வியாழன், 25 ஜனவரி, 2018

இந்திய சரித்திரம்

பி.டி.சீனிவாச அய்யங்கார் அவர்களால் 1923-இல் எழுதப்பட்ட ``இந்திய சரித்திரம்


ஆரியத்துக்கு முன்பு இந்தியாவின் நிலை என்ன?ஆரிய முறையால் தமிழருக்கு நேர்ந்த அவதி,தமிழர்கள் எதிர்த்த வரலாறு, அவர்கள் வாழ்க்கைநிலை இவைகளைப் பண்டைய ஆராய்ச்சி மூலம்சிறிது காலவரையறையுடன் கீழேகாட்டப்பட்டிருக்கிறது. இவை, சரித்திராசிரியரானதோழர் பி.டி.  சீனிவாச அய்யங்கார் அவர்களால்எழுதப்பட்டு, 1923-இல் பதிக்கப்பட்டுள்ள ``இந்தியசரித்திரம் முதற்பாகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள்.

கி.மு. 5000 வரை இந்தியாவின் நிலை:

``ஆரியம் பரவுவதற்குமுன், இந்தியாவில் நான்குவருண முறை அனுஷ்டிக்கப்படவில்லை.வடஇந்தியாவில் பேசப்பட்ட பாஷைகள் கொஞ்சம்கொஞ்சமாகச் சமஸ்கிருதத்தில் கடன் வாங்கியதாலும்,தென் இந்தியா சமஸ்கிருதத்துக்குஅடிமைப்படவில்லை. இந்தியாவில் ஆரம்ப காலத்தில்பேசிவந்த பாஷை, இப்போது கோதாவரி, வங்கம்,விசாகப்பட்டினம் முதலிய இடங்களில் வசிக்கும் அதிககல்வியறிவில்லாத மக்கள் பேசும் பாஷையாகஇருந்திருக்க வேண்டும். அதனுடைய நாகரிகஉருவந்தான் தமிழ் என்பது

இரும்புக் கருவிக் காலம்கி.மு. 5000 முதல் 3000வரை:

``சமஸ்கிருதம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துமுன்பு,தமிழ் பாஷையிலிருந்து இந்த நாட்டின் பண்டையவாழ்க்கையைச் சித்திரித்து விடலாம். அக்காலத்தில்,நால்வகை நில (முல்லை, நெய்தல், மருதம், குறிஞ்சி)மக்களே வாழ்ந்தார்கள். கிறிஸ்து சகாப்தம்ஆரம்பமாகும் பல ஆயிர வருடங்களுக்கு முன்,தென்னிந்தியாவிலிருந்து குடியேறியவர்கள்தான்(திராவிடர்), சால்தியன் (தற்பொழுது ஈராக் எனப்படும்பிரதேசங்கள்) நாகரிகத்துக்கு ஆதிகர்த்தாக்கள் என்றுபல பாஷா பண்டிதர்கள் நினைக்கிறார்கள். பிரேத்தைஎரிக்கும் வழக்கம், ஆரியம் பரவியதற்குப் பிறகுஏற்பட்டது; அம்மக்கள் (ஆரியரல்லாதார்) இமய முதல்குமரிவரையிலும் சிந்து (நதி) முதல் பிரம்மபுத்ரா (நதி)வரையிலும், பரவிக்கிடந்தனர்.

ஆரியக் கோட்பாடுகி.மு. 3000 முதல் 1500 வரை:

``இக்காலத்தில்தான் தெய்வ வழிபாடு, புதியமுறையொன்றை அடைந்தது. நெருப்பின் மூலம்கடவுளைத் தொழுதலே அம்முறை. இதைஒப்புக்கொண்டவர்கள் ஆரியர்கள் என்றும்,ஒப்புக்கொள்ளாதவர்கள் தஸ்யூக்கள் (திராவிடர்கள்)என்றும் ஆனார்கள். தேவ பாஷையாகிய சாண்டாசா(சமஸ்கிருதம்) பாஷையைத்தான் இந்தோஅய்ரோப்பிய பாஷையெனக் கூறுகிறார்கள்.

``இந்த அக்னி வழிபாட்டையும் புதிய பாஷையையும்வடமேற்குக் கணவாய் வழியாய் இந்தியாவிற்கு வந்தஅன்னியர்தாம் (ஆரியர்) கொண்டுவந்தார் எனஅய்ரோப்பியப் பண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.ஆனால் இவை, பிரயாகை (அலகாபாத்)யில்உண்டாயிற்று என்றுதான் தெரிகிறது.

கி.மு. 3000 முதல் 2000 வரை:

``பர்க்கவாஸ், அகஸ்தியர் என்ற இரு ஆரியப்புரோகிதக் குடும்பங்கள்தான், தென்னிந்தியாவுக்குஆரியக் கலைகளைக் கொண்டுபோய்ப்பரவச்செய்தன.

``மலையாளத்தில், பிராமண காலனி (குடியேற்றம்) யும்உண்டாயிற்று. இராமாயண காலத்தில் (கி.மு. 2000)தென் இந்தியா, தஸ்யூக்களின் அல்லதுராக்ஷதர்களின் (திராவிடர்) பலமான கோட்டையாகஇருந்தது. அவர்கள் ஆரிய முனிகளின் யாகக்கிருத்தியங்களுக்கு விரோதமாக இருந்தார்கள். அந்தராக்ஷதர்கள் (திராவிடர்), வட இந்தியரைவிட எந்தவிதத்திலும் தாழ்ந்தவர்களாயில்லை. இக்காலத்தில்,தென் இந்தியாவில் பல ராக்ஷச ராஜ்யங்கள் இருந்தன.இவற்றுள் பெரியது, கோதாவரி பள்ளத்தாக்கிலிருந்தஜனாஸ்தானா என்ற ராஜ்யமாகும். டெக்கான்காடுகளென்னும் தண்டகாரண்யத்தில் (விந்தியமலைக்குத் தெற்கேயும், திருவேங்கிட மலைக்குவடக்கேயுமுள்ள பிராந்தியமாகக்கொள்ளலாம்)ஆரியர்களின் கொள்கைகள்பரவுவதைத் தஸ்யூக்கள் வெறுத்தனர்.

``வர்ணாசிரமக் கொள்கையான பிராமணன்,க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்பது,யாகங்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. விந்திய மலைக்குவடக்கேயுள்ள பகுதியைப் புண்ணிய பூமியாகக் கருதி,அதற்கு ஆரிய ரிஷிகள் ஆரிய வர்த்தனம் என்றுபெயரிட்டனர். அவர்களுக்கு விரோதமானவர்களை,அந்த ரிஷிகள் தக்ஷணபாதாவுக்குத் (ஆரியஆதிக்கமில்லாத தண்டகாரண்யப் பிரதேசங்களுக்கு)துரத்தினர். தென் இந்தியாவிலுள்ள தஸ்யூக்கள்(திராவிடர்), பேர்பெற்ற வியாபாரிகள். அவர்களைரிஷிகள், பணிக்கர் என்று அழைத்தார்கள். ஆரியர்வகுத்த நான்கு வர்ணங்களையும் சேராதவர்கள்தஸ்யூக்கள் எனப்படுவர்.

மகாபாரத காலத்திற்குப்பின் கி.மு. 1400 - 750

``கி.மு. 1500-இல், பிராமணர்களின் நான்கு ஆச்சிரமக்(பிரம்மச்சாரிய, கிருகஸ்த, வானப்பிரஸ்த, சந்யாசநிலை) கொள்கை தலைநீட்டியது. பிராமணர்களுக்குமட்டுமே பிறப்பு இறப்பு அற்ற மோக்ஷதானம் உண்டுஎன்ற கொள்கையும் பரவியது. உபநயனம் என்றசடங்கும், முதல் மூன்று வர்ணத்தாருக்கு மட்டுந்தான்என்றும் ஆயிற்று. பிராமணர்களே புரோகிதராகவும்,அரசர்களுக்கு மந்திரிமார்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள்தான் அரசனை அடக்கி ஆதிக்கஞ்செய்தார்கள்.

``டவுனுக்குத் தென்புறத்திலே ஓர் இடம் உண்டு.அதில்தான் மன்னரின் தர்பார் நடக்கும். அந்தக்கூட்டத்தில், சொக்கட்டான் நடப்பதுண்டு. முதல் மூன்றுவருணத்தார் மட்டுந்தான் அங்கு விளையாடஅனுமதிக்கப் படுவார்கள்.

கி.மு. 750 முதல் 320 வரை:

``இக்காலத்தில், மதம் மனித வாழ்வில்முக்கியஸ்தானம் பெறுகிறது என நினைத்து, அரசர்கள்புதிய மதங்களையும் உண்டாக்கி அரசாங்கவருமானத்துக்கு வகை தேடினார்கள். சந்நியாசிகள்அதிலும் பிராமண சந்நியாசிகள் மூலமாகத்தான்,மோக்ஷம் கிடைக்குமென்ற புதிய கோட்பாடுஉண்டானது. அதன் ஆரம்பந்தான், லிங்கம்,சாளக்கிராமம் என்ற விக்ரக வணக்கமாகும்.க்ஷத்திரியர்கள் சந்நியாசிகள் ஆவதற்கோ,பிராமணராகப் பிறக்காமல் மோக்ஷமடைவதற்கோ,ஆரிய மதத்தில் இடங்கிடையாது என்பதை உணர்ந்தஇக்காலத்தில்தான், க்ஷத்திரியத் துறவு சமயங்களானசமணமும், பவுத்தமும் எழும்பின.

``பவுத்தர்கள் எழுதிய பாலி பாஷையும், சமணர்கள்(ஜெயினர் என்றும் கூறுவது உண்டு) எழுதிய அர்த்தமகதி பாஷையும், சமஸ்கிருத பாஷைக்குப் பரமவிரோதிகளாகும். (பாஷையிலுங்கூட ஆரியர்கள் -பவுத்த சமணத்தார்களுக்குப் பகைவர்கள் என்பதுகவனிக்கத்தக்கது) புதிதாக எழுந்த பவுத்த சமணமதங்களால், பிராமணர்களுக்கு மதிப்புக் குறையத்தலைப்பட்டது.

கி.மு. 320 முதல் 230 வரை:

``இந்தியா பூராவும் மவுரிய அரசர்கள் ஆட்சிசெலுத்தினாலும், தமிழர் இந்தியா மட்டும், அந்தச்சக்ரவர்த்திகளின் ஆதிபத்தியத்தில் வரவில்லை.மூவேந்தர்கள் ஆட்சியில் தமிழக வாணிபம், ஆரியமயமாக்கப்பட வட இந்திய ராஜ்யங்களுடனும், மேற்கேபாரசீகம் (பெர்சியா) எகிப்து, அரேபியா, கிரீஸ் (தமிழில்யவனநாடு) ஆகிய தேசங்களுடனும், கிழக்கே பர்மா(சுவர்ணபூமி என்றுங் கூறுவர்) மலேயா, ஜாவா(சாவகம் என்றும் பெயர்) சுமத்திரா, சீனம், சீயம் (சயாம்என்பார்கள் ஆங்கிலத்தில்) ஆகிய தேசங்களுடனும்நடைபெற்றது.

``பின்னர், கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் மன்னர்கள்அரண்மனைகளில், பிராமணர்கள் செல்வாக்கடையஆரம்பித்தார்கள். பிராமணர்களின் யாக முறைகளில்ஆசை பிறந்ததுடன், அவர்கள் உண்டாக்கிய சந்திரசூரிய அரச வம்சத்தில் தாங்களும்சம்பந்தப்படுத்திக்கொள்ளும் வேட்கையும் பிறந்தது,சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு அகஸ்தியகோத்திரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் தமிழ்பாஷையைக் கற்றுக்கொண்டு, தமிழ்பாஷைக்குஅய்ந்திரசிஸ்டத்தில் சமஸ்கிருத இலக்கணத்தைஉண்டாக்கினார்கள். அரசன் ஆரியக் கோட்பாட்டில்மயங்கினாலும் தமிழ்ப் பொதுமக்கள் ஆரிய மத சமூகவலையில் அகப்பட்டார்களில்லை.

கி.மு. 230 முதல் கி.பி. 300 வரை

``கி.பி. 150-இல் பிராகிருத மொழிபோய், சமஸ்கிருதம்அரசாங்க பாஷையாகியது. வடநாட்டில் இக்காலம்,பல்லவர்கள் மாளவ தேசத்தை ஆண்ட சமயம்,காஞ்சியை ஆண்ட ஆரியமயமாக்கப்பட்டபல்லவர்களே கி.பி. 200-க்கு முன் தமிழ்நாட்டில்பிராகிருத மொழியை உத்தியோகபாஷையாக்கினார்கள். வட இந்தியாவில் இருந்தஅரசியல் முறையைத் தமிழ்நாட்டில் புகுத்தினார்கள்.தமிழ்அரசர்கள் ஆரியத்தைப் பின்பற்றி, இராஜசூயயாகம் முதலியன செய்ய ஆரம்பித்தனர்.இராமாயணமும், பாரதமும் அவர்களுக்குச்சொல்லப்பட்டது. மனுதர்ம சாஸ்திரம், வடஇந்தியாவின் கீழ்ப்பகுதியில்தான் எழுதப்பட்டது! (இதனால், இம்மூன்று நூற்களும், அவைகளிற் பிறந்தகிளை நூற்களும், தமிழகத்துக்குப் புறம்பானவைஎன்பது பெறப்படுகிறது.)

கி.பி. 320 முதல் 600 வரை

``இக்காலத்தில் மத்திய இந்தியாவில், யசோதர்மதேவன் என்ற பிராமணர் பிரக்யாதியாய் அரசாண்டார்.இவரைக் கலியுக அவதாரரென்று அழைத்தனர்.ஜெயினர்கள் (சமணர்), அவரை வெறுத்தனர்.இஸ்லாம் ஆட்சி பரவிய பன்னிரண்டாம்நூற்றாண்டில்தான், இந்தக் கலியுக அவதாரக்கொள்கை உண்டாகியிருக்கிறது. நர்மதை - கிருஷ்ணாஇரு நதிகளுக்கு மிடையே ஆண்ட வகாடகாவம்சத்தைச் சேர்ந்த ஹரிஷேணாவின் மந்திரிகள்,மலபார் பிராமணர்களாய் இருந்தனர். இந்தநூற்றாண்டு களில்கூட வடநாட்டின் கோட்பாடு,பழக்கவழக்கங்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கஞ்செலுத்தவில்லை. பல நூற்றாண்டாக மூன்றாம் சங்கம்பாண்டிய மன்னர்களால் நடைபெற்றது.இவைகளினால் தமிழர் வாழ்க்கை, கி.மு. 5000 முதல்கி.பி. 400 வரை யாதொரு மாறுதலுமின்றி ஒரேபடித்தரமாக அமைந்திருந்தது.

இந்நிலையில் இன்று இரைச்சலிடும்இந்துமகாசபைக்கு என்ன இலட்சியம் இருக்கிறது,இந்து ஆட்சியை ஏற்படுத்த? இந்துஸ்தானம்இந்துக்களுக்கே என்று கூற முடியுமானால்ஏற்படுத்தட்டும்!

சரி! செய்யட்டுமே அதனை! இந்துஸ்தான்இந்துக்களுக்கு ஏற்பட இந்துமகாசபை வேலைசெய்யவேண்டுமானால், வைகை நதிக்கரையிலே ஏன்வரட்டுக் கூச்சலிட வேண்டும்? இந்துக்களுக்குத்திராவிட நாட்டில் என்ன வேலை? இந்துஸ்தானத்திலே,இரதகஜ துரக பதாதிகளை, புண்யதீர்த்தப்புரோக்ஷணத்தை, பூவையர் பாடலை, ஆடலை, அம்புவிடுவதைச் செய்வதைவிட்டு, இங்கு என்ன வேலைஎன்று கேட்கிறோம்?

நூல் : ஆரியமாயை

ஆசிரியர் “ அறிஞர் அண்ணா
- பெரியாரியம் வளைப்பூ பக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக