சுயமரியாதை என்பது குறிப்பிட்ட ஒருஜாதிக்கானது அல்ல. சுயமரியாதைஎன்பது குறிப்பிட்ட ஒரு இனத்திற்கானதுஅல்ல. சுயமரியாதை என்பது குறிப்பிட்டஒரு நாட்டுக்கானது அல்ல.
சுயமரியாதை என்பது உலகம் முழுவதும்வாழ்கின்ற ஒட்டுமொத்தமாந்தருக்கானது.
ஆகவே, தந்தை பெரியார் உலகத்தலைவராகிறார். சுயமரியாதை என்கிறகோட்பாட்டை முன்மொழிந்ததால்,சுயமரியாதை என்கிற கோட்பாட்டைபரப்பியதால், தந்தை பெரியார் உலகத்தலைவராகிறார்.
உலகம் முழுவதும் வாழுகிற ஒவ்வொருதனி மனிதனுக்கும் சுயமரியாதைவேண்டும்.
சுயமரியாதை என்றால் என்ன?
பிறர் நம்மை அவமதிக்கின்ற பொழுது, நமக்கு எழுகின்ற கோபம்தான்சுயமரியாதையா? என்றால், இல்லை.
தாழ்வெண்ணத்தை அகற்ற வந்த ஒருபோராளிதான் புரட்சியாளர், உலகத்தலைவர் பெரியார்
பிறர் நம்மை இழிவு செய்கின்றபொழுது, நமக்கு எழுகின்ற ஆத்திரம் மட்டும்தான்சுயமரியாதையா? என்றால், இல்லை.
சுயமரியாதை என்பது நமக்குள் நம்மைஅறியாமல் மண்டிக்கிடக்கின்றதாழ்வெண்ணத்தைத் தூக்கி எறிதல். தாழ்வு மனப்பான்மையை சிதற வைப்பது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், ஆழ்ந்துகிடக்கின்ற, மண்டிக் கிடக்கின்ற, ஊறிக்கிடக்கின்ற தாழ்வெண்ணத்தை அகற்றவந்த ஒரு போராளிதான் புரட்சியாளர்,உலகத் தலைவர் பகுத்தறிவுப் பகலவன்தந்தை பெரியார்.
நீ மனிதன், உனக்கென்று ஒருசுயமரியாதை தேவை. தன் மதிப்பு - தன்னை மதிக்கிறவன் - பிறரை மதிக்கநாம் கற்றுக் கொண்டிருக்கின்றோம்.பெரியவர்கள் வந்தால், நாம் எழுந்துநிற்கிறோம். நம்மைவிட மூத்தவர்கள்வந்தால், மதிப்பு கொடுக் கின்றோம். படித்தவர்கள் என்பதற்காக மதிப்புகொடுக்கிறோம். பிறரை மதிக்கக்கற்றிருக்கிறோம். ஆனால், நம்மை நாமேமதிக்கக் கற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு மனிதனும் தன்னை மதிக்கக்கற்றுக்கொள்ளவேண்டும். தன்மதிப்பில்லாதவன்தான் அடிமையாகஉழலுகிறான். தன்மதிப்பில்லாதவன்தான் சுயமாய் சிந்திக்கமறுக்கிறான்; தன் மதிப்பில்லாதவன்தான்மூடநம்பிக்கைகளை ஏற்கிறான்;ஆதிக்கத்தை அனுமதிக்கிறான்; அடிமைக்கலாச் சாரத்தை விரும்புகிறான்.
ஆகவே, தன்னை மதிக்கக்கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஒருமகத்தான கோட்பாடுதான் சுயமரியாதைக்கோட்பாடு.
இதை ஒரு கோட்பாடாக வரையறுத்துஅதனை ஒரு மாபெரும் இயக்கமாக முன்னெடுத்துச் சென்ற பெருமை தந்தைபெரியாரைச் சாரும்.
ஆகவே, பெரியாரியம் என்பதுதான்திராவிடம் என்கிற கோட்பாடு. இந்தக்கோட்பாட்டைச் சொன்னதால், நாம் எங்கேவீழ்ந்தோம்? பகுத்தறிவோடு வாழ் என்றுசொன்னால், எப்படி ஒரு மனிதன்வீழ்ச்சியடை முடியும்.
உன்னை நீயே மதிக்கக் கற்றுக்கொள்என்றால், எப்படி ஒரு மனிதன் வீழ்ச்சிஅடைய முடியும்?
அவர்களுக்குப் புரிய வைக்கவேண்டியதுபெரியாரின் தொண்டர்களின் கடமை
நீ இந்த சமூகத்தில்போராடவேண்டுமானால், உனக்கானசமூகநீதி தேவை - அந்த சமூகநீதியைப்பெறுவதற்கு நீ போராடு என்றுசொன்னால், எப்படி ஒரு மனிதன் வீழ்ச்சியடைவான்.
சமூகநீதியால் எப்படி வீழ்ந்து போவோம்?
ஜாதி ஒழிப்பால் எப்படி வீழ்ந்துபோவோம்?
பெண்கள் கல்வி பெறவேண்டும் என்றால்எப்படி வீழ்ந்து போவோம்?
பெண்களுக்கும் அதிகாரம் வேண்டும்என்றால் எப்படி வீழ்ந்து போவோம்?
இவர்கள் தேர்தல் அரசியலை மட்டுமேகவனத்தில் கொண்டு, திராவிடத்தால்வீழ்ந்தோம் என்று தவறான புரிதலைப்பெற்று இருக்கிறார்கள். அவர்களுக்குப்புரிய வைக்கவேண்டியது பெரியார்தொண்டர்களின் கடமை; பெரியார்பெருந்தொண்டர்களின் கடமை.
துணிவைத் தந்தது பெரியாரியம்!
திராவிடம் என்பது முற்றிலும்பெரியாரியத்தோடு தொடர் புடையது. அப்படித்தான் நாம் இதனைப்பார்க்கவேண்டும்.
தேர்தல் அரசியல் கட்சிகளோடுஇணைத்துப் பார்ப்பது என்பது வேறு. திராவிடம் என்கிற பெரியார் இயக்கக்கோட்பாட்டைப் புரிந்துகொள்வது என்பதுவேறு.
இன்றைக்கு நான் வெள்ளைச் சட்டைபோட்டு வெளியில் நிமிர்ந்து நடக்கமுடிகிறது என்று சொன்னால், அதற்கானதுணிவைத் தந்தது பெரியாரியம்.
ஜாதி இறுக்கத்தில் ஒரு மாபெரும்தளர்வை ஏற்படுத்தி, அந்த இறுக்கத்தைத்தகர்த்து, அங்கே மனிதநேயத்தைவளர்த்தது பெரியாரியம்.
பாஞ்சாலம் கிராமத்தில் ஒரு நிகழ்வு!
அதற்கு ஒரு சான்று - மேடையில்நம்முடைய ஆசிரியர் அவர்களை வந்துசந்தித்த தம்பி பெருமாள் பாஞ்சாலம்கிராமத்தைச் சார்ந்தவர். அவருடையதுணைவியாரோடு வந்து சந்தித்தார்; புத்தகம் பெற்றுக் கொண்டார்.
எனக்கு எதிரான அவதூறுகள்பரப்பப்பட்டபொழுது, மிகத் தீவிரமாகஉச்சநிலையில் இருந்தபொழுது, அந்தப்பாஞ்சாலம் கிராமத்திற்குப் பெருமாள்தன்னுடைய வீட்டிற்கு என்னைஅழைத்தார். முழுக்க தலித்அல்லாதவர்கள் வசிக்கின்ற பகுதி அது. இன்னும் வெளிப்படையாகச் சொல்லப்போனால், வன்னிய சமூக மக்கள்வாழுகின்ற பகுதி. நான் சற்றுதயங்கினேன்.
தம்பி, உங்கள் ஆர்வம் எனக்குப் புரிகிறது. நீங்கள் பெரியார் தொண்டர். உங்களுடைய அழைப்பை ஏற்று நான்ஊருக்கு வர, எனக்கு விருப்பம்தான். ஆனால், வேண்டாதவர்கள் ஏதாவதுவம்பிழுத்தால், தேவையில்லாத சட்டம்ஒழுங்கு பிரச்சினை உருவாகும்.வேண்டாம் என்று நான் சொன்னேன்.
இவ்வளவு பெரிய உணர்வைபெரியாரியம்தான் ஏற்படுத்தியது!
அப்படி நீங்கள் எண்ணவேண்டாம்அண்ணா. ஒட்டு மொத்த கிராமமும்திராவிடர் கழகம் பெரும்பான்மையாகஉள்ள கிராமம். நீங்கள் வாருங்கள் வந்துபாருங்கள், எப்படி அந்தப் பகுதிஇருக்கிறது என்பதை நீங்கள் கண்டுகொள் வீர்கள் என்று - விடுதலைசிறுத்தைகளும், அந்தத் தம்பி குடும்பமும்என்னை அழைத்துப் போனபோது, நான்வியந் தேன். ஒட்டுமொத்த கிராமமும்எனக்கு மிகப்பெரிய வரவேற் பினைதந்தது. வீட்டிற்கு வீடு அழைத்துப்போனார்கள். வழியெங்கும் வரவேற்புப்பதாகைகள். இவ்வளவு பெரிய உணர்வைஏற்படுத்தியது எது? பெரியாரியம்தான்ஏற்படுத் தியது.
இவ்வளவு பெரிய ஒரு மாற்றத்தைஏற்படுத்தியது எது - பெரியாரியம்தான். பெரியாருடைய தொண்டர்கள் அந்தகிராமத்தில் இருப்பதால்தான், ஜாதியைதூக்கி தூரயெறிந்து விட்டு, திருமாவளவனை சகோதரனாகஅரவணைத்துக் கொண்டார்கள்.
நான் இப்பொழுது அந்த வழியேபோகிறேன் என்று தகவல் கிடைத்தாலே, பாஞ்சாலம் பெருமாள் வீட்டிலிருந்து தான்எனக்கு சாப்பாடு வருகிறது. நான்சொல்வதில்லை. ஒரு உதாரணத்திற்காக, எடுத்துக்காட்டிற்காக இதனைச்சொல்கிறேன்.
மாற்றத்தை ஏற்படுத்தியது தந்தைபெரியார்!
இன்னொரு வியப்பான ஒரு செய்தியைஉங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
அவர் எப்பொழுதும் கருப்புச் சட்டைஅணிந்த திராவிடர் கழகத்தொண்டர்தான். ஆனால், தாம் பெற்றபிள்ளைக்கு திருமாவளவன் என்று பெயர்சூட்டியிருக்கிறார். எனக்குப் பெரியஅதிர்ச்சியாக இருந்தது. இந்த மாற்றத்தைஏற்படுத்தியது திருமாவளவன் அல்ல; இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது தந்தைபெரியார் என்பதை சொல்ல கடமைப்பட்டுஇருக்கிறேன்.
எப்படி திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றுசொல்ல முடியும்? எவ்வளவு பெரியமாற்றம் இது. எவ்வளவு பெரியபுரட்சிகரமான மாற்றம் இது.
ஜாதியை சொல்லி அரசியல் ஆதாயம்தேடக்கூடியவர்கள்; ஜாதி வெறுப்பைஇங்கே கக்கிக் கொண்டிருக்கின்றசூழலில், அவதூறைப் பரப்பிக்கொண்டிருக்கின்ற சூழலில், எங்கள்கிராமத்திற்கு வாருங்கள் என்று அழைப்புவிடுத்து - ஒட்டு மொத்த கிராமத்திலும், என்னுடைய படம் தாங்கிய, ஆசிரியர் படம்தாங்கிய, பெரியார் படம் தாங்கிய, புரட்சியாளர் அம்பேத்கர் படம் தாங்கியபதாகைகளைப் போட்டு வரவேற்புஅளித்தனர். அதிலும் இரவு வேளையில்சென்றேன்.
சில நேரங்களில் இரவு நேரங்களில்குடித்துவிட்டு வம்பு இழுக்க வாய்ப்புஇருக்கிறது. அதையெல்லாம் தாண்டி, அவ்வளவு சிறப்பான ஒரு வரவேற்பைஅந்தக் கிராமத்தில் வழங்கினார்கள். வீட்டிற்கு வீடு அழைத்துச் சென்றார்கள்.
ஆசிரியரிடம் பாஞ்சாலம் என்றுசொன்னவுடன், எனக்கு நன்றாகத்தெரியுமே, அந்தக் கிராமத்திலுள்ள எல்லாவீட்டிற்கும் நான் சென்று வந்திருக்கிறேன்என்று சொன்னார்.
பெரியார் வடிவத்தில் நம்முடையஆசிரியர் அவர்கள் தொடர்ந்துபயணிக்கிறார்!
ஆக, இப்படி தமிழகத்தில் பல கிராமங்கள், பல இடங்களில் திராவிடர் கழகத்தொண்டர்கள், பெரியாரின் பெருந்தொண்டர்கள் - இந்த ஜாதி அமைப்புக்கு எதிரானயுத்தங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் - போராட்டங்களைநடத்திக் கொண்டிருக்கிறார்கள். பெரியார்மறைந்து 43 ஆண்டுகள் ஆகலாம்; ஆனால், அவர் வடிவத்தில் நம்முடையஆசிரியர் அவர்கள் தொடர்ந்து அந்தப்பயணத்தை மிக வேகமாக, தீவிரமாகமுன்னெடுத்துச் செல்வதை, வெற்றிகரமாக முன்னெடுத்துச்செல்வதை நாம் பார்க்கிறோம்.
மனிதனாக்க வேண்டியது கடமை!
ஆனால், அரசியல் சக்தியாக அவனைதிரட்டுவதற்கு முன்பு, அவனைமனிதனாக்கவேண்டியது கடமையாகஇருக்கிறது. சுயமரியாதை உள்ள ஒருமனிதனாக, ஆக, சுயமரியாதை என்பதுஒரு கோட்பாடு.
பெரியார் என்றால் எல்லோருக்கும்தெரிந்தது ஏதோ பார்ப்பனர் எதிர்ப்பு - கடவுள் மறுப்பு இந்த இரண்டு மட்டும்தான்பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்கிறது.
சுயமரியாதை என்கிறகோட்பாட்டிலிருந்துதான் இவைஅனைத்தும் பிறக்கின்றன. கடவுளைமறுக்கவேண்டிய தேவை - சுயமரியாதைதேவை என்பதால்.
சுயமரியாதையை எது கெடுக்கிறது; உன்சுயமரியாதையை எது பாதிக்கிறது; உனக்குத் தாழ்வு மனப்பான்மையை எதுதந்திருக்கிறது?
பெரியார் பேசுகிறார்!
பெரியார் சொல்கிறார்!
நான் சாதாரணமான மனிதன். நான்சொல்கிற அனைத் தையும் நீ அப்படியேஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான்சொல்லமாட்டேன். நான் சொல்வதைஏற்றுக்கொள்ளவில்லை என்றால்,உனக்கு நரகம் கிடைக்கும் என்று நான்அச்சுறுத்த மாட்டேன். நான் சொல்வதில்எது சரி என்று உனக்குப் படுகிறதோ, அதை ஏற்றுக்கொள். சிந்தித்துப் பார்என்றுதான் சொல்கிறார்.
இதுதான் பெரியாரியம். ஆக, பெரியாரியத்தால் எப்படி தமிழன் வீழ்ந்துபோயிருக்க முடியும்? பெரியாரியத்தால்எப்படி திராவிட நாடு அல்லது இந்தத்தமிழ்நாடு, தமிழக மக்கள்வீழ்ச்சியடைந்திருக்க முடியும்?
இப்படி அவன் பேசுவதற்கானதுணிச்சலைத் தந்ததே பெரியாரியம்தான். இப்படியெல்லாம் விமர்சிக்கலாம்என்று அவர்தான் கற்றுக் கொடுத்தார்.
நான் சொல்வதை அப்படியேஏற்றுக்கொள்ளவேண்டும் என்ப தில்லை. என்னை விமர்சனம் செய்வதற்கும்உனக்கு உரிமை உண்டு என்று சொல்கிறஅந்தத் துணிச்சலை, நேர்மையை தந்தைபெரியாரி டத்தில்தான் நாம் பார்த்தோம்.
அனைத்து ஆதிக்கத்தையும்எதிர்க்கிறோம்
எனவே, பெரியாரியம் என்பதுசுயமரியாதைக் கோட்பாடு. சுயமரியாதைக் கோட்பாட்டை நாம் உள்வாங்கிக்கொண்டால், அதுதான் பகுத்தறிவு. பகுத்தறிவு என்பது அறிவியல் பார்வையோடு தொடர் புடையது. அந்த அறிவியல்பார்வையோடு தொடர்புடைய கோட்பாட்டைப் பரப்புகிறபொழுது, ஆதிக்கத்தைஎதிர்க்கவேண்டி இருக்கிறது. அதுஜாதியின் பெயரால், மொழியின்பெயரால், இனத்தின் பெயரால், பாலினத்தின் பெயரால் நிகழ்கிறஅனைத்து ஆதிக்கத்தையும்எதிர்க்கிறோம்.
ஆணாதிக்க எதிர்ப்பு என்பது பெண்விடுதலைக்கானது. பார்ப்பன எதிர்ப்புஎன்பது ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கானது.
ஆக, ஆதிக்கத்தைத்தான் எதிர்க்கிறோம்; வேறு காரணம் இல்லை. ஆதிக்கத்தைஎதிர்க்கின்ற அரசியலில் ஜாதி ஒழிப்பும்அடங்குகிறது; சமூகநீதியும் அடங்குகிறது.
சமூகநீதி என்பது என்ன? பங்கீடு.அதிகாரத்தைப் பங்கு போட்டுக்கொள்வது. அதிகாரம் என்பதுஒட்டுமொத்த மக்களின் உழைப்பால்விளைந்த ஒரு சொத்து. அதிகாரமும் ஒருசொத்துதான். அதனை ஒரு குறிப்பிட்டஒரு சிலர் மட்டுமே நுகர்கிறார்கள்; பயன்பெறுகிறார்கள். அதிகாரங்களைப்பகிர்ந்துகொள்ள வேண்டுமானால்
எனவே, அதிகாரத்தைப்பரவலாக்கவேண்டும். அதிகாரம் என்பது-ஆட்சி அதிகாரமாகவும் இருக்கிறது
நிர்வாக அதிகாரமாகவும் இருக்கிறது
குடும்ப அதிகாரமாகவும் இருக்கிறது
கட்சி அதிகாரமாகவும் இருக்கிறது
பொருளியல் அதிகாரமாகவும்இருக்கிறது.
இப்படி பல வகைகளில் அதிகாரம்வடிவங்களைப் பெற்று இருக் கிறது. ஆக, இந்த அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டுமானால், அதற்கு அடிப்படையில், கல்வி வேண்டும்; கல்வியில் இட ஒதுக்கீடுவேண்டும்.
பெருமை - தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் சாரும்!
ஏனென்றால், கல்வியை ஒரு குறிப்பிட்டசிலர் மட்டுமே படிக்கின்ற நிலை இருந்தது. எனவே, இவர்கள் எல்லாம்படிக்கவேண்டுமானால், அவரவர்களுக்குமக்கள் தொகை அடிப்படையில் உரியபங்கீட்டைத் தரவேண்டும். எனவே,கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், அரசியல் அதிகாரத்திலும் இடப் பங்கீடுவேண்டும் என்கிற அந்தக் கருத்தியல்தான், சமூகநீதி என்கிற கருத்தியல்.
அந்த சமூகநீதியை இந்த மண்ணில்நிலை நாட்டச் செய்த பெருமை - தந்தைபெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் சாரும்.
அந்த மாமனிதர்கள்தான் சமூகநீதிக்காவலர்களாக இந்தக் களத்தில் போராடியபோராளிகள்.
ஒருபோதும் திராவிடத்தால் தமிழன்வீழ்ந்ததில்லை; எப்பொழுதும்வீழமாட்டான்
ஆக, சமூகநீதி வந்தால்தான், ஜாதியையும்ஒழிக்க முடியும். ஜாதி ஒழிப்பு, சமூகநீதிஎன்கிற இந்தக் கொள்கைகள்அனைத்தும், சுயமரியாதைகோட்பாட்டோடு தொடர்புடையது. பெண்விடுதலை என்கிற கொள்கை - சுயமரியாதைக் கோட்பாட்டோடுதொடர்புடையது.
கடவுள் மறுப்பு என்பது சுயமரியாதைக்கோட்பாட்டோடு தொடர்புடையது
மூடநம்பிக்கை ஒழிப்பு என்பதுசுயமரியாதைக் கோட்பாட்டோடுதொடர்புடையது.
சுயமரியாதை கோட்பாடு என்பதுதான்பெரியாரியக் கோட்பாடு. பெரியாரியக்கோட்பாடுதான் - திராவிடம் என்கிறகோட்பாடு.
எனவே, ஒருபோதும் திராவிடத்தால்தமிழன் வீழ்ந்ததில்லை; எப்பொழுதும்வீழமாட்டான் - அதை அவர்களுக்குப் புரியவைப்போம் என்று சொல்லி, வாய்ப்புக்குநன்றி கூறி, விடைபெறுகிறேன்.
(24.12.2016 அன்று உலகத் தலைவர்பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்அவர்களின் 43 ஆம் ஆண்டு நினைவு நாள்கூட்டத்தில் சென்னை பெரியார்திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் தொல்.திருமாவளவன்ஆற்றிய உரை)
(தொகுப்பு : கவிஞர் கலி.பூங்குன்றன்)
நூல் : திராவிடத்தால் எழுந்தோம்!
ஆசிரியர் : கி.வீரமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக