திங்கள், 9 நவம்பர், 2015

திராவிடர்களும் இந்து மதத் தோற்றமும்


பொறியாளர் ப.கோவிந்தராசன்
B.E., M.B.A., M.A.,
திராவிடர்கள், சிறப்பான செயல் களை செய்து இந்திய வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தினார்கள். இந்த திராவிடர்களுக்கு இந்திய சட்ட அமைப்பில் அங்கீகாரம் உள்ளனவா? திராவிடர்கள் தொன்மையானவர்களா? அல்லது இந்து மதம் தொன்மை யானதா? என்பது இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்படுகின்றது.
இந்து மதம் பற்றி இந்துக்கள்:
இந்தியத் தகவல் அறியும் சட்டத்தின் படி இந்து மதம் எப்போது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது? என்று கேட்டால் பதில் சொல்ல தலைமை பீடம் எதுவும் இல்லை. இருந்த போதி லும் இந்துக்கள் ஏற்றுக் கொண்ட தலைவர்களில், சுவாமி விவேகானந் தரும் சுதந்திர போர் வீரரும் ஆன்மீக வாதியுமான பாலகங்காதர திலகரும் கூறியுள்ள தகவல்கள் கீழே தரப்பட் டுள்ளன.
1.    ஆரியர்கள் சிறுசிறு கூட்டங் களாக  இந்தியாவிற்குள் நுழைந் தார்கள். நாளடைவில் இந்தக்  கூட்டங் கள் பெருகி, இறுதியில் அவர்கள் இந்தியாவின் எதிர்ப்பற்ற ஆட்சியாளர் கள் ஆயினர். பின்னர் வந்தது இந்தப் பெரும் போர். ஒரு குடும்பத்தின் இரு கிளையினரிடையே  அதுதான் மகா பாரதப்போர்'.
(ஆதாரம்: கலிபோர்னியாவில் விவேகானந்தர் 01.02.1900 அன்று நிகழ்த்திய உரை)
2.    ஆங்கிலேய அரசால் சிறையில் வாடிய திலகர் பேராசிரியர் மேக்ஸ் முல்லரிடமிருந்து ரிக் வேதம்' என்ற நூலைப் பெற்றார். ரிக்வேதத்தின் மூல நூலான அவெஸ்தன் மொழியில் எழுதப்பட்ட நூல்களைப் படித்தார். நிலவியல் (Geology) மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சி (Archaeology)க் குறிப்புகளைப் படித்தார். இறுதியில் 1903இல் வேதங்களின்  துருவப்பிரதேச பிறப்பிடம் (Arctic Home in the Vedas) என்ற நூலை வெளியிட்டார். இதன்படி ஆரியர்கள் ஆர்க்டிக் பிரதேசத்திலி ருந்து பாரசீகம் வழியாக இந்தியாவிற் குள் வந்தார்கள் எனவும், ஆரியர்களின் மூதாதையினர் ஆன ரிஷிகள் பனிப் பிரதேசத்தை பிறப்பிடம் ஆகக் கொண் டவர்கள் எனவும் தெரிந்து கொள்ள லாம். இந்த ஆரியர்கள் இயற்றிய வேதங்களின் அடிப்படையில் ஆரியர் களின் மதத் கொள்கைகளே வேதமத மாக அழைக்கப்பட்டது. இந்த வேத மதம் புத்த சமண மதங்கள் தோற்றத் தால் (கி.மு.6ஆம் நூற்றாண்டு) வீழ்ச்சி யடைந்தது.
3.    ஆரியர்களின் மதக் கொள் கைகள் அனைத்தும் வேதகாலத்தில்  வேதமொழியில் (இந்திய மொழிகளும் பாரசீகமொழியும் கலந்த மொழி) எழுதப்பட்டன. இந்த வேதமொழியை புத்த சமண மதங்கள் ஆதரிக்கவில்லை. எனவே வேத மொழி வீழ்ச்சியடைந்தது இந்த வேத மொழியை செம்மைப் படுத்தி பாணினி இலக்கணம் அமைத் தார். செம்மைப்படுத்தப்பட்ட மொழிக்கு பாஷா' எனப் பெயரிட்டார். இந்த பாஷா மொழியே பிற்காலத்தில் சமஸ்கிருத மொழியாக மாற்றம் பெற்றது.
4.    சமஸ்கிருத மொழியில், ஆரம்பகாலத்தில்  நிக்கை வளைத்து ஒலிக்கும் ஒலிகளான‘‘T, Th, D, Dh’’  /ட, த, ண, ள (Retro Flex) இடம் பெற வில்லை. மேலும் இந்த ஒலி வடிவங்கள் ஆரிய மொழிக் குடும்பத்திலும் மற்றும் அய்ரோப்பிய மொழிக் குடும்பத்திலும் காணப்படவில்லை. இந்த ஒலி வடிவங்கள் திராவிட மொழிகளில் இருந்து பெறப்பட்டுள்ளன. இந்த ஒலி வடிவங்களைப் பெற்ற பின் தான் சமஸ் கிருதம் (த) என்ற பெயர் தோன்றி யிருக்க வேண்டும். (ஆதாரம் = மொழி யியல் குறித்த நூல்கள் மற்றும் பாட நூல்கள்)
அ.இந்து என்ற சொல் உருவான கதை:
1.  இந்து என்ற சொல் பெருமைக் குரிய சொல் அல்ல. அதன் பொருளைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. இந்து என்ற சொல்லின் பொருளை மேம்படுத்தும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்.இதைக் கூறுபவர் இந்து மதத்துறவி விவேகானந்தர். இது அவருடைய சொற்களில் தரப்படு கின்றது.
நாம் இந்துக்கள், இந்து என்ற வார்த்தையை மோசமான பொருளில் நான் பயன்படுத்தவில்லை. இந்த சொல்லிற்கு மோசமான பொருள் இருக்கிறது என்று கூறுபவர்களின் கருத் தையும் ஏற்கவில்லை. பழங்காலத்தில் அந்த சொல் இந்து நதியின் மறு கரையில் வாழ்பவர்கள் என்று பொருள் பட்டது. நம்மை வெறுப்பவர்களுள் பலர் அதற்கு மோசமான பொருள் தற்போது கூறலாம், ஆனால் பெயரில் ஒன்றுமே இல்லை.
நம் செயல்கள் மூலம் அந்த வார்த்தையை உலகில் உள்ள எந்த மொழியும் உருவாக்க முடி யாத உயர்ந்த வார்த்தையாக மாற்றுவோம். நமது முன்னோர்களைக் குறித்து அவமானம் கொள்ளக் கூடாது என்பது என் வாழ்க்கையின் கோட் பாடுகளுள் ஒன்றாக உள்ளது' (ஆதாரம்: இது லாகூரில் 1897 நவம்பர் 5_இல் செய்யப்பட்ட உரை).
இந்த உரையின் மூலம் ஆரியர்கள் சிந்து நதிக்கரையில் வசித்தவர்கள் என்பதை அறியலாம். மேலும் சிந்து சமவெளி நாகரிகம் முடிவடைந்த பின் ஆரியர்களின் வேதகால நாகரிகம் தோன்றியது எனக் கூறலாம்.  சிந்து நதிக்கரையில் வாழ்ந்த ஆரியர்கள் பின்னர் கங்கைக் கரைக்கும் தென் னாட்டிற்கும் பரவினார்கள் என் பதையும் அறியலாம்.
2. இன்றைய இந்து மதம் ரிக் வேதத்தை அடிப்படையாகக் கொண் டது. இந்த ரிக்வேதம் பாரசீக நாட்டின் மதக் கொள்கைகளை உள்ளடக்கியது. மேலும் பாரசீக மொழியால் அவஸ்தன் மொழியை ஒட்டி இந்த ரிக் வேதம் ஆரியர்களால் உருவாக்கப்பட்டபோது, இந்துக்கள்  என்றால் திருடர்கள் என பொருள் தந்த காரணத்தால் ஆரியர்கள் தங்கள் மதத்தை இந்து மதம் என்று அழைக்கவில்லை. வேதமதம் அல்லது வைதிக மதம் என்றே அழைத்தார்கள்.
3.  இந்து என்றால் சைவ சித்தாந்த நூல் பதிப்பில் வெளிவந்துள்ளது. அக ராதி கீழ்க்கண்ட பொருளைத் தரு கின்றது.அவை மதி, சந்திரன், மிருக சீரிடம், இந்துப்பு (மருந்து) எட்டி.
4. வீரமாமுனிவர் தனது சதுரக ராதியில் (கி.பி.1732) இந்து என்ற சொல் லுக்கு தரும் பொருள் கரடி, கரி, (கருப்பு) சந்திரன்.
5. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இந்துத்வா என்ற நூலில் இந்து என்ற சொல்லுக்கு மதத்தின் பெயரைக் குறிப்பதாக இந்திய மொழிகளில் எதிலும் இடம் பெற வில்லை எனக் கூறுகின்றார். கமலாபதி திரிபாதி நூல்:-  இந்து என்ற சொல் இந்து மத  நூல்களான, வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் ஆகியவற்றில் காணப்படவில்லை. கி.பி 1323இல், தென்னிந்தியாவில், காசுமீரில், நூல்களில் இந்து என்ற சொல் காணப் பட்டது. மேலும் 1618  ஆண்டுகளில், வங்காளி கௌடியன வைஷ்ணவ மத நூல்களில் இருந்து அன்னியர்களிடம் இருந்து இந்தியரை  வேறுபடுத்த இந்தியர்கள் இந்துக்கள் என்று சொல்லப்பட்டனர்.
இந்திய அரசியல் அமைப்புச் சட் டத்தில்  இந்துக்கள் என்ற சொல்லின் பொருள் குறித்து, உச்சநீதிமன்றம், 1995, 2005, 2006 ஆண்டுகளில் பல விளக் கங்களை, தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
இந்து என்ற சொல்லின் உண்மை யான பொருள் கீழே தரப்பட்டுள்ளது  1) கருப்பு மற்றும் கோரமானவன் 2) நாகரிகம் இல்லாத காட்டு மிராண் டிகள் 3) திருடர்கள் 4) இந்தியாவை சேர்ந்தவர்கள். (ஆதாரம்: 1) கமலபதி திரிபாதி (முன்னாள் உத்திர பிரதேச முதல்வர் மற்றும் முதலமைச்சர் எழுதிய நூல் 2) சப்தசாகர் என்னும் இந்தி மொழி பேரகாரதி, வாரணாசிப் பதிப்பு)
இந்து மதம் பற்றி கா.சு.பிள்ளை:
இவர் இந்து மதம் ஒரு மதமன்று என்று கூறுகிறார்.இந்து என்ற சொல் இடத்தைக் குறிக்கும் சொல் சிந்து நதிக்கரையில் வாழ்பவன் என்று பெயர். ஆங்கிலேயரும், இஸ்லாமியர்களும் இந்தியாவில் வசித்த மக்களை இந் துக்கள் என்று அழைத்தனர். இவ்வாறு இந்தியாவில் வசிப்பவர்களை இந் துக்கள் என்று அழைத்தால் சப்பானிய மதம் ஆங்கில மதம் அமெரிக்க மதம் என்று நாட்டின் பெயர்களை மதங் களுக்கு வைக்கப்படுதல் வேண்டும். எனவே இந்து மதம் என்று கூறுவது சரியல்ல.
- தொடரும்

திராவிடர்களும் இந்து மதத் தோற்றமும் (2)


பொறியாளர் ப.கோவிந்தராசன்
B.E., M.B.A., M.A.,
ஆ.இந்து மதம் பற்றி இஸ்லாமியர்கள்
1.  கி.பி.998_1030இல் வாழ்ந்த கஜினி முகம்மது, தனது இளம் வயது  முதல் உருவ வழிபாடு செய்பவர்களை (infidels and idolatry)
வெறுத்தார். அவர் இந்தியாவின் மீது படையெடுத்து, பிராமண மதத்தலைவர்களை அழிப்பதற்கு பல யுத்தங்களை நடத்தினார். கஜினி செல்வத்தை அதிகம் விரும்பவில்லை. இலஞ்சத்தை ஏற்பவர் இல்லை'.இதைக் கூறுபவர் ஜியாவுதின் பரணி, இவர் Medcival India
என்ற இதழில் 1958இல் எழுதியுள்ளார்.
இதனால் பிராமண மதம் என்று அழைக்கப்பட்ட வேத மதத்தைச் சேர்ந் தவர்களை விக்கிரக வழிபாட்டு    மக்கள்' என்று கஜினி முகம்மது காலத் தில் அழைத்தார்கள்.இந்துக்கள் என்று அழைக்கப்படவில்லை என்பதை அறியலாம்.
2. மீர்சையது அலி ஹம்தரனி (1384) இவர்  சஹிராத்' (Zahirat) என்ற நூலை நிர்வாகத்தை நடத்துவதற்காக எழுதினார். இவர் ஒரு இந்திய அரசர். இந்த நூலின்படி இந்திய குடிமக்கள், அவர்களின் மதச்சட்டத்தின்படி நடத்தப்படுவார்கள். இவர் குடிமக்களை இரண்டாகப் பிரித்தார்.அவை முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாதார். முஸ்லீம் அல்லாதவர்கள் (Kafirs)தீயை வணங்குபவர்கள் என்று அழைக்கப்பட் டார்கள்' இதன்படி வேத மதத்தைச் சேர்ந்தவர்கள் தீயை வணங்குபவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் இந்துக் கள் என்று அழைக்கப்படவில்லை.
3.  கிபி 1526இல் தோன்றிய முகலாயர் ஆட்சியில் பிராமணர்கள்  மதிக்கப்பட் டார்கள். அக்பர் மகாபாரதத்தை பாரசீக மொழியில் மாற்றம் செய்ய உதவினார். அந்த நூலுக்கு முன்னுரை எழுதினார். இவர் அவதாரங்களை நம்பினார். இவர் புருஷோத்தமன் என்ற பிராமணனிடம், தியானம், யோகம் கற்றுக் கொண்டார். இவர் காலத்தில் பிராமண மதம் இந்து மதம் என்று சிறிய அளவில் அறிமுகமானது.
இ.இந்து மதச்சட்டங்கள் பற்றி ஆங்கிலேயர்:
நெல்சன் என்ற ஆங்கிலேய நீதிபதி சென்னையில் 1877இல் இந்துக்களின் சட்டம், சட்டம் தெரியாத சமஸ்கிருத பண்டிதர்களாலும், சமஸ்கிருதம் தெரியாத நீதிபதிகளாலும் நிர்வகிக்கப் படுகிறது என்று கூறினார். ஏனென்றால் இந்துக்களின் தர்ம சாஸ்திரங்களை பண்டிதர்கள் கூற நீதிபதி தீர்ப்பு சொல் லுவார். இதற்குக் காரணம் ஆங்கிலேயர் ஆட்சியில் (1772_1864). இந்துக்களின் பொதுச்சட்டம் உருவாக்கப்பட்டது.
இந்தச் சட்டம், ஆரியர்களின் தர்ம சாஸ்திரம், வேதங்கள், ஆட்சியாளர் களால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் ஆகியவைகளின் அடிப்படையில் உரு வானது. இந்தச்சட்டம் பிராமணர்களா லும், ஊர் பெரிய மனிதர்களாலும் (Elite) தரப்பட்டது. இந்தப் பொதுச் சட்டம், பெரும் எண்ணிக்கை கொண்ட பிராமணரல்லாதாரை அடக் கியாள பெரிதும் பயன்பட்டது. இந்தச் சட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் சாஸ்திரம் தெரிந்த பண்டிட் (பிராமண) சட்ட அதிகாரி யாக நியமிக்கப்பட்டார். இத்தகைய நீதிமன்றம் 1864 வரை தொடர்ந்தது. பின்னர் பண்டிட் மற்றும் மௌல் விகள் பதவி நீக்கப்பட்டது. இதன் பின்னர் சுதந்திரமடையும் வரை இந்த நிலையே நீடித்தது. (ஆதாரம்: இந் துக்களில் பொது சட்ட அறிமுகம் என்ற நூல். ஆசிரியர்கள் திமோத்திலேபின், டொனால்டு டேவிஸ், கிருட்டிணன்.)
ஆங்கிலேயர் காலத்தில் உருவான இந்துக்களின் பொதுச் சட்டம், 1955ல் சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்துக்களின் சட்டம் கீழ்க்கண்ட வர்களை இந்துக்களாக வரையறை செய்கின்றது. அவை.
1. இந்துக்கள் அல்லாதவர்கள் என்று கீழ்க்கண்டோரை விலக்கு அளித்துள் ளது  பார்சிகள், யூதர்கள், இஸ்லாமியர், கிறித்துவர்கள் மற்றும் தங்களுக்கான தனிச்சட்டம் உள்ளவர்கள்.
2.    இந்துக்களில் அடங்குபவர்கள் கீழ்க்கண்டவர் ஆகும். இந்துக்கள், சமணர்கள், புத்தமதத்தினர், தங்களுக்கு எனத் தனிச்சட்டம் இல்லாதவர்கள். மேலும் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனை, இந்தியர் தாதைகளின் மதத்தின் அடிப்படையிலும், இரத்த உறவு கொண்டவர்களின் மதத்தின் அடிப்படையிலும் நிர்ணயம் செய்யப் பட்டது.
இந்த சட்டத்தில் உள்ள குறைகள் பின்வருமாறு:
அ.    இந்துக்கள் என்றால் சிந்து நிதிக்கரையில் வாழ்ந்த இந்தியன் ஒரு பகுதியினராகத்தான் குறிக்கின்றது. இது குமரி முதல் காஷ்மீர் வரை உள்ள மக்களுக்குப் பொருந்தாது.
ஆ.    இந்து மதம் ஒரு தலைமையின்  கீழ் இயங்கும் இயக்கம் அல்ல. ஆனால் இந்துக்கள் என்ற தலைப்பில் சேர்க்கப் பட்டுள்ள சமண மதம், புத்தமதம், சீக்கிய மதம் ஆகியவற்றுக்குத் தலைமை பீடங்கள் உள்ளன. அவற்றிற்குத்தனியே அமைப்பு, வேதங்கள் உள்ளன. அந்த மதங்கள் யாரால் எப்போது எங்கு உரு வாக்கப்பட்டது என்பதினைக் குறித்து தெளிவான செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன.
இ.    இந்து மதத்துக்குள்ளேயே பல உட்பிரிவுகள், தனித்தனியே இயங்கு கின்றன. அவைகளுள் சில கீழே தரப்பட்டுள்ளன. சைவ மதம், வைணவ மதம், அத்வைத மதம், துவைத மதம், விசிஷ்டாத்வைத மதம், தனிப்பட்ட ஆசிரமங்கள், மடங்கள் என்று சுயக் கட்டுப்பாட்டில் Independent)  இயங்கும் இயக்கங்கள், இந்நிலையில் எல்லாப் பிரிவினரையும் இந்துக்கள் என்பது ஒரே அளவுள்ள சட்டைகளை பலமக் களுக்குத் தருவதற்குச் சமம். இது நடை முறைக்கு ஒவ்வாத நீதிமுறையாகும்.
ஈ.    இந்துக்கள் என்று சட்டத்தில் குறிக்கப்படுபவர்களில் பிராமணர்கள் மட்டும் தான் இருமுறை பிறந்தவர்கள். ஒரு முறை பிரம்மாவின் முகத்திலும், மறுமுறை வேறு விதமாக பூணூல் மூலமாகப் பிறக்கிறார்கள். இத்தகைய ஆரியர்களுக்கும் இரண்டு முறைப் பிறக்காதவர்களையும் ஒரே மதத்தில் சேர்ப்பது முரண்பட்டது ஆகும்.
உ.    தற்போது ஆரியர்கள் முன்பு போல ஆரிய குருக்களிடம் குருகுலக் கல்வியை 12 முதல் 48 ஆண்டுகள் கற்ப தில்லை. மாறாக சூத்திரர்களுடன் சேர்ந்து, சூத்திர மருத்துவமனையில் பிறக்கிறார்கள். சூத்திரர்களுடன் சேர்ந்து, செருப்பு அணிந்து குடைப் பிடித்து, சீருடை அணிந்து கல்வி கற்கிறார்கள். சூத்திரர்களைப் போல் வெளிநாட்டில் சென்று வேலை பார்க்கிறார்கள். எனவே ஆரியர்களுக்கு மனுநீதிதர்மத்தில் தரப்பட்டுள்ள சலுகைகளை தருவதில் எந்தவித நியாயமும் இல்லை.
ஊ.    வேதமதம் அல்லது சனாதன தர்மத்தின்படி ஒவ்வொரு இந்துவும் கீழ்க்கண்ட நிலைகளை அல்லது ஆசி ரமங்களை தன்னுடைய வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டும். 1. பிரம்மச்சர்யம், 2.கிருகச்சர்யம், 3.வானப்பிரஸ்தம், 4.சன்னியாசம். இதில் கிருகஸ்தனேமற்ற மூன்று வாழ்க்கை நிலையில் உள்ளவர் களுக்கு ஆதாரம் ஆனவன். இதன்படி ஒரு இந்து தனது 27 வயதில் (12+15) வானப்பிரஸ்தம் பணி ஓய்வு நிலையை எட்ட வேண்டும். இதற்குமாறாக தசரத மன்னன்  60000 ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவதாரமான இராமன் 11,000 ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே வேதத்தில் விதிக்கப்பட்ட தர் மங்களைக் கடைப்பிடித்தல் சாதாரண இல்லறம் செய்பவனுக்கு இயலாத ஒன்று. அதுவும் தற்போது பால்ய விவாகம் கிடையாது. பிரம்மச்சர்ய வாழ்க்கை (மாணவர் பருவம்) 12 ஆண்டுகளுக்கு மேலானது. பதிவுத் திருமணங்கள், சுயமயாதை திருமணங் கள் நடைபெறுகின்றன. மேலும் விதவை மறுமணம் அனுமதிக்கப்பட் டுள்ளது. ஆண்டவனின் படைப்புத் தொழில், குடும்பக் கட்டுப்பாடு முறை யால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. விவாகரத்துமுறை பெரும் அளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. மேலும் குருகுலக்கல்வி முறை தற்போது கிடையாது. குருதட்சினை எதுவும் கிடையாது. முதியோர் இல்லம் நடை முறையில் உள்ளது. இவ்வாறு கிரகஸ் தனின் இல்லறதர்மம் மிகவும் மிகவும் மங்கிப்போய்விட்டது. இத்தகைய சனாதன தர்மத்தை அடிப்படையான இந்துக்களின் பொதுச் சட்டங்கள் செயல்படும் தன்மையை இழந்து விட்டன.
மேலே கூறப்பட்டவற்றின் அடிப் படையில், இந்துக்களின் பொதுச்சட்டம் முரண்பாடானவை. செயல்படுத்த முடியாதவை. இந்து மதத்தின் வேதகால நாகரிகம், வேளாண்மையுகத்தைச் சார்ந்த ஆசிரம வாழ்க்கை வாழும் ரிஷிகளுக்கு ஏற்ற கிராம  நாகரிகம் ஆகும்.
இத்தகைய இந்து மதம், தற்போது நடைபெறும், தொழில் மயமாக்கப்பட்ட நகரமயமாக்கப்பட்ட, விஞ்ஞானம், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு உலகமயமாக்குதல் கொண்ட நவீன நாகரிகயுகத்திற்கு சிறிதும் ஏற்றது அல்ல. எனவே இந்துக்களின் பொதுச்சட்டம் இற்றுப்போன சட்டம். இந்தச் சட்டத்தை நீக்கிவிட்டு, மாற்றங்களுக்கு வகைசெய்யக் கூடிய எதிர்காலத்தை உருவாக்க துணைபுரியும் புதிய சட்டத்தை இழிவான பொருள் கொண்ட சூத்திரப்பட்டம் நீங்கும் வகையில் புதிய சட்டத்தினை இந்து மதம் என்ற சொல்லிற்குப் பதிலாக சைவம், வைணவம், நாத்திகமதங்களை சமண, புத்தமதத்தினை தனித்தனியே பிரித்து உருவாக்க வேண்டும்.

திராவிடர்களும் இந்து மதத் தோற்றமும் (3)



பொறியாளர் ப.கோவிந்தராசன்
B.E., M.B.A., M.A.,
இந்து மதத்தால் தாழ்ந்தோம்:
இந்து மதம் ஆங்கிலேயரால் சட்ட பூர்வமாக ஆக்கப்பட்ட மதம் இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம் நம்மை திராவிடர்களை இந் துக்கள் என்று அழைத்தது. இந்த ஆங்கி லேயன் சட்டம் அப்படியே எந்தவித மாறுதலும் இல்லாமல், இந்தியக் குடியரசு சட்டத்தில் சேர்க்கப்பட்டது, திராவிடர்களுக்கு, சூத்திரர்களுக்கு, தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப் பட்ட மாபெரும் கொடுமை. இதனால் சுதந்திர இந்தியாவில் வர்ணாசிரம தர்மம் சட்டபூர்வமாக நிலைபெற்றது. இந்த கொடுமையான சட்டத்தால் ஆரியர் அல்லாத திராவிடர்களுக்கு எந்த விதப் பலனும் கிடையாது. இதனால் ஏற்படும் தீமைகள் சில கீழே தரப்பட்டுள்ளன.
1.    பகவத் கீதையில் சொல்லப் பட்ட வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையில், நாம் சூத்திரர்களாக அழைக்கப்படுவோம். இந்த  சூத்திரப் பட்டத்தை நீக்க, சுதந்திர இந்தியாவில் எந்த வித சட்டமும் இல்லை.
2.    அரசியல் சட்டத்தில், சட்டத் திற்கு முன்பு எல்லோரும் சமம் என்று சொல்லப்பட்ட அடிப்படை உரிமை இந்துமதம் என்ற போர்வையில் பறிக்கப்படுகின்றது.
3.    இந்து மதத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை. வேதம் படிக்க உரிமை இல்லை. அர்ச்சனை செய்ய உரிமை இல்லை. ஆண்களுக்குச் சமமாக பெண் சொர்க்க லோகம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
4.    மத நம்பிக்கைகளின் அடிப் படையில், சடங்குமொழியான சமஸ் கிருதத்திற்கு ஆண்டுதோறும் பலகோடி ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. பேச்சு வழக்கில் இல்லாத மொழிக்கு செய் யப்படும் பணம் எந்தவிதப் பலனையும் தராது இந்தப் பணத்தை சமஸ்கிருத மல்லாத மாநில மொழிகளுக்குச் செல விட்டால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இந்திய பண்பாடு மேம்படும்.
5.    இந்தியாவில் ஜாதிகளை உருவாக்கியது ஆரிய கலாச்சாரம். இந்தச் ஜாதிமுறை இந்தியர்களைப் பிரிக்கின்றது. ஜாதிக் கலவரங்களால் பொருள் சேதம், உயிர் சேதம் உண் டாகின்றன. சட்டத்தில் எல்லோரும் சமம் என்று கூறும் இந்திய அரசியல் சட்டம் ஜாதிகளை தடை செய்யும் சட்டப்பிரிவுகளை கொண்டிருக்கவில்லை.
6.    ஆண்டவன் முன் அனைவரும் சமம். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.  ஆனால் ஆண்டவருக்கு அர்ச்சனை செய்யும் தகுதி ஆரியர் களுக்கு மட்டும் தனி உரிமையாக இருப்பது ஆங்கிலேயர் கொண்டு வந்த இந்து சட்டத்தின் படி எல்லா கோவில்களையும் கட்டுப்படுத்துகிறது.
திராவிடம் பற்றி புத்தர்:
புத்தர் கோசல நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் அரச குடும்பத் தில் பிறந்தார். இவர் ஆரியர்களின் வேத காலத்தின்  (கி.மு.1600-_500) இறுதியில் பிறந்தார். இவர் இளம் வயதில் கல்விப் பயில கல்விக்கூடம் சென்றார். அப்போது அவர் ஆசிரியர் முன்பு பல தேசங்களின் பெயர்களை (திராவிடர் உள்பட) லிபி பலகையில் (கரும்பலகை என்று தற்போது அழைக்கப்படும் பலகை புத்தர் காலத்தில் லிபி பலகை என்று அழைக்கப்பட்டது எழுதி காட்டினார். பலகை என்ற சொல் தமிழ் சொல் ஆகும். இது தமிழின் தொன் மையைக் குறிக்கின்றது) எழுதிக் காண்பித்தார். இந்த செய்தியைத் தருபவர் சமஸ்கிருத அறிஞர், வேத நாகரிக எழுத்து முறையில் நூல்கள் அச்சிட பயன்படுத்தியவர் ஆன மேக்ஸ்ணில்லர் என்ற செர்மானியர் ஆவர்.
வேத மதங்களில் தமிழ்சொற்கள்:
மாலதி சென்டகே என்ற சமஸ்கிருத ஆய்வாளர் பல ஆய்வு நூல்களை அமெரிக்காவில் வெளியிட்டுள்ளார். இவரது நூலில் ரிக்வேதத்தில், தமிழ் உள்பட்ட பல திராவிட மொழிச் சொற் கள் காணப்படுவதாகக் கூறியுள்ளார். ஆரியர்கள்தங்கள் மதத்தில் இறைவனை வேத முதல்வன் என்று கூறுகிறார்கள். வேதங்களுக்கு உரை எழுதிய சயணர் என்பவர், வேதங்களின் அடிப்படை யிலே இறைவன் இந்த உலகத்தையும், மனிதர்களையும் படைத்ததாகக் கூறுகிறார். மேலும் வேதங்களை நம்பு பவர்கள் ஆஸ்திகர்கள் என்றும், வேதங் களை நம்பாதவர்களை நாத்திகர்கள் என்றும் ஆரியர்கள் கூறினார்கள். இத்தகைய வேத மதத்தில், சமஸ்கிருதம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய வேதமதத்தில், வேதங்கள் தமிழ் சொற்களை பயன்படுத்தியது, தமிழ் மொழி மற்றும் திராவிட மொழிகள் இந்துமதத்தை விட தொன்மையானது என்பதைக் குறிக்கின்றது அன்னியர் களான ஆரியர்கள் பல தவறான கொள்கைகளை தங்களது வேதத்தில் சொல்லியதால் வேதமதம் அழிந்தது. நாத்திக மதங்கள் என்று ஆரியர்களால் அழைக்கப்பட்ட சமண மதம், புத்த மதம் வளர்ந்தன.
திராவிடம் பற்றி வீரமாமுனிவர்:
இந்தியாவில் பண்டைய காலத்தில், 56 தேசங்கள் இருந்ததாகக் கூறுகிறார். அதில் காணப்படும் தேசங்களின் பெயர்கள் சில இங்கே தரப்படுகின்றன.
கோசலம், கூர்ச்சரம், பாஞ்சாலம், மகதம், கேரளம், கொல்லம், வங்காளம், அவந்தி, அருணம், காம்போசம், காசுமீரம், கன்னடம், ஆந்திரம், யவனம், திராவிடம், சிந்து, சிங்களம், சீனம், நிபாளம், நடதம்,, பல்லவம், பப்பரம், புவிதம், பாண்டியம், மாரடம், மலையாளம்......'இவ்வாறு வீரமாமுனிவர் தந்துள்ள பட்டியலில் திராவிடம்' என்ற தேசம் இடம் பெற்றதைக் காண்போம். மேலும் இந்த 56 தேசங்கள் இருந்த காலத்தில் சீனம், யவனம், சிங்களம், சிந்து போன்ற அயல் நாடுகளும் இடம்பெற்று இருப்பது ஆய்வுக்கு உரியது.
திராவிடத்தால் எழுந்தோம்: வர்ணாசிரமத் தர்மத்தில் சூதாடுவது சத்திரியர்களின் தர்மமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. இதனால்தான் மகாபாரதக்கதையில் தர்மர் துரியோ தனனுடன் சூதாடி தன் நாடு, மனைவி, சகோதரர்கள், வேலைக்காரர்களை இழந்தார்கள். மேலும் குப்தர்கள் காலத்தில் சூதாட்டம் மூலம் அரசுக்கு வருமானம் வந்ததற்கு சான்றுகள் உள்ளன. சூதாட்ட கண்காணிப்பு அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும் என்று கவுடில்யன் அர்த்த சாஸ் திரத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்தைவிட வேறு இடங்களில் சூதாட்டம் நடந்தால் 12 பணம் அபராதம் வசூலிக்கப்படும் வகை செய்யப்பட்டுள்ளது. சூதாடுபவன் வெற்றி பெற்ற  பணத்தில் 5% அரசுக்கு வரியாக செலுத்தவேண்டும் என்று கவுடில்யர் கூறியருக்கிறார். இந்த சூதாட்டத்தினால் அரசு வசூலிக்க வேண்டிய வரிகளைப் பற்றி நாரதர், யாக்ஞ வல்கியர்,மனு  ஆகியோர் பல கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.
1) இத்தகைய சூதாட்டக் கலாச் சாரத்தை ஆரியர் தர்மசாஸ்திரங்கள் அனுமதிப்பதால் இன்று கூட கிரிக்கெட் சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் கலைஞர் தலைமையில் நடந்த ஆட்சியில் குதிரை பந்தயம் தடை செய்யப்பட்டது. இது திராவிட இயக்கத்தால் கிடைத்த பலன்.
இவ்வாறு இரண்டு மடங்கு இழிவைத் தாங்கும் சூத்திரர்களுக்கு மத்திய அரசு தகுந்த சட்டம் இயற்றி அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை' தர வேண்டும்.

திராவிடர்களும் இந்து மதத் தோற்றமும் (4)


பொறியாளர் ப.கோவிந்தராசன்
B.E., M.B.A., M.A.,
2) தந்தைப் பெரியார் மற்றும் முத்துலட்சுமி ரெட்டி ஆகியோரின் தீவிர முயற்சியால் தமிழ்நாட்டில் 1929ல் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.
3) கம்யூனிச சிந்தாந்தவாதிகளுக்கு முன்னோடியாக கலைஞர் தமது ஆட்சிகாலத்தில் பேருந்து போக்கு வரத்தை நாட்டுடைமையாக்கியது. அதுபோல், நில உடைமைக்கு உச்ச வரம்பு கொண்டு வரப்பட்டது (1969_1976).
4) பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் பிராமணர் இல்லாமல் நடந்த சுயமயாதை திருமணங்களை செல்லத்தக்கதாக சட்டம் இயற்றினார். (6769)
5) குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்தவர் இராசாசி.பலபள்ளிக் கூடங் களை மூடியவர் இராசாசி இத்தகைய ஆட்சியை அகற்றியவர் தந்தை பெரியார்(1952).
6) முகலாயர் காலத்தில் உருவான மொழிகள், இந்தி, இந்துஸ்தானி, உருது. இவை பேச்சு வழக்கில் ஒரே மொழி யாகும். போதிய வளர்ச்சி பெறாத இந்தியை ஆட்சிமொழியாக்கி, இந்தி மொழி பேசாத மக்களை இரண்டாந்தர மக்களாக்கும் முயற்சிகளை எதிர்த்து திராவிட இயங்கங்கள் இணைந்து போராடின. தமிழக அரசு மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை நீக்கி இரு மொழி கொள்கைகளாக மாற்றி உத்தரவிட்டது. (67_69)
7) அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை தந்தை பெரியாரின் கனவை நனவாக்க, தமிழக அரசு கொண்டுவந்தது.
8) மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம்  பெறுவதற்காக மாநில சுயாட்சி குழுவை இராசமன்னார் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நியமித்து அதன் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியது. (1974)  இது திராவிட இயக்கத்தைச் சேர்ந்த திமுக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கியது.
9) சமூக நீதி கொள்கையின் அடிப்படையில் 69% இட ஒதுக்கீட்டை அரசியல் சாசனத்தில்
9ஆவது அட்டவணையில் சேர்ப்பதற்கு திரா விடர் கழகத் தலைவர் கோரிக்கையை ஏற்று அதிமுக அரசு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில், குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத்தந்தது.
10)  மேனாள் முதல்வர் கலைஞர் கோரிக்கையை ஏற்று தமிழுக்கு செம்மொழி என்ற சிறப்பினை மத்திய அரசு வழங்கியது.
11) மேனாள் முதல்வர் கலைஞர் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சேது சமுத்திரக் கால்வாய் திட்டப் பணிகளைத் துவக்கியது.
12) கலைஞர் தலைமையில் அமைந்த தமிழக அரசு 1989இல் பெண்களுக்குத் தந்தையின் சொத்தில் சம பங்கு அளித்தது.
13) 1996இல் உள்ளாட்சி தேர்தலில் விகிதாச்சார முறையில் (33 1/3%) பெண் களுக்கு போட்டியிட வாய்ப்பு அரசு ஆணையால் வழங்கப்பட்டது.
14) 1970இல் பரம்பரை அர்ச்சகர் களுக்குப் பதிலாக அறங்காவலருக்கு அர்ச்சகரை நியமிக்கும் உரிமை அளிப்பதற்கு சட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து பரம்பரை அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கினை உச்ச நீதிமன்றம் 14.03.1972ல் தள்ளுபடி செய்தது.
இவ்வாறு இந்திய வரலாற்றினை மாற்றியமைக்கும் வகையில் திராவிட இயக்கங்கள் மக்கள் பிரச்சினைகளை முன் எடுத்துச் சென்று பல சீர் திருத்தங்களுக்கு வழிவகுப்பதில் ஆரியர்களைவிட திராவிட இயக்கங்கள் தங்கள் பங்களிப்பை செய்திருக் கிறார்கள் என்பதனை அறியலாம்.
முடிவுரை:
ஆரியர்கள், இந்தியாவின் முன் னேற்றத்திற்கு எதிராக பல நேர்வுகளில் செயல்பட்டார்கள். ஆரியர்களின் ஆதிக்கத்தில் இந்தியா இருந்த போது இந்திய பூர்வீகக்  குடிமக்களை சூத்தி ரர்களாக சித்தரித்து அடிமைகளாய் வைத்து இருந்தார்கள். ஆரிய நாகரி கத்தால் திராவிடர்களுக்கு ஏற்பட்ட தீங்குகள் கீழே தரப்பட்டுள்ளன.
1.    திராவிடர்கள் நாகரிகமான, நகர நாகரிகம் கொண்ட சிந்து வெளி நாகரிகத்தை வளர்க்காமல், தங்கள் கிராம நாகரிகத்தை வளர்த்தார்கள்.
2.    திராவிடர்களின் நகரங்களை அழிக்க ஆரியர்கள் யாகங்களில் கால்நடைகளைப் பலியிட்டார்கள். மேலும் யாகக் கடவுளான இந்திரனுக்கு திராவிடர்களை அழிக்க யாகத்தில் கோரிக்கை வைத்தனர்.
3.    பாரசீக மொழியான அவெஸ் தன் மொழியுடன் பிராகிருத மொழிச் சொற்கள் மற்றும் திராவிட மொழிச் சொற்கள் கொண்ட வேத மொழியில் வேதங்கள் இயற்றினார்கள்.
4.    ஆரியர்களின் மதக் கொள் கைகள் மற்றும்  மொழிக் கொள்கை களை எதிர்த்து, சமண புத்த மதங்கள் உருவாகின. இந்த மதங்கள்  அர்த்த மாகதி மற்றும் பாலி மொழிகளை ஆதரித்தன. ஆரியர்களின் வேத மதம், வேத மொழியும் அழிந்தன (கிமு 600)
5.    கிமு 1500ல் தோன்றிய வேத மதம் மீண்டும் கி.பி.150ல் ருத்ரதாமன் என்ற மன்னன் காலத்தில் புத்துயிர் பெற்று சமஸ்கிருதத்தில்  கல்வெட்டு உருவானது.
6.    பின்னர் கி.பி. 7ஆம் நூற்றாண் டில் சமஸ்கிருதத்தில் வேதம் எழுதப் பட்டது. பல நூல்கள் சமஸ்கிருதத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டன. இதனால் சமஸ்கிருதம் தன்மை மொழியானது.
7.    புத்தர் சமணர் காலத்தில் குடைவரைக் கோவில்கள் குப்தர்கள் காலத்தில் (கிபி. 320_470) கற்களால் கட்டப்பட்ட சிறு சிறு கோவில்கள் தோன்றின. அந்தக் கோவில்கள் எதுவும் ஆகம விதிப்படி கட்டப்படவில்லை. இதனால் எல்லா பிரிவு மக்களும் கட வுள் சிலை அருகே சென்று இஷ்டப் பட்ட மொழியில் வணங்கினார்கள். இந்த  குப்தர்கள் காலத்தில் இந்துமதம் என்று எதுவும் தோன்றவில்லை. சைவ வைணவ மதங்களே இருந்தன.
8.    ஆரியர்களால் மிலேச்சர்கள் என்று அழைக்கப்பட்ட அன்னியர்கள் ஆங்கிலேயர்கள் இந்தப் புண்ணிய பூமியை ஆண்டபோது பூமாதேவி என்ற தெய்வத்திற்கு களங்கம் /தீட்டு ஏற்படவில்லை.
9.    இந்து மதத்தில் சூத்திரர்கள், பஞ்சமர் என்று அழைக்கப்பட்டவர்கள் இந்த பாரத பூமியில் பல காலமாக வாழ்ந்து வருகிறார்கள். இதனால் பூமாதேவி என்ற தெய்வத்திற்கு தீட்டு ஏற்படவில்லையே.
10.இந்து  மதத்தில் கங்கை நதி ஒரு கடவுள். இந்த நதியில் சகல சாதி யினரும் மதத்தினரும் எந்தவித வேறு பாடும் இன்றி ஒன்றாக குளிக்கிறார்கள். அதை அனுமதிக்கும் போது எல்லா சாதியினரும் அர்ச்சகராவதில் என்ன தவறு இருக்கிறது?
11.    ஒரு கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி தேரில் சூத்திரர்களால் இழுத்து வரப்படுகிறார். தேரில் இருக்கும் உற்சவமூர்த்திக்கு தேரை இழுப்பவர்கள் அர்ச்சனை செய்தால் என்ன தீட்டு ஏற்பட்டுவிடும். (மூல விக்ரகம் வெளியே உலா வராது)
12.    அரசாங்க ஆதரவுடன் செயல் படும் பொது இடங்களில் குடிநீர் நிலைகள், பொதுக் குளியல் இடங்கள், உணவகங்கள் போன்ற இடங்களில் ஒரு இந்திய குடிமகனை, சாதியின் பெய ராலோ, இனத்தின் பெயராலோ பிறப்பின் அடிப்படையாலோ பாலியல் வேற்றுமையாலோ அனுமதிக்க மறுப்புத் தெரிவிக்கக் கூடாது என்று இந்திய அடிப்படை உரிமைகள் சட்டத்தில் (ART15) தெரிவிக்கப்பட்டுள் ளது. இதைக் கருத்தில் கொண்டால், தன்னைப் படைத்த ஆண்டவனுக்கு, தனக்கு தெரிந்த மொழியில் அர்ச்சனை செய்து கொள்ள மதங்களோ, சட்டங் களோ தடை செய்ய வாய்ப்பு இல்லை. எனவே, கேரள மாநிலத்தில் இந்து மதத் தில் உள்ளது போல், நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் அடிப்படையில் அனைத் துச் சாதியினரும் அர்ச்சகர்களாகும் நிலை விரைவில் வந்தே தீரும்.
13.    தேரில் அல்லது பல்லக்கில் வரும் உற்சவ மூர்த்திக்கு, சூத்திரர் அர்ச்சனை செய்தால் தீட்டு ஏற்படும் என்று கருதினால், காயத்திரி மந்திரம் சொன்னால் அல்லது உபநயன மந்திரம் சொன்னால் போய்விடும்.
14.    ஆரியர், சூத்திரர் என்று பேத மில்லாமல் வாழ்தலே நம் இந்தியா அல் லது ஜம்புத்விப (நாவலந்தீவு) வல்லரசு நாடாக மாறுவதற்கு உதவி புரியும்.
15.    சமஸ்கிருதத்திற்கு பதிலாக தமிழில் அர்ச்சனை செய்தால் ஆண் டவன் அருள் கிடைக்காது, என்றாலும் தமிழர்கள் தமிழில் அர்ச்சனை செய்வதையே விரும்புவார்கள்.
16.    இந்து மதத்தில் உள்ள சூத் திரர்களுக்கு இந்து மதத்தால் இரண்டு முறை அவமானப்படுத்தப்படுகிறார்கள். விவேகானந்தர் சொல்படி இந்து என்ற சொல் பெருமை தரவில்லை; மாறாக இழிவைத் தருகின்றது. மேலும் வர்ணாசிரமதர்மம் சூத்திரர்களை தஷ்யூக்கள் என்றும், தாசர்கள் என்றும் இழிவுப்படுத்துகின்றது. இவ்வாறு இரண்டு மடங்கு இழிவைத் தாங்கும் சூத்திரர்களுக்கு மத்திய அரசு தகுந்த சட்டம் இயற்றி அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை' தர வேண்டும்.
(நிறைவு)
விடுதலை ஞ.ம.,3.8.13

நீதிக்கட்சியால் ஏற்பட்ட நன்மைகள்

1920களில் எடுக்கப்பட்ட படம் : தியாகராய செட்டியார் நடுவில் அமர்ந்துள்ளார் (சிறுமிக்கு வலப்புறம் இருப்பவர்). அவருக்கு வலப்புறம் இருப்பவர் ஆற்காடு ராமசாமி முதலியார்.பனகல் அரசர் மற்றும் வெங்கடகிரி அரசர் ஆகியோர் உடனிருக்கின்றனர்.

பிரிட்டிஷ் ஜனநாயகக் கொள் கைகளைப் பின்பற்றி (British liberalism)  பெயரிலேயே Liberal 
- என்கிற சொல்லையும் சேர்த்து தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (South Indian Liberal Federation) இணைத்து துவங்கியவர்கள் டி.எம்.நாயரும், தியாகராயரும்!.
அவர்கள் சாதாரண மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய பிரெஞ்சு நாட்டுத் தீவிரவாதக் குடி யரசுக் கட்சியில் இலட்சியங்களால் (Radical Republicans)  ஈர்க்கப்பட் டவர்கள்; அதனால்தான் கிளமென் சோவைப் பின்பற்றித் தங்கள் நாளேட்டிற்கு யிவீநீமீ - என்று பெயர் வைத்தார்கள். பிராமணரல்லாதார் என்கிற எதிர்மறைப் பெயரில் அந்த உயிர் இல்லை - என்பதற்காக; அந்த உயிரைக் கொடுத்து உணர்வுகளைத் தட்டி எழுப்புவதற்கு இந்தச் சமுதாயத் திற்கு திராவிடர் என்கிற பெயரைக் கொடுத்தார்கள்; அதற்கு அடையாள மாகத் தங்கள் தமிழ் ஏட்டிற்கும் திரா விடன் என்கிற பெயரை வைத்தார்கள்!
ஒரு இனத்திற்கு தன்னுணர்வு ஊட்டி னார்கள்!
றீ அந்த நீதிக்கட்சியின் ஆட்சியி லேதான் நாடாளுமன்ற நடைமுறை களுக்கான அடித்தளம் இங்கே நாட்டப் பட்டது.
றீ இன்று தமிழ்நாடு நன்கு நிர்வகிக் கப்படும் மாநிலமாக இருக்கிறதென் றால் அதற்குக் காரணம் அன்று நீதிக்கட்சி தந்த பயிற்சிதான்!(321)
3321. “That Madras today is and is regarded as a well administered state in India. is due to the political education and experience gained here in operating dyarchy”
- S.Saraswathi. ‘Dyarchy in Madras’ P-20
  • அந்த நீதிக்கட்சியின் ஆட்சி யிலேதான் இந்தியாவிலேயே முதல் முறையாகப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது!(322)
322: 1919-ஆம் ஆண்டுச் சட்டப்படி பெண்களுக்கு வாக்குரிமை கொடுப்பது மாகாண சட்டசபைகளின் முடிவிற்கு விடப்பட்டது.
1921, ஏப்ரல் முதல் நாள் ஒரு தீர்மானத்தின் மூலம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
  • அந்த நீதிக்கட்சியின் ஆட்சி யிலேதான் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வியும், இலவசப் புத் தகங்களும்,இலவச ஆடைகளும், இலவச மதிய உணவும் வழங்கப் பட்டன!
-- - க.பழனிசாமி (தெ.புதுப்பட்டி) திராவிட இயக்க வரலாறு (1912 - 1921)  முரசொலிமாறன் 414-ஆம் பக்கம்.
-விடுதலை,14.12.13
-

திராவிட இயக்கக் கொள்கைகள் மறுமலர்ச்சி பெற வேண்டும் சமூக சிந்தனையாளர் கே.எஸ்.பகவான்

பெங்களூர், செப்.20 திராவிட இயக்கக் கொள் கைகள் மறுமலர்ச்சி பெற வேண்டும் என்று சமூக சிந்தனையாளர் கே.எஸ். பகவான் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங் களூருவில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ஆரியர்கள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாக இந்தியாவில் திராவிடப் பண்பாடுதான் நிலைத்திருந்தது. சிந்து வெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகம்தான். திராவிடப் பண்பாட்டில் மதம், ஜாதி இருந்த தில்லை. மேலும், பாலினப் பாகுபாடுகள் கிடையாது. இயற்கையைச் சார்ந்தது தான் திராவிடப் பண் பாடு. அந்தப் பண்பாடு காலப்போக்கில் நசுக்கப் பட்டு அழிக்கப்பட்டது.
திராவிடப் பண் பாட்டை மீட்டெடுக்கும் வகையில்தான் திராவிட இயக்கத்தை தந்தை பெரியார் உருவாக்கினார். சமத்துவ சமுதாயத்தை உருவாக்க தமிழகத்தின் மூலைமுடுக்கில் எல்லாம் கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய் தார். மூடநம்பிக்கைகள், அறிவியலுக்கு எதிரான சிந்தனைகளை ஒழிக்க இறுதிநாள் வரை பாடு பட்டார்.
அதன் விளை வாக தமிழகத்தில் சமூக, அரசியல் மாற்றம் ஏற் பட்டது. தனது கொள் கைகள் மக்கள் மத்தியில் பரவி வெற்றி பெறுவதை கண்கூடாகப் பார்த்தவர் பெரியார்.
வகுப்புவாரி விகிதாச் சார முறையில் இட ஒதுக்கீட்டு முறையைக் கல்வி, வேலைவாய்ப்பில் வழங்க வேண்டுமெனப் போராடியதால், அரச மைப்புச் சட்டம் முதல் முறையாக திருத்தப்பட் டது. அதன் பயனாக சமூகநீதி நிலை நிறுத்தப் பட்டுள்ளது.
இந்தியா வில் இந்துத்துவவாதிகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ள நிலை யில், திராவிட இயக்கக் கொள்கைகள் மறுமலர்ச்சி பெற வேண்டும். முன் னெப்போதையும்விட தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு தேவை பெருகியுள்ளது.
சமூக சிந்தனையாளர் கலபுர்கியை கொலை செய்ததன் மூலம் பகுத் தறிவு சிந்தனைகளை குழி தோண்டிப் புதைத்து விடலாம் என்று கனவு காண்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெரியாரின் கொள்கை களை கருநாடகத்தில் வேகமாக பரப்ப வேண் டும் என்றார்.
-விடுதலை,20.9.15


சனி, 7 நவம்பர், 2015

திராவிடம் -தமிழம் என்பதன் திரிபு,

திராவிடம்
இது தமிழம் என்பதன் திரிபு, ஆதலின் தமிழ்ச் சொல்லே. ஆரியம் அன்று. இதுபற்றிப் பல தடவைகளில் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே தரப்படுகின்றன.
பாலி மொழியிற் பகர்ந்த மகாவமிச
நூலில் ஒருசெய்தி நோக்குகின்றோம்! மேலாம்
தமிழ் என்ற சொல்லைத் தமிழோஎன் றார்! ஏன்?
தமிழரல்லார் நாக்குத் தவறு.
தமிழ் நாட்டை ஆசிரியர் தாலமி முன்னாள்
தமிரிசி என்றுரைத்தார். தாம்ஓர் - தமிழரல்லர்!
ஆதலினால் தோழா அயலார் ஒருசொல்லை
ஓதலினால் மாறுபடல் உண்டு.
தமிழென்று சாற்றுதற்கு மச்ச புராணம்
த்ரமிளென்று சாற்றியதும் காண்க - தமிழா
படியைப் ப்ரதிஎன்னும் பச்சைவட வோரிப்
படியுரைத்தால் யார்வியப்பார் பார்.
தமிழோவும் மற்றும் தமிரிசியும் வேறு
த்ரமிள த்ரமில் எல்லாம் சாற்றின் - தமிழன்
திரியே அவைகள்! செந்தமிழ்ச் சொல் வேந்தன்
பிரிந்ததுண் டோ இங்கவற்றில் பேசு.
திரிந்ததமிழ்ச் சொல்லும் தமிழ்ச்சொல்லே ஆற்றில்
பிரிந்தவாய்க் காலும் பிரிதோ? - தெரிந்த
பழத்தைப் பயம் பளம் என்பார் அவைகள்
தழைந்த தமிழ்ச்சொற்கள் தாம்.
உரைத்த இவை கொண்டே உணர்க தமிழம்
திராவிடம்என் றேதிரிந்த தென்று! - திராவிடம்
ஆரியர்வாய் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல்
ஆரியச்சொல் ஆமோ அறி.
தென் குமரிப் பஃறுளியும் சேர்வடக்கு மாமலையும்
நன்கெல்லை கொண்ட நடுவிடத்தில் - மன்னும்
பொருள்கள் பலவாம்! பொலிந்தனவே அந்தப்
பொருள்கள் தமிழ்ப்பெயரே பூண்டு.
திராவிடம் தன்னந் தனியா ரியமா?
திராவிடம் இன்பத் தமிழின் - திரிபன்றோ!
இன்பத் தமிழகத்துக் கிட்டார் திராவிடப்பேர்
என்பார்சொல் ஏற்புடைய தன்று.
திராவிடம் என்னல் தமிழின் திரிபே
திராவிடம் ஆரியச்சொல் அன்று - திராவிடம்
வெல்கஎன்று சொன்னால்நம் மேன்மைத் தமிழர்கள்
வெல்கஎன்று விண்டதுவே யாம்.
வந்தார் மொழியா திராவிடம்? மாநிலத்தில்
செந்தமிழ்ச் செல்வமா அந்தச்சொல்! - முந்தியே
இங்குள்ள நற்பொருள்கள் எல்லாவற் றிற்குமே
எங்கிருந்து கொண்டுவந்தார் பேர்
-(குயில், 15---07-1958)
-உண்மை,1-15.7.15

ரிக் வேதத்தில் திராவிட மொழி!

ரணவீர் சக்ரவர்த்தி
பண்டைய இந்திய வரலாற்றை மறு வாசிப்புக்கு உட்படுத்திய இந்திய வரலாற்றாசிரியர்களில் முதன்மை யானவர் ரொமீலாதாப்பர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர். எ ஹிஸ்ட்ரி ஆஃப் இந்தியா, அசோகா அண்டு தி டிக்ளைன் ஆஃப் தி மவுரியாஸ் போன்ற வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியவர். அவருடனான பேட்டியின் சில முக்கியப் பகுதிகள் இங்கே!
உங்களுடைய சமீபத்திய புத்தக மான தி பாஸ்ட் ஆஸ் பிரசண்ட்அய் வாசிக்கும்போது, வரலாற்று ஆய் வின் இன்றைய போக்கையும் இந்திய வரலாறு குறித்த வெகுஜனப் புரி தலையும் ஒருவிதமான வருத்தத் தோடு அவதானிப்பதாகத் தோன் றுகிறது.
50 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி நிறுவனங்களில் வரலாற்றுப் பாடம் கற்றுத்தரப்பட்ட விதமே வேறு. அப் போது வரலாற்றைப் புதிய பார்வையில் எழுதியவர்கள் பல எதிர்ப்புகளைச் சந்தித்தோம். அந்தவகையில் இன்று ஓரளவு ஆரோக்கியமான மாற்றம் வந்துள்ளது.
இருப்பினும், பொது மக்களிடையே காலாவதியான வர லாறும் வரலாறே அல்லாதவையும்தான் இன்னமும் வரலாறாக இருக்கின்றன. கடந்த காலத் தகவல்களின் குவியல் தான் வரலாறு என இன்றும் பலர் நம் புகின்றனர்.
பலவிதமான மூலங்களைக் கண்டறிந்து, அவற்றைக் குறுக்கு விசாரணை செய்து, ஆதாரங்களின் நம்பகத்தன்மையைச் சோதித்து அதன் அடிப்படையில்தான் தகவல்களைத் திரட்ட வேண்டும். வரலாற்று முறைமை என நாங்கள் அழைப்பது இதைத்தான்.
முறையான பயிற்சி இன்றி பொதுவான ஆர்வத்தில் வரலாற் றைத் தேடுபவர்களுக்கும், தர்க்கரீதி யாக சமரசமின்றி வரலாற்றைப் புரிந்துகொள்ளும் வரலாற்றாசிரிய ருக்கும் துல்லியமான வேறுபாடு உள்ளது என்கிறீர்கள் அல்லவா?
நிச்சயமாக. நான் சொன்னது எல்லா வரலாற்றுக்கும் பொருந்தும். அதிலும், பண்டைய இந்திய வரலாற்றில் இந்தச் சிக்கல் கூடுதலாகவே இருக்கிறது. ஒரு டஜன் பண்டைய இந்திய வரலாற்றுப் புத்தகங்களைப் படித்துவிட்டால் நீங்கள் நிபுணராகி விட முடியாது.
அதன் மூலங்கள் மற்றும் அக்கால கட் டத்தில் வழக்கத்திலிருந்த மொழிகளை யும் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, மவுரியக் கல்வெட்டு களை ஆராய பிராகிருதம் தெரிந்திருக்க வேண்டும். அதனுடன் தொடர்புடைய கவுடில்யரின் (சாணக்கியர்) அர்த்த சாஸ்திரத்தை வாசிக்க சம்ஸ்கிருதமும் கற்றிருக்க வேண்டும். ஓரளவாவது தொல்லியல் தெரிந்திருக்க வேண்டும்.
தற்காலத் தொல்லியல் ஆய்வுகளில் அறிவியல் முறைகள் பல பின்பற்றப் படுகின்றன. இதனால் தொல்லியலை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. அடுத்தபடியாக வெறுமனே மொழி அறிவையும் தாண்டி, மொழியியல் தெரிந்திருக்க வேண்டும்.
சமீப காலமாகப் பெரிதும் விவாதிக்கப்படும் ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். நாங்கள் மாணவர்களாக இருந்தபோது ரிக் வேதத்தின் ஒரே மொழி இந்தோ ஆரிய மொழி. ஆனால், இன்றைய வேத ஆய்வாளர்களைக் கேட்டுப்பாருங்கள். ரிக் வேதத்தில் திராவிட மொழியும் உள்ளதென்று அவர்களில் பெரும்பாலோர் சொல் வார்கள்.
வரலாற்றாசிரியரின் பார் வையை இது புரட்டிப்போடுகிற தல்லவா? ஒரே ஒரு மொழியை மட்டுமே பேசிய மக்களின் மொழியில் எழுதப்பட்ட ஒரு நூல் இங்குள்ளது என இனி எவரும் சொல்ல முடியாது.
நீங்கள் பேசுவதிலிருந்து கடந்த காலம் என்பது ஒற்றைத் தன்மை கொண்டதல்ல என்பது புரிகிறது. சாமானிய மக்கள் மனதில் சில தவ றான, அபாயகரமான விஷயங்கள் புகுத்தப்பட்டுள்ளன. சில மதம் சார்ந்த நடவடிக்கைகளை, சில இன அடையாளங்களை, சில குழுக்களை ஒற்றைத் தன்மையிலேயே புரிந்து வைத்துள்ளனர்
பொதுமக்களிடையே பரப்பப்படு வதைப் பற்றி நான் இப்போது விளக்கப்போவதில்லை. ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். மத்திய ஆசியாவிலிருந்து ஈரான் வழியாக இந்தியா வந்தடைந்ததுதான் ஆரிய மொழி என்றுதான் நெடுங்காலமாகச் சொல்லப் பட்டது.
ஆனால், ஆரிய மொழி பேசியவர்கள் இம்மண்ணின் மைந்தர்களே எனும் கருத்து சமீபகால மாகப் பரப்பப்படுகிறது. சிலர் ஹரப்பா நாகரிகத்தைத் தோற்றுவித்ததே ஆரியர் கள்தான் என்கின்றனர். ஒட்டுமொத்த மாக ஆரியர் அல்லாத கூறுகளே இந்திய நாகரிகத்தில் இல்லை எனச் சொல்லத் தொடங்கிவிட்டனர். பல காரணங் களுக்காக இதை நான் மறுக்கிறேன்.
புனிதப்படுத்துதல் என்பதாலா?
ஆம்! புனிதமான ஆரியவாதம். அதில் ஒரு மூலம் மட்டும் முன்னிறுத்தப்படு கிறது. பன்முகத்தன்மைகள் விளிம்புக்குத் தள்ளப்படுகின்றன. மொழியியல் மற்றும் தொல்லியல் அடிப்படையில் இதை நாங்கள் முற்றிலுமாக மறுக்கிறோம். ஹரப்பா நாகரிகத்துக்குப் பின்தோன்றி யதுதான் ரிக் வேதம் என்பதே எங்களுடைய வாதம். ஏனென்றால், ஓமனில் ஹரப்பா பண்பாட்டின் தடங்கள் காணப்படுகின்றன. அவர் களுக்கு மெசபடோமியாவோடும் தொடர்பு இருந்திருக்கிறது.
ஆனால், இத்தகைய கூறுகள் ரிக் வேதத்தில் பிரதிபலிக்கவில்லை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியிலும் இரண்டாம் நூற்றாண்டின் தொடக் கத்திலும் ஹரப்பா கலாச்சாரம் அக் கம்பக்கத்தில் இருந்த பிற கலாச்சாரங் களோடு தொடர்பு கொண்டதாகத் தெரியவருகிறது. ஆனால், ரிக் வேதமோ கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் மத்திய காலம் தொடங்கி இறுதிவரை யில்தான் தொகுக்கப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் சாம்பல் நிறப் பானைக் கலாச்சாரம், கருப்பு மற்றும் சிவப்புப் பானைக் கலாச்சாரம், பெருங்கற்கள் கலாச்சாரம் எனப் பல விதமான கலாச்சாரங்கள் இருந்துள்ளன. இப்படிப் பலதரப்பட்ட கலாச்சாரச் சூழலில்தான் ஆரிய மொழி பேசிய மக்கள் இந்தி யாவில் குடியேறினர்.
அதிலும் ஹரப்பா நகரங்களின் கலாச்சாரம் அதிநவீனமானது. அம்மக்களுக்கு எழுத்தறிவும் இருந்தது. மறுபுறம் எழுத்தறிவற்ற, நகர்ப்புற வாழ்க்கை முறை அறியாத, விவசா யத்தை மட்டுமே நம்பி இருந்த ரிக் வேதச் சமூகம். இது போன்ற அடிப்ப டையான வேறுபாடுகளை யாரும் மறந்துவிட வேண்டாம்! -
தமிழில் சுருக்கமாக: ம.சுசித்ரா
நன்றி: ஃப்ரண்ட்லைன்
(‘தி  இந்து 28.9.2015 பக்.7)
-விடுதலை ஞா.ம.,31.10.15

சனி, 17 அக்டோபர், 2015

ஹிந்துஸ்தானும் சமஸ்கிருதமும்


பொறியாளர்
ப. கோவிந்தராசன்
BE, MBA,MA(History)MA(Linguistics)
ஹிந்துஸ்தான் எங்கே உள்ளது ?
வடஇந்தியாவில் உள்ள சிந்து சம வெளியும் கங்கைச் சமவெளியும் அடங்கிய நிலப்பரப்புக்கு இநதுஸ்தான்  அல்லது ஆரிய வர்த்தம் என்று பெயர். விந்திய மலைக்கு தெற்கே திராவிடர்கள் வாழ்ந்த பகுதி (குஜராத் உள்பட) திராவிடஸ்தான் அல்லது திராவிடம் என்று அழைக்கப்பட்டது.
ஹிந்துஸ் தானில் இருந்த சிந்து சமவெளியின் பெரும்பகுதி தற்போது பாகிஸ்தானில் உள்ளது ஒரு பகுதி ஆப்கானிஸ்தானில் உள்ளது. கங்கைச் சமவெளியின் கிழக்குப்பகுதி தற்போது பங்களா தேஷில் உள்ளது. எனவே ஹிந்துஸ் தான் தற்போது மிகவும் சுருங்கி விட்டது.
ஹிந்துஸ்தான் என்ற பெயர் துரக்மேனிஸ்தான் கஜகிஸ்தான போன்று அந்நியரால் பாரசீகர்களால் வைக்கப்பட்ட பெயர் அதை ஜம்புத் தீபத்தில் (நாவலந்தீவு) உள்ளவர்கள் பயன்படுத்துவது மதப்பற்று அல்ல ஏனென்றால். ஹிந்துஸ்தான் மதம் சார்ந்த பெயர் அல்ல. மேலும் ஹிந் துஸ்தான் என்ற பெயர் நமது தேசிய கீதத்தில் இல்லை. ஆனால் திராவிடம் என்ற பெயர் தேசிய கீதத்தில் உள்ளது.
இந்துஸ்தானும் சமஸ்கிருதமும்
பாஜக மத்திய அரசில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஹிந்துஸ்தான் என்ற பெயர் இந்தியாவிற்குப் பதிலாக பாஜக தலைவர்களால் பேசப்படு கின்றது. கங்கைச் சமவெளியில் ஆரியர் கள் குடியேறிய பின் யாகங்கள் நடந்தன. யாகங்களில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டன. விவ சாயம் பாதிக்கப்பட்டது. அந்த விவ சாயிகள் ஆரியர்களை எதிர்த்தனர்.
இதனால் விவசாயிகள் சூத்திரர்கள் என்று ஆரியர்களால் அழைக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர். இதன் விளைவாக புத்த சமண மதங்கள் தோன்றின. இநத மதங்களால் ஆரியர் களின் வேதமதம் ஹிந்துஸ்தானில் வழக்கு ஒழிந்தது
பின்னர் கிரேக்க வீரர் அலெக் சாண்டரின் ஆட்சி ஹிந்துஸ்தானில்  கிமு-326-ல் ஏற்பட்டது. அப்போது இலக் கண அறிஞர் பாணினி இஸ்லாமாபாத் அருகே அட்டாக் மாவட்டத்தில கிமு300-ல் பிறந்தார் அவர் தன் கிராமத்தில் உயர் வகுப்பினரால் (எலைட்) பேசப்பட்ட மொழிக்கு இலக்கணம் அமைத்தார். அப்போது சமஸ்கிருத மொழி தோன்றவில்லை.
மௌரியர்கள் புத்த மதத்தையும் பாலி மொழியையும் ஆதரித்தனர். ஆனால் சமஸ்கிருதத்தை ஆதரிக்கவில்லை. கிமு 200ல் பதஞ்சலி என்ற அறிஞர் பாணினி உரை (மஹா பாஷ்யம்) எழுதினார். இதற்குப்பின் தான் சமஸ்கிருதம் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
கிபி 150-ல் திராவிடஸ்தானில் சௌராஷ்டிரா பகுதியில் (குஜராத்தில்)  ஜூனாகட் ராஜ்ஜியத்தில சமஸ்கிருத கல்வெட்டு முதன் முதலாக ஆராயச்சி யாளர்களுக்கு கிடைத்தது. இது ருத்ரா தாமன் என்ற மன்னன் காலத்தில்தான் நடந்தது. இது ஹிந்துஸ்தானில் சமஸ் கிருதம் போதிய வளரச்சியைப் பெற வில்லை என்பதினைக் குறிக்கின்றது.
வேதமொழியும் சமஸ்கிருதமும்
வேத மொழி பாரசீக மொழியான அவெஸ்தன் மொழியுடன் கலந்து உருவான மொழி. இந்த மொழியில் ரிக் வேதம் எழுதப்பட்டது. ரிக்வேதத்தின ஒரு பகுதி இந்தியாவிற்கு வெளியே எழுதபட்டது என  கம்யூனிஸ்ட் தலைவர் இ எம் எஸ் நம்புதிரிபாட் தன் நூலில் (இந்திய வரலாறு- பக்கம்-28இ-ல்) கூறுகிறார்.
இந்துத்வா கொள்கைகளைப் பரப்பிய தலைவரான பால கங்காதர திலகர் ரிக் வேதத்தை ஆய்வு செய்தார். அதற்காக திலகர் அவெஸ்தன் மொழி கற்றார். தன் ஆய்வின் முடிவில் ஒரு நூல் (-தி ஆர்க்டிக் ஹோம் .இன் த வேதாஸ்--) எழுதினார். அதில் ஆரியர்கள்  ஆர்க்டிக் துருவப் பிரதேசத்திலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் எனத் தெரிவித்தார்.
இத்தகைய வேத மொழியை சந்தஸி என்று பாணினி குறிப்பிட்டுள்ளார். புத்த மதம் பாலி மொழியை ஆதரித் தது. சமண மதம் அரத்த மாகதியை ஆதரித்தது. இவ்விரு மதங்களும் வேதமதச் சடங்குகளை எதிர்த்ததால் வேதமதம் அழிந்தது.
பின்னர் குப்தர்கள் காலத்தில் வைணவ மதம் செல்வாக்குப் பெற்றது. அப்போது செயற்கையாக உருவாக்கப்பட்ட சமஸ்கிருதம் வளர்ந்தது. அப்போது இராமாயணம் மகாபாரதம் மற்றும் புராணங்கள் உருவாகின. இந்த நூல்கள் வைணவ மதத்தை வளர்க்க பெரிதும் உதவின.
பாணினியும் சமஸ்கிருதமும்
பாணினி எழுதிய இலக்கண நூலைப் பின்பற்றி பாணினி காலத் திற்குப் பின் சமஸ்கிருதம் செயற்கை யாக உருவாக்கப்பட்டது. சமஸ்கிருதம் என்றால் பல மொழிகள் சேர்ந்து உருவாக்கப்பட்டது என்று சமஸ்கிருத நூல்கள் பொருள் தருகின்றன.
பாணினி காலத்துக்குப் பின் சமஸ் கிருதம் செயற்கையாக உருவாக்கப் பட்டது.
சாகித்ய அகாடெமி வெளியீடு சமஸ்கிருதம்பற்றி கூறுவதென்ன?
டாக்டர் சரோஜ் பாட்டே என்ற அம்மையார் புனே பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத்துறைப் பேராசியர். இவர் பாணினி இலக்கணத்தைப்பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார். அதை சாஹித்ய அகாடெமி வெளியிட்டுள்ளது.   அந்த நூலில் தெரிவிக்கப் பட்டுள்ள கருத்துக்கள் கீழே கூறப்பட்டுள்ளன.
1. பாணினி தான் இலக்கணம் அமைத்த மொழியின் பெயரை சமஸ்கிருதம் என்று குறிப்பிடவே இல்லை. பாஷா என்று தான் குறிப்பிடுகிறார். (ஏனென்றால் பாணினி காலத்தில் சமஸ்கிருதம் என்ற மொழி இல்லவே இல்லை. கிமு 100-க்குப் பின்தான் பல மொழிகளைச் சேர்த்து கலவை மொழியாக செயற்கையாக உரு வாக்கப்பட்டது).
2. பாணினி தன்னுடைய நூலுக்கு அஷ் டத்யாயி என்று பெயரிடவில்லை. பாணினி தனது நூலை எட்டு  அத்தியாயங்களாகப் பிரிக்கவில்லை. பிற்காலத்தில் உரையாசிரியர்கள் பிரித்திருக்கலாம் (பக்கம் 12).
3. பாணினி தனது மாடல் இலக்கண நூலில் மொத்தம் 3995 சூத்திரங் களை எழுதியுள்ளார். அதில் 300 சூத்திரங்கள் மட்டும் வேத மொழி யுடன் (சந்தஸி) தொடர்பு உடையது.
4.    உயர் வகுப்பு பேச்சு மொழியாக விளங்கிய மொழிக்குத்தான் பாணினி இலக்கணம் அமைத்தார் என்று கூறப்படுவதால் பாணினி பேச்சு வழக்கற்ற சமஸ்கிருதத்திற்கு இலக் கணம் அமைக்க வில்லை என அறியலாம்.
5.    மெட்டாலாங்வேஜ் (சமஸ்கிருதம் அல்லாத) மொழியில் இலக்கணம் அமைத்தார். இந்த மொழி கருவி மொழி என்று அழைக்கப்படுகிறது. இந்த மெட்டா லாங்வேஜ் சமஸ் கிருதத்தைச் சேராத சொற்களையும் வாக்கிய அமைப்பையும் கொண்டது என கூறுகிறார் (பக்கம் 26).
6.    பாணினி தன் நூலை மிகவும் சுருக்க மாக அமைத்துள்ளதால் எழுத்து வடிவில் எழுதப் படவில்லை எனக் கருதப்படுகின்றது.
7.    பாணினி இலக்கணத்தை அடிப் படையாக கொண்டவை கன்னட, தெலுகு, மராத்தி, மலையாளம் மொழிகளின் இலக்கண நூல்கள் ஆகும். ஆனால் தமிழ் மொழியின் இலக்கணம் தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டது. தொல்காப்பியம் பாணினி காலத் திற்கு முந்தியது.
8.    பாணினி இலக்கணத்தைப் பயன் படுத்தி உருவாக்கப்பட்ட சமஸ் கிருதத்தில் இலக்கியம் இதிகாசம் மற்றும் புராணங்கள் உருவாக்கப் பட்டன.
9.    பாணினி இலக்கணத்தை சமஸ் கிருதம் பயன்படுத்தியதால் பேச்சு வழக்கற்ற மொழி ஆனது என சமஸ்கிருத மொழி அறிஞர்கள் சிலர் கருதுகிறார்கள்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியீடு சமஸ்கிருதம் பற்றிக் கூறுவதென்ன?
இந்த நிறுவனம் பாணினி எழுதிய அஷ்டாத்தியாயி என்ற இலக்கண நூலை தமிழாக்கத்தில் வெளியிட்டுள் ளது. இதன் ஆசிரியர் முனைவர் கு. மீனாட்சி ஆவார். அவர் இந்த  நூலில் பாணினி எந்த மொழிக்கு இலக்கணம் அமைத்தார் என்பதினை கீழ்க்கண்ட வாறு கூறுகிறார்.
வேத மொழிக் கூறுகளை  சமஸ் கிருதம் என்ற பெயரால் கூறாமல் சந்தஸி என்ற பெயரால் பாணினி கூறு கிறார். இதனால் வேதம் இயற்றப்பட்ட வேத மொழியை சந்தஸி என்று பாணினி அழைக்கிறார் எனக் கூறலாம்
உதாரணம் ------
1.1. சந்தஸி  பரே அபி (அத்தியாயம்--- 1இல் சூத்திரம்- -4.81) முதல் பாகத்தில்.
1.2. கிதேஸ் சந்தஸி----அத்தியாயம் 6இல் சூத்திரம்-- 1.52 (மூன்றாம் பாகம்).
1.3. யத்திது பரம் சந்தஸி---அத்தியாயம்- 8இல்- சூத்திரம் 156 (மூன்றாம் பாகம்).
1.4-. ---சந்தஸிடஞ்---- அத்தியாயம் 4-இல் சூத்திரம் 1.இல் 19. (இரண்டாம் பாகம்)
1. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் மேல் வகுப்பினரால் (எலைட்) பேசப்பட்ட ஒரு மொழிக்கு பாணினி இலக்கணம் வகுத்தார் என்று நம்பப்படுகின்றது. எனவே சமஸ் கிருதத்திற்கு இலக்கணம் பாணினியால் அமைக்கப்படவில்லை
2. பாணினி தான் இலக்கணம் அமைத்த மொழி சமஸ்கிருதம் தான் என்று தனது நூலில் எந்த இடத்திலும் கூறவில்லை. (ஆனால் அவ்வாறு முதன் முதலாக இராமாயணத்தில்தான் கூறப்பட்டுள்ளது.)
3. பாணினி தான் இலக்கணம் அமைத்த மொழியை பாஷா என்றே குறிப்பிடுகின்றார்.
4. பாணினி தனது இலக்கணத்தை விளக்க சமஸ்கிருதத்திலிருந்து வேறு பட்ட மொழியை மாதிரியாகக் கொண்டு விளக்கினார். இந்த மொழி கருவி மொழி அல்லது மெட்டாலாங்வேஜ் என்று அழைக்கப்படுகின்றது
5. மேலும் பாணினியின் இலக் கணத்தைப் புரிந்து கொள்ள கீழ்க்கண்ட நூல்களையும் படிக்க வேண்டும்
1) கார்த்தியாயனரின் வார்த்திகம் 2) பதஞ்சலியின் மஹாபாஷ்யம் 3) வாமனரின் ஜயாதித்தரின் காஸிகா மற்றும் 4) பாணினி காலத்துக்கு முற்பட்ட பத்துக்கு மேற்பட்ட பழைய இலக்கண நூல்கள். 5) துணை நூல்கள் -ஏழு (சிவ சூத்திரம், தாது பாடம், கண பாடம், உணாதிசூத்திரம், சூத்திரம் லிங்கானுஸாஸனம் மற்றும் சிசஷா).
இதிலிருந்து பாணினி இலக்கணம் எவ்வளவு கடினமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.  மேலும் ஒரு மொழி பேச்சு வழக்கில் இருந்தால்தான் இலக்கணம் எளிதாக அமையும்.
முடிவுரை
1. ஹிந்துஸ்தான் என்பது இமய மலைக்கும் மற்றும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட சமவெளி பகுதி ஆகும். எனவே ஹிந்துஸ்தானத்தின் பொருளா தார வளர்ச்சியை ஒட்டு மொத்த இந்தி யாவின் வளர்ச்சியாகக் கருதமுடியாது
2. ரிக் வேதம் சந்தஸி என்ற மொழி யில் உருவாக்கப்பட்டது.
3. பாணினி இலக்கணம் அமைத்தது வேத மொழிக்கு இல்லை
4. பாணினி (கிமு. 300) எழுதிய இல்க்கண நூலுக்குப் பின்தான் சமஸ்கிருதம் உருவாக்கப்பட்டது.
5. புத்த மதம் இந்தியாவில் தோன்றி உலகமெலாம் பரவிய பின் தோன்றிய மொழி சமஸ்கிருதம் ஆகும். இத்தகைய சமஸ்கிருத மொழி உலக மொழிகளின் தாயாக விளங்கக்கூடிய வாய்ப்பு சிறிதும் இல்லை.
-விடுதலை,28.2.15
.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

திராவிடர்களின் குடியம் குகைகளுக்கு ஒருநாள் சுற்றுப்பயணம்!

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் ஒருங்கிணைப்பில்
உலகின் மூத்த மனிதனான திராவிடர்களின் குடியம் குகைகளுக்கு ஒருநாள் சுற்றுப்பயணம்!

திருவள்ளூர், செப். 13- இன்று தமிழ்நாடு என்றழைக்கப்படும் இந்த நிலத்தின் தொன்மையை உணர்த்தும் விதமாகவும், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த கற்கால மனிதர்களின் வாழிடங்களைத்தேடி சென்னையிலிருந்து ஒருநாள் சுற்றுப்பயணம் நடைபெற்றது.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில், திராவிடப் பண்பாட்டு, வரலாற்று இடங்களுக்கு செல்லும் வகையில் ஏற்கெனவே தியாகராய நகர் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் திராவிடர் இயக்க வரலாற்றோடு தொடர்புடைய இடங்களை மீள் பார்வை செய்யும் விதமாக சில நடைப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக இந்நிலத்தின் தொன்மையை விளக்கும் விதமாக ஆதி மனிதர்கள் வாழ்ந்த இடங்களுக்கு சென்றுவரத் திட்டமிடப்பட்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி காலப்பயணத்தின் முதல் பயணம் நடைபெற்றது.
பல்துறை அறிஞர்களுடன் பயணம்
திட்டமிட்டபடி ஜூலை 26 ஆம் தேதி, ஞாயிறன்று காலை 6:45 மணியளவில் தனி பேருந்தில், சென்னை பெரியார் திடலிலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள (சென்னையிலிருந்து  90 கி.மீ தொலைவில்) தொல்குடி மக்கள் வாழ்ந்த குடியம் பகுதியை நோக்கி பல கேள்வி களுடனும், அந்தக் கேள்களுக்கு பதிலை தேடும் பயணமா கவும் புறப்பட்டது. இந்தப் பயணத்தில் மூன்று மருத் துவர்கள், பல கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசு அலுவலர்கள், பகுத்தறிவாளர்கள், தொல்லியல் துறை ஆய்வாளர்கள், கடலியல் ஆய்வாளர் என பல்துறைகளைச் சேர்ந்த மொத்தம் 36 பேர் கலந்து கொண்டனர். இந்த பயணத்திற்கு வழிகாட்டவும், குடியம் குகைகள் குறித்த விளக்கம் அளிப்பதற்கும் ஏற்கனவே பல முறை இக்குகைகளுக்கு வருகை தந்திருந்த கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்திருந்தார். பயணத்திட்டத்தில் பூண்டி நீர்த் தேக்கம், பூண்டி தொல்பொருள் அருங்காட்சியகம், குடியம் குகைகள், கோனே அருவி (ஆந்திர மாநிலம்) ஆகிய இடங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த அரிய பயணத்தில் 15 வயதிலிருந்து 84 வயது வரையுள்ளவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் காலப்பயணம் என்ற பெயர் பொறித்த தொப்பி வழங்கப்பட்டது.
வரலாறும் - பொழுதுபோக்கும்
வரலாற்றையும் பொழுதுபோக்கையும் ஒன்றாக ஒருங்கிணைத்திருந்த இந்தப்பயணம் இதில் கலந்து கொண்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், மிக அரிய கருத்துகளை தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் அமைந்தது. கூவம் நதி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தமிழ்நாட்டில் தொடங்கும் இடம், பூண்டி நீர்த் தேக்கத்தில் திராவிட இயக்கத்தின் பங்கு, 12 லட்சம் ஆண்டு களுக்கு முன்பு கற்கால நாகரிக மக்கள் வாழ்ந்ததாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள குடியம் குகைகள் என்று மலையேற்றத் துடன் கூடிய வியக்கவைக்கும் பின்நோக்கிய காலப் பயணம். அதைத் தொடர்ந்து கோனே அருவியில் குளியல் என்று வரலாற்று அறிவுக்கும், மகிழ்ச்சிக்கும் ஏற்ற வகை யில் என்றென்றும் மறக்கமுடியாத பயணமாக அமைந்து விட்டது.
கூம்பு வடிவக் குடிசை
குடியம் கிராமத்திலிருந்து குகைக்கு செல்லும் 7 கிலோ மீட்டர் மலையேற்றப் பயணத்திற்கு தயாரானோம். அந்த கிராமத்தில் இருந்த கூம்பு வடிவக் குடிசைகள் ஆச்சர்யம் தந்தன, அவை பழங்காலத்தில் மனிதன் வசித்த குடியிருப் பின் வடிவம் என்றும், இன்று அவை வீடாக இல்லாமல் அவர்களது களஞ்சியமாக உபயோகத்தில் இருந்ததையும் காணமுடிந்தது. அதை கடந்து மலைப்பாதைக்கு வந்தோம்... கூழாங்கற்கள் குவிந்த அந்த மலைப்பாதை வித்தியாசமாக இருந்தது. தொல்பொருள் ஆய்வாளர் தீபிகா, இவை கூழாங்கற்கள் மட்டுமல்ல கற்கால மனிதனின் கல் ஆயுத கிடங்காக அவ்விடம் இருந்துள்ளது என, ஒரு கல்லை எடுத்து இது ஆதிமனிதன் ஆயுதமாக செதுக்கியது, இயற்கையில் உடைந்த கல்லுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு எனக் காட்டினார். அதைத் தொடர்ந்து ஆர்வம் தாங்காமல் மற்றவர்களும் ஆதி மனிதனின் ஆயுதத்தை கண்டறியும் ஆர்வத்துடன் அங்கு பரவியிருந்த கற்களின் குவியலில் தேடத் தொடங்கிவிட்டனர்.
குடியம் குகைகள் - ஆவணப்படம்
முன்னதாக இந்த பயணம் குறித்த ஒரு புரிதலை உண்டாக்குவதற்காக பயண நாளுக்கு முதல் நாளான ஜூலை 25 ஆம் தேதி சனிக்கிழமையன்று பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில், குடியம் குகைகள் பற்றிய ஒரு ஆவணப்படம் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் ரமேஷ் யந்த்ரா கலந்து கொண்டு இன்னும் கூடுதல் தகவல்களை கூறி சிறப்பித்த தோடு அடுத்த நாள் தொல்லியல் துறை ஆய்வாளர் குமரகுருவுடன் குடியம் குகைகளுக்கே வருகை தந்து, பிரெஞ்சு ஆய்வாளர் சாந்திபஃப் போன்றவர்களும் புரூஸ்புட், இராபர்ட்புரூஸ்  ஆகியோர் இங்கு வந்து ஆய்வு செய்திருப்பதையும், அதில் இராபர்ட்புரூஸ் மிகமுக் கியமான பங்காற்றி இங்கு கற்கால மனிதர்கள் -அதாவது 12 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்ததாக கண்டுபிடித்துக் கொடுத்திருப்பதாகவும் கூறி மேலும் மேலும் வியப்படையச் செய்துகொண்டேயிருந்தார்.
கல் ஆயுதத் தொழிற்சாலை
150 ஆண்டுகளுக்கு முன், தொல்லியல் துறை அறிஞரான, இராபர்ட் புரூஸ் என்ற ஆங்கிலேயர் முதன் முதலில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த பகுதியாக பல்லாவரத்தை கண்டறிந்ததாகவும் அப்போது தான் ஆதி மனிதனின் வாழ்விடமாக தமிழகத்தின் இப்பகுதி (குடியம் குகைகள்) இருந்திருக்கக் கூடும் என்ற உண்மை உணரப் பட்டு, இன்றுவரை பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குடியம் பகுதியின் வளமான ஆற்று படுகை யும் சூழலும் கற்கால மனிதனுக்கு ஆயுதங்களாக உறுதி யான கற்கள் கிடைத்ததால் அவ்விடத்தில் வாழ்ந்ததாகவும் தகவல் தந்தனர். குடியம் பகுதியில் தோண்டாமலேயே பூமியின் மேற்பகுதியில் கற்கால மனிதனின் ஆயுதங்கள் கொட்டிகிடப்பதால் அவ்விடம் தொல்லியல் துறையால் கல் ஆயுதத் தொழிற்சாலை என அழைக்கப்படுவதா கவும் கூறினார்.
வருத்தமும்? வியப்பும்!
அதுமட்டுமல்ல, 12 லட்சம் ஆண்டுகளுக்கு முன் குடியம் குகைகள் என்று சொல்லக்கூடிய இந்த மலைப்பகுதி வரையிலுமாக கடல் இருந்ததாகவும் (தரையிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் உயரம்), கடல் அலைகள் அடித்து அடித்து அதனால் ஏற்பட்ட அரிப்பினால் இந்த குகைகள் உருவான தாகவும் கூறி அதற்கு ஆதாரமாக அந்தப்பாறைகளில் கிளிஞ்சல்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டினர். கடற்கோள் ஏற்பட்டு கண்டங்கள் பிரிந்தபின்,  பிரிந்த கண்டங்களுக் கிடையில் கடல்நீர் நுழைந்துவிட்டதால், குடியம் மலை உச்சி வரையிலுமிருந்த கடல் உள்வாங்கி இன்று உள்ள நிலைக்குச் சென்றிருக்கிறது என்று ஒரிசா பாலு விளக்கி யதும் அனைவரும் இப்படிப்பட்ட ஒரு அருமையான இடத்தை இவ்வளவு பக்கத்திலிருந்தும் பார்க்காமல் இருந்து விட்டோமே என்று வருத்தப்பட்டும், சரி இப்போதாவது பார்த்தோமே என்று வியந்தும் போயினர்.
அடுத்த பயணம் எப்போது ?
ஒட்டுமொத்தமாக திராவிட வரலாற்று ஆய்வு மய்யம் ஒருங்கிணைக்கும் அடுத்த பயணம் எங்கே? எப்போது? என்று கலந்துகொண்ட அனைவரும் வாய்விட்டே கேட்டு விட்டனர். காலை உணவும், மதிய உணவும் பூண்டி நீர்த் தேக்கத்தில் உள்ள பூங்காவில் உண்ணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது. மதிய உணவை கொள்கைப் பாச உணர்வுடன் திருவள்ளூரிலுள்ள பாரதிதாசன் மெட்ரி குலேசன் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் .உமாசங்கர் அவர்கள்  மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துகொடுத்திருந்தார். திரும்பும்போது, அனைவருக்கும் இந்த பயணம் குறித்த கருத்தறியும் படிவம் கொடுக்கப்பட்டு அதை பூர்த்தி செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. காலையில் தொடங்கிய இந்தக் காலப் பயணம் இரவு 9 மணிக்கு தொடங்கிய இடத்திற்கு திரும்பியது. இப்பயணத்திற்கான ஏற்பாடுகளை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் பிரின்சு என்னாரெசு பெரியார், உடுமலை வடி வேல், தொல்லியல் ஆய்வாளர் தீபிகா மற்றும் இராமநாதன், தேவகிதாசன் ஆகியோர்  மேற்கொண்டனர்.

-விடுதலை,13.9.15