந்தவர் இவர்.

சிந்து வெளி, ஹரப்பா நாகரிகங்களை ஆரிய நாகரிகமாகக் காட்ட ஆரியர்கள் ரிக் வேத காலத்தை பின்னாள் தள்ளிக் காட்ட எடுத்த முயற்சிகளும், குதிரையைக் கொண்டுவந்து நுழைக்க முயன்றமையும் அவர்களின் மோசடி முயற்சிக்குச் சரியான சான்றுகள். ஆனால், அவை தரவுகள் அற்ற கற்பனைகள் என்பதால், பல்வேறு ஆய்வு முடிவுகள் அவர்களின் கற்பனை வாதங்களை தகர்த்து எறிந்தன.

சிந்துவெளி நகர நாகரிகம் என்பதும், அங்கு வாழ்ந்த தொல்குடியினர் தமிழர்கள் (திராவிடர்கள்) என்பதும், அவர்கள் பேசிய மொழி தமிழ் என்பதும், அங்கு கிடைத்த தடயங்களில் உள்ள எழுத்துக்கள் தமிழ் என்பதும் ஆய்வுகளுக்குப் பின் அய்யத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளன.

ரிக் வேதத்திலே திராவிடச் சொற்கள் காணப்படுவது, தமிழின் தொன்மையைத் தெளிவாகக் காட்டுகிறது என்றார் ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன்.

தரவுகளால் வரலாறு கட்டமைக்கப்படாவிட்டால், கட்டுக்கதைகள் வரலாறாகிவிடும். ஆரியர்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அதன் கிளை அமைப்புகளும் கற்பனைக் கட்டுக்கதைகளை வரலாறக ஆக்க முயற்சிக்கின்றன. எனவே, நாம் விழிப்போடு இருந்து அம்முயற்சிகளை முறியடிக்கவேண்டும். உண்மையான வரலாற்றை உலகுக்குக் கொடுக்கவேண்டும். அதற்கான தொடக்க விழாவாக இந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும். இது முதல் முயற்சி. இம்முயற்சி தொடர்ந்து பெருகி, நாடு முழுவதும் பரவி மக்களிடையே விழிப்பு உருவாக்கப்பட்டு உண்மை வரலாறு உறுதி செய்யப்படவேண்டும்’’ என்று ஆர். பாலகிருஷ்ணன் பேசினார்.

அமர்நாத் ராமகிருஷ்ணா உரை

இந்தியத் தொல்லியல் துறையின் தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணா தமது உரையில்,
சிந்து சமவெளி – மொகஞ்சதாரோ, ஹரப்பா அகழாய் வினை சார்லஸ் மேசன் (Charles Meason) தொடங்கினார். திராவிட மொழிப் பேசியவர்கள் வாழ்ந்த பகுதி இது என்று குறிப்பிடுகிறார்.

அதற்குமேல் அவர் ஆய்வு செய்திடவில்லை. அலெக்ஸாண்டர் கர்னிங் பிரபு (Alexander Curning Prabu) பவுத்த ஸ்தலங்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டார். சிந்து வெளியின் சிறப்பு, முக்கியத்துவம், தனித்துவம் பற்றி வெளிக் கொணர்ந்தவர் சர்.ஜான் மார்ஷல். ஆவார்.மொகஞ்சதாரோ – ஹரப்பா இடங்களுக்குள்ள இடைவெளி 600 மைல்.ஆனால் அந்த அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரைகள், தடயங்கள் ஒரே மாதிரியாக இருந்ததை, பெரிதாக அன்று பேசப்பட்ட வேதகால நாகரிகக் குறிப்புகள் எதுவும் அங்கில்லை. சுமேரிய – மெசபடோமிய நாகரிகங்கள் இடையின நாகரிகம் என சிந்து நாகரிகங்கள் அகாழய்வு முடிவுகளில் அறியப்பட்டது. வேதகால நாகரிகத்திற்குள் நிலையான இடத்தில் வாழ்ந்தவர்கள் அல்லர். நிலையான இடத்தில் வாழ்ந்தவர்கள்தான் வளமை, நாகரிக முன்றேற்றம் காண முடியும். சிந்து சமவெளியில் வாழ்ந்த பூர்வகுடிகள் நிலையாக வாழ்ந்தவர்களான தமிழ் நகர நாகரிகத்தினர்.

கீழடி அகழாய்விலும் நமது நாகரிகங்கள் கண்டுடிக்கப்பட்டன. 13 லட்சம் ச.கி. மீட்டரில் ஆய்வுகளில் சிந்து சமவெளி பரவி இருந்தது. தொல்லியல் முடிவுகள், முக்கிய ஆதாரங்களைக் கொண்டு இலக்கியக் குறிப்புகளின் துணையுடன் மேலும் ஆய்வு முடிவுகள் கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு கி.அமர்நாத் ராமகிருஷ்ணா தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

ஆசிரியரின் தலைமையுரை

வேத கால நாகரிகமான ஆரிய நாகரிகம்தான் சிறந்தது, தொன்மையானது என்று கற்பிதம் செய்யப்பட்ட நிலையில், மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் 1920களில் நடத்தப்பட்ட அகழாய்வில் கற்பிக்கப்பட்ட நாகரிகத்திற்கு முந்தைய காலக் கட்ட நாகரிகம் அந்தப் பகுதியில் நிலவியதாக கண்டுபிடிக்கப்பட்டது. அது முற்றிலும் வேறுபட்ட நாகரிகம் என்பதை பிரகடனம் செய்த சர். ஜான் மார்ஷல் அதுவரை நிலவி வந்த கருத்துகளை உடைத்தெறிந்தார். அந்தப் புதிய நகர நாகரிகம் ஆரியரல்லாத நாகரிகம் என தொடக்கத்தில் அடையாளப்படுத்தப்பட்டாலும், பெரும்பான்மை மக்களது நாகரிகம், சிறுபான்மை மக்கள் அல்லாதார் பெயரில் அடையாளப்படுவது சரியல்ல என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு, ‘‘சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே’’ எனும் கருத்து நிறுவப்பட்டுள்ளது. இன்றைக்குப் பரவலாகவும் அது அறியப்படுகிறது. திராவிடம் எனும் பெயரில் பிரிவினைவாதம் பேசி வருகிறது என்று விமர்சிக்கும் வேத கால வரலாற்றாளர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ‘திராவிடம்’எனும் நிலப்பரப்பு அன்று நிலவியதாக அசல் மனுதர்மத்தை மேற்கோள் காட்டிப் பேசினார் ஆசிரியர்.

மனுதர்மம் 10 ஆவது அத்தியாயம்;
44 ஆவது சுலோகம்:

‘‘பௌண்டரம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீனம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்ட அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாகி விட்டார்கள்.’’

மனுதர்மம் கூறும் திராவிடம் உள்பட பல நிலப்பரப்புகளில் வாழ்ந்தவர்கள் சூத்திரர்கள் என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திராவிட நாகரிகம் என சிந்துவெளி நாகரிகம் அறியப்பட அரும்பணியாற்றிய தொல்லியல் அறிஞர் சர். ஜான் மார்ஷல் அவர்களது படத்திறப்பு என்பது வெறும் காட்சிக்காக மட்டுமல்ல; திராவிட கருத்தியலுக்கு வலு சேர்த்திடும் ஓர் ஆவணம். இந்த நிகழ்வு தொடக்கம்தான். தமிழ்நாடு முழுவதும் தெருத் தெருவாக சர். ஜான் மார்ஷல் பேசப்படுவார். திராவிட நாகரிகத்தின் பெருமையை, சிறப்பை அந்த நாகரிகத்தின் வழிவந்த மக்கள் உணரவேண்டும். இப்படி கூறுவதால், இந்த இயக்கம் பிரிவினை இயக்கம் அல்ல. ஒரு பண்பாட்டு இயக்கம். (It is not a Sectarian Movement; but a cultural Movement)

“திருடர்கள் ஜாக்கிரதை” என்று போடுவார்கள். அதேபோல, “வரலாற்றுத் திருடர்கள் ஜாக்கிரதை” என்று மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லக்கூடிய ஓர் அமைப்பிற்கு இன்றைக்குக் கால்கோள் விழா நடத்தியிருக்கின்றோம்.

இது ஆண்டு விழாவினுடைய தொடக்கம்.  ஆராய்ச்சி மன்றத்தில், ஆராய்ச்சி அகங்களில்,
ஆய்வுக்கூடங்களில் நீங்கள் இதைக் கண்டுபிடித்துக் கொடுங்கள். அதைத் தெருத் தெருவாகக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது எங்களுடைய வேலை என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாக எடுத்துச் சொல்லி, இதுபோன்ற நிகழ்வுகள் பல இடங்களில் நடைபெற வேண்டும்; அதன்மூலமாக வரலாற்றுத் தொய்வுகள் இல்லாமல் மாற்ற வேண்டும்.
இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், மற்ற ஆய்வறிஞர்களும் எச்சரிப்பது போல வரலாற்றைத் திரித்து திராவிட நாகரிகத்தை மறைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுகிறது.

சிந்து சமவெளி நாகரிகம் சரஸ்வதி நாகரிகம் என்று கூறி திராவிட நாகரிகத்தை ஆரிய நாகரிகமாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
குதிரை இருந்ததாகப் பொய் கூறுகிறார்கள். குதிரை அங்கு இல்லை என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். ஓமகுண்டம் இருந்தது என்கின்றனர். அங்கு ஓமகுண்டம் எங்கும் இல்லை. அடுப்பைத்தான் ஓமகுண்டம் என்று திரித்துக் காட்டப் பார்க்கிறார்கள்.
ஆனால், அவர்கள் எவ்வளவு முயன்றாலும் அவர்கள் தோற்றுக்கொண்டேதான் இருக்கிறார்கள். காரணம், அவர்களின் சூழ்ச்சியை முறியடிக்கும் அளவிற்கு நாம் விழிப்பும் அறிவும் தெளிவும் பெற்றுள்ளோம்.

சிந்துச் சமவெளி, ஹரப்பா பகுதியில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குத் தோண்டினாலும் தமிழர் (திராவிடர்) நாகரிக தடயங்கள்தான் கிடைக்கின்றன.

தாய்வழிச் சமுதாயம் தமிழருடையது. அதுதான் அகழ்வாய்வில் கிடைக்கிறது. ஆண் பெண் உறுப்புக்கு நன்றி கூறுவது தமிழர் மரபு. அதுதான் சிந்துவெளியில் கிடைக்கிறது. நகர நாகரிகம் தமிழருடையது. அதுதான் அகழ்வாய்வில் வெளிப்படுகிறது.
தமிழரின் தொல் எழுத்துக்கள்தான் அகழ்வாய்வில் கிடைக்கின்றன. இது தமிழரின் கூட்டெழுத்து. இதில் ஓ + ம் என இரண்டு எழுத்துக்கள் உள்ளன. இந்த இரண்டு எழுத்தையும் சேர்த்து இப்படி எழுதினர். இந்த எழுத்து சிந்துவெளியிலும் கிடைக்கிறது; கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரிலும் கிடைக்கிறது. ஆக, அய்யத்திற்கு இடமின்றி இந்தியாவின் மக்கள் தமிழர்கள். அவர்கள் கிழக்காசிய நாடு முழுவதும் பரவி வாழ்ந்தனர் என்பது பல்வேறு தடயங்களால் தொடர்ந்து உறுதி செய்யப்படுகின்றன.

மாறாக, ஆரிய நாகரிகம், சரஸ்வதி நாகரிகம் என்பதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. அவர்கள் முதன்மை ஆவணமான வேதங்களிலும் எந்தவிதச் சான்றுகளும் இல்லை. எதையாவது செய்து, ஆரிய நாகரிகம் என்று நிலைநாட்டத் தொடர்ந்து ஆரியர்கள் முயற்சி செய்தாலும், அவர்கள் தொடர்ந்து தோற்றே வருகிறார்கள். காரணம், மத்திய ஆசியா பகுதியிலிருந்து தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் பிழைக்க வந்தவர், அதை மறைத்து, தாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று ஒரு மோசடியான கருத்தைப் பரப்புகிறார்கள்.

அதிகாரத்திற்கு வரும் போதெல்லாம் வரலாற்றை மாற்றி எழுத, தங்களுக்குச் சாதகமாகக் குழு அமைக்கிறார்கள். அண்மையில் அமைக்கப்பட்ட குழுவில் 85% பார்ப்பனர்கள். அந்தக் குழுவின் ஆய்வும், அறிக்கையும் எப்படியிருக்கும்? எல்லாவற்றிலும் மோசடி, பித்தலாட்டம்.

தமிழர்கள் தமிழ் நாட்டோடு ஒதுங்கிப் போனவர்கள் அல்லர். அவர்கள் மொழியால் ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபட்டாலும், இனத்தால் இந்தியா முழுக்க வாழ்கிறார்கள். அதனால், தொல் தமிழர்கள் (திராவிடர்கள்) மொழிகடந்து, இன உணர்வோடு, நாம் மண்ணின் மக்கள்; நம் பண்பாடு, நாகரிகம், அறிவியல், தொழில்நுட்பத் திறன் உலக அளவில் ஈடு இணையற்றது; மொழி, எழுத்து, நகர நாகரிகம், கப்பல் செலுத்துதல், அணைகட்டுதல், கட்டடங்கள் கட்டுதல் போன்றவற்றில் உலக அளவில் உலகிலேயே உயர்ந்து நின்றவர்கள்; இம்மண்ணுக்கு உரிய நாம் பெரும்பான்மை மக்கள்; இனச் சிறுபான்மையினரையும் அணைத்து அன்பு செலுத்தி அவர்களின் நலத்தையும் நாடக் கூடியவர்கள். ஆனாலும், இனச் சிறுபான்மையினரான ஆரியவந் தேறிகள் தொடர்ந்து நம்மை, சாஸ்திரங்கள் பேரால் அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு, அதைத் தவிர்க்க, தடுக்க, ஆதிக்கம் ஒழிக்க, இழிவு நீங்க நம் உண்மை வரலாறுகளைத் தொடர்ந்து கண்டறிந்து பரப்ப வேண்டும்.

வரலாற்றுத் திரிபை அவர்கள் செய்வதன் நோக்கமே, தொடர்ந்து நம்மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை உயர்ந்தவர்களாகவும் உரிமையுள்ளவர்களாகவும் காட்டவுமே ஆகும்.

எனவே, நாம் விழிப்போடு இருப்பதோடு, இந்தியா முழுமையும் ஆரியர் அல்லாத மக்கள் விழிப்புப் பெற, உண்மை அறிய, தொடர்ந்து உண்மை வரலாற்றைப் பரப்ப வேண்டும்; திரிபுகளை, மோசடிகளை விளக்க வேண்டும்.

மரபணு சோதனை கூறும்
மகத்தான உண்மை

ஆரியர்கள் தொடர்ந்து செய்துவரும் வரலாற்றுத் திரிபுகளையும், தப்பான கருத்துப் பதிவுகளையும்,
பரப்புதல்களையும் முறியடிக்கும் வகையில், பொய்யாக்கும் வகையில் மரபணு சோதனைகள் உண்மைகளை ஓங்கி ஒலித்தன. இந்தியாவில் வாழ்ந்த தொல்மக்கள் தமிழர்களே (திராவிடர்களே) என்பதை அய்யத்திற்கு இடமின்றி உறுதி செய்துள்ளன. ஆரியர்கள் வந்தேறிகள் என்பதையும் அது உறுதி செய்துள்ளது.

ஆய்வுகள் விரிந்து, பரந்து தொடரவேண்டும்! வரலாற்றைத் திரிப்பது, உண்மைகளை மறைப்பது போல ஆய்வுகள் நடைபெறாமல் தடுக்கும் ஆரியர்கள் தொடர்ந்து பயிற்சி செய்து வருகின்றனர். இல்லாத சரஸ்வதி நாகரிகத்தை ஆய்வு செய்ய ஆர்வம் காட்டி ,முனைப்போடு செயல்படும் அவர்கள், உண்மை வரலாற்றை, உறுதி செய்யப்பட்ட வரலாற்றைத் தொடர்ந்து
செய்ய தவிர்க்கின்றனர்; தடை செய்து முடக்குகின்றனர்.

எனவே, இச்சூழ்ச்சியை, சதியை முறியடித்து, ஆய்வுகள் விரிந்து, பரந்து நடைபெற மண்ணின் மக்களான ஆரியர் அல்லாத பெரும்பான்மையினர் போராட வேண்டும்; உண்மையைக் காண வேண்டும்; உண்மையை உலகிற்கு அறிவிக்க வேண்டும்; உரிமை காக்க வேண்டும்; இழிவு நீக்கி, ஏற்றம் பெறவேண்டும்.

வரலாற்றை அதில் தகுதியும், அனுபவமும், ஆழ்ந்த அறிவும் உடைய, ஒருதலைச் சார்பற்ற, நடுநிலையாளர்கள் மேற்கொள்ள வேண்டும்; இதில் அரசின் தலையீடு அறவே இருக்கக்கூடாது. ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களையே 90% ஆய்வுக் குழுவில் அமர்த்துவது அப்பட்டமான மோசடி! அவர்கள் செய்யும் ஆய்வு எப்படி சரியானதாக, நேர்மையானதாக, உண்மையானதாக இருக்க முடியும்?

வரலாற்று ஆய்வுக்குழு அமைப்பதில் உச்சநீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டு, ஆய்வுகளையும் கண்காணிக்க வேண்டியது கட்டாயமாகும். வரலாறு என்பது காலக்கண்ணாடி யாகும். அது உள்ளதை உள்ளபடி காட்டக்கூடியதாய் இருக்க வேண்டும்.
எனவே, வரலாற்றை ஆய்வதில், உண்மை காண்பதில் மக்கள் விழிப்போடு இருக்கவேண்டும்; தொடர்ந்து ஆய்வு செய்து உண்மை காண வேண்டும்;

அதை நிலைநாட்ட வேண்டும், பரப்பவேண்டும்.

புதன், 25 செப்டம்பர், 2024

சிந்துவெளி நாகரிகம் – திராவிடர் நாகரிகமே என்று தொல்லியல் நிபுணர் சர். ஜான் மார்ஷல் அறிவித்த நாள் இந்நாள் (20.9.1924)

Published September 20, 2024

 சர் ஜான் மார்ஷல் 1913இல் தட்சசீலத்தில் முதலில் தொல்லியல் அகழ் ஆய்வுகளை மேற்கொண்டார். 1918இல் தொல்லியல் அகழ் ஆய்வில் கண்டெடுத்த தொல்பொருட்களைக் கொண்டு தட்சசீலத்தில் தொல்லியல் அருங்காட்சியகத்தை அமைத்தார். பின்னர் சாஞ்சி மற்றும் சாரநாத் பவுத்த தொல்லியல் களங்களில் அகழ் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

ஜான் மார்ஷல், சிந்து வெளி நாகரிகம் மற்றும் மவுரியப் பேரரசர் அசோகர் காலம் குறித்தான ஆவணங்களை ஆதாரங்களுடன் வெளியிட்டார். இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்குநரான அலெக்சாண்டர் கன்னிங்காமின் வழிகாட்டுதலின்படி ஜான் மார்ஷல், 1920இல் அரப்பா மற்றும் மொகஞ்சதாரோவில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) அகழாய்வுகளை மேற்கொண்டார்.

சிந்துவெளிப் பண்பாட்டை ஆய்வாளர் ஜான் மார்ஷல் உலகிற்கு அறிவித்த நாள் செப்டம்பர் 20, 1924; ஜான் மார்ஷல் 1902ஆம் ஆண்டு துவங்கி 1928ஆம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் இந்தியா அரசாங்கத் தின் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக இருந்தார். இவர்தான் அரப்பா மற்றும் மொகஞ்சதாரோ தொல்லியல் களங்களில் அகழ் ஆய்வுகளை மேற்கொண்டு உலகிற்கு அறிவித்தவர். ஜான் மார்ஷல் மொகஞ்சதாரோ மற்றும் அரப்பா எனும் இரண்டு இடங்களில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளின் கூறுகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்து, இந்த இரண்டு நாகரிகங்களும் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டறிந்தார். மேலும் இது திராவிட மொழிக்குடும்பத்தின் நாகரிகமே, வேத நாகரிகத்திற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்தார். வேத காலத்தை விட 1500 ஆண்டுகள் பழைமையான நாகரிகம் இது என்பதையும் ஜான் மார்ஷல் நிரூபித்தார்.

பவுத்தத்தின் தொன்மங்களைத் தேடிப் புறப்பட்டவர்களின் விடையாகவே சிந்துவெளி நாகரிகம் நமக்குக் கிடைத்தது மேலும் சிந்துவெளியானது ஒன்றரை மில்லியன் சதுர கிலோமீட்டர் கொண்ட பரப்பளவிலான பெரிய நாகரிகமாகும். இந்த நாகரிகம் கி.மு 2600ஆம் ஆண்டு தொடங்கி கி.மு 2500 – 2000 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைந்தது
சிந்துவெளி நாகரிகம் செம்பு காலத்தைச் சேர்ந்தது. சிவப்பு – கருப்பு மற்றும் கருப்பு – சிவப்பு மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. மூடப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள், தார் கொண்டு தண்ணீர் கசிவைத் தடுத்து, கட்டமைக்கப்பட்ட பெரிய குளம், பொது தானியக் களஞ்சியம் இருப்பது என்பன இந்த நாகரிகத்தில் உபரி கிடைத்ததற்கான சான்றாக அமைந்துள்ளன. களிபங்கன் எனும் இடத்தில் நடைபெற்ற அகழ் ஆய்வில் கிணற்றுக்காக செய்யப்பட்ட செங்கற்கள் மண் மற்றும் செம்பினால் செய்யப்பட்ட கலைப் பொருட்கள் கிடைக்கப் பெற்றன.

சிந்து சமவெளியில் உள்ள 600 ஊர்களின் பெயர்கள் – தமிழ்ப் பெயர்களேயாகும். கீழடி அகழ் ஆய்வுக்குப் பிறகு – தமிழ் மொழிக்கும், சிந்து சமவெளிக்கும் இடையிலான தமிழ் – திராவிட உறவு மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.
வெளியிலிருந்து இந்நாட்டுக்குள் பிழைக்க வந்த ஆரியர்களின் படை எடுப்பு சிந்து சமவெளி அழிவுக்கு முக்கிய காரணமாகும். ஜான் மார்ஷல் சிந்துவெளி திராவிட நாகரீக அழிவிற்கு காரணம் வெளியிலிருந்து வந்த அந்நியப் படையெடுப்பே என்று பல சான்றுகளோடு கூறியுள்ளார். அதனையே மேலும் ஆய்வு செய்து “இந்திய வரலாறு – ஒரு மார்க்சிய கண்ணோட்டம்!” எனும் நூலை எழுதிய ஈ.எம்.எஸ்.நம்பூதிரி பாத் – சிந்து சமவெளியில் இருந்த அணைகளை ஆரியர்கள் உடைத்தனர் என்று ஜான்மார்ஷலின் ஆய்வுக்கட்டுரையை மேற்கோளிட்டுக் காட்டியுள்ளார்

சிந்துவெளி (திராவிட நாகரிக) பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா-தொல்லியல் அறிஞர் சர். ஜான் மார்ஷல் படத்திறப்பு என்பது வெறும் காட்சிக்காக மட்டுமல்ல; திராவிட கருத்தியலுக்கு வலு சேர்த்திடும் ஓர் ஆவணம்!

 


விடுதலை நாளேடு

திராவிட நாகரிகத்தின் பெருமையை, சிறப்பை மக்கள் உணரவேண்டும்!

இந்த இயக்கம் பிரிவினை இயக்கம் அல்ல – ஒரு பண்பாட்டு இயக்கம்!
சிந்துவெளி (திராவிட நாகரிக) பிரகடன நூற்றாண்டு
தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்!

சென்னை, செப்.25 தொல்லியல் அறிஞர் சர். ஜான் மார்ஷல் அவர்களது படத்திறப்பு என்பது வெறும் காட்சிக்காக மட்டுமல்ல; திராவிட கருத்தியலுக்கு வலு சேர்த்திடும் ஓர் ஆவணம்! திராவிட நாகரிகத்தின் பெருமையை, சிறப்பை மக்கள் உணரவேண்டும்! இப்படிக் கூறுவதால்,இந்த இயக்கம் பிரிவினை இயக்கம் அல்ல. ஒரு பண்பாட்டு இயக்கம் என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சிந்துவெளி (திராவிட நாகரிக) பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் சென்னை – பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (24.9.2024) மாலை 6.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.
திராவிடர் கழகமும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யமும் இணைந்து நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விழாவிற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார்.

சர் ஜான் மார்ஷல் படத்திறப்பு
சிந்துவெளி நாகரிகத்தின் தொன்மைகளை, சிறப்புகளை வேத காலத்திற்கும் முற்பட்ட நாகரிகம் என பிரகடனப்படுத்திய சர். ஜான் மார்ஷல் அவர்களின் உருவப்படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார்.
கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்றார். நூற்றாண்டு தொடக்க விழா வில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர், வரலாற்றுப் பேராசிரியர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் முனைவர் பெ.ஜெகதீசன் தொடக்கவுரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர்
நூற்றாண்டு நிகழ்வில், சிந்துவெளி ஆய்வாளரும், ஒடிசா மாநில மேனாள் மதியுரைஞருமான முனைவர் ஆர்.பாலகிருஷ்ணன் (அய்.ஏ.எஸ்.) தமது உரையினை வழங்கினார்.
அடுத்து இந்திய தொல்லியல் துறையின் தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணா சிறப்புரையாற்றினார். மூன்றாவதாக திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவரும், வரலாற்றுப் பேராசிரியருமான அ.கருணானந்தன் உரையாற்றினார்.
நிகழ்ச்சி நிறைவில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சி நடத்துதலை திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்.

ஆசிரியரி்ன் தலைமையுரை
வேத கால நாகரிகமான ஆரிய நாகரிகம்தான் சிறந்தது, தொன்மையானது என்று கற்பிதம் செய்யப்பட்ட நிலையில், மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் 1920–களில் நடத்தப்பட்ட அகழாய்வில் கற்பிக்கப்பட்ட நாகரிகத்திற்கு முந்தைய காலக் கட்ட நாகரிகம் அந்தப் பகுதியில் நிலவியதாக கண்டுபிடிக்கப்பட்டது. அது முற்றிலும் வேறுபட்ட நாகரிகம் என்பதை பிரகடனம் செய்த சர். ஜான் மார்ஷல் அதுவரை நிலவி வந்த கருத்துகளை உடைத்தெறிந்தார். அந்தப் புதிய நகர நாகரிகம் ஆரியரல்லாத நாகரிகம் என தொடக்கத்தில் அடையாளப்படுத்தப்பட்டாலும், பெரும்பான்மை மக்களது நாகரிகம், சிறுபான்மை மக்கள் அல்லாதார் பெயரில் அடையாளப்படுவது சரியல்ல என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு, ‘‘சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே’’ எனும் கருத்து நிறுவப்பட்டுள்ளது. இன்றைக்குப் பரவலாகவும் அது அறியப்படுகிறது. திராவிடம் எனும் பெயரில் பிரிவினைவாதம் பேசி வருகிறது என்று விமர்சிக்கும் வேத கால வரலாற்றாளர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ‘திராவிடம்’எனும் நிலப்பரப்பு அன்று நிலவியதாக அசல் மனுதர்மத்தை மேற்கோள் காட்டிப் பேசினார் ஆசிரியர்.

மனுதர்மம் 10 ஆவது அத்தியாயம்; 44 ஆவது சுலோகம்:
‘‘பௌண்டரம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீனம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்ட அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாகி விட்டார்கள்.’’
மனுதர்மம் கூறும் திராவிடம் உள்பட பல நிலப்பரப்புகளில் வாழ்ந்தவர்கள் சூத்திரர்கள் என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திராவிட நாகரிகம் என சிந்துவெளி நாகரிகம் அறியப்பட அரும்பணியாற்றிய தொல்லியல் அறிஞர் சர். ஜான் மார்ஷல் அவர்களது படத்திறப்பு என்பது வெறும் காட்சிக்காக மட்டுமல்ல; திராவிட கருத்தியலுக்கு வலு சேர்த்திடும் ஓர் ஆவணம். இந்த நிகழ்வு தொடக்கம்தான். தமிழ்நாடு முழுவதும் தெருத் தெருவாக சர். ஜான் மார்ஷல் பேசப்படுவார். திராவிட நாகரிகத்தின் பெருமையை, சிறப்பை அந்த நாகரிகத்தின் வழிவந்த மக்கள் உணரவேண்டும். இப்படி கூறுவதால், இந்த இயக்கம் பிரிவினை இயக்கம் அல்ல. ஒரு பண்பாட்டு இயக்கம். (It is not a Sectarian Movement; but a cultural Movement) – இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

தொடக்கவுரை பேராசிரியர் பெ.ஜெகதீசன்
பேராசிரியர் பெ.ஜெகதீசன் தனது தொடக்கவுரையில் குறிப்பிட்டதாவது: சர். ஜான் மார்ஷலுக்கு முன்பு வரலாற்றை கட்டியமைத்தவர்கள் ஆரியம் கலந்த நிலையினைத் தான் உருவாக்கினர். இத்தகைய போக்கிற்கு வித்திட்டவர் வில்லியம் ஜோன்ஸ்
வரலாற்று துறை அறிஞர் ஏ.எல்.பாதம் போன்றவர்கள் சமஸ்கிருத ஆதிக்க போக்கிற்கு எதிராக உண்மைக் கருத்தினை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். பொருளாதாரப் பேராசிரியராக விளங்கிய கில்பர்ட் ஸ்கேட்டர் இந்தியாவின் தென்பகுதி பற்றி ஆய்வு செய்தி திராவிடத்தின் சிறப்பு பற்றி பதிவு செய்துள்ளார். அத்தகைய அறிஞர் பெருமக்களின் ஆய்வுப் பாரம்பரியம் தேடப்பட்டு திராவிட நாகரிகம் பற்றிய உண்மைகள் கருத்தாக்கங்கள் பலப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு பெ.ஜகதீசன் பேசினார்.

ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (பணி நிறைவு)
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட அகழாய்வு களின் நோக்கம், தொன்மையான பொருள்கள் கிடைக்கும் அதை இங்கிலாந்திற்குக் கொண்டு சென்று கலைக்கூடத்தில் வைப்பதாகத்தான் இருந்தது. மொகஞ்சதாரோ, ஹரப்பா அகழாய்வும் அதே நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான். ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராயாக கர்சன் பிரபு பொறுப்பேற்கிறார். அகழாய்வில் அக்கறை கொண்டு சிந்துவெளி அகழாய்விற்கு பொறுப்பாளராக வின்ஸ்டன் ஸ்மித் எனும் நிர்வாக அதிகாரியை இங்கிலாந்து அரசாங்கம் பணித்திட, தொல்லியல் அனுபவம் மிக்கவர்கள் அந்த பணியினைச் சரியாக செய்திட முடியும் எனக் கருதி 26 வயது நிரம்பிய, திருமணமாகி 26ஆவது நாளில் சிந்து சமவெளி அகழாய்வுப் பணிக்கு 1920 ஆண்டில் கர்சன் பிரபு நியமிக்கின்றார்.

எந்தவித முன் தீர்மானம் இன்றி, இந்தியாவைப் பற்றி முன் கருத்து எதுவுமின்றி ஆய்வினை மேற்கொண்டதால் சிந்து வெளி நாகரிகத்தின் சிறப்புகளை சர். ஜான் மார்ஷல் கொண்டு வர முடிந்தது.
சிந்து வெளி நாகரிகம் உழவுத் தொழில் நாகரிகம் – உபரி உற்பத்தி நிச்சயம் கிடைக்கும். அதனால் வணிகம் செய்து வளமை அடைந்திருக்க வாய்ப்பு உண்டு. அதற்கான தடயங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ் சங்க இலக்கியக் குறிப்புகளும் – தடயங்கள், ஊர் பெயர்கள் சிந்து சமவெளியில் கிடைக்கின்றன. சிந்து சமவெளியில் பசு என்பது கிடையாது. எருமைதான் இருந்தது. குதிரையைக் கொண்டு எருதினை மாற்றிடும் முயற்சிகள் நடைபெற்றன – வெற்றியடைய முடியவில்லை. அந்த கால ஆரிய குறிப்புகளில் இவை எதுவும் கிடையாது. வேத காலத்திற்கு ஆதாரமான சமஸ்கிருத மொழி என்பது கி.மு. 1500இல்தான் வந்தது என ஆரிய நாகரிக போற்றுநர் மேக்ஸ் முல்லர் கூறுகிறார்.
நகரங்களைக் குறிப்பிட்டு பெயர்களை விளித்திடும் ‘தொண்டி அன்னல்’ என்ற குறிப்பும் திராவிட நாகரிகம் நகர நாகரிகம்தான் என்பதை உறுதி செய்திடும்.
இவ்வாறு ஆர்.பாலகிருஷ்ணன் தனது உரையில் குறிப்பிட்டார்.

தொல்லியல் அறிஞர்
கி.அமர்நாத் ராமகிருஷ்ணா
இந்திய தொல்லியல் துறையின் தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணா தமது உரையில் குறிப்பிட்டதாவது:
சிந்து சமவெளி – மொகஞ்சதாரோ, ஹரப்பா அகழாய் வினை சார்லஸ் மேசன் (Charles Meason) தொடங்கிய நிலையில் அந்த அகழாய்வு குறித்து வித்தியமானது என்று கூறுகிறார்.
அதற்குமேல் அவர் ஆய்வு செய்திடவில்லை. அலெக்ஸாண்டர் கர்னிங் பிரபு (Alexander Curning Prabu) பவுத்த ஸ்தலங்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டார். சிந்து வெளியின் சிறப்பு, முக்கியத்துவம், தனித்துவம் பற்றி வெளிக் கொணர்ந்தவர் சர். ஜான் மார்ஷல். மொகஞ்சதாரோ – ஹரப்பா இடங்களுக்குள்ள இடைவெளி 600 மைல்.ஆனால் அந்த அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரைகள், தடயங்கள் ஒரே மாதிரியாக இருந்ததை, பெரிதாக அன்று பேசப்பட்ட வேதகால நாகரிகக் குறிப்புகள் எதுவும் அங்கில்லை. சுமேரிய – மெசபடோமிய நாகரிகங்கள் இடையின நாகரிகம் என சிந்து நாகரிகங்கள் அகாழய்வு முடிவுகளில் அறியப்பட்டது. வேதகால நாகரிகத்திற்குள் நிலையான இடத்தில் வாழ்ந்தவர்கள் அல்லர். நிலையான இடத்தில் வாழ்ந்தவர்கள்தான் வளமை, நாகரிக முன்றேற்றம் காண முடியும். சிந்து சமவெளியில் வாழ்ந்த பூர்வகுடிகள் நிலையாக வாழ்ந்தவர்களான தமிழ் நகர நாகரிகத்தினர்.
கீழடி அகழாய்விலும் நமது நாகரிகங்கள் கண்டுடிக்கப் பட்டன. 13 லட்சம் ச.கி. மீட்டரில் ஆய்வுகளில் சிந்து சமவெளி பரவி இருந்தது. தொல்லியல் முடிவுகள், முக்கிய ஆதாரங்களைக் கொண்டு இலக்கியக் குறிப்புகளின் துணையுடன் மேலும் ஆய்வு முடிவுகள் கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு கி.அமர்நாத் ராமகிருஷ்ணா தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

பேராசிரியர் அ.கருணானந்தம்
திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் அ.கருணானந்தம் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
வேத கால நாகரிகத்தை தூக்கிப் பிடித்திட இல்லாத வழியினை ஓடாத சரஸ்வதி நதியை வேத சரஸ்வதி நாகரிகம் என சிந்துவெளி நாகரிகத்தை திரிபு செய்திட முனைந்து வருகிறார். இதை வரலாற்று விழிப்புடன் தடுத்திட வேண்டும். சர். ஜான் மார்ஷல், சிந்து வெளி நாகரிகத்தை ஆரியர் அல்லாத (Non Aryan), ஆரியருக்கு முந்தைய (Pre Aryan) நாகரிகம் என குறிப்பிட்டார். ரிக் வேதத்தில் எந்த நாகரிகமும் குறிப்பிடப்பவில்லை. எதிரிகளை, புரங்களில் வாழ்பவர்களை குறிப்பிடுகின்றன. புரங்களில் வாழ்ந்தவர்கள் – கோட்டையில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் என கருதப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உழவுத் தொழில் செய்திட கட்டப்பட்ட தடுப்பணையை ஆரியர்கள் பூசண பாம்பு என கருதி இடிக்க முற்பட்டனர். கதை கட்டினர்.

கடல் கடந்து செல்லுதல் என்பது ஆரியத்திற்கு புறம்பானது. கடல் கடந்து வணிகம் செய்வது திராவிடம் சார்ந்தது. “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது தமிழர் முதுமொழி. ‘திராவிட’ என்பது தமிழ்நாட்டிற்கு மட்டும் – இந்தியாவிற்கு மட்டும் உரியது அல்ல. கருப்பர் என்பது திராவிடர் அடையாளமே. அன்றைக்கு சிந்து சமவெளி பற்றிய மொழி அறிஞர் ஹென்றி ஹிகர்ஸ் பாதிரியார் அண்மையில் பல்கலைக்கழகத்தில் 1940களில் உரையாற்றிய பொழுது மாணவராக இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் பாதிரியாரிடம் புத்தகத்தில் செய்யப்பட வேண்டிய பொழுது ‘நான் ஸ்பெயின் நாட்டு திராவிடன்’ (I am a Dravidian from Spain) என குறிப்பிட்டு கையொப்பம் இட்டாராம்.
தொடர்ந்து திராவிட நாகரிகத்தின் மேன்மை, சிறப்பு, மாற்ற முடியாத அளவில் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு க.கருணானந்தன் தனது உரையில் குறிப்பிட்டார்.

திராவிட நாகரிக பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு ‘கல்லூரி பேரிசிரியர்கள் – குறிப்பாக வரலாற்றுப் பேராசிரியர்கள், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தமிழ்நாடு மூதறிஞர் குழு உறுப்பினர்கள், திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள், திராவிட இயக்கப் பற்றாளர்கள், பொதுநல உணர்வாளர்கள் பெரும் திரளாக வந்திருந்தனர். இரண்டரை மணி நேர நிகழ்ச்சியில் கலையாமல் கருத்தினைக் கேட்டுக் மகிழ்ந்தனர்.
சிறப்பு விருந்தினர்கள் ஆர்.பாலகிருஷ்ணன், கி.அமர்நாத் இராமகிருஷ்ணா ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து, தந்தைபெரியார் 146ஆவது பிறந்த நாள் விடுதலை மலர் இதழை வழங்கி சிறப்பு செய்தார். முனைவர் பெ.ஜெகதீசனுக்கு கழகத்துணைத் தலைவர் பொன்னாடை அணிவித்து, விடுதலை மலர் இதழை வழங்கி சிறப்பு செய்தார். பேராசிரியர் அ.கருணானந்தனுக்கு கழகப் பொருளாளர் வீ.குமரேசன் பொன்னாடை அணிவித்து விடுதலை மலர் இதழை வழங்கி சிறப்பு செய்தார்.
சிந்துவெளி ஆய்வாளர், ஒடிசா மாநில மேனாள் மதியுரைஞர் ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ்., இந்திய தொல்லியல் துறை இயக்குநர் தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத் இராமகிருஷ்ணா, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் அ.கருணானந்தன் சிறப்புரை ஆற்றினார்கள். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் பெ.ஜெகதீசன் தொடக்கவுரை ஆற்றினார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்வியல் சிந்தனைகள் நூலில் குறிப்பிட்டவாறு, சிறப்புரையாளர்களுக்கு வழிவிட்டு, ரத்தினச்சுருக்கமாக, அனைவரையும் வரவேற்புரையாற்றினார்.
விழா முடிவில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் நன்றியுரையாற்றினார். திராவிடர் கழகத் துணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
சிந்துவெளி (திராவிட நாகரிக) பிரகடன நூற்றாண்டு தொடக்க விழாவில் திராவிடர் கழகம், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியதென்றல், திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள், சான்றோர்கள் என பலரும் பெரிதும் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்.

கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, ரோஜா முத்தையா ஆய்வு நூலக இயக்குநர் சுந்தர் கணேசன், ஊடகவியலாளர்கள் கோவி.லெனின், மணா, பேராசிரியர்கள் தேவதாஸ், நம்.சீனிவாசன், மாரப்பன், ரஷீத்கான், தமிழ்நாடு காவல்துறை மேனாள் டிஜிபீ ராமநாதன் அய்பிஎஸ்-, பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், ஓவியர் டிராட்ஸ்கி மருது, கால்நடை பல்கலைக்கழக மேனாள் பதிவாளர் பெரு.மதியழகன், வேண்மாள் நன்னன், மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரவிச்சந்திரன், கழகப் பொறுப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், வழக்குரைஞர் சி.அமர்சிங், ஆர்.டி.வீரபத்திரன், தஞ்சை மு.அய்யனார், எழுத்தாளர் கோ.ஒளிவண்ணன், ஆடிட்டர் சண்முகம், வே.பாண்டு, திமுக மருத்துவர் சாய் லட்சுமிகாந்த், மருத்துவர் யாழினி, பழ.செல்வக்குமார் உள்பட ஏராளமானவர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

தொகுப்பு: வீ.குமரேசன்

வெள்ளி, 21 ஜூன், 2024

இறுதியாகக் குடியேறியவர்கள் ஆரியர்கள்


 ஜூலை 1-15, 2023

ஸ்டெப்பிப் புல்வெளிகளில் மேய்ப்பாளர்களாகவும் போர்வீரர்களாகவும் இருந்தவர்கள். எப்படி முதலில் அய்ரோப்பாவையும் பின்னர் தெற்காசியாவையும் ஆக்கிரமித்தனர் என்பதையும், இந்தியாவின் மிகப் பெரிய மொழிக் குடும்பத்தையும், புதிய மதச் சடங்குகளையும், ஹரப்பா பாரம்பரியங்களும் ஸ்டெப்பி நடைமுறைகளும் விரவிக் கிடக்கும் கலாச்சாரக் கலவையையும் எப்படி இந்தியாவுக்கு அளித்தனர் என்பதையும் பற்றிய கதை இது.

இந்திய – அய்ரோப்பிய மொழிகளைப் பேசிய, தங்களை ஆரியர்கள் என்று கூறிக் கொண்டவர்கள் எப்போது, எப்படி இந்தியத் துணைக்கண்டத்தை அடைந்தனர் என்ற கேள்வியைவிட அதிகமான சூட்டையும் ஓசையையும் எழுப்பிய கேள்வி வேறு எதுவும் இந்திய வரலாற்றில் கிடையாது.

இது விநோதமானது. ஏனெனில், இதையொத்த தீவிரச் சர்ச்சையை, இந்தியாவில் முதன்முதலாகக் குடியேறியவர்கள் எப்போது இங்கு வந்தனர்? திராவிட மொழி பேசியவர்கள் எப்போது இந்தியா வந்து சேர்ந்தனர்? முண்டாரி, காசி, மணிப்புரி மொழி பேசியவர்கள் எப்போது இந்தியாவை வந்தடைந்தனர்?’ போன்ற வேறு எந்தக் கேள்வியும் தோற்றுவிக்கவில்லை. இந்தியாவில் முதலில் குடியேறியவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தனர் என்றோ, முதனிலைத் திராவிட மொழி ஈரானின் ஈல மொழியோடு தொடர்புடையது என்றோ, முண்டாரி, காசி, மணிப்புரி மொழிகளைப் பேசியவர்கள் கிழக்காசியாவிலிருந்து வந்தனர் என்றோ கூறினால் அது யாருடைய கோபத்தையும் தூண்டுவதில்லை இந்தப் பதில்களைக் கேட்பவர்கள் தங்களுடைய தோள்களைக் குலுக்கிவிட்டுத் தங்களுடைய வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுவர். பல முறை வேறு இடங்களிலிருந்து பெரும் எண்ணிக்கையில் இடம் பெயர்ந்த மக்களால் நிரப்பப்படாத நாடு இன்று உலகில் எதுவும் கிடையாது என்பதுதான் அதற்குக் காரணம். அய்ரோப்பா குறைந்தபட்சம் இரண்டு முறை பெரும் இடப்பெயர்ச்சியால் புரட்டிப் போடப்பட்டிருக்கிறது. அமெரிக்கக் கண்டத்தில் அய்ரோப்பியர் கால் வைப்பதற்கு முன்பு மூன்று முறை, அது மூன்று பெரிய இடப்பெயர்ச்சிகளைச் சந்தித்துள்ளது. கிழக்காசியா குறைந்தபட்சம் மூன்று இடப்பெயர்ச்சிகளைச் சந்தித்துள்ளது. மத்திய ஆசியாவும் மேற்காசியாவும் சந்தித்துள்ள இடப்பெயர்ச்சிகளுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் கணக்கு வழக்கே கிடையாது.

இது போதாது என்பதுபோல, இந்தியர்களும் பெருமளவுக்கு இங்கிருந்து வெளியேறிப் பல இடங்களில் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக கி.பி. முதலாம் நூற்றாண்டில் அது நிறையவே நடந்துள்ளது. இன்றைய வியட்நாம், கம்போடியா, பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா என்று தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஒரு சமயம் இந்தியர்களின் கலாச்சார ஆளுமையின் கீழ் இருந்தது. சீனாகூட ஒரு சமயம் இந்தியாவின் ஆளுமையின் கீழ் இருந்துள்ளது. சமயங்களில் இது படையெடுப்பு மூலம் நிகழ்ந்திருக்கலாம் என்றாலும் பெரும்பாலும் புத்த மதத் துறவிகள் தங்களுடைய மதத்தைப் பரப்பத் தீவிரமாக முயன்றதுதான் அதற்குக் காரணம். அதோடு, வணிகர்கள் தங்களுடைய சொந்த நலனை விருத்தி செய்து கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும். இன்று உலகெங்கும் 48.8 கோடி மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர் என்றாலும் அவர்களில் மிகச் சிறிய சதவிகிதத்தினரே இன்று இந்தியாவில் இருக்கின்றனர். இந்தியா எந்த அளவுக்குத் தன் இயற்கையான எல்லைகளைத் தாண்டித் தன் சிறகை விரித்துள்ளது என்பதையே இது காட்டுகிறது.

அப்படியானால், இந்திய – அய்ரோப்பிய மொழி பேசியவர்களின் வருகை குறித்த கேள்வி மட்டும் ஏன் உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்கிறது? இதற்கு பதிலளிப்பது எளிது: இந்தியக் கலாச்சாரம் என்பது ஆரிய, சமஸ்கிருத, அல்லது வேதக் கலாச்சாரத்தை ஒத்தது அல்லது அவற்றை ஒத்தப் பொருள் கொண்டது என்ற, வெளிப்படையாகச் சொல்லப்படாத, ஆனால் அடிநாதமாக இருக்கின்ற அனுமானம்தான் அது. அதனால் இந்திய -அய்ரோப்பிய மொழி பேசியவர்கள் எப்போது இந்தியாவுக்கு வந்தனர் என்று கேட்பது, எப்போது நாம் நம்முடைய கலாச்சாரத்தை இறக்குமதி செய்தோம் என்று கேட்பதற்குச் சமானமானது.
இது இரண்டு விதங்களில் அபத்தமானது முதலாவது, இந்தியக் கலாச்சாரம் என்பது ஆரிய, சமஸ்கிருத அல்லது வேதக் கலாச்சாரத்தை ஒத்ததோ அல்லது அவற்றை ஒத்த பொருள் கொண்டதோ அல்ல. இந்தியக் கலாச்சாரம் என்று இன்று நாம் அறிந்து வைத்துள்ள தனித்துவமான கலாச்சாரத்திற்கு ஆரியக் கலாச்சார நீரோடை முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது என்றாலும், ஒருக்காலும் அது ஒன்று மட்டுமே அதற்குக் காரணமல்ல. இந்தியக் கலாச்சாரத்தின் உருவாக்கத்தில் வேறு பல நிரோட்டங்களுக்கும் பங்கிருக்கிறது. இரண்டாவது, இந்திய – அய்ரோப்பிய மொழிகள் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் இந்தியாவுக்குள் வந்தன என்று சொல்வதும், ஆரிய, சமஸ்கிருத அல்லது வேதக் கலாச்சாரம் முழுமையாக வளர்ச்சியடைந்த நிலையில் வெளியிடங்களிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்டன என்று சொல்வதும் ஒன்றல்ல. இந்திய_ அய்ரோப்பிய மொழிகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தவர்களும், இப்பகுதிகளில் ஏற்கனவே வெகுகாலமாகக் குடியேறியிருந்தவர்களும் ஒருவரோடு ஒருவர் கலந்துறவாடி, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து. விஷயங்களை ஒருவரிடமிருந்து மற்றொருவர் சுவீகரித்துக் கொண்டதன் மூலமாக ஆரியக் கலாச்சாரம் உருவாகியிருந்திருப்பதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.
நாம் மீண்டும் அக்கேள்விக்கே வரலாம். இந்திய-அய்ரோப்பிய மொழிகளைப் பேசிய, தங்களை ஆரியர்கள் என்று கூறிக் கொண்டவர்கள் வேறு எங்கிருந்தாவது இங்கு வந்தார்களா? அப்படியெனில், அவர்கள் எப்போது இங்கு வந்தனர்?

இந்தியாவிலிருந்து வெளியே இடப்பெயர்ச்சி அண்மைக் காலம்வரைகூட, இந்திய, அய்ரோப்பிய மொழிகளைப் பேசியவர்கள் சமஸ்கிருதத்தின் தொடக்ககால வடிவத்தோடு இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்து அதை இங்கே பரப்பியிருந்ததற்கு பதிலாக, சமஸ்கிருதத்தின் தொடக்ககால வடிவத்தைப் பேசியவர்கள் இந்தியாவிலிருந்து வெளியே இடம் பெயர்ந்து ஏன் இந்திய _ அய்ரோப்பிய மொழிகளை உலகெங்கும் பரப்பியிருக்கக்கூடாது என்ற விவாதத்திற்குச் சிறிதளவேனும் இடமிருந்தது. ஆனால் மரபியல் ஆய்வுகள், குறிப்பாகப் பண்டைய மனிதர்களின் டிஎன்ஏ சோதனைகளின் அடிப்படையில் அமைந்த மரபியல் ஆய்வுகள், அந்த விவாதத்திற்குத் துளிகூட இடமில்லாமல் செய்துவிட்டன. அது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

தற்போதைய இந்திய மக்களில் முக்கால்வாசிப் பேர் ஹிந்தி, குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி போன்ற இந்திய-அய்ரோப்பிய மொழிகளைப் பேசுகின்றனர். அதேபோல, உலக மக்களில் நாற்பது சதவிகிதத்தினர் ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ், ஈரானி, ரஷ்யன், ஜெர்மன் போன்ற இந்திய – அய்ரோப்பிய மொழிகளைப் பேசுகின்றனர். இந்தியத் துணைக்கண்டம்தான் இந்திய _ அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தின் கிழக்கு எல்லையாக இருக்கிறது. இந்தியாவுக்குக் கிழக்கே பெரிய அளவில் இந்திய அய்ரோப்பிய மொழிகளைப் பேசுபவர்கள் எவரும் இல்லை. அப்படியானால் இந்த மொழிக் குடும்பம் எப்படி இந்தியாவின் ஆதிக்க மொழியாக மாறியது என்ற கேள்வி எழுவது இயல்புதான். இதற்கு இரண்டே இரண்டு விடைகள்தான் இருக்க முடியும். ஒன்று, கடந்தகாலத்தில் எப்போதோ அது இந்தியாவுக்குள் வந்திருக்க வேண்டும்; அல்லது அது இந்தியாவிலிருந்து அதன் மேற்குப் புறம் இருக்கும் உலகெங்கும் பரவியிருக்க வேண்டும்.

நாம் இரண்டாவது சாத்தியக்கூறை முதலில் எடுத்துக் கொள்ளலாம். ஏதோ ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருதம் அல்லது முதனிலை சமஸ்கிருத மொழி பேசிய இந்தியர்கள் பெரும் எண்ணிக்கையில் மேற்கிற்கு இடம் பெயர்ந்திருக்க வேண்டும்; அவர்களின் வம்சாவளியினர், ஈரான், மத்திய ஆசியா, மேற்கு ஆசியா, கிழக்கு அய்ரோப்பா, மேற்கு அய்ரோப்பா ஆகிய இடங்களை உள்ளடக்கிய பெரும் பகுதியில் பரவி, இந்திய_-அய்ரோப்பிய மொழிகளை அங்கெல்லாம் பரப்பியிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், இப்பகுதிகளில் பதிவாகியிருக்கும் மரபியல் பதிவுகளில் எவையெல்லாம் உங்கள் கண்களில்படும்? ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறியிருந்த முதல் இந்தியர்களின் மரபியல் பதிவுகள் இப்பகுதிகளில் பரவலாகத் தூவப்பட்டிருக்க வேண்டும், இல்லையா? ஆனால் முதன்முதலாக அங்கு இடம் பெயர்ந்தவர்கள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவி, ஹரப்பா நாகரிகத்தைக் கட்டியெழுப்பிய மக்களின் ஒரு பகுதியாக ஆகியிருந்தனர் அப்படியானால், ஹரப்பா நாகரிகம் தோன்றுவதற்கு முன்பு பெரும் எண்ணிக்கையில் மக்கள் இந்தியாவிலிருந்து வெளியேறி, இந்திய அய்ரோப்பிய மொழிகளின் பரவலுக்குக் காரணமாக இருந்திருந்தால், மத்திய ஆசியாவிலிருந்து மேற்கு அய்ரோப்பாவரை அவர்களுடைய மரபியல் கால்தடங்கள் நம் பார்வையில் தென்பட்டிருக்க வேண்டும். அப்பிராந்தியங்களில் அப்படிப்பட்டப் பதிவுகள் பெரிய அளவில் கிடைத்துள்ளனவா? இல்லை, கிடைக்கவில்லை அதற்கு நேர்மாறானதே நடந்துள்ளது. முதல் இந்தியர்களின் வம்சாவளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள் எவரும் உலகில் வேறு எங்கும் இல்லை என்பதை நாம் முதலாம் அத்தியாயத்தில் பார்த்தோம். அதனால் இந்தியாவிலிருந்து வெளியேறியவர்கள் உலகெங்கும் இந்திய_-அய்ரோப்பிய மொழிகளைப் பரப்பினர் என்பது போகாத ஊருக்கு வழி.

ஆனால் இதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு மட்டும் உள்ளது. அது ஒரு சிறிய நாடோடிக் குழு. முன்பு ஜிப்சிகள் என்று அழைக்கப்பட்ட ரோமா மக்கள்தான் அவர்கள். அவர்கள் பெரும்பாலும் அய்ரோப்பாவிலும் அமெரிக்காவிலும்தான் இருக்கின்றனர். அவர்கள் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பாக, பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வடமேற்கு இந்தியப் பகுதியிலிருந்து வெளியேறிய ஒரே இனக் குழுவின் வம்சாவளிகள் என்பதை மரபியல் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. அதற்கு முன்பே, இந்திய_ அய்ரோப்பிய மொழிகள் அய்ரோப்பாவிலும் பிற பகுதிகளிலும் நன்றாக வேரூன்றியிருந்தன. அவர்கள் மேற்குப் புறமாக நகர்ந்தபோது அவர்கள் முதல் இந்தியர்களின் மரபியல் சுவடுகளைத் தங்களுடன் சுமந்து கொண்டிருந்தனரா? ஆமாம். சுமந்து கொண்டிருந்தனர்.

2011Þ™ Reconstructing the Indian origin and Dispersal of the European Roma: A Maternal Genetic perspective’ ரோமா மக்கள் இரண்டு தனித்துவமான பரம்பரை மூலங்களைக் கொண்டிருக்கின்றனர். 65 சதவிகிதத்திலிருந்து 94 சதவிகிதம் வரையிலான ரோமா மக்களிடத்தில் அய்ரோப்பிய மத்தியக் கிழக்கு ஹாப்லோ குரூப் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு இவ்வாறு கூறுகிறது.

பரம்பரை இருக்கிறது. மீதமுள்ளவர்கள் M ஹாப்லோ குரூப்பைச் சேர்ந்தவர்கள் இந்த M ஹாப்லோ குரூப் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் மிகச் சாதாரணமாகக் காணப்பட்டாலும், அய்ரோப்பாவில் அரிதாகவே காணப்படுகிறது. M ஹாப்லோ குரூப்புக்குள் இருக்கும். அனைத்து வம்சாவளியினரும் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். அதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு மட்டும் இருந்தது. இரண்டு போர்ச்சுகீசிய ரோமா மக்களிடமிருந்த கிழக்கு ஆப்பிரிக்க M1a1 ஹாப்லோகுரூப்தான் அது கிடைத்துள்ள முக்கிய ஆசியக் கிளை ஹாப்லோகுரூப்புகள் M5M, M18 மற்றும் M35b ஆகும். இவை அனைத்தும் இந்தியப் பரம்பரையைக் கொண்டிருந்தன.

அதாவது இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து மேற்கு நோக்கி அய்ரோப்பாவரை மக்கள் குழு ஒன்று இடம் பெயர்ந்துள்ளது. அவர்கள் அங்கு தங்களுடைய மரபியல் சுவடுகளை விட்டுச் சென்றிருக்கின்றனர். தெற்காசியாவில் முதலில் குடியேறிய வம்சாவளிகளின் மரபியல் சுவடான M ஹாப்லோ குரூப்தான் அது. அது அய்ரோப்பாவில் அபூர்வமாகவே காணப்பட்டது. ரோமா மக்கள் இந்திய_ அய்ரோப்பிய மொழிகளை அய்ரோப்பாவில் பரப்பியிருக்க முடியாது என்பதாலும், வேறு எந்தத் தெற்காசியப் பரம்பரையின் சுவடுகளும் குறிப்பிடத்தக்க அளவில் அய்ரோப்பாவிலோ அல்லது மத்திய ஆசியாவிலோ இல்லை என்பதாலும், இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் இந்திய- _ அய்ரோப்பிய மொழிகளை அய்ரோப்பாவில் பரப்பியிருப்பார்கள் என்ற வாதம் முற்றிலுமாக நிராகரிக்கப்படுகிறது.

அதனால் இது நம்மை அடுத்த கேள்விக்கு எடுத்துச் செல்கிறது. இந்திய  அய்ரோப்பிய மொழிகள், இந்தியத் துணைக்கண்டத்தில் வெளியிலிருந்து இந்தியாவுக்குள் இடம் பெயர்ந்தவர்களால் பரப்பப்பட்டன என்றால், அது எப்போது நிகழ்ந்தது, அவர்கள் எங்கிருந்து வந்தனர்?

ஆரியர்களின் மரபியல் சுவடுகள்

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அறிஞர்களையும் இதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தவர்களையும் சோர்வடையச் செய்து கொண்டிருந்த அக்கேள்விக்கு ஒருவழியாக மரபியல் விடை கண்டுள்ளது, மக்கள் எவ்வாறு இடம் பெயர்ந்தனர், காலப்போக்கில் ஓரிடத்தின் மக்களமைப்பு எப்படி மாறியது போன்றவற்றைத் தீர்மானிக்க உதவும் பண்டைய மனிதர்களின் “டிஎன்ஏ”வை அலசி ஆராயும் புதிய மரபியல் உத்திதான் அதைச் சாத்தியமாக்கியுள்ளது. ஒரே இடத்தில் பல காலகட்டங்களைச் சேர்ந்த “டிஎன்ஏ”வை ஆராய்வதன் மூலமாகவோ, பல இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த “டிஎன்ஏ”வை அலசுவதன் மூலமாகவோ, எது எப்போது மாறியது என்பதை மரபியலாளர்களால் கண்டுபிடிக்க முடியும்.

இந்திய _அய்ரோப்பிய மொழி பேசியவர்கள் இந்தியாவுக்குள் இடம் பெயர்ந்தது பற்றி மேலும் அலசுவதற்கு முன்பாக, இந்தியாவிலிருந்து வெளியேறியவர்கள் தொடர்பாக நாம் விவாதித்துக் கொண்டிருந்தபோது நம்முன் தோன்றிய ஒரு கேள்விக்கு இப்போது விடை காண முயற்சிக்கலாம், இந்திய _ அய்ரோப்பிய மொழிகள் மிகப் பெரிய யுரேசியப் பகுதியில் பரவியுள்ளன என்றால், இந்த நிலப்பரப்பில் அவற்றின் மரபியல் சுவடுகள் நம் பார்வையில் பட்டுள்ளனவா என்பதே அக்கேள்வி. ஆம் என்பதே அதற்கான பதில். R1a என்ற Y  குரோமோசோம். ஹாப்லோகுரூப், குறிப்பாக அதன் கிளை ஹாப்லோகுரூப்பான R1a -417 தான் அது. R1a-M 417 இன் பரவல் வரைபடத்தை நீங்கள் உற்று நோக்கினால், அந்த ஹாப்லோகுரூப், ஸ்கேன்டினேவியாவிலிருந்து தெற்காசியாவரை, அதாவது இந்திய_ -அய்ரோப்பிய மொழி பேசுகின்றவர்கள் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருந்ததை அது காட்டும்.

R1a-M417 உலகெங்கும் எவ்வாறு பரவியுள்ளது. என்பதை இப்போது பார்க்கலாம். R1a-M417 கி.மு. 3800ஆம். ஆண்டுவாக்கில், R1a-Z282,, சுடய-ஷ்93 ஆகிய இரண்டு கிளைக் குழுக்களாகப் பிரிந்தது. R1a-Z282 அய்ரோப்பாவில் மட்டுமே உள்ளது. R1a-M93 மத்திய ஆசியாவிலும் தெற்காசியாவிலும் காணப்படுகிறது. அதோடு, இந்தியாவிலுள்ள சுடயஷ் பரம்பரையின் கிட்டத்தட்ட மொத்தமும் இதன் கீழ்தான் வருகிறது. இவற்றுக்கு இடையேயான இடைவெளி மிகவும் பெரியது. இது குறித்து 2014ஆம் ஆண்டு “The phylogenetic and Geographic structure of Y-chromosome Haplogroup RIa’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதை முன்னின்று நடத்தியவர் Y குரோமோசோம் குறித்த ஆய்வுகளில் தலைசிறந்து விளங்கும். டாக்டர் பீட்டர் ஏ.அன்டர்ஹில் ஆவார். அவர் அதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“நமக்குக் கிடைத்துள்ள 1693 அய்ரோப்பிய R1a-M417 மாதிரிகளில், 96 சதவிகிதத்திற்கும் அதிகமானவை R1a-Z828அய்ச் சேர்ந்தவை. அதேபோல நமக்குக் கிடைத்துள்ள 490 மத்திய மற்றும் தெற்காசிய சுடயஷ் மாதிரிகளில், 98.4 சதவிகிதம். R1a-2 93 அய்ச் சேர்ந்தவை இது முன்பு கூறப்பட்டிருந்த போக்கை ஒட்டியே அமைந்துள்ளது’’.R1a-M417 மற்றும் அதன் கிளையான R1a-Z93 தொடர்பாக நமக்குக் கிடைத்துள்ள சான்றுகளில் பழமையான சான்று உக்ரைனில் கிடைத்துள்ளது. 2017இல் வெளியானThe Genomic History of Southeastern Europe என்ற அறிக்கையின்படி, அது கி.மு. 5000க்கும் கி.மு. 3500க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. ரஷ்யாவின் சமாரா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அது கி.மு. 2800ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அய்ரோப்பாவின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது கி.மு. 2500ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பரவலாகக் காணப்படும் R1a-Z93, மத்திய ஆசிய ஸ்டெப்பிப் பகுதிகளில் நிறைய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது கி.மு. 2500ஆம் ஆண்டைச் சேர்ந்தது. என்று கணிக்கப்பட்டுள்ளது. மத்திய வெண்கலயுகத்திலிருந்து பிந்தைய வெண்கல யுகம்வரையிலான காலகட்டத்தில் (கி.மு.2000க்கும் கி.மு. 1400க்கும் இடைப்பட்ட காலம்) மத்திய ஆசிய ஸ்டெப்பிப் பகுதிகளில் சுடய-ஷ்93 அறுபத்தெட்டு சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்ததாக ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவின் R1a-Z93 மக்கள் மத்திய ஆசியாவின் ஸ்டெப்பிப் பகுதிகளிலிருந்து வந்திருக்க வேண்டும் எனும் தீர்க்கமான முடிவைத்தான் இவையனைத்தும் தெரிவிக்கின்றன.

ஆனால் R1a-Zவும் அதன் கிளைக் குழுக்களும் இந்தியாவிலிருக்கும் இந்திய – அய்ரோப்பிய மொழி பேசும் மக்களுடன் தொடர்புடையவை என்பது நமக்கு எப்படித் தெரியும்? இதைச் சோதிப்பதற்கு ஓர் எளிய வழி உள்ளது. பொதுவாக இந்திய மக்களிடையே R1a எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, சமஸ்கிருத மொழியின் பாரம்பரியப் பாதுகாவலர்களாக விளங்கும் உயர்ஜாதியினரோடு, குறிப்பாக பிராமணர்களோடு, அதற்குத் தொடர்பு இருக்கிறதா என்பதைப் பார்த்தாலே எல்லாம் தெளிவாகிவிடும். தாழ்ந்த ஜாதியினரைக் காட்டிலும் உயர்ஜாதியினரிடத்தில் R1a மிக அதிக அளவில் இருப்பதைப் பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. பட்டியல் ஜாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரிடம் இருப்பதைப்போல பிராமணர்களிடம் R1a இரண்டு மடங்கு இருக்கிறது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அந்த மரபியல் பதிவுகள் இந்திய – அய்ரோப்பிய மொழிகளைப் பேசும் மக்கள் வசிக்கும் நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. அதோடு, இந்தியாவிலுள்ள இந்திய-அய்ரோப்பிய மொழிகளில் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றான சமஸ்கிருத மொழியின் பாரம்பரியக் காவலர்களிடத்தில் R1a கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது.

ஸ்டெப்பிப் புல்வெளிகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர்ச்சி

இந்திய – அய்ரோப்பிய மொழிகளைப் பேசியவர்கள் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தது தொடர்பான கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆய்வு 2018 மார்ச் 31 அன்றுதான் வெளியானது. “The Genomic Formation of South and Central Asia” என்பதுதான் அந்த ஆய்வறிக்கையின் தலைப்பு. புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சிய இந்த அறிக்கை, முதன்முறையாகத் தெற்காசியா, கஜகிஸ்தான், கிழக்கு ஈரான் போன்ற பகுதிகளில் கிடைத்த பண்டைய மனிதர்களின் டிஎன்ஏ சோதனை முடிவுகளைப் பயன்படுத்திக் கொண்டது.

கி.மு. 2100க்குப் பிறகு கஜகிஸ்தானின் ஸ்டெப்பிப் பகுதிகளிலிருந்து தெற்கு, நோக்கி ஓர் இடப்பெயர்ச்சி நடைபெற்றது உண்மைதான் என்று அந்த அறிக்கை கூறுகிறது. அவர்கள் முதலில் இன்றைய துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தென்மத்திய ஆசியப் பகுதிகளுக்குச் சென்றனர்; பின்னர் அவர்கள் கி.மு.2000க்கும் கி.மு.1000க்கும் இடைப்பட்ட ஆயிரம் ஆண்டுகளில் தெற்காசியாவை நோக்கி நகர்ந்தனர்: போகிற வழியில், கி.மு. 2300க்கும். கி.மு.1700க்கும் இடைப்பட்ட காலத்தில், இன்றைய வடக்கு ஆப்கானிஸ்தான், தெற்கு உஸ்பெகிஸ்தான் மற்றும் வடக்கு தஜிகிஸ்தான் பகுதிகளில் பரவியிருந்த ஆக்சஸ் நாகரிகத்தின்மீது அதிகத் தாக்கம் எதையும் விளைவிக்காமல் அதைக் கடந்து மேலும் தெற்கு நோக்கிச் சென்று தெற்காசியாவை அடைந்தனர். அங்கு ஏற்கனவே இருந்த ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மக்களுடன் இனக்கலப்பில் ஈடுபட்டனர். அதன் விளைவாக, இந்தியாவில் இன்று இருக்கும் இரண்டு முக்கியப் பரம்பரைகளில் ஒன்றை அவர்கள் உருவாக்கினர். அதுதான் வட இந்திய மூதாதையர். மற்றொரு பிரிவினரான தென்னிந்திய மூதாதையர், அதே காலகட்டத்தில், ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் தென்னிந்தியாவிலிருந்த முதல் இந்தியர்களுடன் மேற்கொண்ட இனக்கலப்பால் உருவானவர்கள்.
பண்டைய “டிஎன்ஏ”வில் இடப்பெயர்ச்சி குறித்து இருந்த அறிகுறிகளை வைத்து இந்த அறிக்கை இப்படிப்பட்ட முடிவுகளுக்கு வந்திருந்தது. அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “கி.மு. 2100க்கு முன்பு ஆக்சஸ் நாகரிகத்தைச் சுற்றியிருந்த பகுதிகளில் இருந்த மக்களிடம் ஸ்டெப்பி மேய்ப்பாளர்களின் பரம்பரைப் பதிவுகள் எதுவும் காணப்படவில்லை. என்று எங்களுடைய ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் கி.மு 2100க்கும் கி.மு 1700க்கும் இடைப்பட்ட காலத்தில், ஆக்சஸ் நாகரிகத்தைச் சுற்றியிருந்த பகுதிகளில் இருந்த மக்களிடம் ஸ்டெப்பி மேய்ப்பாளர்களின் பரம்பரைப் பதிவுகள் காணப்பட்டன.” கி.மு. 2100அய் ஒட்டி ஸ்டெப்பிப் பகுதி மக்கள் ஆக்சஸ் நாகரிகப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.

ஆக்சஸ் நாகரிகப் பகுதிகளிலிருந்தும், கிழக்கு ஈரானைச் சேர்ந்த ஷாகர் – ஏ- ஷுக்தக் பகுதியிலும் கிடைத்த பண்டைய “டிஎன்ஏ”விலிருந்து அந்த ஆய்வு பல வியப்பான முடிவுகளைப் பெற்றுள்ளது. இங்கு கிடைத்த மூன்று பண்டைய டிஎன்ஏ சான்றுகள் கி.மு. 3100க்கும் கி.மு. 2200க்கும் இடைப்பட்டக் காலத்தைச் சேர்ந்தவை என்று கணிக்கப்பட்டுள்ளது. அவற்றின் பரம்பரை தனித்துவமானது. அதே இடத்தில் கிடைத்தப் பிற டிஎன்ஏ மாதிரிகள்போல அல்லாது இவற்றில் ஜாக்ரோஸ் வேளாண்குடியினரின் பரம்பரையைத் தவிர்த்து, 14 முதல் 42 சதவிகிதம் வரை முதல் இந்தியர்களின் பரம்பரை இருந்தது. ஹரப்பா நாகரிகம், ஆக்சஸ் நாகரிகத்துடனும் ஷாகர்_ஏ-_ஷுக்தக் பகுதியுடனும் தொடர்பு வைத்திருந்தது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனால், அந்த மூன்று மனிதர்களும் சமீபத்தில் அங்கு வந்திருந்தவர்கள் என்று அந்த ஆய்வு முடிவு கட்டியது.

அவர்களிடம் துளிகூட ஸ்டெப்பிப் பரம்பரை இருக்கவில்லை. ஸ்டெப்பிப் பகுதியிலிருந்தவர்கள் கி.மு.2100ஆம் ஆண்டுவாக்கில்தான். தெற்கு நோக்கி இடம் பெயரத் தொடங்கினர் என்ற கண்ணோட்டத்தோடு இது ஒத்துப் போறது.
ஆனால், இதைவிட அதிக சுவாரசியமான ஒரு விஷயம் இனிதான் வருகிறது. பாகிஸ்தானிலுள்ள சுவாட் பள்ளத்தாக்கில் கிடைத்த பண்டைய டிஎன்ஏ. தகவல்களும் ஆய்வாளர்களுக்குக் இடைத்தன. அது கி.மு.1200க்கும் கி.பி.1ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, அது ஆக்சஸ் நாகரிகப் பகுதிகளிலிருந்தும், கிழக்கு ஈரானைச் சேர்ந்த ஷாகர்-ஏ-ஷுக்தக் பகுதியிலும் கிடைத்த சான்றுகளுக்கு ஆயிரம் ஆண்டுகள் பிந்தையது. ஆனால் சுவாட் பள்ளத்தாக்கில் கிடைத்த டிஎன்ஏ சான்றுகள், ஆக்சஸ் நாகரிகப் பகுதிகளிலிருந்தும், கிழக்கு ஈரானைச் சேர்ந்த ஷாகர்-ஏ-ஷுக்தக் பகுதியிலும் கிடைத்த அந்த மூன்று “டிஎன்ஏ”வுடன் மரபியல் ரீதியாக ஒத்திருந்தன. அதாவது, இவற்றிலும் முதல் இந்தியர்களின் பரம்பரையும் ஜாக்ரோஸ் மேய்ப்பாளர்களின் பரம்பரையும் இருந்தன. ஆனால் இரண்டுக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு இருந்தது. இவர்களிடம் அந்த இரண்டையும் தவிர, 22 சதவிகித ஸ்டெப்பிப் பரம்பரையும் இருந்தது. அந்த அறிக்கை இவ்வாறு கூறுகிறது; “தெற்காசிய மக்களிடம் கி.மு. 2000ஆம் ஆண்டுவாக்கில் ஸ்டெப்பிப் பரம்பரையும் சேர்ந்து கொண்டதற்கான நேரடியான சான்றை இது அளிக்கிறது. அக்காலகட்டத்தில், ஸ்டெப்பி மக்கள், தூரன் பகுதி வழியாகத் தெற்கு நோக்கிச் சென்றனர் என்பதற்கான சான்றுகளோடு இது ஒத்துப் போகிறது.”

இன்று அய்ரோப்பாவிலும் ஆசியாவிலும் இந்திய_ அய்ரோப்பிய மொழிகளைப் பேசும் மக்களில் பெரும்பகுதியினர், யம்னயா என்று அழைக்கப்படும் ஸ்டெப்பி மேய்ப்பாளர்களின் பரம்பரையையும் தங்களிடம் கொண்டுள்ளனர் என்று, அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது. யம்னயா மக்கள் முதனிலை இந்திய-_ அய்ரோப்பிய மொழியைப் பேசினர் என்றும், இந்திய_- அய்ரோப்பிய மொழிகளை அவர்கள் அய்ரோப்பாவிலும் ஆசியாவிலும் பரப்பினர் என்றும் நீண்டகாலமாகக் கருதப்பட்டு வந்த யோசனையோடு இது ஒத்துப் போகிறது. கி.மு. 3000ஆம் ஆண்டுவாக்கில் யம்னயா மக்கள் மேற்குப் புறமாக அய்ரோப்பாவுக்கு இடம்பெயரத் தொடங்கியிருந்ததை முந்தைய மரபியல் ஆய்வுகள் பதிவு செய்திருந்தன. ஆனால் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்படும்வரை, ஸ்டெப்பிப் பரம்பரை தெற்காசியா வரை பரவியிருந்ததற்கான பண்டைய டிஎன்ஏ சான்றுகள் எதுவும் கிடைத்திருக்கவில்லை. கி.மு. 2100ஆம் ஆண்டுவாக்கில் பெரிய எண்ணிக்கையில் ஸ்டெப்பி மக்கள் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தது தொடர்பாகத் தாங்கள் தொகுத்திருந்த ஆவணங்கள், இது தொடர்பாக இதுவரை கைநழுவிப் போயிருந்த சான்றுகள் கிடைக்கக் காரணமாக அமைந்தன என்று இந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறினர்.

விஷயம் இதோடு முடியவில்லை. இன்றைய இந்திய மக்கட்குழு, வட இந்திய மூதாதையருக்கும் (ஹரப்பர்கள் (முதல் இந்தியர்கள் + ஜாக்ரோஸ் வேளாண்குடியினர்)+ ஸ்டெப்பி மேய்ப்பாளர்கள்), தென்னிந்திய மூதாதையருக்கும் (ஹரப்பர்கள் + முதல் இந்தியர்கள்) இடையே ஏற்பட்ட இனக்கலப்பால் உருவானவர்கள். வட இந்திய மூதாதையரும் தென்னிந்திய மூதாதையரும் இணைந்ததால் உருவானவர்கள், இன்று தெற்காசியாவிலிருக்கும் 140 இனக்குழுக்களுக்குப் பொருந்துகிறதா என்று மரபியலாளர்கள் சோதித்தபோது பத்துக் குழுக்கள் அதில் சரியாகப் பொருந்தவில்லை. ஏனெனில், அவர்களிடத்தில் எதிர்பார்த்திருந்ததைவிட அதிக விகிதத்தில் ஸ்டெப்பிப் பரம்பரை இருந்ததுதான் அதற்குக் காரணம், அவற்றில் இரண்டு குழுக்களிடம்தான் அந்த விகிதம் மிகவும் அதிகமாக இருந்தது. அவர்கள் பாரம்பரியமாகப் பூசாரிகளாக இருந்ததோடு, சமஸ்கிருத மொழிப் படைப்புகளின் காவலர்களாகவும் விளங்கி வந்தனர் இது எதை விளக்குகிறது? ஸ்டெப்பிப் பகுதிகளிலிருந்து தெற்காசியாவுக்கு மேற்கொள்ளப்பட்ட இடப்பெயர்ச்சி, வெவ்வேறு ஸ்டெப்பிப் பரம்பரை விகிதங்களைக் கொண்ட வெவ்வேறு குழுக்களை உருவாக்கியிருப்பதற்கு வாய்ப்பிருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதிக ஸ்டெப்பிப் பரம்பரை விகிதாச்சாரம் கொண்டிருந்தவர்கள், தொடக்ககால வேதக் கலாச்சாரத்தைப் பேணுவதிலும் அதைப் பரப்புவதிலும் முக்கியப் பங்கு வகித்ததாகத் தெரிகிறது. ஒருசில குழுக்கள், தங்களுடைய சமூகத்திற்குள்ளாக மட்டுமே திருமணம் செய்து கொள்ளும் பழக்கத்தைத் தீவிரமாகக் கடைபிடித்து வருவதால்தான், ஸ்டெப்பிப் பரம்பரை விகிதாச்சாரம் அதிகமாக இருக்கும் குழுக்கள் இன்றுகூடத் தொடர்ந்து இருந்து வருகின்றன. ♦


செவ்வாய், 28 மே, 2024

ஆரிய மாயை : திராவிடரும் ஆரியரும்


2022 ஆகஸ்ட் 16-31 2022 

அறிஞர் அண்ணா

”ஆரியராவது! திராவிடராவது! எப்பொழுதோ எழுதி வைத்த பழைய சரித்திரத்தைப் பேசுவதற்கு இது காலமா? இப்பொழுது ஆரியர் இன்னார் என்று யாரால் குறிப்பிட முடியும்? இரு சமூகமும் எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாகக் கலந்து-விட்டனர். மறந்து போன இனப்பிரிவை உயிர்ப்பிக்க முனைவது நாட்டுக்கு நலமன்று; அரசியல் முன்னேற்றத்திற்கும் அடுக்காது” என்று ஒருசாரார் கூறுகின்றனர்.
இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு நம்மவர்களிலும் சிலர் ‘ஆமாம்’ போடுவர். தங்கள் பகுத்தறிவுக்குச் சிறிதும் வேலை கொடுக்காமல், ஆரியர்கள் _ பார்ப்பனர்கள் சொல்லுவதை அப்படியே ஒப்புக்கொண்டு, ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதைக் கட்சியும், இக்கட்சிகளின் தலைவராகிய பெரியாரும், அவருடைய தோழர்களும், ஆரியர் _ திராவிடர் என்ற வகுப்புப் பிரிவினைப் பிரச்சாரம் செய்கின்றனர் என்று கூறுகிறார்கள். இவர்களுக்கு எத்தனை முறை ஆரியர் _ திராவிடர் போராட்ட உண்மையை விளக்கினாலும், அவர்கள் மரமண்டையில் உண்மை குடி புகுவதேயில்லை. ஆயினும் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதைக் கருதி, நாமும் இது சம்பந்தமான உண்மைகளை எடுத்துக் காட்டி வருகிறோம்.
நெல்லூரில் வக்கீலாக இருந்த ஜானகிராமமூர்த்தி என்ற பார்ப்பனர்.

16.-9.1926இல் நீலா வெங்கட சுப்பம்மா என்ற திராவிடப் பெண்ணைச் சென்னையில் மணந்தார். இப்பெண் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியை. இவருக்கும் மேற்படி இராமமூர்த்திக்கும் இரு குழந்தைகள் உண்டு. இவர் இரண்டாவது மனைவி. முதல் மனைவி பார்ப்பன மாது. ஜானகி ராமமூர்த்தி இறந்தவுடன் அவருடைய திராவிட மனைவி தன் 2 குழந்தைகளுக்கும் தனக்கும் ஜீவனாம்சம் கொடுக்குமாறு பார்ப்பன மனைவி மீது வழக்குத் தொடர்ந்தாள்.
இவ்வழக்கை பாண்டுரங்கராவ், சோமையா ஆகிய இரு பார்ப்பன நீதிபதிகளும் விசாரித்தனர். இறுதியில் இந்தத் திராவிடர் _ ஆரியர் கலப்பு மணஞ் செல்லாது என்று தீர்ப்பளித்து விட்டனர்.

இந்நாட்டில் ஆரியர் _ திராவிடர் வேற்றுமை இல்லையென்று கூறும் சாதுக்களுக்கு, இப்பொழுதாவது புத்தி வருமா என்பது நமக்குச் சந்தேகந்தான்.
ஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு இத்தீர்ப்புக் கூறப்பட்டிருக்கிறது. ஆரிய வேத ஸ்மிருதிகளோ பெரும்பாலும் திராவிடர் கொள்கைக்கு மாறுபட்டவை, திராவிடரை அடிமைப்படுத்த வேண்டு-மென்னும் நோக்கத்துடன் எழுதப்பட்டவை. அவை திராவிட அறிஞர்களால் ஒப்புக்-கொள்ள முடியாதவை. இந்த ஆரிய வேத ஸ்மிருதி முக்கிய வழக்குகளை முடிவு செய்வதில் இன்னும் ஆதரவாக இருக்கு-மானால் ஆரியர் _ திராவிடர் பேதம் ஒழிந்து விட்டதாகக் கூறுவது எவ்வாறு பொருந்தும்.

“இனியேனும் திராவிடர்கள், உண்மையை உணருவார்களா? ஆரியர் _ திராவிடர் வேற்றுமை சாத்திரத்தில் இருக்கிறது. ஆரியர் _ திராவிடர் வேற்றுமை, புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் _ திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களிலிருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்-கிறது. இதை யார் இல்லை என்று மறுக்க முடியும்? இவ்வளவுமிருந்தும், ஆரியர் _ திராவிடர் வேற்றுமைக் கூச்சல் பெரியாரால் கிளப்பி விடப்படுவது என்றால், அதை எந்த அறிவுள்ள திராவிடராவது நம்ப முடியுமா?’’

ஞாயிறு, 12 மே, 2024

திராவிடர் மனம் மட்டும் புண்படாதா?




Published September 23, 2023, விடுதலை ஞாயிறு மலர்

(உலக மக்கள் முன் நம்மைத் தாழ்த்த ஆரியர் எழுதி வைத்துள்ள வஞ்சக மொழிகளை அம்பலப்படுத்தும் வரலாற்றுச் சான்றுகள்)

1. “தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதவர்களையே  குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது”

– ‘புராதன இந்தியா’ 52ஆவது பக்கம் ரமேஷ் சந்திரட்  CIEICS.

2. “தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் ராமாயணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

– “சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்“ என்ற புத்தகத்தில் ‘ராமாயணம்“ என்னும் தலைப்பில் 587-589 பக்கங்களில் உள்ளது.

3. தஸ்யூக்கள் என்பது இந்திய புராதன குடி மக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெய ராகும்.‘ஆரியன்’என்கின்றசொல்இந்தியா வின்புராதனகுடிமக்களிடமிருந்துதங்களைப் பிரித்துக்காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட சொல் ஆகும்.

– 1922ஆம் வருஷம் பதிப்பிக்கப்பட்ட ‘கேம்ப்ரிட்ஜ் பழைய இந்தியாவின் சரித்திரம்’ என்னும் புத்தகத்தில் உள்ளது.

4. ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடைய மொழிகளைக் கற்றுக்கொண்டு அவர்களது நாகரிகத்தையும் பின் பற்றவேண்டி வந்தன.

– ‘பண்டர்காரின் கட்டுரைகள்’ வால்யூம் 3, பக்கம்-10

5. ஆரியக்கடவுள்களாகிய இந்திரனையும்,  இதர கடவுள்களையும் பூசித்தவர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். இந்த ஆரியக்கடவுள்கள் வணக் கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத் தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது.

– ‘ரிக்வேத கால இந்தியா’ பக்கம் 151, ஏ.சி.தாஸ் எம்.ஏ.பி.எல்.

6. ஜாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது ஆரிய கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது.

– ‘ரிக்வேத கால இந்தியா’, பக்கம் 151, ஏ.சி.தாஸ் எம்.ஏ.பி.எல்.

7. ஜாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது பிரா மணர்கள், சத்திரியர்கள் வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள், கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக்குடிகள்.

– ‘நியூ ஏஜ் என்சைக்ளோ பீடியா’, 1925, 2 ஆவது வால்யூம், பக். 273

8. ராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.

– “சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம்“, வால்யூம் 2, பக்கம் 521; ஹென்றி ஸ்மித், வில்லியம் எல்.எல்.டி

9. ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள், தஸ்யூக்கள், தானவர்கள், இராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இது ஆரியக்கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பைக் காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் செலுத்து வதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.

– சி.சீனிவாசாச்சாரி எம்.ஏ., எம்.எஸ்., இராமசாமி  அய்யங்கார் எம்.ஏ., “இந்திய சரித்திரம்” -பக்கம் 16-17

10. சுருங்கக் கூறவேண்டுமானால் பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக ஆக்கிக் கொண்டு அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப் படுத்தித் தங்கள் இஷ்டம் போல் எல்லாம், தங்களுக்கு அநுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக் கதைகளை எழுதிவைத்துக் கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டு மென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப் பட்டவைகளாகும்

– 1865இல் எழுதப்பட்ட “விரிவான இந்திய சரித்திரம்” – முதல் பாகம் பக்கம் 15-ஹென்றி பெரிட்ஜ் (சரித்திர ஆசிரியர்)

வெள்ளி, 29 டிசம்பர், 2023

திராவிடம்'' சொல் வரலாறு: சிறுபார்வை

"திராவிடம்'' சொல் வரலாறு: சிறுபார்வை
       
 
1)இந்தியாவில் கால் ஊன்றிய ஆரியம் இந்தியா முழுதும் இருந்த ஆதிகுடிகளில் ஒன்றை ""வேதங்களை ஏற்காத நால்வருண பாகுபாட்டை கடைபிடிக்காத தாழ்ந்த மக்கள் குழு"என குறிக்கும் சொல்லாக 
கிமு.1500 களில் ரிக்வேதத்தில் குறிப்பிடும்  த்ரவிடர்  எனும் சொல் வரலாற்றில் திராவிடத்தை குறிக்கும் முதல் தரவாகும்.

2)கிமு 1150  களில் ஆண்ட திராவிடராணி பற்றிய செய்தி....

 (3)கி மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த  கலிங்க மன்னன் காரவேலன் கல்வெட்டில் உள்ள த்ரமிளர் சங்காத்தம் எனும்சொல்,.

3)அகத்தியர் கால அரசரான திராவிடபூபதி என்பவர் பற்றிய தகவல்....
       
4) மகாபாரத்தில் குறிப்பிடப்படும் 56 தேசங்களில் திராவிடம் என்ற நாடு பற்றிய குறிப்பு..

5)திரவிடன் என்னும் சூரியவம்சத்து அரசன் பற்றிய தகவல்... 
       
6) கிபி 5 ஆம் நூற்றாண்டில் வஜ்ரநந்தி என்ற சமணத்துறவி மதுரையில் த்ரமிள (திராவிட)சங்கம் உண்டுபண்ணி தமிழ் தொண்டாற்றியது பற்றிய தகவல்கள்.
     
7) கிபி 7 நூற்றாண்டில் வாழ்ந்த  ஆதிசங்கரர் தனது சௌந்தர்ய லஹிரி - யில் திருஞானசம்பந்தரை  திராவிடச்சிசு என்று வர்ணித்தது..இதில் வியப்பு ஆதிசங்கரர் திருஞானசம்பந்தர் இருவருமே பிராமணர் என்பது.
        
8) ஆதிசங்கருக்கு முன்பே அத்வைத கருத்துக்களை பரப்பிய வேதாந்த சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதிய திராவிடாசாரி பற்றிய தகவல்கள்.
       
9) கிபி 8 நூற்றாண்டைச்சேர்ந்த குமரிலப்பட்டர் தனது நூலில்  ஆந்திர திரவிட பாஷா எனும்
சொல்லாடலின் மூலம்  தென்னாட்டு மொழிளில்  தெலுங்கை தவிர பிறமொழிகளை திரவிடமொழி  என அழைக்கிறார்.
      
10)  கிபி13 ம் நூற்றான்றை சேர்ந்த அழகிய மணவாளமுனிகள் வேதங்களை சமஸ்கிருத வேதம் ,திராவிடவேதம் என இரண்டாக வகைபடுத்தி உள்ளார்....அவர் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை திராவிட வேதம் எனும் பொருளில் த்ராவிடோபநிஷத் என்றே குறிப்பிடுகிறார்.
         
11)இந்த காலகட்டங்களில் தென்னாட்டு பிராமணர்களை திராவிடபிராமணர் என அழைக்கும் பழக்கம் உருவாகியது.

12) மேற்கண்டவைகளை ஆதாரமாக கொண்டு  அயர்லாந்தைச் சார்ந்த வரலாற்றாசிரியர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் ஆய்வில்  1854 ல் வெளியான 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கனம் ' எனும் நூல் ,,இந்நூல் இந்தோ -ஆரிய  மொழிக்கூட்டமல்லாத "திராவிடமொழிகள்" என ஒரு மொழிக்கூட்டத்தை வரையறை செய்தது,,அம்மொழிகளின் மூலம் மூலத்திராவிடம் எனும் கருத்தை இவர் வைத்தார்,,இம்மொழிக்கூட்டத்தில் தமிழே மிகப்பழமையான மொழி என்று குறிப்பிட்டுள்ளார்.

12)1885 - ல் அயோத்திதாச பண்டிதரால் உருவாக்கப்பட்ட திராவிடபாண்டியன் இதழ்.

13) 1891 இல் மனோன்மணியம் எழுதிய
சுந்தரம்பிள்ளை, தன்னுடைய தமிழ்த் தெய்வ வணக்கம் பாடலில் "திராவிட நற்றிருநாடு"
என்று குறிப்பிடுகிறார்.
         
14) 1892 - ல் அயோத்திதாசர் தாழ்த்தப்பட்ட மக்களை ஆதிதிராவிடர் எனக் கூறவேண்டி ஆங்கிலேய அரசிடம் மனு கொடுத்தது
         
15) 1894 - ல் இரட்டைமலை சீனிவாசன் ஐயா வின் ஆதிதிராவிடர் மகாஜனசபை

16) 1911, டிசம்பர 11 இல் தாகூர் ஜனகணமன நாட்டுப்பண்ணை எழுதுகிறார். அதில் திராவிடம் என்று குறிப்பிடுகிறார். இதனை இந்திய
அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது.
         
17) 1913 - ல் ஐயா நடேசனாரால் உருவாக்கப்பட்டது  திராவிட சங்கம்
         
18) 1944 - ல் பெரியாரின் திராவிடர் கழகம் உருவானது
         
19) 1948 - ல்  அறிஞர் அண்ணாவின்        திராவிட முன்னேற்றக் கழகம் நிறுவப்பட்டது.

20) 1957 இல் திராவிட முன்னற்றக் கழகத்தை,
இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது
         
20)  பின்னர் அதிமுக ..மதிமுக,.தேமுதிக..
பெரியார் திராவிட கழகம்....தந்தை பெரியார் திராவிட கழகம்..திராவிட இயக்க தமிழர் பேரவை என நிறைய இயக்கங்களை உருவாகின. இவற்றுள் சில
கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்
பெற்றன.

தமிழ்..தமிழம்..த்ரமிளம் ..த்ரவிடம் ..திராவிடம் என... தமிழ்தான் திராவிடம் என்று வடமொழியினரால் திரித்து கூறப்பட்டது என்பது ஓரளவு சரியான வாதமாகக் கொள்ளலாம்,,

திராவிடம் வரலாறு எழுதத்தொடங்கிய காலத்திலிருந்தே வழங்கப்படும் சொல்லாடலாகும்.

முதலில் அது ஒரு மக்கள் கூட்டத்தின் பெயராகவும்,,

பின்னர் ஒரு மொழிக்கூட்டத்தின் பெயராகவும்

அதன்வழியாக பின்னர் ஒரு இனக்கூட்டத்தின் பெயராகவும் 

வழங்கப்பட்டு வந்துள்ளது.

தற்போது ஒரு தத்துவத்தின் பெயராக பெரியாரியல் தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது,

          ✍️ பல்வேறு தரவுகளின் தொகுப்பு✍️

           ⚖️ #துலாக்கோல்/29.12.2023⚖️
- சோம நடராஜன் முகநூல் பதிவு