பொறியாளர் ப.கோவிந்தராசன்
B.E., M.B.A., M.A.,
B.E., M.B.A., M.A.,
திராவிடர்கள், சிறப்பான செயல் களை செய்து இந்திய வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தினார்கள். இந்த திராவிடர்களுக்கு இந்திய சட்ட அமைப்பில் அங்கீகாரம் உள்ளனவா? திராவிடர்கள் தொன்மையானவர்களா? அல்லது இந்து மதம் தொன்மை யானதா? என்பது இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்படுகின்றது.
இந்து மதம் பற்றி இந்துக்கள்:
இந்தியத் தகவல் அறியும் சட்டத்தின் படி இந்து மதம் எப்போது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது? என்று கேட்டால் பதில் சொல்ல தலைமை பீடம் எதுவும் இல்லை. இருந்த போதி லும் இந்துக்கள் ஏற்றுக் கொண்ட தலைவர்களில், சுவாமி விவேகானந் தரும் சுதந்திர போர் வீரரும் ஆன்மீக வாதியுமான பாலகங்காதர திலகரும் கூறியுள்ள தகவல்கள் கீழே தரப்பட் டுள்ளன.
1. ஆரியர்கள் சிறுசிறு கூட்டங் களாக இந்தியாவிற்குள் நுழைந் தார்கள். நாளடைவில் இந்தக் கூட்டங் கள் பெருகி, இறுதியில் அவர்கள் இந்தியாவின் எதிர்ப்பற்ற ஆட்சியாளர் கள் ஆயினர். பின்னர் வந்தது இந்தப் பெரும் போர். ஒரு குடும்பத்தின் இரு கிளையினரிடையே அதுதான் மகா பாரதப்போர்'.
(ஆதாரம்: கலிபோர்னியாவில் விவேகானந்தர் 01.02.1900 அன்று நிகழ்த்திய உரை)
2. ஆங்கிலேய அரசால் சிறையில் வாடிய திலகர் பேராசிரியர் மேக்ஸ் முல்லரிடமிருந்து ரிக் வேதம்' என்ற நூலைப் பெற்றார். ரிக்வேதத்தின் மூல நூலான அவெஸ்தன் மொழியில் எழுதப்பட்ட நூல்களைப் படித்தார். நிலவியல் (Geology) மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சி (Archaeology)க் குறிப்புகளைப் படித்தார். இறுதியில் 1903இல் வேதங்களின் துருவப்பிரதேச பிறப்பிடம் (Arctic Home in the Vedas) என்ற நூலை வெளியிட்டார். இதன்படி ஆரியர்கள் ஆர்க்டிக் பிரதேசத்திலி ருந்து பாரசீகம் வழியாக இந்தியாவிற் குள் வந்தார்கள் எனவும், ஆரியர்களின் மூதாதையினர் ஆன ரிஷிகள் பனிப் பிரதேசத்தை பிறப்பிடம் ஆகக் கொண் டவர்கள் எனவும் தெரிந்து கொள்ள லாம். இந்த ஆரியர்கள் இயற்றிய வேதங்களின் அடிப்படையில் ஆரியர் களின் மதத் கொள்கைகளே வேதமத மாக அழைக்கப்பட்டது. இந்த வேத மதம் புத்த சமண மதங்கள் தோற்றத் தால் (கி.மு.6ஆம் நூற்றாண்டு) வீழ்ச்சி யடைந்தது.
3. ஆரியர்களின் மதக் கொள் கைகள் அனைத்தும் வேதகாலத்தில் வேதமொழியில் (இந்திய மொழிகளும் பாரசீகமொழியும் கலந்த மொழி) எழுதப்பட்டன. இந்த வேதமொழியை புத்த சமண மதங்கள் ஆதரிக்கவில்லை. எனவே வேத மொழி வீழ்ச்சியடைந்தது இந்த வேத மொழியை செம்மைப் படுத்தி பாணினி இலக்கணம் அமைத் தார். செம்மைப்படுத்தப்பட்ட மொழிக்கு பாஷா' எனப் பெயரிட்டார். இந்த பாஷா மொழியே பிற்காலத்தில் சமஸ்கிருத மொழியாக மாற்றம் பெற்றது.
4. சமஸ்கிருத மொழியில், ஆரம்பகாலத்தில் நிக்கை வளைத்து ஒலிக்கும் ஒலிகளான‘‘T, Th, D, Dh’’ /ட, த, ண, ள (Retro Flex) இடம் பெற வில்லை. மேலும் இந்த ஒலி வடிவங்கள் ஆரிய மொழிக் குடும்பத்திலும் மற்றும் அய்ரோப்பிய மொழிக் குடும்பத்திலும் காணப்படவில்லை. இந்த ஒலி வடிவங்கள் திராவிட மொழிகளில் இருந்து பெறப்பட்டுள்ளன. இந்த ஒலி வடிவங்களைப் பெற்ற பின் தான் சமஸ் கிருதம் (த) என்ற பெயர் தோன்றி யிருக்க வேண்டும். (ஆதாரம் = மொழி யியல் குறித்த நூல்கள் மற்றும் பாட நூல்கள்)
அ.இந்து என்ற சொல் உருவான கதை:
1. இந்து என்ற சொல் பெருமைக் குரிய சொல் அல்ல. அதன் பொருளைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. இந்து என்ற சொல்லின் பொருளை மேம்படுத்தும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்.இதைக் கூறுபவர் இந்து மதத்துறவி விவேகானந்தர். இது அவருடைய சொற்களில் தரப்படு கின்றது.
நாம் இந்துக்கள், இந்து என்ற வார்த்தையை மோசமான பொருளில் நான் பயன்படுத்தவில்லை. இந்த சொல்லிற்கு மோசமான பொருள் இருக்கிறது என்று கூறுபவர்களின் கருத் தையும் ஏற்கவில்லை. பழங்காலத்தில் அந்த சொல் இந்து நதியின் மறு கரையில் வாழ்பவர்கள் என்று பொருள் பட்டது. நம்மை வெறுப்பவர்களுள் பலர் அதற்கு மோசமான பொருள் தற்போது கூறலாம், ஆனால் பெயரில் ஒன்றுமே இல்லை.
நம் செயல்கள் மூலம் அந்த வார்த்தையை உலகில் உள்ள எந்த மொழியும் உருவாக்க முடி யாத உயர்ந்த வார்த்தையாக மாற்றுவோம். நமது முன்னோர்களைக் குறித்து அவமானம் கொள்ளக் கூடாது என்பது என் வாழ்க்கையின் கோட் பாடுகளுள் ஒன்றாக உள்ளது' (ஆதாரம்: இது லாகூரில் 1897 நவம்பர் 5_இல் செய்யப்பட்ட உரை).
இந்த உரையின் மூலம் ஆரியர்கள் சிந்து நதிக்கரையில் வசித்தவர்கள் என்பதை அறியலாம். மேலும் சிந்து சமவெளி நாகரிகம் முடிவடைந்த பின் ஆரியர்களின் வேதகால நாகரிகம் தோன்றியது எனக் கூறலாம். சிந்து நதிக்கரையில் வாழ்ந்த ஆரியர்கள் பின்னர் கங்கைக் கரைக்கும் தென் னாட்டிற்கும் பரவினார்கள் என் பதையும் அறியலாம்.
2. இன்றைய இந்து மதம் ரிக் வேதத்தை அடிப்படையாகக் கொண் டது. இந்த ரிக்வேதம் பாரசீக நாட்டின் மதக் கொள்கைகளை உள்ளடக்கியது. மேலும் பாரசீக மொழியால் அவஸ்தன் மொழியை ஒட்டி இந்த ரிக் வேதம் ஆரியர்களால் உருவாக்கப்பட்டபோது, இந்துக்கள் என்றால் திருடர்கள் என பொருள் தந்த காரணத்தால் ஆரியர்கள் தங்கள் மதத்தை இந்து மதம் என்று அழைக்கவில்லை. வேதமதம் அல்லது வைதிக மதம் என்றே அழைத்தார்கள்.
3. இந்து என்றால் சைவ சித்தாந்த நூல் பதிப்பில் வெளிவந்துள்ளது. அக ராதி கீழ்க்கண்ட பொருளைத் தரு கின்றது.அவை மதி, சந்திரன், மிருக சீரிடம், இந்துப்பு (மருந்து) எட்டி.
4. வீரமாமுனிவர் தனது சதுரக ராதியில் (கி.பி.1732) இந்து என்ற சொல் லுக்கு தரும் பொருள் கரடி, கரி, (கருப்பு) சந்திரன்.
5. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இந்துத்வா என்ற நூலில் இந்து என்ற சொல்லுக்கு மதத்தின் பெயரைக் குறிப்பதாக இந்திய மொழிகளில் எதிலும் இடம் பெற வில்லை எனக் கூறுகின்றார். கமலாபதி திரிபாதி நூல்:- இந்து என்ற சொல் இந்து மத நூல்களான, வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் ஆகியவற்றில் காணப்படவில்லை. கி.பி 1323இல், தென்னிந்தியாவில், காசுமீரில், நூல்களில் இந்து என்ற சொல் காணப் பட்டது. மேலும் 1618 ஆண்டுகளில், வங்காளி கௌடியன வைஷ்ணவ மத நூல்களில் இருந்து அன்னியர்களிடம் இருந்து இந்தியரை வேறுபடுத்த இந்தியர்கள் இந்துக்கள் என்று சொல்லப்பட்டனர்.
இந்திய அரசியல் அமைப்புச் சட் டத்தில் இந்துக்கள் என்ற சொல்லின் பொருள் குறித்து, உச்சநீதிமன்றம், 1995, 2005, 2006 ஆண்டுகளில் பல விளக் கங்களை, தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
இந்து என்ற சொல்லின் உண்மை யான பொருள் கீழே தரப்பட்டுள்ளது 1) கருப்பு மற்றும் கோரமானவன் 2) நாகரிகம் இல்லாத காட்டு மிராண் டிகள் 3) திருடர்கள் 4) இந்தியாவை சேர்ந்தவர்கள். (ஆதாரம்: 1) கமலபதி திரிபாதி (முன்னாள் உத்திர பிரதேச முதல்வர் மற்றும் முதலமைச்சர் எழுதிய நூல் 2) சப்தசாகர் என்னும் இந்தி மொழி பேரகாரதி, வாரணாசிப் பதிப்பு)
இந்து மதம் பற்றி கா.சு.பிள்ளை:
இவர் இந்து மதம் ஒரு மதமன்று என்று கூறுகிறார்.இந்து என்ற சொல் இடத்தைக் குறிக்கும் சொல் சிந்து நதிக்கரையில் வாழ்பவன் என்று பெயர். ஆங்கிலேயரும், இஸ்லாமியர்களும் இந்தியாவில் வசித்த மக்களை இந் துக்கள் என்று அழைத்தனர். இவ்வாறு இந்தியாவில் வசிப்பவர்களை இந் துக்கள் என்று அழைத்தால் சப்பானிய மதம் ஆங்கில மதம் அமெரிக்க மதம் என்று நாட்டின் பெயர்களை மதங் களுக்கு வைக்கப்படுதல் வேண்டும். எனவே இந்து மதம் என்று கூறுவது சரியல்ல.
- தொடரும்
பொறியாளர் ப.கோவிந்தராசன்
B.E., M.B.A., M.A.,
B.E., M.B.A., M.A.,
ஆ.இந்து மதம் பற்றி இஸ்லாமியர்கள்
1. கி.பி.998_1030இல் வாழ்ந்த கஜினி முகம்மது, தனது இளம் வயது முதல் உருவ வழிபாடு செய்பவர்களை (infidels and idolatry)
வெறுத்தார். அவர் இந்தியாவின் மீது படையெடுத்து, பிராமண மதத்தலைவர்களை அழிப்பதற்கு பல யுத்தங்களை நடத்தினார். கஜினி செல்வத்தை அதிகம் விரும்பவில்லை. இலஞ்சத்தை ஏற்பவர் இல்லை'.இதைக் கூறுபவர் ஜியாவுதின் பரணி, இவர் Medcival India
என்ற இதழில் 1958இல் எழுதியுள்ளார்.
வெறுத்தார். அவர் இந்தியாவின் மீது படையெடுத்து, பிராமண மதத்தலைவர்களை அழிப்பதற்கு பல யுத்தங்களை நடத்தினார். கஜினி செல்வத்தை அதிகம் விரும்பவில்லை. இலஞ்சத்தை ஏற்பவர் இல்லை'.இதைக் கூறுபவர் ஜியாவுதின் பரணி, இவர் Medcival India
என்ற இதழில் 1958இல் எழுதியுள்ளார்.
இதனால் பிராமண மதம் என்று அழைக்கப்பட்ட வேத மதத்தைச் சேர்ந் தவர்களை விக்கிரக வழிபாட்டு மக்கள்' என்று கஜினி முகம்மது காலத் தில் அழைத்தார்கள்.இந்துக்கள் என்று அழைக்கப்படவில்லை என்பதை அறியலாம்.
2. மீர்சையது அலி ஹம்தரனி (1384) இவர் சஹிராத்' (Zahirat) என்ற நூலை நிர்வாகத்தை நடத்துவதற்காக எழுதினார். இவர் ஒரு இந்திய அரசர். இந்த நூலின்படி இந்திய குடிமக்கள், அவர்களின் மதச்சட்டத்தின்படி நடத்தப்படுவார்கள். இவர் குடிமக்களை இரண்டாகப் பிரித்தார்.அவை முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாதார். முஸ்லீம் அல்லாதவர்கள் (Kafirs)தீயை வணங்குபவர்கள் என்று அழைக்கப்பட் டார்கள்' இதன்படி வேத மதத்தைச் சேர்ந்தவர்கள் தீயை வணங்குபவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் இந்துக் கள் என்று அழைக்கப்படவில்லை.
3. கிபி 1526இல் தோன்றிய முகலாயர் ஆட்சியில் பிராமணர்கள் மதிக்கப்பட் டார்கள். அக்பர் மகாபாரதத்தை பாரசீக மொழியில் மாற்றம் செய்ய உதவினார். அந்த நூலுக்கு முன்னுரை எழுதினார். இவர் அவதாரங்களை நம்பினார். இவர் புருஷோத்தமன் என்ற பிராமணனிடம், தியானம், யோகம் கற்றுக் கொண்டார். இவர் காலத்தில் பிராமண மதம் இந்து மதம் என்று சிறிய அளவில் அறிமுகமானது.
இ.இந்து மதச்சட்டங்கள் பற்றி ஆங்கிலேயர்:
நெல்சன் என்ற ஆங்கிலேய நீதிபதி சென்னையில் 1877இல் இந்துக்களின் சட்டம், சட்டம் தெரியாத சமஸ்கிருத பண்டிதர்களாலும், சமஸ்கிருதம் தெரியாத நீதிபதிகளாலும் நிர்வகிக்கப் படுகிறது என்று கூறினார். ஏனென்றால் இந்துக்களின் தர்ம சாஸ்திரங்களை பண்டிதர்கள் கூற நீதிபதி தீர்ப்பு சொல் லுவார். இதற்குக் காரணம் ஆங்கிலேயர் ஆட்சியில் (1772_1864). இந்துக்களின் பொதுச்சட்டம் உருவாக்கப்பட்டது.
இந்தச் சட்டம், ஆரியர்களின் தர்ம சாஸ்திரம், வேதங்கள், ஆட்சியாளர் களால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் ஆகியவைகளின் அடிப்படையில் உரு வானது. இந்தச்சட்டம் பிராமணர்களா லும், ஊர் பெரிய மனிதர்களாலும் (Elite) தரப்பட்டது. இந்தப் பொதுச் சட்டம், பெரும் எண்ணிக்கை கொண்ட பிராமணரல்லாதாரை அடக் கியாள பெரிதும் பயன்பட்டது. இந்தச் சட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் சாஸ்திரம் தெரிந்த பண்டிட் (பிராமண) சட்ட அதிகாரி யாக நியமிக்கப்பட்டார். இத்தகைய நீதிமன்றம் 1864 வரை தொடர்ந்தது. பின்னர் பண்டிட் மற்றும் மௌல் விகள் பதவி நீக்கப்பட்டது. இதன் பின்னர் சுதந்திரமடையும் வரை இந்த நிலையே நீடித்தது. (ஆதாரம்: இந் துக்களில் பொது சட்ட அறிமுகம் என்ற நூல். ஆசிரியர்கள் திமோத்திலேபின், டொனால்டு டேவிஸ், கிருட்டிணன்.)
ஆங்கிலேயர் காலத்தில் உருவான இந்துக்களின் பொதுச் சட்டம், 1955ல் சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்துக்களின் சட்டம் கீழ்க்கண்ட வர்களை இந்துக்களாக வரையறை செய்கின்றது. அவை.
1. இந்துக்கள் அல்லாதவர்கள் என்று கீழ்க்கண்டோரை விலக்கு அளித்துள் ளது பார்சிகள், யூதர்கள், இஸ்லாமியர், கிறித்துவர்கள் மற்றும் தங்களுக்கான தனிச்சட்டம் உள்ளவர்கள்.
2. இந்துக்களில் அடங்குபவர்கள் கீழ்க்கண்டவர் ஆகும். இந்துக்கள், சமணர்கள், புத்தமதத்தினர், தங்களுக்கு எனத் தனிச்சட்டம் இல்லாதவர்கள். மேலும் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனை, இந்தியர் தாதைகளின் மதத்தின் அடிப்படையிலும், இரத்த உறவு கொண்டவர்களின் மதத்தின் அடிப்படையிலும் நிர்ணயம் செய்யப் பட்டது.
இந்த சட்டத்தில் உள்ள குறைகள் பின்வருமாறு:
அ. இந்துக்கள் என்றால் சிந்து நிதிக்கரையில் வாழ்ந்த இந்தியன் ஒரு பகுதியினராகத்தான் குறிக்கின்றது. இது குமரி முதல் காஷ்மீர் வரை உள்ள மக்களுக்குப் பொருந்தாது.
ஆ. இந்து மதம் ஒரு தலைமையின் கீழ் இயங்கும் இயக்கம் அல்ல. ஆனால் இந்துக்கள் என்ற தலைப்பில் சேர்க்கப் பட்டுள்ள சமண மதம், புத்தமதம், சீக்கிய மதம் ஆகியவற்றுக்குத் தலைமை பீடங்கள் உள்ளன. அவற்றிற்குத்தனியே அமைப்பு, வேதங்கள் உள்ளன. அந்த மதங்கள் யாரால் எப்போது எங்கு உரு வாக்கப்பட்டது என்பதினைக் குறித்து தெளிவான செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன.
இ. இந்து மதத்துக்குள்ளேயே பல உட்பிரிவுகள், தனித்தனியே இயங்கு கின்றன. அவைகளுள் சில கீழே தரப்பட்டுள்ளன. சைவ மதம், வைணவ மதம், அத்வைத மதம், துவைத மதம், விசிஷ்டாத்வைத மதம், தனிப்பட்ட ஆசிரமங்கள், மடங்கள் என்று சுயக் கட்டுப்பாட்டில் Independent) இயங்கும் இயக்கங்கள், இந்நிலையில் எல்லாப் பிரிவினரையும் இந்துக்கள் என்பது ஒரே அளவுள்ள சட்டைகளை பலமக் களுக்குத் தருவதற்குச் சமம். இது நடை முறைக்கு ஒவ்வாத நீதிமுறையாகும்.
ஈ. இந்துக்கள் என்று சட்டத்தில் குறிக்கப்படுபவர்களில் பிராமணர்கள் மட்டும் தான் இருமுறை பிறந்தவர்கள். ஒரு முறை பிரம்மாவின் முகத்திலும், மறுமுறை வேறு விதமாக பூணூல் மூலமாகப் பிறக்கிறார்கள். இத்தகைய ஆரியர்களுக்கும் இரண்டு முறைப் பிறக்காதவர்களையும் ஒரே மதத்தில் சேர்ப்பது முரண்பட்டது ஆகும்.
உ. தற்போது ஆரியர்கள் முன்பு போல ஆரிய குருக்களிடம் குருகுலக் கல்வியை 12 முதல் 48 ஆண்டுகள் கற்ப தில்லை. மாறாக சூத்திரர்களுடன் சேர்ந்து, சூத்திர மருத்துவமனையில் பிறக்கிறார்கள். சூத்திரர்களுடன் சேர்ந்து, செருப்பு அணிந்து குடைப் பிடித்து, சீருடை அணிந்து கல்வி கற்கிறார்கள். சூத்திரர்களைப் போல் வெளிநாட்டில் சென்று வேலை பார்க்கிறார்கள். எனவே ஆரியர்களுக்கு மனுநீதிதர்மத்தில் தரப்பட்டுள்ள சலுகைகளை தருவதில் எந்தவித நியாயமும் இல்லை.
ஊ. வேதமதம் அல்லது சனாதன தர்மத்தின்படி ஒவ்வொரு இந்துவும் கீழ்க்கண்ட நிலைகளை அல்லது ஆசி ரமங்களை தன்னுடைய வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டும். 1. பிரம்மச்சர்யம், 2.கிருகச்சர்யம், 3.வானப்பிரஸ்தம், 4.சன்னியாசம். இதில் கிருகஸ்தனேமற்ற மூன்று வாழ்க்கை நிலையில் உள்ளவர் களுக்கு ஆதாரம் ஆனவன். இதன்படி ஒரு இந்து தனது 27 வயதில் (12+15) வானப்பிரஸ்தம் பணி ஓய்வு நிலையை எட்ட வேண்டும். இதற்குமாறாக தசரத மன்னன் 60000 ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவதாரமான இராமன் 11,000 ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே வேதத்தில் விதிக்கப்பட்ட தர் மங்களைக் கடைப்பிடித்தல் சாதாரண இல்லறம் செய்பவனுக்கு இயலாத ஒன்று. அதுவும் தற்போது பால்ய விவாகம் கிடையாது. பிரம்மச்சர்ய வாழ்க்கை (மாணவர் பருவம்) 12 ஆண்டுகளுக்கு மேலானது. பதிவுத் திருமணங்கள், சுயமயாதை திருமணங் கள் நடைபெறுகின்றன. மேலும் விதவை மறுமணம் அனுமதிக்கப்பட் டுள்ளது. ஆண்டவனின் படைப்புத் தொழில், குடும்பக் கட்டுப்பாடு முறை யால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. விவாகரத்துமுறை பெரும் அளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. மேலும் குருகுலக்கல்வி முறை தற்போது கிடையாது. குருதட்சினை எதுவும் கிடையாது. முதியோர் இல்லம் நடை முறையில் உள்ளது. இவ்வாறு கிரகஸ் தனின் இல்லறதர்மம் மிகவும் மிகவும் மங்கிப்போய்விட்டது. இத்தகைய சனாதன தர்மத்தை அடிப்படையான இந்துக்களின் பொதுச் சட்டங்கள் செயல்படும் தன்மையை இழந்து விட்டன.
மேலே கூறப்பட்டவற்றின் அடிப் படையில், இந்துக்களின் பொதுச்சட்டம் முரண்பாடானவை. செயல்படுத்த முடியாதவை. இந்து மதத்தின் வேதகால நாகரிகம், வேளாண்மையுகத்தைச் சார்ந்த ஆசிரம வாழ்க்கை வாழும் ரிஷிகளுக்கு ஏற்ற கிராம நாகரிகம் ஆகும்.
இத்தகைய இந்து மதம், தற்போது நடைபெறும், தொழில் மயமாக்கப்பட்ட நகரமயமாக்கப்பட்ட, விஞ்ஞானம், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு உலகமயமாக்குதல் கொண்ட நவீன நாகரிகயுகத்திற்கு சிறிதும் ஏற்றது அல்ல. எனவே இந்துக்களின் பொதுச்சட்டம் இற்றுப்போன சட்டம். இந்தச் சட்டத்தை நீக்கிவிட்டு, மாற்றங்களுக்கு வகைசெய்யக் கூடிய எதிர்காலத்தை உருவாக்க துணைபுரியும் புதிய சட்டத்தை இழிவான பொருள் கொண்ட சூத்திரப்பட்டம் நீங்கும் வகையில் புதிய சட்டத்தினை இந்து மதம் என்ற சொல்லிற்குப் பதிலாக சைவம், வைணவம், நாத்திகமதங்களை சமண, புத்தமதத்தினை தனித்தனியே பிரித்து உருவாக்க வேண்டும்.
பொறியாளர் ப.கோவிந்தராசன்
B.E., M.B.A., M.A.,
இந்து மதத்தால் தாழ்ந்தோம்:
இந்து மதம் ஆங்கிலேயரால் சட்ட பூர்வமாக ஆக்கப்பட்ட மதம் இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம் நம்மை திராவிடர்களை இந் துக்கள் என்று அழைத்தது. இந்த ஆங்கி லேயன் சட்டம் அப்படியே எந்தவித மாறுதலும் இல்லாமல், இந்தியக் குடியரசு சட்டத்தில் சேர்க்கப்பட்டது, திராவிடர்களுக்கு, சூத்திரர்களுக்கு, தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப் பட்ட மாபெரும் கொடுமை. இதனால் சுதந்திர இந்தியாவில் வர்ணாசிரம தர்மம் சட்டபூர்வமாக நிலைபெற்றது. இந்த கொடுமையான சட்டத்தால் ஆரியர் அல்லாத திராவிடர்களுக்கு எந்த விதப் பலனும் கிடையாது. இதனால் ஏற்படும் தீமைகள் சில கீழே தரப்பட்டுள்ளன.
1. பகவத் கீதையில் சொல்லப் பட்ட வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையில், நாம் சூத்திரர்களாக அழைக்கப்படுவோம். இந்த சூத்திரப் பட்டத்தை நீக்க, சுதந்திர இந்தியாவில் எந்த வித சட்டமும் இல்லை.
2. அரசியல் சட்டத்தில், சட்டத் திற்கு முன்பு எல்லோரும் சமம் என்று சொல்லப்பட்ட அடிப்படை உரிமை இந்துமதம் என்ற போர்வையில் பறிக்கப்படுகின்றது.
3. இந்து மதத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை. வேதம் படிக்க உரிமை இல்லை. அர்ச்சனை செய்ய உரிமை இல்லை. ஆண்களுக்குச் சமமாக பெண் சொர்க்க லோகம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
4. மத நம்பிக்கைகளின் அடிப் படையில், சடங்குமொழியான சமஸ் கிருதத்திற்கு ஆண்டுதோறும் பலகோடி ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. பேச்சு வழக்கில் இல்லாத மொழிக்கு செய் யப்படும் பணம் எந்தவிதப் பலனையும் தராது இந்தப் பணத்தை சமஸ்கிருத மல்லாத மாநில மொழிகளுக்குச் செல விட்டால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இந்திய பண்பாடு மேம்படும்.
5. இந்தியாவில் ஜாதிகளை உருவாக்கியது ஆரிய கலாச்சாரம். இந்தச் ஜாதிமுறை இந்தியர்களைப் பிரிக்கின்றது. ஜாதிக் கலவரங்களால் பொருள் சேதம், உயிர் சேதம் உண் டாகின்றன. சட்டத்தில் எல்லோரும் சமம் என்று கூறும் இந்திய அரசியல் சட்டம் ஜாதிகளை தடை செய்யும் சட்டப்பிரிவுகளை கொண்டிருக்கவில்லை.
6. ஆண்டவன் முன் அனைவரும் சமம். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். ஆனால் ஆண்டவருக்கு அர்ச்சனை செய்யும் தகுதி ஆரியர் களுக்கு மட்டும் தனி உரிமையாக இருப்பது ஆங்கிலேயர் கொண்டு வந்த இந்து சட்டத்தின் படி எல்லா கோவில்களையும் கட்டுப்படுத்துகிறது.
திராவிடம் பற்றி புத்தர்:
புத்தர் கோசல நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் அரச குடும்பத் தில் பிறந்தார். இவர் ஆரியர்களின் வேத காலத்தின் (கி.மு.1600-_500) இறுதியில் பிறந்தார். இவர் இளம் வயதில் கல்விப் பயில கல்விக்கூடம் சென்றார். அப்போது அவர் ஆசிரியர் முன்பு பல தேசங்களின் பெயர்களை (திராவிடர் உள்பட) லிபி பலகையில் (கரும்பலகை என்று தற்போது அழைக்கப்படும் பலகை புத்தர் காலத்தில் லிபி பலகை என்று அழைக்கப்பட்டது எழுதி காட்டினார். பலகை என்ற சொல் தமிழ் சொல் ஆகும். இது தமிழின் தொன் மையைக் குறிக்கின்றது) எழுதிக் காண்பித்தார். இந்த செய்தியைத் தருபவர் சமஸ்கிருத அறிஞர், வேத நாகரிக எழுத்து முறையில் நூல்கள் அச்சிட பயன்படுத்தியவர் ஆன மேக்ஸ்ணில்லர் என்ற செர்மானியர் ஆவர்.
வேத மதங்களில் தமிழ்சொற்கள்:
மாலதி சென்டகே என்ற சமஸ்கிருத ஆய்வாளர் பல ஆய்வு நூல்களை அமெரிக்காவில் வெளியிட்டுள்ளார். இவரது நூலில் ரிக்வேதத்தில், தமிழ் உள்பட்ட பல திராவிட மொழிச் சொற் கள் காணப்படுவதாகக் கூறியுள்ளார். ஆரியர்கள்தங்கள் மதத்தில் இறைவனை வேத முதல்வன் என்று கூறுகிறார்கள். வேதங்களுக்கு உரை எழுதிய சயணர் என்பவர், வேதங்களின் அடிப்படை யிலே இறைவன் இந்த உலகத்தையும், மனிதர்களையும் படைத்ததாகக் கூறுகிறார். மேலும் வேதங்களை நம்பு பவர்கள் ஆஸ்திகர்கள் என்றும், வேதங் களை நம்பாதவர்களை நாத்திகர்கள் என்றும் ஆரியர்கள் கூறினார்கள். இத்தகைய வேத மதத்தில், சமஸ்கிருதம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய வேதமதத்தில், வேதங்கள் தமிழ் சொற்களை பயன்படுத்தியது, தமிழ் மொழி மற்றும் திராவிட மொழிகள் இந்துமதத்தை விட தொன்மையானது என்பதைக் குறிக்கின்றது அன்னியர் களான ஆரியர்கள் பல தவறான கொள்கைகளை தங்களது வேதத்தில் சொல்லியதால் வேதமதம் அழிந்தது. நாத்திக மதங்கள் என்று ஆரியர்களால் அழைக்கப்பட்ட சமண மதம், புத்த மதம் வளர்ந்தன.
திராவிடம் பற்றி வீரமாமுனிவர்:
இந்தியாவில் பண்டைய காலத்தில், 56 தேசங்கள் இருந்ததாகக் கூறுகிறார். அதில் காணப்படும் தேசங்களின் பெயர்கள் சில இங்கே தரப்படுகின்றன.
கோசலம், கூர்ச்சரம், பாஞ்சாலம், மகதம், கேரளம், கொல்லம், வங்காளம், அவந்தி, அருணம், காம்போசம், காசுமீரம், கன்னடம், ஆந்திரம், யவனம், திராவிடம், சிந்து, சிங்களம், சீனம், நிபாளம், நடதம்,, பல்லவம், பப்பரம், புவிதம், பாண்டியம், மாரடம், மலையாளம்......'இவ்வாறு வீரமாமுனிவர் தந்துள்ள பட்டியலில் திராவிடம்' என்ற தேசம் இடம் பெற்றதைக் காண்போம். மேலும் இந்த 56 தேசங்கள் இருந்த காலத்தில் சீனம், யவனம், சிங்களம், சிந்து போன்ற அயல் நாடுகளும் இடம்பெற்று இருப்பது ஆய்வுக்கு உரியது.
திராவிடத்தால் எழுந்தோம்: வர்ணாசிரமத் தர்மத்தில் சூதாடுவது சத்திரியர்களின் தர்மமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. இதனால்தான் மகாபாரதக்கதையில் தர்மர் துரியோ தனனுடன் சூதாடி தன் நாடு, மனைவி, சகோதரர்கள், வேலைக்காரர்களை இழந்தார்கள். மேலும் குப்தர்கள் காலத்தில் சூதாட்டம் மூலம் அரசுக்கு வருமானம் வந்ததற்கு சான்றுகள் உள்ளன. சூதாட்ட கண்காணிப்பு அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும் என்று கவுடில்யன் அர்த்த சாஸ் திரத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்தைவிட வேறு இடங்களில் சூதாட்டம் நடந்தால் 12 பணம் அபராதம் வசூலிக்கப்படும் வகை செய்யப்பட்டுள்ளது. சூதாடுபவன் வெற்றி பெற்ற பணத்தில் 5% அரசுக்கு வரியாக செலுத்தவேண்டும் என்று கவுடில்யர் கூறியருக்கிறார். இந்த சூதாட்டத்தினால் அரசு வசூலிக்க வேண்டிய வரிகளைப் பற்றி நாரதர், யாக்ஞ வல்கியர்,மனு ஆகியோர் பல கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.
1) இத்தகைய சூதாட்டக் கலாச் சாரத்தை ஆரியர் தர்மசாஸ்திரங்கள் அனுமதிப்பதால் இன்று கூட கிரிக்கெட் சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் கலைஞர் தலைமையில் நடந்த ஆட்சியில் குதிரை பந்தயம் தடை செய்யப்பட்டது. இது திராவிட இயக்கத்தால் கிடைத்த பலன்.
இவ்வாறு இரண்டு மடங்கு இழிவைத் தாங்கும் சூத்திரர்களுக்கு மத்திய அரசு தகுந்த சட்டம் இயற்றி அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை' தர வேண்டும்.
பொறியாளர் ப.கோவிந்தராசன்
B.E., M.B.A., M.A.,
B.E., M.B.A., M.A.,
2) தந்தைப் பெரியார் மற்றும் முத்துலட்சுமி ரெட்டி ஆகியோரின் தீவிர முயற்சியால் தமிழ்நாட்டில் 1929ல் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.
3) கம்யூனிச சிந்தாந்தவாதிகளுக்கு முன்னோடியாக கலைஞர் தமது ஆட்சிகாலத்தில் பேருந்து போக்கு வரத்தை நாட்டுடைமையாக்கியது. அதுபோல், நில உடைமைக்கு உச்ச வரம்பு கொண்டு வரப்பட்டது (1969_1976).
4) பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் பிராமணர் இல்லாமல் நடந்த சுயமயாதை திருமணங்களை செல்லத்தக்கதாக சட்டம் இயற்றினார். (6769)
5) குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்தவர் இராசாசி.பலபள்ளிக் கூடங் களை மூடியவர் இராசாசி இத்தகைய ஆட்சியை அகற்றியவர் தந்தை பெரியார்(1952).
6) முகலாயர் காலத்தில் உருவான மொழிகள், இந்தி, இந்துஸ்தானி, உருது. இவை பேச்சு வழக்கில் ஒரே மொழி யாகும். போதிய வளர்ச்சி பெறாத இந்தியை ஆட்சிமொழியாக்கி, இந்தி மொழி பேசாத மக்களை இரண்டாந்தர மக்களாக்கும் முயற்சிகளை எதிர்த்து திராவிட இயங்கங்கள் இணைந்து போராடின. தமிழக அரசு மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை நீக்கி இரு மொழி கொள்கைகளாக மாற்றி உத்தரவிட்டது. (67_69)
7) அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை தந்தை பெரியாரின் கனவை நனவாக்க, தமிழக அரசு கொண்டுவந்தது.
8) மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் பெறுவதற்காக மாநில சுயாட்சி குழுவை இராசமன்னார் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நியமித்து அதன் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியது. (1974) இது திராவிட இயக்கத்தைச் சேர்ந்த திமுக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கியது.
9) சமூக நீதி கொள்கையின் அடிப்படையில் 69% இட ஒதுக்கீட்டை அரசியல் சாசனத்தில்
9ஆவது அட்டவணையில் சேர்ப்பதற்கு திரா விடர் கழகத் தலைவர் கோரிக்கையை ஏற்று அதிமுக அரசு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில், குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத்தந்தது.
10) மேனாள் முதல்வர் கலைஞர் கோரிக்கையை ஏற்று தமிழுக்கு செம்மொழி என்ற சிறப்பினை மத்திய அரசு வழங்கியது.
11) மேனாள் முதல்வர் கலைஞர் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சேது சமுத்திரக் கால்வாய் திட்டப் பணிகளைத் துவக்கியது.
12) கலைஞர் தலைமையில் அமைந்த தமிழக அரசு 1989இல் பெண்களுக்குத் தந்தையின் சொத்தில் சம பங்கு அளித்தது.
13) 1996இல் உள்ளாட்சி தேர்தலில் விகிதாச்சார முறையில் (33 1/3%) பெண் களுக்கு போட்டியிட வாய்ப்பு அரசு ஆணையால் வழங்கப்பட்டது.
14) 1970இல் பரம்பரை அர்ச்சகர் களுக்குப் பதிலாக அறங்காவலருக்கு அர்ச்சகரை நியமிக்கும் உரிமை அளிப்பதற்கு சட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து பரம்பரை அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கினை உச்ச நீதிமன்றம் 14.03.1972ல் தள்ளுபடி செய்தது.
இவ்வாறு இந்திய வரலாற்றினை மாற்றியமைக்கும் வகையில் திராவிட இயக்கங்கள் மக்கள் பிரச்சினைகளை முன் எடுத்துச் சென்று பல சீர் திருத்தங்களுக்கு வழிவகுப்பதில் ஆரியர்களைவிட திராவிட இயக்கங்கள் தங்கள் பங்களிப்பை செய்திருக் கிறார்கள் என்பதனை அறியலாம்.
முடிவுரை:
ஆரியர்கள், இந்தியாவின் முன் னேற்றத்திற்கு எதிராக பல நேர்வுகளில் செயல்பட்டார்கள். ஆரியர்களின் ஆதிக்கத்தில் இந்தியா இருந்த போது இந்திய பூர்வீகக் குடிமக்களை சூத்தி ரர்களாக சித்தரித்து அடிமைகளாய் வைத்து இருந்தார்கள். ஆரிய நாகரி கத்தால் திராவிடர்களுக்கு ஏற்பட்ட தீங்குகள் கீழே தரப்பட்டுள்ளன.
1. திராவிடர்கள் நாகரிகமான, நகர நாகரிகம் கொண்ட சிந்து வெளி நாகரிகத்தை வளர்க்காமல், தங்கள் கிராம நாகரிகத்தை வளர்த்தார்கள்.
2. திராவிடர்களின் நகரங்களை அழிக்க ஆரியர்கள் யாகங்களில் கால்நடைகளைப் பலியிட்டார்கள். மேலும் யாகக் கடவுளான இந்திரனுக்கு திராவிடர்களை அழிக்க யாகத்தில் கோரிக்கை வைத்தனர்.
3. பாரசீக மொழியான அவெஸ் தன் மொழியுடன் பிராகிருத மொழிச் சொற்கள் மற்றும் திராவிட மொழிச் சொற்கள் கொண்ட வேத மொழியில் வேதங்கள் இயற்றினார்கள்.
4. ஆரியர்களின் மதக் கொள் கைகள் மற்றும் மொழிக் கொள்கை களை எதிர்த்து, சமண புத்த மதங்கள் உருவாகின. இந்த மதங்கள் அர்த்த மாகதி மற்றும் பாலி மொழிகளை ஆதரித்தன. ஆரியர்களின் வேத மதம், வேத மொழியும் அழிந்தன (கிமு 600)
5. கிமு 1500ல் தோன்றிய வேத மதம் மீண்டும் கி.பி.150ல் ருத்ரதாமன் என்ற மன்னன் காலத்தில் புத்துயிர் பெற்று சமஸ்கிருதத்தில் கல்வெட்டு உருவானது.
6. பின்னர் கி.பி. 7ஆம் நூற்றாண் டில் சமஸ்கிருதத்தில் வேதம் எழுதப் பட்டது. பல நூல்கள் சமஸ்கிருதத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டன. இதனால் சமஸ்கிருதம் தன்மை மொழியானது.
7. புத்தர் சமணர் காலத்தில் குடைவரைக் கோவில்கள் குப்தர்கள் காலத்தில் (கிபி. 320_470) கற்களால் கட்டப்பட்ட சிறு சிறு கோவில்கள் தோன்றின. அந்தக் கோவில்கள் எதுவும் ஆகம விதிப்படி கட்டப்படவில்லை. இதனால் எல்லா பிரிவு மக்களும் கட வுள் சிலை அருகே சென்று இஷ்டப் பட்ட மொழியில் வணங்கினார்கள். இந்த குப்தர்கள் காலத்தில் இந்துமதம் என்று எதுவும் தோன்றவில்லை. சைவ வைணவ மதங்களே இருந்தன.
8. ஆரியர்களால் மிலேச்சர்கள் என்று அழைக்கப்பட்ட அன்னியர்கள் ஆங்கிலேயர்கள் இந்தப் புண்ணிய பூமியை ஆண்டபோது பூமாதேவி என்ற தெய்வத்திற்கு களங்கம் /தீட்டு ஏற்படவில்லை.
9. இந்து மதத்தில் சூத்திரர்கள், பஞ்சமர் என்று அழைக்கப்பட்டவர்கள் இந்த பாரத பூமியில் பல காலமாக வாழ்ந்து வருகிறார்கள். இதனால் பூமாதேவி என்ற தெய்வத்திற்கு தீட்டு ஏற்படவில்லையே.
10.இந்து மதத்தில் கங்கை நதி ஒரு கடவுள். இந்த நதியில் சகல சாதி யினரும் மதத்தினரும் எந்தவித வேறு பாடும் இன்றி ஒன்றாக குளிக்கிறார்கள். அதை அனுமதிக்கும் போது எல்லா சாதியினரும் அர்ச்சகராவதில் என்ன தவறு இருக்கிறது?
11. ஒரு கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி தேரில் சூத்திரர்களால் இழுத்து வரப்படுகிறார். தேரில் இருக்கும் உற்சவமூர்த்திக்கு தேரை இழுப்பவர்கள் அர்ச்சனை செய்தால் என்ன தீட்டு ஏற்பட்டுவிடும். (மூல விக்ரகம் வெளியே உலா வராது)
11. ஒரு கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி தேரில் சூத்திரர்களால் இழுத்து வரப்படுகிறார். தேரில் இருக்கும் உற்சவமூர்த்திக்கு தேரை இழுப்பவர்கள் அர்ச்சனை செய்தால் என்ன தீட்டு ஏற்பட்டுவிடும். (மூல விக்ரகம் வெளியே உலா வராது)
12. அரசாங்க ஆதரவுடன் செயல் படும் பொது இடங்களில் குடிநீர் நிலைகள், பொதுக் குளியல் இடங்கள், உணவகங்கள் போன்ற இடங்களில் ஒரு இந்திய குடிமகனை, சாதியின் பெய ராலோ, இனத்தின் பெயராலோ பிறப்பின் அடிப்படையாலோ பாலியல் வேற்றுமையாலோ அனுமதிக்க மறுப்புத் தெரிவிக்கக் கூடாது என்று இந்திய அடிப்படை உரிமைகள் சட்டத்தில் (ART15) தெரிவிக்கப்பட்டுள் ளது. இதைக் கருத்தில் கொண்டால், தன்னைப் படைத்த ஆண்டவனுக்கு, தனக்கு தெரிந்த மொழியில் அர்ச்சனை செய்து கொள்ள மதங்களோ, சட்டங் களோ தடை செய்ய வாய்ப்பு இல்லை. எனவே, கேரள மாநிலத்தில் இந்து மதத் தில் உள்ளது போல், நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் அடிப்படையில் அனைத் துச் சாதியினரும் அர்ச்சகர்களாகும் நிலை விரைவில் வந்தே தீரும்.
13. தேரில் அல்லது பல்லக்கில் வரும் உற்சவ மூர்த்திக்கு, சூத்திரர் அர்ச்சனை செய்தால் தீட்டு ஏற்படும் என்று கருதினால், காயத்திரி மந்திரம் சொன்னால் அல்லது உபநயன மந்திரம் சொன்னால் போய்விடும்.
14. ஆரியர், சூத்திரர் என்று பேத மில்லாமல் வாழ்தலே நம் இந்தியா அல் லது ஜம்புத்விப (நாவலந்தீவு) வல்லரசு நாடாக மாறுவதற்கு உதவி புரியும்.
15. சமஸ்கிருதத்திற்கு பதிலாக தமிழில் அர்ச்சனை செய்தால் ஆண் டவன் அருள் கிடைக்காது, என்றாலும் தமிழர்கள் தமிழில் அர்ச்சனை செய்வதையே விரும்புவார்கள்.
16. இந்து மதத்தில் உள்ள சூத் திரர்களுக்கு இந்து மதத்தால் இரண்டு முறை அவமானப்படுத்தப்படுகிறார்கள். விவேகானந்தர் சொல்படி இந்து என்ற சொல் பெருமை தரவில்லை; மாறாக இழிவைத் தருகின்றது. மேலும் வர்ணாசிரமதர்மம் சூத்திரர்களை தஷ்யூக்கள் என்றும், தாசர்கள் என்றும் இழிவுப்படுத்துகின்றது. இவ்வாறு இரண்டு மடங்கு இழிவைத் தாங்கும் சூத்திரர்களுக்கு மத்திய அரசு தகுந்த சட்டம் இயற்றி அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை' தர வேண்டும்.
(நிறைவு)
விடுதலை ஞ.ம.,3.8.13
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக