ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

காலப் பயணம்-1,பகுதி-1-பூண்டி நீர்த்தேக்கம்

பெரியார் திடலின் Historical Research Centre ஏற்பாடு செய்த “குடியம் குகைக்கு” (நிலவியல் படி கோண்ட்வானா காலகட்டத்தை சேர்ந்த நிலப்பகுதி) செல்லும் ஒரு அறிவியல் பயணத்திற்கு ஆயத்தமானது.
ஞாயிறு அதிகாலை உற்சாகத்துடன் விடிந்தது. பெரியார் திடலில் 6.45 amக்கு பேருந்து கிளம்பி, பூந்தமல்லியில் இறுதியாக எல்லோரையும் ஏற்றிக்கொண்டு, 36 பேர் கொண்ட குழுவுடன்  திருவள்ளூர் மாவட்டத்தின் பூண்டி நீர்த்தேக்கம் நோக்கி, பேருந்து சென்று கொண்டிருந்தது. கடல்சார் வரலாற்று ஆய்வர், திரு ஒரிசா பாலு (archaeologist) அவர்கள் எங்கள் பயணத்தின் வழிகாட்டியாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு... அழைத்து சென்றார்.
இப்படியாக பூண்டி நீர்தேக்க பகுத்திக்கு காலை8.30 மணிக்கு வந்து சேர்ந்தோம். ஒரிசா பாலு அவர்கள் சத்திய மூர்த்தி நீர்த்தேக்கம் என்றழைக்கப்பட்ட நீர்த்தேக்க பகுதியை சுற்றி இருக்கும் வளமான இயற்கை சூழலை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். சென்னையிலிருந்து ஒரு 90 km தொலைவில் வாழும் அப்பகுதி மக்கள் இன்னும் யூரியா போன்ற உரங்களை உள்நுழைய அனுமதிக்காமல் இயற்கை விவசாயம் செய்வதாகவும் பழைய பயிர்வகைகளான “கார் சம்பா” போன்ற பயிர்வகைகளை அங்கு காண முடியும் எனவும் மிக பழமையான பலவகைப்பட்ட தாவர வகைகள் அந்த மக்களின் கூட்டு முயற்சியால் இன்னும் அழியாமல் பாதுகாக்கப்படுவதாக சொல்லிக் கொண்டிருந்தார்.
  பூண்டி நீர்த்தேக்கத்தில் இறங்கி காலை உணவை முடித்து,காலை 9.30 மணிக்கு குடியம் குகை நோக்கி பயணமானோம்.

குழு வழிகாட்டி ஒரிசா பாலு




ஒரிசா பாலுவுடன் ஆராய்ச்சி மாணவர் தீபிகா

காலப் பயண குழுவினர்
 



ஒரிசா பாலுவுடன் ஆர்.டி.வீரபத்திரன்
Displaying IMG_6056.JPG
அரும்பாக்கம் சா.தாமோதரன்

Displaying IMG_6059.JPG
                                                             செ.ர.பார்த்தசாரதி
Displaying IMG_6068.JPG                              தளபதி பாண்டியனுடன்  செ.ர.பார்த்தசாரதி


Displaying IMG_6063.JPG
 தளபதி பாண்டியனுடன்  அரும்பாக்கம் சா.தாமோதரன்
Displaying IMG_6077.JPG
Displaying IMG_6078.JPG
Displaying IMG_6081.JPG
பூண்டி நீர்த்தேக்கம் வாயிலில் உள்ள பெரியார் நினைவு கல்வெட்டு
 பூண்டி நீர்த்தேக்கம் கரையில் வளர்ந்துள்ள மருள் ஊமத்தை மூலிகை

பூண்டி நீர்த்தேக்கம் கரையில் வளர்ந்துள்ள பெரிய செருப்புப்படை மூலிகை

திங்கள், 20 ஜூலை, 2015

ஹரப்பா கால எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு

அரியானா: ஹரப்பா கால எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு
ஹிசார், ஏப்.17_ அரியானா மாநிலத்தில், ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த 4 மனித எலும்புக் கூடுகள் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து அந்த மாநில தொல்பொருள் ஆராய்ச்சித் துறை திட்ட இணை இயக்குநர் நீலேஷ் யாதவ் கூறியதாவது:
ஹிசார் மாவட்டத்தில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் உள்ள ராக்கி கரி கிராமத்தில், கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை, அரியானா தொல்லியல் துறையுடன், தென் கொரியாவில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகமும், புனேவில் உள்ள டெக்கான் கல்லூரியும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
அப்போது 5,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த, 4 மனித எலும்புக் கூடுகளை அவர்கள் சமீபத்தில் கண்டெடுத்தனர்.
அவை இறந்த 2 ஆண்கள், ஒரு பெண், ஒரு குழந்தை ஆகியோரின் எலும்புக் கூடுகளாகும்.
50 வயதைச் சேர்ந்த ஆண்களின் எலும்புக் கூடுகளின் உயரம் 5 அடி 6 அங்குலமாகும். 30 வயதைச் சேர்ந்த பெண்ணின் எலும்புக் கூட்டின் உயரம் 5 அடி 4 அங்குலமாகும்.
மற்ற விவரங்கள் மரபணுப் பரிசோதனை மேற்கொண்ட பிறகே தெரிய வரும் என்பதால் அந்த எலும்புக் கூடுகள் பரிசோதனைக் கூடத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
அகழ்வாராய்ச்சிப் பணியின் போது, மனித எலும்புக் கூடுகள் கிடைப்பது இதுவே முதல் முறை என்றார் நீலேஷ் யாதவ்.
இந்த அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும் இடத்திலிருந்து வளையல்கள், சிறிய சக்கரங்கள், பொம்மைகள், தானியங்களுடன் கூடிய பானைகள் ஆகியன ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விடுதலை 17.4.15

ஞாயிறு, 19 ஜூலை, 2015

திராவிடம் என்பது பொய்யா?

"நாம் நினைவிற் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச்சொல் அல்ல என்பதாகும். தமிழ் எனும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே இந்தச் சொல்.
தமிழ் என்னும் மூலச்சொல் முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இடம்பெற்ற-போது 'தமிதா' என்று உச்சரிக்கப்பட்டது; பின்னர் 'தமில்லா' ஆகி முடிவில் 'திராவிடா' என்று உருத்திரிந்தது. 'திராவிடா' என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி, அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை. நாம் நினைவில் கொள்ள வேண்டிய மூன்றாவது செய்தி தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை; மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழியாகவும் இருந்தது.
அதாவது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்தது என்பதே ஆகும். உண்மையில், இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டுவந்த மொழியாகவும் திகழ்ந்தது. ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுத்திய தாக்கத்தையும் அடுத்தபடியாக நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.
இதில் விந்தை என்னவென்றால், இந்தத் தொடர்பு வடஇந்திய நாகர்களிடம் ஏற்படுத்திய விளைவு தென் இந்திய நாகர்களிடம் தோற்றுவித்த விளைவிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதாகும். வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டுவிட்டு, அதற்குப் பதில் சமஸ்கிருதத்தை வரித்துக் கொண்டனர். ஆனால் தென் இந்தியாவிலிருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை; தமிழையே தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து பேணிக்காத்து வந்தனர்; ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக்கொள்ள-வில்லை. இந்த வேறுபாட்டை மனத்திற்-கொண்டால் திராவிடர் என்ற பெயர் தென் இந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தப்படும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
திராவிடர் என்ற சொல்லை வட இந்திய நாகர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; ஏனென்றால் திராவிட மொழியைப் பேசுவதை அவர்கள் விட்டுவிட்டனர். ஆனால் தென் இந்தியாவின் நாகர்களைப் பொருத்தவரையில் திராவிட மொழியைத் தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்ததால் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர். அது மட்டுமன்றி, வட இந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு-விட்டதன் காரணமாக திராவிடமொழி பேசும் ஒரேமக்கள் என்ற முறையில் தங்களைத் திராவிடர்கள் என்று அவர்கள் அழைத்துக்-கொள்வது மிக மிக அவசியமாயிற்று.
தென் இந்தியர்கள் திராவிடர்கள் என ஏன் அழைக்கப்படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.
எனவே, தென் இந்திய மக்களுக்குத் திராவிடர் என்ற சொல் தனித்துவமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதானது நாகர்களும் திராவிடர்களும் ஒரே இனத்தவர்களே என்ற உண்மையை மூடிமறைக்க அனுமதிக்கக் கூடாது. நாகர்கள் என்பது இன அல்லது பண்பாட்டுப் பெயர்; திராவிடர் என்பது மொழி அடிப்படையில் அமைந்த அவர்களது பெயர்.
தாசர்கள் என்பதும் நாகர்கள் என்பதும் ஒன்றுதான்; அதே போன்று நாகர்கள் என்பதும் திராவிடர்கள் என்பதும் ஒன்றுதான். வேறுவிதமாகச் சொன்னால் இந்தியாவின் இனங்களைப் பற்றிக் கூறுவதானால், இத்துறையில் அதிகபட்சம் இரண்டு இனங்கள்தான் உள்ளன. ஆரியர்களும் நாகர்களுமே அவர்கள்.
- டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 7, பக்கம்: 300
 Unmaionline  2015  ஏப்ரல் 01-15  திராவிடம் என்பது பொய்யா?-உண்மை இதழ்

ஞாயிறு, 17 மே, 2015

நான்தான் திராவிடன் -பாரதிதாசன்



நான்தான் திராவிடன் என்று நவில்கையில், தேன்தான் நாவெல்லாம் வான்தான் என்புகழ்
எனத் திராவிடச் சார்போடும் ஆரியன் அல்லேன் என்னும் போதில்
எத்தனை மகிழ்ச்சி எத்தனை மகிழ்ச்சி.
நான்ஓர் திராவிடன் நனி மகிழ் வுடையேன்
என்று பாரதிதாசன் கூறுவார்.

சனி, 21 மார்ச், 2015

நெய்வேலி அருகே பழைமையான கல் ஆயுதம் கண்டெடுப்பு


மருங்கூர் கிராமத்தில் சுமார் 2200 ஆண்டுகள் பழைமையான கல் ஆயு தத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள மருங்கூர் கிராமம் பல அரிய தகவல்கள் பொதிந்துள்ள இடமாக கருதப்படுகிறது. இங்கு அரசு மருத்துவமனைக்கு வடக்குப் பகுதியில், கிழக்கு மேற்காக சுமார் 5.5 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பழங்கால மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருள்கள் கிடைத்து வருகின்றன.
அதாவது, சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இரும்புக் காலத்திய மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன.
கல் ஆயுதம்: இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த ஊரைச் சார்ந்த ராஜசேகர் என்பவர், தனது தோட்டத்தில் மரக்கன்றுகள் நடுவதற் காக தோண்டியபோது, சுமார் மூன்ற ரையடி ஆழத்தில் கல் ஆயுதம் கிடைத் துள்ளதாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைக்கு தகவல் அளித்தார்.
அதன்பேரில், இந்தத் துறையைச் சார்ந்த தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்பட ஆய்வு மாணவர்கள் கல் ஆயுதத்தை ஆய்வு செய்தனர். 1,050 கிராம் எடை கொண்ட கூழாங்கல்லின் நடுப்பகுதியில் 6 செ.மீ. அளவில் வட்ட வடிவ துளை இடப்பட்டுள்ளது. மேலும், 12 செ.மீ. சுற்றளவும், 6 செ.மீ. கணமும் கொண்ட தாக இந்த ஆயுதம் வடிவமைக்கப்பட் டுள்ளது.
இந்த ஆயுதத்தின் நடுவில் உள்ள துளையில் 6 செ.மீ. கன அளவு கொண்ட ஒரு வலிமையான மரக் குச்சியினை சொருகி, கதை போன்ற தற்காப்பு ஆயுதமாக பண்டைய கால மக்கள் பயன்படுத்தியிருக்கலாம்.
மேலும், நெல், பயறு வகை தானி யங்களை பிரித்தெடுக்கவும், விலங்கு களை வேட்டையாட சுத்தியல் போன்ற கருவியாகவும் இந்த ஆயுதத்தை பயன் படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.
கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த ஊரைச் சார்ந்த ராமலிங்கம் என்பவர், தனது நிலத்தை சீர் செய்தபோது, 4 அடி ஆழத்தில் உடைந்த முதுமக்கள் தாழிகள், அதன் மூடுகற்கள் கிடைத்தன. அந்தப் பகுதியில் இருந்து தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகளும் கிடைத்தன.
பண்டைகால மக்களின் வாழ்விடப் பகுதி: இந்தக் கிராமத்தின் தெற்குப் பகுதியில் உள்ள குளத்தின் கிழக்கு கரைப் பகுதியில் 10 அடி உயரமும், ஒரு ஏக்கர் பரப்பளவும் கொண்ட பண் பாட்டு மேடு உள்ளது.
இந்தப் பகுதியில் கடந்த 2005-ஆம் ஆண்டு சாலை சீரமைக்க பள்ளம் தோண்டியபோது பழங்கால செங்கற்கள், சிவப்பு நிற மட்கல ஓடுகள், நான்கு கால்களுடன் கூடிய அம்மிக்கல், பெண்கள் விளை யாடுவதற்குப் பயன்படுத்திய சில்லு கருவிகள் கிடைத்தன.
மேலும், சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு மருங்கூர் பகுதியில் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் பயன்படுத்திய கல் லாயுதங்கள், கற்செதில்கள், பிறைவடிவ கல்லாயுதங்களும் இந்தப் பகுதியில் நடத்தப்பட்ட கள ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது கல் ஆயுதம் கிடைத்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இரும்புக் கால பண்பாட்டை சார்ந்த மக்களின் முதுமக்கள் தாழிகள் காணப்படுவதால், இந்த ஆயுதமும் அதே காலக்கட்டத்தை சார்ந்ததாக இருக்கலாம் என சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

-விடுதலை,ஞாயிறு மலர்,21.3.15

வெள்ளி, 20 மார்ச், 2015

திராவிடப் பல்கலைக் கழகத்தில் என்.டி.ஆர் சிலை திறப்பு


குப்பம் 25-02-15 அன்று திராவிடப் பல்கலைக் கழகத்தில் என்.டி.ஆர். சிலையை ஆந்திர 
முதலமைச்சர் நாரா. சந்திரபாபு நாயுடு அவர்கள் திறந்து வைத்தார். இப்பல்கலைக்கழகம் 
உருவாகக் காரணமாக இருந்தவர் என்.டி.ஆர் அவர்கள். பின்தங்கிய பகுதியான குப்பத்தில் 
தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா பாண்டிச்சேரி மாநிலங்களின் நிநி உதவியுடன் 
துவங்கப்பட்டது.
திராவிட மொழிகளில் ஆய்வு செய்பவர்களுக்கு உதவும் வகையில் முதன்மையாக 
அமைக்கப்பட்டது. வருங்காலத்தில் இப்பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக 
மாற்றுவதற்கு என் தலைமையிலான ஆந்திர அரசு முயற்சி செய்யும் என்று முதலமைச்சர் 
சந்திரபாபு நாயுடு பேசினார்.
விழாவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. கங்கனாலா ரத்தனய்யா பதிவாளர் 
ராஜேந்திரப் பிரசாத் பேராசிரியர்கள் மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

-
விடுதலை ஞாயிறு மலர்,7.3.15 பக்கம்-6

2,300 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால தடயங்கள் கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெருங்கற்கால மக்களின் வரலாற்றுத் தடயங்கள், கி.பி. 11-13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் வாழ்விடப் பகுதி ஆகியவற்றை அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
விருத்தாசலத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் முதனை கிராமம் உள்ளது. இவ்வூரில் உள்ள செம்பையனார் கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள சின்ன ஓடையில் சிலர் மண் தோண்டும் போது முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. இதை அறிந்த இவ்வூரைச் சேர்ந்த ஆசிரியர் குணசேகரன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில், அப்பகுதிக்கு பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வாளரும், பேராசிரியர்களு மான சிவராமகிருஷ்ணன், கலைச்செல்வன் ஆகியோருடன் ஆய்வு மாணவர்கள் சென்று ஓடையில் ஆய்வு மேற்கொண்டனர்.
உடைந்த முதுமக்கள் தாழிகள்: மண் எடுக்கப் பட்ட பள்ளத்தில் 15 அடி இடைவெளியில் மூன்று முதுமக்கள் தாழிகள் முற்றிலும் உடைபட்ட நிலையில் கிடந்தன.
அதன் அருகே கருப்பு- சிவப்பு மட்கல ஓடுகளும், வழுவழுப்பான கருப்பு நிற மட்கல ஓடுகளும், உடைந்த விளக்குத் தாங்கிகளும் காணப்பட்டன.
ஆய்வு செய்ததில் இவற்றின் காலம் கி.மு 3-4-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனத் தெரியவந்தது. மேலும், மனித எலும்புத் துண்டுகளும் காணப்பட்டன. இவை சிதைந்த நிலையில் இருந்ததால், டிஎன்ஏ  சோதனைக்கு உள்படுத்த முடியாது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்முதனை கிராமத்தின் மேற்குப் பகுதி முழுவதும் கள ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
பழையபட்டினம்: விருத்தாசலம் வட்டத் துக்கு உள்பட்ட பழையபட்டினம் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் தமது முதல் கட்ட தொல் லியல் கள ஆய்வை கடந்த இரண்டு மாதங் களாகச் செய்து வருகின்றனர். இதன் மூலம், இவ்வூரைப் பற்றிய பல புதிய வரலாற்றுத் தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக, பட்டினம் என முடியும் ஊர்கள் பண்டைய காலத்தில் வணிக, வர்த்தக மய்யங் களாக விளங்கியவை என்ற அடிப்படையில் இவ்வூரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நீராழி மேடு: சுமார் அய்ந்து ஏக்கர் பரப் பளவில் உள்ள நீராழி மேட்டை சுற்றி நடத்தப் பட்ட கள ஆய்வில் உடைந்த சிவப்பு நிற மட்கல ஓடுகளும், செங்காவி நிறம் பூசப்பட்ட மட்கல ஓடுகளும், சொரசொரப்பான சிவப்பு நிற மட்கல ஓடுகளும், தானியங்களை சேமித்து வைக்கப் பயன்படும் பெரிய அளவிலான மட்பாண்டங்களின் உடைந்த ஓடுகளும் இப்பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும்செங்கற்களும், கட்டடங்கள் கட்ட பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்புக் காறைகளும் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
"' வடிவ கூரை ஓடுகள்: இந்தப் பண்பாட் டுப் பகுதியின் கிழக்குப் பகுதியில் உடைந்த "வடிவ கூரை ஓடுகளின் பாகங்கள் கிடைத்துள் ளன. இவ்வகை கூரை ஓடுகள் இடைக்கால பண்பாட்டுப் பகுதிகளான கங்கைகொண்ட சோழபுரம், சேந்தமங்கலம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ள அகழ்வாய்வுகளிலும் கிடைத்துள்ளன.
எனவே, பழையப்பட்டினம் நீராழி மேட்டுப் பகுதியிலும் இதே கால கட்டத்தைச் சார்ந்த அதாவது கி.பி. 11-13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மக்கள் இப்பகுதியில் வாழ்ந்திருக்கலாம் எனத் தெரிய வருகிறது.
மேலும்இப்பகுதியில் சேகரிக்கப்பட்டுள்ள மட்கல ஓடுகள், அதில் உள்ள கோடுகள், பூ வேலைப்பாடுகள் அதன் வளைவு தொழில்நுட்பம் போன்றவை இடைக் கால பண்பாட்டுத் தாக்கத்தோடு உள்ளன என் பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவ்வூரில் தொடர்ந்து களஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டு இடங்களையும் சேர்த்து கடலூர் மாவட்டத்தில் இதுவரை 306 இடங் களில் பண்டைய கால மக்களின் வரலாற்றுத் தடயங்களை கண்டறிந்து முறையான ஆவணப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்கிறார் வர லாற்று ஆய்வாளர் பேராசிரியர் சிவராம கிருஷ்ணன்.
விடுதலை ஞாயிறு மலர்,7.3.15பக்கம்-3