- ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்
குணாவின் முதல் குற்றச்சாட்டே, தந்தைபெரியார் தமிழர் என்ற பகுப்பில் தமிழ்த்தேசியம் அமைக்க முற்படாமல், திராவிடர்என்ற பகுப்பில் திராவிட தேசியம் அமைக்கமுற்பட்டதாலே தமிழர்க்குக் கிடைக்கவேண்டிய தமிழ்த் தேசம் கிடைக்காமல்போனது. தமிழ்நாடு சுரண்டப்பட்டது;தமிழர்கள் வீழ்ந்தனர் என்பதாகும். எனவே,இது குறித்து நுட்பமாகவும், தெளிவாகவும்,சான்றுகளோடும் சுருக்கமாகக் காணவேண்டியது கட்டாயம் ஆகும்.
தமிழும் திராவிடமும் வேறு வேறா?
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூல்எழுதி வெளியிட்ட தோழர் குணா, அந்தநூலை, மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் நினைவாக...வெளியிட்டுள்ளார். அந்த அளவிற்குஅவர்மீதும் அவர் ஆய்வின்மீதும் அவரின்முடிவுகள்மீதும் ஆழ்ந்த பற்றுள்ளவர் குணாஎன்பது வெளிப்படுவதோடு, அவரேஇதைத் தன் நூலில் குறிப்பிட்டும் உள்ளார்.எனவே, அவரால் மதித்து ஏற்கப்படும்பாவாணர் தமிழ் - திராவிடம் பற்றி என்னகூறுகிறார் என்று முதலில் பார்ப்போம்.
இக்கால மொழியியலும், அரசியலும்பற்றித் தமிழும், அதனினின்றுந் திரிந்ததிராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும்பழங்காலத்தில் திராவிடம் என்றதெல்லாம்தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ்என்னும் சொல்லே. தமிழ் - தமிழம் - த்ரமிள- திரமிட - திரவிட - த்ராவிட - திராவிடம்என்று கூறி தமிழே திராவிடம் என்றானதுஎன்கிறார். அதாவது தமிழும் திராவிடமும்வேறு வேறானவை அல்ல; இரண்டும்ஒன்றே என்கிறார். - (ஒப்பியன் மொழி நூல்,பகுதி - 1, பக்கம் - 15, தமிழ்மண் பதிப்பகம்,சென்னை - 14.)
பாவாணரின் முடிவு முழுமையும்ஏற்புடையது. மாறாக, திராவிட என்னும்சமற்கிருதச் சொல்லே தமிழில் திராவிடம்என்றானது என்று கூறப்படும் கருத்துமுற்றிலும் தவறானது. காரணம், சமற்கிருதமொழியில் அதற்கான வேர்ச்சொல்இல்லை.
திராவிடம் (திராவிடர்) என்னும்சொல்லாட்சி :
திராவிடம் என்ற சொல் மூன்றுநிலைகளில் பயன்பாட்டில் உள்ளது.
1. தமிழ் என்பதன் திரிந்த நிலை. எனவேதமிழுக்கு மறுபெயர் அல்லது தமிழைக்குறிக்கும் மாற்றுச் சொல்.
2. தமிழுடன் பிற மொழிகள் கலந்ததால்உருவான (உருமாறிய) கன்னடம்,தெலுங்கு, மலையாளம் பேசும் மக்கள்வாழும் பகுதிகளான கருநாடக, ஆந்திர,கேரளப் பகுதிகளை உள்ளடக்கியநிலப்பகுதியைக் குறிக்கும் சொல்.
3. தற்போதைய இந்தியா, பாகிஸ்தான்,வங்காளதேசம், ஆப்கானிஸ்தான்,இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்றபகுதிகளுக்கும், கடலுள் மூழ்கியகுமரிக்கண்டம் போன்ற பகுதிகளுக்கும்உரிமையான தொன்மையான தமிழ்மக்களை ஒட்டுமொத்தமாகக் குறிக்கும்சொல்.
இப்பகுதிகளுக்கெல்லாம் தனித்து உரிமைபெற்ற மக்களுக்கு எதிராக, கைபர்,போலன் கணவாய் வழியாக வந்து மெல்லமெல்ல பரவிய ஆரியர்களுக்கு எதிராகப்பயன்படும் சொல்.
எனவே திராவிட இனத்தைஒட்டுமொத்தமாகக் குறிக்கும் சொல். ஆக,தொகுத்து ஒரு வரியில் சொல்வதாயின்,தமிழைத் தாய்மொழியாகக் கொண்டதமிழ்நாட்டுத் தமிழரை, உருமாறிய தமிழ்ப்பேசும் மலையாளி, கன்னடர்,தெலுங்கர்ஆகியோரை பிற மொழி பேசிவடமாநிலங்களில் வாழும் திராவிடஇனத்தவரைக் குறிக்கும் சொல் திராவிடம்.
ஆம், இன்றைக்குத் தென்னிந்தியாவிலும்,மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், ஒரிசா,மேற்குவங்கம், பீகார், இலங்கை, மலேசியா,சிங்கப்பூர் என்று பல மொழிகள் பேசிபலவிடங்களில் வாழும் தொன்மைத் தமிழர்மரபில் வந்தவர்கள் கோடிக்கணக்கானோர்உள்ளனர். இன அடிப்படையில்பார்க்கையில் அவர்களும் தமிழர்களே(திராவிடர்களே)
அஸ்ஸாமில் ராங்கியா மாவட்டத்தில்பூடான் செல்லும் சாலையில் 25 கி.மீ.தொலைவில் உள்ள ஓர் ஊரின் பெயர்தமிழ்ப்பூர். நெய்வேலி பழுப்பு நிலக்கரிநிறுவனம் அண்மையில் தன் கிளையைஅமைத்த வடமாநில ஊரின் பெயர் கடம்பூர்.
மேற்கு வங்கத்தில் டாடா கையகப்படுத்தியசர்ச்சைக்குரிய நிலம் உள்ள ஊர் சிங்கூர்.
இந்தியா, பாகிஸ்தானில் உள்ள எல்லாபகுதிகளையும் ஆய்வு செய்தால் ஊர்என்று முடியும் ஊர்கள் ஆயிரக்கணக்கில்எல்லா இடங்களிலும் பரவலாகக்காணப்படுகிறது. எனவே, நான் முன்னர்குறிப்பிட்டதுபோல இந்தியாவும்இந்தியாவைச் சுற்றியுள்ள சில நாடுகளும்தமிழர்களின் தொன்மைப் பகுதியாகும்.
அந்நிலையில் தமிழர் பகுதிக்குள்முதன்முதலில் நுழைந்த வேற்று இனம்ஆரிய இனம். நுழைந்த இனம்பிழைப்பதற்கு மாறாய் ஆதிக்கம் செலுத்தமுனைந்ததால் தமிழ் இனத்திற்கும் (திராவிட இனத்திற்கும்) ஆரியஇனத்திற்கும் ஆயிரக்கணக்கானஆண்டுகளாய் இனப்பகை. எனவே,ஆரியத்திற்கு எதிர்நிலை திராவிடம்என்றானது.
பெரியார் பிடித்த திராவிடம் :
பெரியாரின் திராவிடக் கொள்கையைப்பார்ப்பதற்குமுன் அவரது இலக்கு என்ன,கொள்கை என்ன, விருப்பம் என்னஎன்பதைத் தெரிந்து கொள்வது கட்டாயம்.பெரியார் உலகளாவிய பார்வைகொண்டவர். மனிதநேயத்தின் மறுவடிவம்.மனிதருக்குள் எந்த பேதமும் இருக்கக்கூடாது என்றவர். தனக்குத்தேசாபிமானமோ, பாஷாபிமானமோகிடையாது என்று கூறியவர்.
எனவே, அவர் ஓர் இனத்தின்மீது பற்றோ,மொழியின்மீது பற்றோ, ஒரு ஜாதியின்பற்றோ, ஒரு பண்பாட்டின்மீது பற்றோகொண்டவர் அல்ல. பொதுவுடைமை,சமஉரிமை சமுதாயம் அவர் காணவிரும்பியது. அதற்குத் தடையானதுஎதுவோ அதை எதிர்த்தார், தகர்த்தார். அவர்பிறந்த தமிழ்நாட்டில் வந்தேறிகள் ஆதிக்கம்செலுத்தவும், மண்ணுக்குரியவர்கள்அடிமைகளாய் வாழவும் கண்டு பொறாது,அதை மாற்றத் திட்டமிட்டார்.
மண்ணுக்குரியவர்கள் வீழ்ச்சிக்குக்காரணமான சூழ்ச்சிக்காரர்களைநுட்பமாய்க் கண்டறிந்தார். ஆரியப்பார்ப்பனர்களே அனைத்திற்கும் காரணம்என்று முடிவு செய்தார். தொடக்கத்தில்தமிழகம், கன்னடம், ஆந்திரம், கேரளம்உள்ளடக்கி திராவிட நாடு கோரிக்கையைஅவர்முன் வைத்தாலும் அதன்பின்தமிழ்நாடு அளவிலே தன் கோரிக்கைகளைமுன்வைத்தார்.
பெரியாரை ஆய்கின்றவர்கள் யாராயினும்அவர் பேச்சின் தன்மையைக் கருத்தில்கொள்ளாமல் பேச்சின் நோக்கைக்கருத்தில் கொள்ள வேண்டும். அவர்உள்ளத்தை உற்று நோக்கி உய்த்து உணரவேண்டும். இப்பார்வையில்லாமையேபெரியாரைப் பிழையாக நினைக்கக்காரணமாய் அமைகின்றது.
திராவிடம் என்ற சொல்லாட்சி பெரியார்உருவாக்கியதா? பெரியாருக்கு முன் பலநூறாண்டுகளாய் பயன்பாட்டில் உள்ளசொல் திராவிடம் என்பது.
கி.மு. முதல் நூற்றாண்டிலே மனுஸ்மிருதி,பத்தாம் அத்தியாயத்தில், 43, 44ஆவதுசுலோகத்தில் திராவிட என்ற சொல்கையாளப்பட்டுள்ளது. ஜாதி தர்மத்தைஅனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள்திராவிடர்கள்... திராவிட தேசத்தைஆண்டவர்கள் சூத்திரர்கள் என்கிறதுமனுஸ்மிருதி.
கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாயுமானவர் எழுதிய, கல்லாத பேர்களேநல்லவர்கள் என்னும் பாடலில் திராவிடம்என்ற சொல் மொழியைக் குறிக்கஆளப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர்திராவிட சிசு என அழைக்கப்பட்டார். இங்குதிராவிடம் என்பது தமிழைக் குறிக்கப்பயன்பட்டது.
1856 இல் வெளியிடப்பட்ட கால்டுவெல்என்பவரின் திராவிட அல்லதுதென்னிந்திய மொழிக் குடும்பங்களின்ஒப்பிலக்கணம் (A Comparative Grammar in Dravidian or South Family of Languags) என்றநூலிற்குப்பின் திராவிடம் என்ற சொல்பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது.
திராவிடம் என்ற சொல்லை நீதிக்கட்சியினரோ, பெரியாரோ, திராவிடர்கழகத்தினரோ, திராவிட முன்னேற்றக்கழகத்தினரோ உருவாக்கவில்லை.குறிப்பாக பெரியார் திணித்தார் என்பதுதவறு. அறிஞர் இராம. சுந்தரம் அவர்கள்இது குறித்து, கால்டு வெல்லுக்கு முன்பே,திராவிட என்ற சொல்தென்னிந்தியர்களை,தென்மொழிகளைக்குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதுஎன்கிறார்.
குமாரிலபட்டர் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு)திராவிட பாஷைகள் பற்றிக்குறிப்பிடுகிறார் (tadyatha dravidadi bhassyam ever.... so in the Dravida and other
languages. (ச. அகத்தியலிங்கம்,திராவிட மொழிகள், 22).
மனு ஸ்மிருதியில் திராவிட இனம் பற்றியகுறிப்பு உண்டு.
கியர்சன் (Linguistic Survey of India Vol.I) தனக்குத் தெரிந்தமட்டில் அட்சன்(Dr.Hodgson) என்பவர்தான் திராவிடன்(Dravidan) என்ற சொல்லைமுதன்முதலாகத் தென்னிந்தியமொழிகளைக் குறிக்கப்பயன்படுத்தியதாகக் கூறுகிறார்.
1816இல் வெளியான A.D.Campwell-ன்தெலுங்கு மொழி இலக்கண நூல்முன்னுரையில் எல்லீஸ் என்பார் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு,குடகு, மால்டோ முதலிய மொழிகளைத்தென்னிந்திய மொழிகள் (Dialacts of South INDIA) என்று குறிக்கிறார்.
சமற்கிருதம் தொடர்பாக நூல்எழுதியவர்களும், திராவிட என்றசொல்லை இனம், மொழி தொடர்பாகக்குறித்தனர். 1854 வரை இது தொடர்கிறது.எனவே, (Caldwell coined the) சொல்வதைவிட, அவரே கூறுவதுபோல, “The word I have chosen is Dravidan from Dravida, the adjectival form of Dravida” என்பது பொருந்தும். எனினும், திராவிடஎன்ற சொல்லை வரையறுத்த பொருளில்பயன்படுத்தி, உலகெங்கும் பரவச் செய்தபெருமைக்குரியவர் கால்டுவெல் என்பதில்இரண்டாவது கருத்திற்கு இடமில்லை. –
(காலச்சுவடு, நாகர்கோயில்,செப்டம்பர் 1996, பக்கம் 34-35)
கேரள அறிஞர் டி.கே. இரவீந்திரன்என்பவர் கூறுவது போல கால்டுவெல்லின்,திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்என்ற நூலில் கூறப்பட்டுள்ள சிலகருத்துக்கள் அவரே எதிர்பாராதபண்பாட்டு, சமூக, அரசியல் உணர்வுகளைஏற்படுத்தியது. தென்னிந்திய மொழிகள்பலவற்றை அவர், திராவிட மொழிகள் எனவரையறுத்தது மட்டுமன்றி, தமிழர்கள்தாங்கள் ஆரியப் பார்ப்பனர்களால்சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டுவந்ததை மறுதலித்துத் தங்களைத்தமிழ்நாட்டில் அந்தந்தப் பகுதியில் உள்ளதிராவிட ஜாதி அடையாளத்தைக்கொண்டே குறிப்பிட்டுக் கொள்ளவேண்டும் என்றார்.
இறையியல் அறிஞர் ஜி.யு. போப்மட்டுமன்றி, ஜே.எச்.நெல்சன், மவுண்ட்ஸ்டூவர்ட், எல்பின்ஸ்டன் கிராண்ட் டஃப்போன்ற ஆங்கில அதிகாரிகள்கூடதமிழர்களையும், தமிழ்மொழியையும்குறிக்க திராவிட, திராவிடம் என்றசொல்லைப் பயன்படுத்தினர்.
பேராசிரியர் பி. சுந்தரம்பிள்ளை, ஜே.எம்.நல்லசாமிப் பிள்ளை, டி. பொன்னம்பலம்பிள்ளை, வி. கனகசபை பிள்ளை,சோமசுந்தர பாரதியார், எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை, ஜே.பி.டி. டேவிட்,சீனிவாச அய்யங்கார்,மறைமலையடிகளார் முதலியதமிழறிஞர்கள், நீதிக்கட்சி தோன்றுவதற்குமுன்பே, திராவிடம், திராவிடர் என்றசொற்களை மொழி, மரபின அடிப்படையில்,தமிழ்மொழி, தமிழினம், தமிழ்ப் பண்பாடு,தமிழர் நாகரிகம் ஆகியவற்றைக் குறிக்கப்பயன்படுத்தினர். சீனிவாச அய்யர்ஒருவரைத் தவிர மற்றவர்கள், திராவிடம்என்பதை ஆரியப் பார்ப்பனர்களின்ஆதிக்கத்திற்கும், உயர் தகுதிக்கும்எதிரான கருத்தாக்கமாகப்பயன்படுத்தினர்.
அது மட்டுமல்ல, நீதிக்கட்சியினர்திராவிடம் (திராவிடர்) என்று பேசுகையில்அதைத் தமிழ் நாகரிகம், தமிழ்மொழி, தமிழ்இலக்கியம் ஆகியவற்றோடுதொடர்புபடுத்தியே குறிப்பிட்டனர்.
திராவிட நாகரிகத்தின் மேன்மைமனிதனுக்கு மனிதன் பிறவியிலேயேவேறுபாடு இருப்பதைஏற்றுக்கொள்ளவில்லை. திராவிடச்சிந்தனையின் தலைவர்களானதிருவள்ளுவர், அவ்வை, கம்பர் ஆகியோர்கடவுளின் தலையிலிருந்துபிறந்தவர்களாக உரிமைப்பாராட்டுவதில்லை. ஆரியர்களே அந்தவேறுபாட்டை உருவாக்கி, விரிவாக்கிவர்ணாசிரம தர்மத்தை உருவாக்கினர். (Irschikg - 289).
1892 இல் ஆதி திராவிட ஜனசபையும், 1894 இல் திராவிட மகாஜன சபையும்,தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாம்அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலைசீனிவாசன் ஆகியோரால்உருவாக்கப்பட்டபோது திராவிடர் என்றசொல்லாட்சி பயன்படுத்தப்பட்டது.
1909 ஆம் ஆண்டு, சென்னை பார்ப்பனர்அல்லாதார் சங்கம் (The madras non-brahmin Association) அமைக்க முடிவுசெய்தபோது, சிறுபான்மையினரானபிராமணரைச் சொல்லி, அவர்கள்அல்லாதார் என்று பெரும்பான்மைமக்களை ஏன் அழைக்க வேண்டும் என்று,The Hindu நாளேட்டில் ஆசிரியருக்குக்கடிதம் என்ற பகுதியில் கருத்துத்தெரிவிக்கப்பட்டது. இது அனைவரின்சிந்தனையையும் கிளறவே, 1912 இல்நவம்பர் 10ஆம் நாள் சென்னை திராவிடர்சங்கம் (The Madras Dravidian Association)என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆக,பார்ப்பனர் அல்லாதாரின் அடையாளச்சொல்லாக திராவிடர் என்ற சொல்லாட்சிஅதன்மூலம் நடப்பிற்கு அமைப்பு அளவில்வந்தது.
எனவே, பெரியாருக்கு முன்பே, ஆரியப்பார்ப்பனர்களின் (பிராமணர்கள்)ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள் திராவிடர்என்ற ஒருங்கமைப்பை உருவாக்கினர்என்பதே உண்மை என்பதோடு, சிலர்தவறாக எண்ணிக் கொண்டிருப்பதுபோல,தமிழர்மீது திராவிடர் என்பது பெரியார்திணித்த சொல்லாட்சி அல்ல. பெரியார்கையாண்டதற்கு 20 ஆண்டுகளுக்குமுன்பே கையாளப்பட்ட சொல் இது.
பெரியார் தன் அமைப்பிற்கு முதலில்சுயமரியாதை இயக்கம் என்றேபெயரிட்டார்.
1916-ல் அயர்லாந்து நாட்டிலிருந்து வந்தஅன்னிபெசண்ட்அம்மையார் ஹோம்ரூல்இயக்கத்திற்கு (Home Rule Movement )தலைமையேற்ற பின்னர், அவ்வியக்கம்ஆரியப் பார்ப்பனர்களுக்குச் சார்பாகவும்,அவரது கொள்கைகளுக்கு,சாஸ்திரங்களுக்கு, வர்ணப் பிரிவுகளுக்குஆதரவாகவும் செயல்பட்டமையால், 1916டிசம்பர் 20 ஆம் தேதி டி.எம். நாயர், பி.தியாகராயச் செட்டியார், டாக்டர் சி.நடேசனார் ஆகியோரைப்பொறுப்பாளர்களாகக் கொண்டுதென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (South Indian Liberal Federation )உருவாக்கப்பட்டது. அதன் சார்பில்அவ்வாண்டு டிசம்பரில் (The Non-Brahmin Manifesto) பிராமணர் அல்லாதாரின்கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது.
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்றபெயரில், தென்னிந்தியா என்றுஇருந்தாலும் அது திராவிடத்தைக்குறிப்பதாகவே கொள்ளப்பட்டு, அவ்வாறேஅதன் செயல்பாடுகளும் அமைந்தன.
சென்னையில் தொடங்கப்பட்டஇச்சங்கத்தின் கிளைகள், அமைந்தஇடத்தின் பெயரால், இராயப்பேட்டைதிராவிடர் சங்கம், ஜார்ஜ்டவுன் திராவிடர்சங்கம் என்று திராவிடர் பெயரிலேயேதொடங்கப்பட்டன.
சங்கத்தின் சார்பில், ஜஸ்டிஸ் என்னும்ஆங்கில ஏடு 1917 பிப்ரவரி முதற்கொண்டும், திராவிடன் என்னும் தமிழ் ஏடு, 1917 ஜுன் முதலும் வெளியிடப்பட்டன.ஆந்திரப் பிரகாசினி என்னும் தெலுங்குஏடும் நாளேடாக மாற்றி வெளியிடப் பட்டது. 1885 ஆம் ஆண்டு முதல் வார ஏடாகவெளிவந்து கொண்டிருந்த ஏடு நீதி கட்சிகொள்கைகளைத் தெலுங்கில் சொல்லவாங்கப்பட்டு, நாளேடாகவெளியிடப்பட்டது.
1912இல் சென்னை திராவிடச் சங்கம்உருவாக்கப்பட்ட போதும், 1916 இல்தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்றநீதிக் கட்சி தொடங்கப்பட்டபோதும்பெரியார், நாயக்கர் என்று அழைக்கப்பட்டநிலையில் ஈரோட்டில் வணிகராகப்பணியாற்றிக் கொண்டிருந்தார்.பெரியாரின் வணிக வாழ்க்கை 1905 முதல்1919 ஆம் ஆண்டு வரை.
1919 ஆம் ஆண்டு பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக்கில், ஜெனரல் டயர்என்பவனால் நடத்தப்பட்ட படுகொலை,பெரியாரின் உள்ளத்தில்ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஒருகொதிப்பை உருவாக்கிற்று. ஆங்கிலஆட்சியை ஒழித்தே தீர வேண்டும் என்றுஓர் உணர்ச்சி அவருள் எழ வணிகப்பணியையும், ஈரோடு நகர சபை தலைவர்பதவி உட்பட 29 பதவிகளையும் தூக்கிஎறிந்துவிட்டுக் காங்கிரசில் சேர்ந்தார்.இதைப் பெரியாரே குறிப்பிடுகிறார்.
- (ஆதாரம் : பெரியார் ஒருநடைச்சித்திரம் மயிலைநாதன்)
1919 டிசம்பரில் நடந்த அமிர்தசரஸ்காங்கிரஸ் மாநாட்டிலும், 1920 செப்டம்பரில்கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் சிறப்புமாநாட்டிலும் பெரியார் கலந்து கொண்டார். 1921 இல் கள்ளுக்கடை எதிர்ப்புப் போர், 1924 இல் வைக்கம் போராட்டம்,சேரன்மாதேவி குருகுல எதிர்ப்புப்போராட்டம் நடத்தினார். பார்ப்பன ஆதிக்கம்அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்றஎண்ணம் உடையவராய் காங்கிரஸில்செயல்பட்ட பெரியார், தன்னுடையகருத்துக்களை வெளியிட 1925 மே மாதம்2ஆம் நாள் குடிஅரசு இதழை முதன்முதலில்வெளியிட்டார்.
கல்வி, வேலை வாய்ப்பில்பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தி வரும்நிலையை அகற்ற பெரியார் பெரிதும்முயன்றார். 1916 ஆம் ஆண்டே வகுப்புவாரிபிரதிநிதித்துவம் தர ஒப்புக் கொண்டகாங்கிரஸ், அதைச் செயல்படுத்தத்தவறியதால், காங்கிரஸ் மாநாடுகளில்அதற்குத் தீர்மானம் கொண்டுவரமுயன்றார். ஆனால் ஒவ்வொரு முறையும்இராஜாஜி, சீனிவாச அய்யர், ரங்கசாமிஅய்யர் போன்றவர்களால் அம்முயற்சிதடுக்கப்பட பெரியார் வெறுப்புற்றார்.
1925இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்றகாங்கிரஸ் மாநாட்டிலும் தீர்மானம்கொண்டுவர மறுக்கவே, வெறுப்புற்றபெரியார் வெளியேறினார் காங்கிரசைவிட்டு சுயமரியாதை இயக்கத்தைத்தொடங்கி பார்ப்பனர் அல்லாதார்தன்மானத்தோடும், உரிமையோடும் வாழப்போராடினார்; பரப்புரை ஆற்றினார்.தன்னுடைய கொள்கைக்கு ஏற்றதாக நீதிக்கட்சியின் கொள்கைகள் இருந்ததால்அதன் கூட்டங்களிலும் அடிக்கடி கலந்துகொண்டார்.
1931 ஆம் ஆண்டு ரஷ்யா சென்றுவந்தபின் பெரியாரின் சிந்தனைகளில்புதிய கருத்துக்கள் பிறந்தன. அவரதுபார்வை விரிந்தது. சமதர்மக்கொள்கைகளைப் பெரிதும் பேசினார். 1934இல் ஆங்கில அரசு இந்தியகம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்யவே,சுயமரியாதை இயக்கத்தின் சமதர்மக்கொள்கைப் பிரச்சாரத்திற்கும்முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதன்பின்முழுக்க முழுக்க நீதிக் கட்சியின் சார்பில்தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பெரியார்.
தமிழ்நாடு தமிழருக்கே :
காங்கிரசிலிருந்து விலகி வந்து,சுயமரியாதை இயக்கமும் குடி அரசு இதழும்தொடங்கி, ஆரியப் பார்ப்பன ஆதிக்கஎதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, மூடநம்பிக்கைஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு,தொழிலாளர் நலன் ஆகியவற்றைமுதன்மைப்படுத்தி பரப்புரையாற்றினார்.
1939 ஆம் ஆண்டு பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக சிறையில்இருக்கும்போது தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவதற்குமுன்பே, நீதிக் கட்சி தொண்டர்கள்பெரும்பாலோர் பெரியார்ஆதரவாளராகவே இருந்தனர். சுருங்கக்கூறின் சுயமரியாதை இயக்கமும்,நீதிக்கட்சியும் வேறுபாடின்றி இணைந்துகலந்து செயல்பட்ட நிலையில் பெரியார்நீதிக் கட்சியின் தலைவரானார்.
22.5.1939 அன்று பெரியார்சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். 24.5.1939 அன்று சென்னையில்பெரியாருக்கு மாபெரும் வரவேற்புஅளிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் பேசியபெரியார் இந்தி திணிக்கப்படுவதைவன்மையாகக் கண்டித்தார்.
1940 ஆகஸ்ட் 4 ஆம் நாள் நீதிக் கட்சியின்15 ஆவது மாகாண மாநாடு திருவாரூரில்நடந்தது. அப்போது,
திராவிடர்களுடைய கலை, நாகரிகம்,பொருளாதாரம், ஆகியவைகள்முன்னேற்றம் அடைவதற்கு,பாதுகாப்பதற்குத் திராவிடர்களின்அகமாகிய சென்னை மாகாணம் இந்தியமந்திரியின் நேர்ப்பார்வையின்கீழ் ஒருநாடாகப் பிரிக்கப்பட அதற்கானதிட்டங்களை வகுக்க பெரியார் ஈ.வெ.ரா.உள்ளிட்ட தலைவர்களைக் கொண்ட ஒருகமிட்டியை நியமனம் செய்வது என்றும்இம்மாநாடு தீர்மானிக்கிறது என்றதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆக, இந்நிலை வரை (1940 வரை)திராவிடம் என்பதை மற்றவர்களேபயன்படுத்தினர். இதன்பின்னரே பெரியார்பயன்படுத்தினார். தமிழர்கள், கன்னடர்கள்,தெலுங்கர்கள், மலையாளிகள் என நான்குமொழிப் பேசும் திராவிட மக்களைஉள்ளடக்கி நீதிக்கட்சி செயல்பட்டாலும்,அதன் முதன்மைக் கொள்கைகளான,ஆரியப் பார்ப்பன எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு,திராவிட நாடு கோரிக்கை போன்றவற்றுள்தமிழர்களைத் தவிர மற்ற மூன்றுமொழியினரும் ஆர்வம் காட்டவில்லை.மாறாக ஆரியப் பார்ப்பனர்களின்ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு,அவர்களுக்கு அடிபணிந்தே நின்றனர்.
திராவிட நாடு கோரிக்கைக்குப் பெரியார்ஜின்னாவின் உதவியையும் நாடினார்.பெரியாரின் கோரிக்கையை ஆதரித்தஜின்னா, சென்னை மக்களுக்கு நான்எப்பொழுதும் அனுதாபம் காட்டியேவருகிறேன். அவர்களில் 90 விழுக்காடுபிராமணர் அல்லாதார். அவர்கள்தங்களுடைய திராவிடஸ்தான் உருவாக்கவிரும்பினால் அதற்காகப் போராடவேண்டியவர்கள் உங்கள் மக்களேயாவர்.பிராமணர் அல்லாத மக்களின் நியாயமானகோரிக்கையை நான் ஆதரிப்பேன் என்றுவாக்குறுதியளிக்கிறேன்... என்று பதில்எழுதினார். ஆங்கில ஆட்சியிலிருந்துவிடுதலை பெறுவதைவிட, ஆரியப்பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெறுவதே முக்கியம். இந்திய நாட்டின்சுதந்திரம் அந்நியரிடம் மட்டுமல்ல, ஆரியப்பார்ப்பன ஆதிக்கத்திலிருந்துவிடுபடுவதிலும் உள்ளது என்பதில்பெரியார் உறுதியாய் இருந்தார்.
பெரியாரின் இலக்கும் அணுகுமுறையும்உயரியதாகவும், உண்மையானதாகவும்இருந்தும் மக்களை அதற்கேற்பவிழித்தெழச்செய்து, அணி திரட்டுவதுவிரைந்து நடக்கவில்லை.
மேலும் ஆங்கில ஆட்சிக்குப் பெரியார்ஆதரவளித்து, ஆரியப் பார்ப்பனர்அல்லாதாருக்கு உயர்வு கிடைக்கச்செய்யலாம் என்ற முயற்சியும்வெற்றியளிக்கவில்லை. ஆங்கிலஆட்சியாளர்கள் தொடர்ந்து இவரைப்புறக்கணித்து வந்தனர். காங்கிரசின்செல்வாக்கு கூடிவந்த நிலையில்,நீதிக்கட்சியைச் சீமான்கள், மிராசுதாரர்கள்கட்சி, ஆங்கிலேயர்களுக்குத் துதிபாடும்கட்சி ஒன்று மக்கள் வெறுக்கும் நிலையும்வந்தது. எனவே, காலத்திற்கேற்ப நீதிக்கட்சியின் அமைப்பிலும், இலக்கிலும்மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம்எழுந்தது.
1935 ஆம் ஆண்டு செங்குந்தர் மாநாட்டில்பெரியாருக்கு அறிமுகமான அண்ணா,பெரியாரின் கொள்கைகளைப் பரப்பபெரிதும் துணை நின்றார். எனவே,குடிஅரசு பத்திரிகையின்உதவியாசிரியராக அவரைப் பெரியார்அமர்த்தினார்.
அண்ணாவின் எழுத்துக்களும்பேச்சுக்களும் நீதிக் கட்சியின்கொள்கைகளை மக்களிடையேபெருமளவிற்குக் கொண்டு சேர்த்தன.
1942இல் பெரியாரின் உதவியுடன்திராவிட நாடு பத்திரிகையை அண்ணாதுவக்கினார். அண்ணாவின் முயற்சியால்நீதிக் கட்சி புத்துயிர் பெற்றாலும், மக்களின்மதிப்பீடு மாறவில்லை. எனவே, கட்சியின்பெயரை மாற்றி புதிய வடிவில், சரியானகொள்கைத் திட்டங்களுடன் கொண்டுசெல்ல அண்ணா வலியுறுத்தினார்.பெரியார் அதை ஏற்றுக் கொண்டார்.
1944 ஆகஸ்ட் 27 ஆம் நாள் சேலத்தில்நடந்த நீதிக் கட்சியின் 11 ஆம் மாநாட்டில்,திராவிடர் கழகம் என்று நீதிக் கட்சியின்பெயரை மாற்ற அண்ணா தீர்மானம்கொண்டு வந்தார். அத்துடன் திராவிட நாடுஎன்ற பெயருடன் சென்னை மாகாணம்மத்திய அரசின் கட்டுப்பாடில்லாதுஇங்கிலாந்து பிரதம செயலாளரின்நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்ட ஒரு தனிநாடாக பிரிக்கப்பட வேண்டும் என்றும்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆக, 1909ஆம் ஆண்டு பார்ப்பனர் அல்லாதார்சங்கம் தொடங்கப்பட்டதிலிருந்து 1944இல்திராவிடர் கழகம் என்ற பெயர் சூட்டப்பட்டதுவரை, திராவிடம் என்ற சொல்லாட்சிபயன்படுத்தப்பட்டதில் பெரியாரின்வலியுறுத்தலோ, திணிப்போ ஏதும்இல்லை. திராவிடம் என்ற சொல்லாட்சிபயன்படுத்தப்பட்டபோது பெரியார்காங்கிரசில் தீவிரமாக உழைத்துக்கொண்டிருந்தார்.
உண்மை இவ்வாறிருக்க, பெரியார்வேண்டுமென்ற உள்நோக்குடன்திராவிடத்தைத் திணித்தார். தமிழர்என்பதைப் புறக்கணித்தார் என்று கூறுவதுமோசடித்தனமல்லவா?
திராவிட இயக்கத்தின் ஆணிவேரான1909 ல் தொடங்கப் பட்ட பிராமணர்அல்லாதார் சங்கத்தின் முதன்மைக்கொள்கை பெரும்பதவி முதல் சிறு பதவிவரை எல்லாவற்றையும் பிராமணர்கள்பிடித்துக் கொண்டிருப்பதை மாற்றி,பெரும்பான்மை மக்களுக்கு அவர்கள்மக்கள் தொகை விகிதாச்சாரப்படிபதவிகள் கொடுக்கப்பட வேண்டும்என்பதாய் இருந்ததால், இங்கு இனப்பார்வைதான் இயல்பாய் எழுமேயன்றி,மொழிப் பார்வை வர வாய்ப்பே இல்லை.எனவேதான் பிராமணர் அல்லாதாரைக்குறிக்கும் பொருள் பொதிந்தபொருத்தப்பாடுடைய, திராவிடர் என்றசொல் தேர்வு செய்யப்பட்டுபயன்படுத்தப்பட்டது.
அப்போது ஆரியர் ஆதிக்கத்தை வீழ்த்ததிராவிடர் என்ற எதிர்நிலையேவலுசேர்க்கும், ஒருங்கிணைக்கும் என்றஉண்மை உணரப்பட்டே திராவிடர் என்றசொல் பயன்படுத்தப்பட்டது. அந்தஅமைப்பை தமிழர் மட்டும்ஏற்படுத்தவில்லை. மலையாளி, கன்னடர்,தெலுங்கர், தமிழர் என்ற நான்கு மொழிப்பேசும் தலைவர்களும் உருவாக்கினர்.எனவே, அந்நிலையில் தமிழர் என்ற பெயர்சூட்டப்படவோ, அணி அமைக்கவோவாய்ப்பே இல்லை, அதற்கான விழிப்பும்,விவரமும் இல்லை என்பதே உண்மை.அதை அறிவுள்ள அனைவரும் ஒப்புவர்.மேலும் சிறுபான்மையினரானஆரியர்களைச் சொல்லி அவர்கள்அல்லாதார் என்றுபெரும்பான்மையினரைச் சுட்டுவதேகேவலம், மானக்கேடு என்பதாலே, ஆரியர்அல்லாதார் திராவிடர் என்ற உண்மைநிலைக்கு ஏற்ப திராவிடர் என்ற சொல்இயல்பாகவும், கட்டாயம் கருதியும்பயன்பாட்டிற்கு வந்தது என்பதும் பெரும்உண்மை.
அது மட்டுமல்ல, திராவிடர் என்ற பெயர்சூட்டப்பட்டதற்குப் பெரியாரின் பங்கு ஏதும்இல்லை. காரணம், அப்போது அவர் அந்தஅமைப்பில் இல்லை. அவர் காங்கிரசில்இருந்தார்.
எனவே, கன்னடர் என்பதாலே, தமிழர்என்ற சொல்லை விலக்கித் திராவிடர் என்றசொல்லைத் திணித்தார் பெரியார் என்றகுணாவின் குற்றச்சாட்டுகோமாளித்தனமானது; உள்நோக்கம்உடையது; மோசடியானது!
ஆய்வறிஞர் அ.மார்க்ஸ் அவர்கள்,பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்கிறகூறுபடுத்தலை ஏற்காதவர்கள் தொடர்ந்துதிராவிடக் கருத்தாக்கத்தை எதிர்த்துவருகின்றனர். தமிழர்களைப்பிளவுபடுத்துவதற்காக ஆந்திரரும்,மலையாளியும் சேர்ந்து உண்டாக்கியதேநீதிக்கட்சி என சேரன்மாதேவி புகழ்வ.வே.சு. அய்யர் அன்றே எழுதினார்(பாலபாரதி, மே, 25). ம.பொ.சி. அதனைத்தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்(தமிழகத்தில் பிற மொழியினர் 1976).குணா இதைக் கொட்டி முழக்குகிறார்.
இதுவே குணாவின் பாரம்பாரியம்.
என்று மிகச் சரியாகக் கணித்துச்சொல்லியுள்ளார்.
வ.வே.சு. அய்யர், சி.இராஜகோபாலாச்சாரியார் இவர்களின்அணுக்கத் தொண்டர் ம.பொ.சி. இந்தம.பொ.சி. யின் மறுவடிவம் குணா.பின்வரும் தலைப்புகளில் விரிவாகக்காணலாம். தமிழ் உணர்வாளர் என்றபோர்வையில் ஆரியத்தின் அடிவருடியம.பொ.சி.யின் அடுத்த வாரிசு குணா.எனவே, இவரிடம் தமிழர்கள்எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
குணாவின் முதன்மை இலக்குஆரியத்தின் மீதான வரலாற்றுப் பழியைத்துடைக்க வேண்டும். ஆரியர்கள் நமக்குஎதிரிகள் அல்ல என்பதைத் தமிழர்கள்மத்தியில் உருவாக்க வேண்டும். அதன்வழி ஆரியத்தைத் தூக்கி நிறுத்தவேண்டும் என்பதே.
அதற்கு எதிராய் இருப்பது திராவிடர்கழகம், பெரியார், தி.மு.க. அண்ணா,கலைஞர். எனவே, இவர்களைக் கொச்சைப்படுத்த வேண்டும். அதன்வழி ஆரியப்பார்ப்பனர்க்கு எதிர்ப்பில்லா நிலையைஉருவாக்கி ஆரியப் பார்ப்பனர்களும்தமிழர்களே என்று அவர்களையும்தமிழராக்கி விட வேண்டும். ஆனால்தமிழனுக்குத் தன் வாழ்நாளையேசெலவிட்ட பெரியாரைத் தமிழர்க்குஎதிரியாக்கி விடவேண்டும் என்று சதித்திட்டம் தீட்டி அதன் முதல்வேலையாகத்தான் திராவிடத்தால்வீழ்ந்தோம் என்ற நூலைத் தீட்டியுள்ளார்குணா.
அதனால்தான் அந்த நூல் முரண்பாடுமிக்கதாயும், குழப்பம் குவிந்ததாயும், திரிபுநிறைந்ததாயும், மோசடிமிக்கதாயும்,சூழ்ச்சி நிறைந்ததாயும், தமிழர்களைஏமாற்றுவதாயும் உள்ளது.
எடுத்துக்காட்டாக, திராவிடம் என்பதைஎதிர்க்கும் குணா, வடக்கு வாழ்கிறது;தெற்குத் தேய்கிறது என்ற முழக்கத்தைஏற்கிறார். இந்த முழக்கம் திராவிடத்தின்அடிப்படையில் எழுவதுதானே!தமிழர்களுக்கு எதிரானவர்கள்கன்னடர்கள், தெலுங்கர்கள்,மலையாளிகள் என்றால், குணாவின்முழக்கம் எதுவாக இருக்க வேண்டும்?
கன்னடம் வாழ்கிறது! தமிழகம்வீழ்கிறது!
ஆந்திரா செழிக்கிறது! அன்னைத்தமிழ்நாடு அழிகிறது!
கேரளா உயர்கிறது! தமிழ்தேசம்தாழ்கிறது! என்றல்லவா முழங்கவேண்டும்?
அடுத்து திராவிட ஓர்மையின்அடிப்படையில் வடவர் பொருளியல்சுரண்டலைப் பற்றிய நல்லதோர் அறிவுஅண்ணாவுக்கு இருந்தது என்று கூறும்குணா (திரா. வீழ். 13),
தமிழர் ஒரு தனித் தேசிய இனமென்னும்ஓர்மையை ஒழிப்பதற்கென்றே, திராவிடஓர்மை என்னும் பொய்மை தமிழரின்தலைமேல் சுமத்தப்பட்டது (திரா. வீழ் 17)என்கிறார்.
வடவர் எதிர்ப்பிற்குத் திராவிடம் நல்லதீர்வு என்று முதலில் சொல்லிவிட்டு,நான்கு பக்கங்கள் தாண்டி, திராவிடம்என்னும் தமிழர் விரோத கொள்கையாலேதமிழர் வீழ்ந்தனர் என்கிறார். இந்தக்குழப்பங்களுக்கு, முரண்பாட்டிற்கு என்னகாரணம், ஆரியத்திற்கு ஆதரவாய் எழுதவேண்டும் என்ற ஆர்ப்பரிப்பில்(அறிவிழந்து அல்ல) அயோக்கியத்தனமாய்எழுதுகிறார் என்பதுதான்.
வடவர் என்கின்ற போதெல்லாம் குணாகுஜராத்தியார், மார்வாடி என்று மட்டுமேகொண்டு, ஆரியர்களை விட்டு விடுகிறார்.விட்டுவிட்டால்கூட மன்னிக்கலாம்,அவர்களைத் தமிழரோடு சேர்த்துத்தமிழராக்குகிறார்.
வடவர் எதிர்ப்பு என்பதில் உண்மையானஅக்கறை எவருக்கு இருப்பினும் அவர்கள்ஆரியர்களையும் சேர்த்தே எதிர்க்கவேண்டும்.
தமிழ்நாட்டில் தங்கி தமிழ் பேசுவதால்ஆரியர்களைத் தமிழர்கள் என்று ஏற்கவேண்டுமாம். ஆனால், 600 ஆண்டுகளாகத்தமிழகத்திலே வாழ்ந்து தமிழ் பேசும் ஆதித்தமிழர், கன்னடத் தமிழர்களைத்தமிழ்நாட்டை விட்டுத் துரத்த வேண்டுமாம்.
இப்போது புரிகிறதா, நூல் எழுதும் முன்குணாவிற்குப் பையும் மையும்நிரப்பியவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள்என்பது!
பொருளாதார அடிப்படையில் வடவர்எதிர்ப்பு என்றாலும் பண்பாட்டுஅடிப்படையில் வடவர் எதிர்ப்பு என்றாலும்அது ஆரியத்திற்கு எதிரானதாகவும்இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்தஎதிர்ப்புகளுக்கு திராவிடம் என்றஓர்மையில் ஒன்று சேர பெரியார் எடுத்தமுயற்சி அறிவுப்பூர்வமானது. அதற்குபோதிய சூழல் இல்லாமல், மொழிவழிமாநிலம் அமைந்தபின் தமிழ்நாடு, தமிழர்என்ற நிலையில் ஓர்மையை உண்டாக்கபெரியார் எடுத்த முயற்சியும் சரியானதுஎன்பதில் எவரும் மறுப்பு உரைக்கமுடியாது மடையர்களைத் தவிர அல்லதுமனுநீதி பார்ப்பனர்களின் அடிவருடிகளைத்தவிர.
நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்
ஆசிரியர் - மஞ்சை வசந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக