திங்கள், 9 நவம்பர், 2015

திராவிட இயக்கக் கொள்கைகள் மறுமலர்ச்சி பெற வேண்டும் சமூக சிந்தனையாளர் கே.எஸ்.பகவான்

பெங்களூர், செப்.20 திராவிட இயக்கக் கொள் கைகள் மறுமலர்ச்சி பெற வேண்டும் என்று சமூக சிந்தனையாளர் கே.எஸ். பகவான் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங் களூருவில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ஆரியர்கள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாக இந்தியாவில் திராவிடப் பண்பாடுதான் நிலைத்திருந்தது. சிந்து வெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகம்தான். திராவிடப் பண்பாட்டில் மதம், ஜாதி இருந்த தில்லை. மேலும், பாலினப் பாகுபாடுகள் கிடையாது. இயற்கையைச் சார்ந்தது தான் திராவிடப் பண் பாடு. அந்தப் பண்பாடு காலப்போக்கில் நசுக்கப் பட்டு அழிக்கப்பட்டது.
திராவிடப் பண் பாட்டை மீட்டெடுக்கும் வகையில்தான் திராவிட இயக்கத்தை தந்தை பெரியார் உருவாக்கினார். சமத்துவ சமுதாயத்தை உருவாக்க தமிழகத்தின் மூலைமுடுக்கில் எல்லாம் கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய் தார். மூடநம்பிக்கைகள், அறிவியலுக்கு எதிரான சிந்தனைகளை ஒழிக்க இறுதிநாள் வரை பாடு பட்டார்.
அதன் விளை வாக தமிழகத்தில் சமூக, அரசியல் மாற்றம் ஏற் பட்டது. தனது கொள் கைகள் மக்கள் மத்தியில் பரவி வெற்றி பெறுவதை கண்கூடாகப் பார்த்தவர் பெரியார்.
வகுப்புவாரி விகிதாச் சார முறையில் இட ஒதுக்கீட்டு முறையைக் கல்வி, வேலைவாய்ப்பில் வழங்க வேண்டுமெனப் போராடியதால், அரச மைப்புச் சட்டம் முதல் முறையாக திருத்தப்பட் டது. அதன் பயனாக சமூகநீதி நிலை நிறுத்தப் பட்டுள்ளது.
இந்தியா வில் இந்துத்துவவாதிகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ள நிலை யில், திராவிட இயக்கக் கொள்கைகள் மறுமலர்ச்சி பெற வேண்டும். முன் னெப்போதையும்விட தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு தேவை பெருகியுள்ளது.
சமூக சிந்தனையாளர் கலபுர்கியை கொலை செய்ததன் மூலம் பகுத் தறிவு சிந்தனைகளை குழி தோண்டிப் புதைத்து விடலாம் என்று கனவு காண்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெரியாரின் கொள்கை களை கருநாடகத்தில் வேகமாக பரப்ப வேண் டும் என்றார்.
-விடுதலை,20.9.15


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக