சனி, 27 ஜனவரி, 2018

இனவழித் தேசியமா? மொழிவழித் தேசியமா?




மொழிவழி தேசிய இனம் என்றமெய்மையைவிட்டு இன வழியில் அணிசேர்த்து பெரியார் போராடியதுஅறிவியலுக்கும் நடைமுறைக்கும்பொருந்தாத தவறான அணுகுமுறையாகும்என்று அடுத்த குற்றச்சாட்டை வைக்கிறார்குணா.


உலகச் சிந்தனையாளரான பெரியார்இந்தியா அளவிலே ஆரிய திராவிடப்போரைத் தொடங்கியிருப்பார். ஆனால்,அதற்குரிய உணர்வு இந்தியாவெங்கணும்ஊட்டப்படாமலும், நீர்த்தும் கிடந்தது.குறிப்பாகத் தமிழகம், மராட்டியம் நீங்கலாய்மற்ற பகுதிகளில் ஆரிய ஆதிக்கஎதிர்ப்புணர்வு அவ்வளவாக இல்லை.மேலும் வடஇந்தியப் பகுதியில் மொழியால்அவர்கள் மாறிப் போனதால் ஆரியர்திராவிடர் என்ற உணர்வு அவர்கள்பெறுவதில் பெருந் தடையிருந்தது.மராட்டியத்தில் ஜோதிராவ் பூலே ஊட்டியஉணர்வை மற்ற இடங்களில் ஊட்ட ஆள்இல்லை.

எனவே, ஒரு மொழிக் குடும்பஉறுப்பினர்களை மட்டுமாவது (தமிழ்,தெலுங்கு, கன்னட, மலையாள மொழிபேசுகின்றவர்களையாவது) ஒன்று சேர்த்துஆரியத்திற்கு எதிரான போர் நிகழ்த்தமுடிவு செய்தார். மொழிவழி தேசிய இனம்என்று ஏன் எடுக்கவில்லை என்பதற்கானகாரணத்தை அவரே விளக்கி விட்டார்.தமிழ்மொழி என்றால் பார்ப்பனர்களும்சேர்ந்து கொள்வர். அப்படியாயின்ஒழிக்கப்பட வேண்டிய ஆதிக்கவாதியைஉடன் சேர்த்துக் கொண்ட தத்துவ தவறுநிகழும், தடம் புரண்டு இலக்கு தவறும் மாறும் என்பதாலே இனவழி அணிஅமைத்தார்.

இந்தியாவில் சீர்திருத்தம் காணமுற்படும் எவரும், உலக வரலாற்றுநிகழ்வுகளை உதாரணமாகக் கொண்டுஅல்லது முன்மாதிரியாகக் கொண்டுசெயல்பட முனைவது அறியாமை ஆகும்.காரணம், இந்தியாவில் காணப்படும்சிக்கல் தனித்தன்மை வாய்ந்தது.இந்தியாவில் உள்ளது போன்ற ஜாதிஆதிக்கம் வேறு எந்த நாட்டிலும் இல்லை.உலகின் மற்ற இடங்களில் மொழிஅடிப்படையில் மக்களை இனம் பிரிக்கஇயலும். ஆனால், இந்தியாவில் ஒரேஇனத்தவர் பல மொழி பேசும் நிலையில்மொழியைக் கையில் எடுத்தால் இனம்அடிபட்டுப் போகும். அறிவியல்அணுகுமுறை என்பது சூழலுக்கும்இடத்திற்கும் ஏற்ப கொள்ளப்படுவதே தவிர,மேலை நாட்டு விதியை அப்படியே ஏற்றுநடப்பதல்ல.

பெரியார் இயக்கம் தொடங்கியபோதுஇருந்த கேடு, ஆரியப் பார்ப்பன ஆதிக்கம்.தமிழன் வாழ்வு, வளர்ச்சி, பண்பாடு, கலை,கல்வி, வேலை, வருவாய் என்று பலவும்அவர்களால் தகர்க்கப்பட்டு, தமிழர்கள்விலங்கினும் கீழாய் உழன்ற நிலை.அப்படிப்பட்ட நிலையிலிருந்து தமிழர்களைமீட்க அப்போதைய உடனடி தேவை, ஆரியஆதிக்கத்திலிருந்த தமிழர்களை(திராவிடர்களை) மீட்பதே. எனவேதான்பெரியார் அதைக் கையில் எடுத்தார்.

அப்படி கையில் எடுத்தமைக்காக அவரேபல கோணங்களில் காரணங்களைக்கூறுகிறார்.

திராவிட நாடு என்பது சென்னைமாகாணமும் அதைச் சுற்றியுள்ளபகுதிகளுமே என்று 1939இல் பெரியார்விளக்குகிறார்.

நான் முன்னமே சுட்டிக்காட்டியதுபோல்,

1944இல், திராவிடர்களுடைய கலை,நாகரிகம், பொருளாதாரம் ஆகியவைகள்முன்னேற்றம் அடையவும்,பாதுகாப்பதற்கும், திராவிடர்களின்அகமாகிய சென்னை மாகாணம், இந்தியமந்திரியின் நேர்ப்பார்வையின்கீழ் ஒருதனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டும்என்றார் பெரியார்.

ஆனால் மொழிவாரி மாநிலம்பிரிக்கப்பட்டவுடன் திராவிட நாடு என்றஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவைநீங்கலான தமிழ்நாட்டை மட்டுமே தனிநாடாகப் பிரிக்க வேண்டும் என்றகோரிக்கைக்கு வருகிறார்.

ஆந்திரா பிரிந்ததிலிருந்தே, கன்னடமும்,மலையாளமும் சீக்கிரம் பிரிந்தால்தேவலாம் என்று எனக்குத்தோன்றிவிட்டது. என்ன காரணம் என்றால்,

1.      கன்னடியனுக்கும், மலையாளிக்கும்திராவிட இனப் பற்றோ, சுயமரியாதையோ,பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லைஎன்பதாகும். எப்படியெனில் அவர்களுக்குவருணாசிரம வெறுப்பு கிடையாது.சூத்திரன் என்பது பற்றிய இழிவோ,வெட்கமோ பெரும்பாலோருக்குக்கிடையாது. மத, மூடநம்பிக்கையில் ஊறிவிட்டார்கள்.

2.      அவர்கள் இருவருக்கும், மத்தியஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தங்கள்நாடு அடிமையாக இருப்பது பற்றியும்சிறிதும் கவலையில்லை. இந்தப்பிரிவினை முடிந்து, தமிழ்நாடு தனிநாடாகஆகி விட்டால், நமது சமுதாய, சமய சுதந்திரமுயற்சிக்கும் அவை சம்பந்தமானகிளர்ச்சிக்கும், புரட்சிக்கும் நமது நாட்டில்எதிர்ப்பு இருக்காதென்றும், அப்படியேஇருந்தாலும் அதற்குப் பலமும் ஆதரவும்இருக்காது என்று கருதுகிறேன்.

அவர்கள் மூவரும் ஒழிந்த பிறகுஅவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்கஒரு சொல் நமக்குத் தேவையில்லை,என்றாலும் திராவிடன் என்ற சொல்லைமட்டும் விட்டுவிட்டு, தமிழன் என்றுசொல்லியாவது தமிழ் இனத்தைப்பிரிக்கலாம் என்றால், அது வெற்றிகரமாகமுடிவதற்கு இல்லாமல், பார்ப்பான்(ஆரியன்) வந்து நானும் தமிழன்தான்என்று கூறிக் கொண்டு உள்ளேபுகுந்துவிடுகிறான். என்று 12.10.1955அன்று பெரியார் ஓர் அறிக்கை விடுகிறார்.

இதைவிட அவரது தமிழ்ப் பற்றிற்கும்,தமிழர் பற்றிற்கும், தமிழ்த் தேசியபற்றிற்கும் வேறு என்ன சான்று வேண்டும்.இதை எல்லாம் எதையும் கருத்தில்கொள்ளாமல் எடுத்தேன், கவிழ்த்தேன்என்று குற்றச்சாட்டுகளைக் கூறுவதுகூறுவோரின் தரமின்மையையே காட்டும்.மிகச் சிறந்த ஆய்வாளர் எஸ். வி.இராசதுரை அவர்கள், இந்தியாமுழுவதிலும் வடஇந்தியப்பெருமுதலாளிகளும், பார்ப்பனர்களும்,உயர்ஜாதியினரும் மேலாட்சியைஉறுதிபடுத்திக் கொண்டுவிட்டதைக் கண்டபெரியார், அந்த மேலாட்சியிலிருந்து தான்வாழ்ந்த, தனது இயக்கம் கொடி விரித்த,அதன் நிழல்பட்ட நிலப்பகுதியையாவது(தமிழ்நாட்டையாவது) விடுவிக்க முடியுமாஎன்றுதான் முயற்சி செய்து பார்த்தார்.

தனித் தமிழ்நாடு கோரிக்கையும்,திராவிடநாடு கோரிக்கையும் பெரியார்இந்தித் திணிப்புக்கு எதிராகக் குரல்கொடுக்கத் தொடங்கியபின், தமிழ்நாட்டில்மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும்கொண்டிருந்த பல்வேறு சக்திகளும்,நீரோட்டங்களும், சுயமரியாதைஇயக்கத்துடன் வந்து சேர்ந்துசங்கமித்ததன் காரணமாகஉருவானதுதான். அந்த வரலாற்றுசூழலிணைவில் தான் தமிழ்த் தேசியம்என்பது முதன்முதலாக உருவாகியது.தனித் தமிழ்நாடு கோரிக்கையும்முளைவிட்டது. எனினும்மொழியடிப்படையிலான தேசியம் என்பதுதன்னளவில் மனிதர்களின்விடுதலைக்கான கூறுகளைக்கொண்டிருக்காது என்று பெரியார்கருதினார்... என்று மிகத் தெளிவாகக்குறிப்பிடுகிறார்.

தந்தை பெரியார் தமிழ்த் தேசியத்தின்எதிரி என்கிறவர்கள் இதை நன்குஆராய்ந்து பார்க்க வேண்டும். அதுமட்டுமல்ல, பெரியார், மொழிஅடிப்படையிலான தேசியம் தன்னளவில்மனிதர்களை விடுவிக்காது என்றுஉறுதியாய் நம்பியதன் காரணம் என்ன?

மொழியால் மட்டும் மக்களைப்பிரித்துவிட்டு, பண்பாட்டில், கலையில்,கலாச்சாரத்தில், விழாக்களில், மரபுகளில்,ஆண்டுக் கணக்கீட்டில், கல்வியில்,உத்தியோகத்தில் மீட்சியில்லாமல்ஆரியத்திற்கு அடிமையாயும், ஆரியப்பண்பாட்டுக் கலாச்சார பிடியிலும்,மூடநம்பிக்கையின் முடைநாற்றத்திலும்அமிழ்ந்து கிடந்தால் அது விடுதலையா?உண்மையான விடுதலை என்பதுஇவற்றில்தானே உள்ளது.

எனவேதான் பெரியார், ஆரிய ஆதிக்கஎதிர்ப்பைத் தமிழர் மீட்சிக்கான வழியாகஎடுத்தார். அதனால்தான் வீழ்ந்து கிடந்ததமிழினம் விழித்தது, எழுந்தது, உயர்ந்தது.இன்னும் முழுமையாக நம்மை நாம் மீட்கஆரியம் தன் எதிர்ப்பைக் காட்டியேவருகிறது. தமிழாண்டை மீட்டால்,  மீண்டும்ஆரியம் அதைத் தகர்த்துத் தன் கலாச்சாரதிணிப்பையே நிகழ்த்துகிறது. இந்தயதார்த்த நிலைகளைப் புறந்தள்ளிவிட்டு,வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோஎன்று ஒரு மாபெரும்இனத் தலைவர்மீதுஇழிவு சுமத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.

பெரியாரின் கொள்கை முடிவையே அன்றைக்கு இருந்த தமிழறிஞர்களும்கொண்டிருந்தனர். குறிப்பாக குணாஏற்றிப் போற்றும் தேவநேயப் பாவாணரும்கொண்டிருந்தார்.

04.12.1938 அன்று காரைக்குடியில் நடந்தஇராமநாதபுர மாவட்ட இரண்டாவது தமிழ்மாநாட்டில், அம்மாநாட்டின் தொண்டர்படைத் தலைவராய் இருந்தவர் தேவநேயப்பாவாணர். அம்மாநாட்டிற்குத் தலைமைவகித்தவர் சோமசுந்தர பாரதியார்.அம்மாநாட்டைத் தொடங்கி வைத்தவர்கா.சு.பிள்ளை அவர்கள், தமிழர்களின்பெருமை, ஆரியர் வருகையால் ஏற்பட்டவீழ்ச்சி ஆகியன பற்றி அய்ரோப்பியஅறிஞர் ஜில்பர்ட் ஸ்லேட்டர் கூறியதைத்தொகுத்துக் கூறித் தனித் தமிழ் மாநிலம்உருவாக்கப்பட வேண்டும் என்பதைவற்புறுத்தினார் - (குடிஅரசு 02.01.1938)

மேற்படி மாநாட்டை நடத்துவதற்குத்திருச்சியில் கூடிய கலந்துரையாடல்கூட்டத்திற்கு உமா மகேஸ்வரன் பிள்ளைதலைமை தாங்கினார். கருமுத்துதியாகராச செட்டியார், பண்டிதர்மீனாட்சிசுந்தரம், பண்டிதமணி கதிரேசசெட்டியார், டாக்டர் சொக்கலிங்கம், பரிமளாபல்லவராயன், நா.மு. வேங்கடசாமிநாட்டார், அண்ணா, குஞ்சிதம், தேவநேயப்பாவாணர், திருப்பூர் சென்னியம்மாள்போன்றோர் கலந்து கொண்டனர்           -குடிஅரசு, 07.11.1937

அந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில்கீழ்க்கண்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

1.தமிழ்க் கலையையும், தமிழர்களையும்பாதுகாக்க தமிழர் சங்கம் அமைப்பது. 
2.தமிழ் வளர்ச்சிக்குத் தனிப் பல்கலைக்கழகம் ஏற்படுத்த வேண்டும்.           

3.வார்தா கல்வித் திட்டம் கல்விவளர்ச்சிக்குப் பயனற்றது போன்றதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆக, எந்தவொரு விடுதலையும் கலை,பண்பாடு, மொழி, கல்வி, வேலை வாய்ப்பு,சமயம், கருத்து, விருப்பு போன்றவற்றின்விடுதலையை உள்ளடக்கியே இருக்கவேண்டும் என்பதைத் தமிழர்களும், தமிழர்தலைவர்களும் கூறினர் என்பது இதன்வழிபுலப்படுவதோடு, பெரியார் கருத்தையேஇவர்களும் ஏற்றனர் என்பதுதெளிவாகிறது.

மொழியின் அடிப்படையில் தமிழர்ஒற்றுமை காண வேண்டும். இனஅடிப்படையில் அணி திரட்டியது தவறுஎன்போருக்கு, பெரியாரின் கீழ்க்கண்டபேச்சே பதில் அளிக்கிறது.

தமிழும், தமிழ்நாடும், தமிழ்மக்களும்இப்படிப் பிரிந்து கிடக்கின்ற காரணத்தால்,ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள் திராவிடநாடு என்றும், திராவிட மக்கள் என்றும்,திராவிடக் கலாச்சாரம் என்றும்எடுத்துக்காட்டிப் புத்துணர்ச்சி ஏற்படுத்தபாடுபட்டு வருகிறோம். தமிழ் என்பதும்,தமிழர் கழகம் என்பதும், மொழிப்போராட்டத்துக்குத்தான் பயன்படுமே தவிரஇனப் போராட்டத்திற்கோ, கலாச்சாரப்போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது.

ஆரியர்கள் முதலில் நம்கலாச்சாரத்தைப் புகுத்தித்தான் நம்மைவெற்றி கொண்டார்கள். நம்கலாச்சாரத்தைத் தடுத்துதான் நம்மீதுஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள்.நாமும் நம் கலாச்சாரத்தை மறந்து ஆரியக்கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டதால்தான்அவர்களுக்குக் கீழான மக்களாக அவர்களுடைய வைப்பாட்டி மக்களாக சூத்திரர்களாக, பஞ்சமர்களாகஆக்கப்பட்டோம்.

எனவே, ஆரியக் கலாச்சாரத்திலிருந்துவிடுபட வேண்டுமென்றால், மொழிப்போராட்டத்தால் மட்டுமே வெற்றி பெற்றுவிட முடியாது. கலாச்சாரத்தின்பேரால்இனத்தின்பேரால் போராட்டம் நடத்தப்படவேண்டும். அதில் வெற்றி பெற வேண்டும்.அப்போதுதான் நாம் விடுதலைபெற்றவராவோம்.

மொழிப் போராட்டம், கலாச்சாரப்போராட்டத்தின் ஒரு பகுதிதானே ஒழியமுழுப் போராட்டமாகவே ஆகிவிடாது.

சட்டம், சாஸ்திரம், சமுதாயம்,சம்பிரதாயப் பழக்க வழக்கங்கள்,புராணங்கள், இதிகாசங்கள் இவைஎல்லாவற்றிலுமே நம் இழிவு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இவைஎல்லாவற்றிலிருந்துமே நம் இழிவுநீக்கமடைந்தாக வேண்டும். மொழியால்மேம்பாடும் வெற்றியும்பெற்றுவிடுவதாலேயே நமது இழிவும்,அதற்குக் காரணமான கலாச்சாரமும்ஒழிந்துவிட மாட்டா. மேலும் இந்த இழிவால்பாதிக்கப்படக் கூடியவர்கள் தமிழ்மொழிபேசுகிறவர்கள்  தமிழர்கள் என்பவர்கள்மட்டுமல்லாமல், இந்தியாவின் மற்றமாகாணங்களிலும், அதாவது வேறு பலமொழி பேசும் மக்கள் உள்ள வங்காளம்,பீகார், பம்பாய், மகாராட்டிரம் முதலியமாகாணங்களிலும் உள்ளனர். அங்குள்ளதாழ்த்தப்பட்ட தோழர்களும் தங்களைத்திராவிடர்கள் என்றே கூறிக்கொள்கின்றனர். உண்மையில் அவர்களும்திராவிடர்கள்தாம்.

இவர்கள் அனைவரும்இன்றில்லையானாலும், நாளை நிச்சயம்ஆரியத்தை எதிர்க்க  அதற்காகப் புரட்சிசெய்ய ஒன்றுபடப்போவது நிச்சயம்.எனவேதான், நாம் பல எதிர்ப்புக்கிடையேயும், திராவிடர் கழகம் என்றபெயரால் தொடர்ந்து பாடுபட்டுவருகிறோம்.

- (24.01.1950 பெரியார் சொற்பொழிவு,விடுதலை இதழ் 27.01.1950).

எனவே, திராவிடம் என்பதை பெரியார்கையில் எடுத்தது ஆரியர்களுக்குஎதிராகத்தானே தவிர, மலையாளிகள்,கன்னடர்கள், தெலுங்கர்களுக்கு ஆதரவாகஅல்ல என்பதைத் தமிழர்கள் அறியவேண்டும்.

இப்படி பரந்துபட்ட இந்தியா அளவில்ஆரியர்களுக்கு எதிரான ஒரு பெரும்புரட்சியைத் திராவிடர் இனம் என்றஅடிப்படையில் தொடங்க வேண்டும்அல்லது புரட்சி வர வேண்டும் என்றதொலைநோக்குச் சிந்தனை,  திட்டம்பெரியாருக்கு. இருப்பினும் அவரைப்பொறுத்தவரைத் திராவிட நாடு என்பதுஎன்ன என்பதைத் திராவிடர் கழகத்தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், 1961ஆம் ஆண்டே தமிழ்நாடா? திராவிடநாடா? என்னும் தலைப்பில் ஒரு சிறுநூலை எழுதி வெளியிட்டார்கள்.

நாடு பிரிய வேண்டும் என்ற கருத்தைமுதன் முதல் 1937இல் ஆச்சாரியார்(இராஜாஜி) மந்திரிசபை அமைத்துஇந்தியைக் கட்டாய பாடமாக்கித் திணித்தநிலையில்தான் தந்தை பெரியார் அவர்கள்,இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமா? என்றகுரல் எழுப்பி, தமிழ்நாடு தமிழருக்கே என்றஇலட்சிய முழக்கத்தை எழுப்பினார்.

அப்போது தமிழ்நாடு, இன்றைக்குஇருப்பதுபோல் தனித்த (ஒரு சிறுமலையாளப் பகுதி, ஒரு சிறு ஆந்திரப்பகுதி, ஒரு சிறு கன்னடப் பகுதி நீங்கலான)நாடாக இல்லை. அப்போது தமிழ்நாடுடில்லி ஆதிக்கத்திலும் இல்லாமல் பிரியவேண்டும் என்று சொன்னது அன்றையசென்னை இராஜதானியைத்தான் (Madras peridency)

தமிழ்நாடு தமிழருக்கே! என்று முழக்கம்எழுப்பியபோது,

சென்னை இராஜதானியில் உள்ளமலையாளிகளும், கன்னடியர்களும்,தெலுங்கர்களும் ஆகிய எங்கள் நிலைஎன்னாவது என்று கேட்டதால்தான் உடனேதமிழ்நாடு தமிழருக்கே என்றமுழக்கமானது, திராவிட நாடுதிராவிடர்க்கே! என்று மாறியது.

திராவிடநாடு பிரிய வேண்டும் என்றதீர்மானம், தீர்மான வடிவில் முதன்முதலில்நிறைவேற்றப்பட்டது 1940இல் (04.08.1940)திருவாரூரில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள்தலைமையில் நடைபெற்ற தென்னிந்தியநலவுரிமை சங்க மாநாட்டில்!

தீர்மானம் வாசகம் இதோ:

திராவிடர்களுடைய கலை, நாகரிகம்,பொருளாதாரம் ஆகியவைகள்முன்னேற்றம் அடைவதற்கு,பாதுகாப்பதற்கு, திராவிடர்களின்அகமாகிய சென்னை மாகாணம் இந்தியமந்திரியின் நேர்பார்வையின்கீழ் ஒரு தனிநாடாகப் பிரிக்கப்பட வேண்டும் எனஇம்மாநாடு தீர்மானிக்கிறது.

இத்தீர்மானத்தின் வாசகங்களில்முக்கியமான வாசகங்கள் திராவிடர்களின்அகமாகிய சென்னை மாகாணம் என்பதேஆகும்.

காரணம், திராவிட நாடு எது? என்றகேள்விக்குப் பதிலாக அது அமைந்ததோடு,சென்னை மாகாணம்தான் பெரியார்அவர்கள் கோரிய திராவிட நாடுஎன்பதாகும்.

இது அந்த மாநாட்டில் மட்டுமல்லாமல்அதன் பிறகு 27.08.1944இல் பெரியார்தலைமையில் சேலத்தில் நடைபெற்றஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில்நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும்வலியுறுத்தப்பட்டது.

தீர்மானம்  2 :

அதன் முக்கிய கொள்கைகளில், திராவிடநாடு என்ற பெயருடன் நம் சென்னைமாகாணம் மத்திய அரசாங்க ஆதிக்கம்இல்லாததும் நேரடி பிரிட்டிஷ் செக்ரட்டரிஆஃப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக்கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்)நாடாகப் பிரிக்கப்பட வேண்டியது என்றகொள்கையை முதற்கொள்கையாகச்சேர்க்கப்பட்டிருக்கிறது என இந்த மாநாடுதீர்மானிக்கிறது.

இத்தீர்மான வாசகங்களில் தந்தைபெரியார் கோரி வந்த திராவிட நாடுசென்னை மாகாணம்தான் என்பதுதெரியவில்லையா?

1945இல் திருச்சி புத்தூர் மைதானத்தில்பெரியார் தலைமையில் கூடிய திராவிடர்கழக மாகாண மாநாட்டில்நிறைவேற்றப்பட்ட- 1. திராவிட நாடு(சென்னை மாகாணம்) சமுதாயம்,பொருளாதாரம், தொழில்துறை,வியாபாரம் ஆகியவற்றில் பூர்ணசுதந்திரமும், ஆதிக்கமும் பெற வேண்டும்என்ற தீர்மானத்திலும் திராவிட நாடுஎன்பது சென்னை மாகாணம் என்றுஅடைப்புக்குள் விளக்கப்பட்டுள்ளதும்குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு திராவிட நாடு கேட்டபோது,மைசூர் இராஜ்யத்தையோ, திருவாங்கூர்,கொச்சி இராஜியங்களையோ, அய்தராபாத்இராஜ்யத்தையோ கொண்டதாகஒருபோதும் கேட்கவில்லை என்பதைத்திட்டவட்டமாக அறிய வேண்டும்.

இதன்பின் 1953இல் தெலுங்கர்கள் நாசவேலைகளில் ஈடுபட்டு ஆந்திராவைப்பிரித்து டில்லியின் கீழ் உள்ள ஒரு பெரியபுது இராஜ்யமாக்கிக் கொண்டனர்.

1,27,780 சதுர மைல் கொண்ட சென்னைமாகாணம் ஆந்திரா பிரிந்ததால் 60,362சதுர மைல் பரப்பளவு உள்ளதாகக்குறுகியது.

1956இல் நவம்பர் 1ஆம் தேதி முதல்மொழிவழி மாநில குழுவினரின்சிபாரிசுகளை (states Recorganisation Commission) ஏற்று எல்லா நாடுகளின்எல்லையையும் மாற்றித் தீட்டியதுஅரசாங்கம். அதன்படி சென்னைஇராஜ்யத்தில் இருந்த தென்கன்னடமாவட்டம் கன்னட மாநிலத்துடனும் (மைசூர்மாநிலத்துடனும்) மலபார் மாவட்டம்திருவாங்கூர் நாட்டுடனும் சென்றது.அதன்பின் பழைய திருவாங்கூர், கொச்சி,மலபார் மாவட்டம் இவற்றைச் சேர்த்துக்கேரளா மாநிலம் பிறந்தது. ஆந்திரா,அய்ராபாத் இராஜ்யத்துடன் இணைந்துஆந்திர மாநிலம் பிறந்தது.

மேற்கூறிய மாற்றங்களால் சென்னைஇராஜ்யத்தின் பரப்பளவு 50,113 சதுரமைல்களாகவும், மக்கள் தொகை 3கோடியாகவும் குறைந்தது. இதுதான்இன்றைய சென்னை இராஜ்யம். இதுஇன்றைய தமிழ்நாடு. அதன்காரணமாகவே பெயரளவில் 4 மொழிநாடாக இருந்தது மாறி தமிழ்நாடு என்றபெயர் மாற்றத்திற்கு ஆளாகியிருக்கிறது.இதனால் இதைத் தமிழ்நாடு என்றுஅழைப்பதில் எவ்வளவு பெருமைகொள்கிறோமோ அவ்வளவுபெருமையுடன் சென்னை மாகாணம் தமிழ்நாடு பிரிக்கப்பட வேண்டும்; டில்லிஆதிக்க ஆட்சியினின்றும் பிரிக்கப்படவேண்டும்.

உண்மை வரலாறு இப்படி இருக்க,தந்தை பெரியார் திராவிடநாடு கோரி,தமிழர்களைக் கன்னடர்களுக்கும்,தெலுங்கர்களுக்கும், மலையாளிகளுக்கும்அடிமைப்படுத்தி விட்டார். தமிழர்கள்வீழ்ந்தார்கள்! என்பது ஆரியத்திற்குத்துணைசெய்யும் அயோக்கியப்பிரச்சாரமாகும்.

சென்னை மாகாணப் பகுதிக்கு அப்பால்இருந்த கன்னடர், தெலுங்கர்,மலையாளிகள் திராவிடத்தை  ஏற்காததுநன்கு தெரிந்தும் பெரியார் திராவிடத்தைப்பிடித்துக் கொண்டு நின்றது, தமிழ்த்தேசியம் உருவாகாமல் தடுக்க கன்னடரானபெரியார் எண்ணியதாலே என்றுஅயோக்கியத்தனமாகக்குற்றஞ்சாட்டுகிறார் குணா.

இதற்கும் நான் பதில் சொல்ல வேண்டியகட்டாயமே இல்லாமல், பெரியார்கூறியதிலே பதில் உள்ளது பாருங்கள்.

பொதுவாக ஆந்திரா பிரிந்துபோனதிலிருந்தே கன்னடமும்,மலையாளமும் (கீழ்க்கண்ட) இரண்டுமூன்று காரணங்களால் சீக்கிரம் பிரிந்துபோனால் தேவலாம் (நல்லது) என்கிறஎண்ணம் எனக்குத் தோன்றிவிட்டது.

ஒன்று : கன்னடியனுக்கும்,மலையாளிக்கும் இனப்பற்றோ, இனசுயமரியாதையோ, பகுத்தறிவுஉணர்ச்சியோ இல்லை என்பதாகும்.எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரமவெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பதுபற்றிய இழிவோ, வெட்கமோபெரும்பாலோருக்குக் கிடையாது. மதமூடநம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள்.

இரண்டு : அவர்கள் இருவரும் மத்தியஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தங்கள்நாடு அடிமையாக இருப்பது பற்றியும்அவர்களுக்குச் சிறிதும் கவலையில்லை.

ஆகவே, இவ்விரு துறையிலும் நமக்குஎதிர்ப்பான எண்ணங்கொண்டவர்கள் -எதிரிகள் என்றே சொல்லலாம்.

மூன்று : இவர்கள் இருநாட்டவர்களும்பெயரளவில் இருநாட்டவர்கள் ஆனாலும்,அளவில் எஞ்சிய சென்னை மாநிலம்என்பதில் 14 மாவட்டங்களில் இரண்டேமாவட்டக் காரர்களாவார்கள்.

1. சென்னை, 2. செங்கல்பட்டு, 3.வடாற்காடு, 4. சேலம், 5. கோவை, 6. நீலகிரி, 7. திருச்சி, 8. மதுரை, 9. இராமநாதபுரம், 10.திருநெல்வேலி, 11. தஞ்சை, 12.தென்னாற்காடு, 13.தென் கன்னடம், 14.மலபார்.

அப்படி (14இல்) 7இல் ஒருபங்குதாரர்களாக இருந்து கொண்டு,தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் முதலியவைகளில் 3இல் 2பங்கை அடைந்து கொண்டு, இவை கலந்துஇருப்பதால் நம் நாட்டைத் தமிழ்நாடு என்றுசொல்வதற்கு இடமில்லாமல் தடுத்துஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பிரிவினை நடப்பதில் சேர்க்கைசம்பந்தமாக ஏதாவது சிறு குறைபாடுஇருந்தாலும் அதை மேற்கண்ட பெரும்நலத்தை முன்னிட்டு கூடுமானவரைஒத்துப் போகலாம் என்றே எனக்குத்தோன்றிவிட்டது. மற்றும் இந்தப் பிரிவினைமுடிந்து தமிழ்நாடு தனிநாடு ஆகிவிட்டால்,நமது சமய, சமுதாய, தேசிய, சுதந்திரமுயற்சிக்கும் அவை சம்பந்தமானகிளர்ச்சிக்கும் புரட்சிக்கும் நமது நாட்டில்எதிர்ப்பு இருக்காதென்றும், இருந்தாலும்அதற்கு பலமும் ஆதரவும்இருக்காதென்றும் கருதுகிறேன்.

நிற்க, இந்தப் பிரிவினை அமைப்புஏற்பாட்டில் எனக்கு இருக்கும் சகிக்கமுடியாத குறை என்னவென்றால்,நாட்டினுடைய, மொழியினுடைய பெயர்அடியோடு மறைக்கப் பட்டுப்போய்விடுகிறது என்கின்ற குறைபாட்டுஆத்திரந்தான். நம் நாட்டுக்கு,சமுதாயத்திற்கு, இனத்திற்கு திராவிடம்என்று இருந்த பெயர் தமிழ் அல்லஎன்பதாலும், நமக்கு (தமிழர்க்கு) ஒருபொது குறிப்புச் சொல்லும், ஆரியஎதிர்ப்புச் சொல்லுமாக இருக்கிறதே என்றவேதனைதான். ஆனால் இந்தப் பிரிவினைவந்தால், (கன்னடர், தெலுங்கர்மலையாளியையும் நம்மோடு சேர்த்துக் குறிக்கும்)திராவிடன் என்ற சொல்லை விட்டுவிட்டு,தமிழன் என்று சொல்லியாவதுதமிழினத்தைப் பிரிக்கலாம் என்றால், அதுவெற்றிகரமாக முடிவதற்கு இயலாமல்பார்ப்பான் (ஆரியன்) வந்து, நானும்தமிழன்தான் என்று கூறிக் கொண்டுஉள்ளே புகுந்து விடுகிறான்.

திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டைவிட்டு, ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள்பிரிந்து போனபின்புகூட, மீதியுள்ளயாருடைய எதிர்ப்பிற்கும் வழியில்லாததமிழகப் பகுதிக்கு தமிழ்நாடு என்றுபெயர்கூட இருக்கக் கூடாது என்றுபார்ப்பானும் (ஆரியனும்) வடநாட்டானும்சூழ்ச்சி செய்து, சென்னை நாடு என்றுபெயர் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.இது சகிக்க முடியாத மாபெரும் கொடுமை!எந்தத் தமிழனும், அவன் எப்படிப்பட்டதமிழனானாலும் இந்த அநியாயத்தைச்சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்றேகருதுகிறேன்.

இதைத் திருத்த (மாற்ற) தமிழ்நாட்டுமந்திரிகளையும், சென்னை, டில்லி,சட்டசபை, கீழ் மேல் சபைஅங்கத்தினர்களையும் மிக மிகவணக்கத்தோடு இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ், தமிழ்நாடு என்கிற பெயர்கூடஇந்நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்கஇடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்துவெற்றி பெற்றுவிட்டார்கள் என்கிறநிலைமை ஏற்பட்டு விடுமானால், நானோ,என் கழகத்தவரோ, என்னைப்பின்பற்றுகிறவர்களோ எதற்காக வாழவேண்டும்?...

தமிழ்நாடு எது? நமது மொழி எது? நமதுஇனம் எது? என்பதையே மறந்துவிடுவதென்றால், பிறந்து தமிழன் எதற்குஉயிர் வாழ வேண்டும்? என்பது எனக்குப்புரியவில்லை! எனவே, இக்கேடுமுளையிலேயே கிள்ளி எறியப்பட முயற்சிசெய்யும்படி எல்லா தமிழர்களையும்உண்மையிலேயே வணங்கி வேண்டிக்கொள்கிறேன்!

- (12.10.1955 ல் பெரியார் வெளியிட்டஅறிக்கை)

இதன்பின் பெரியாரின் இந்தவேண்டுகோள் திராவிடர் கழகத்தின்மத்திய செயற்குழு கூட்டத்தில்தீர்மானமாகவே நிறைவேற்றப்பட்டது.

இப்படி தமிழுக்காகவும், தமிழர்க்காகவும்கெஞ்சிக் கையேந்தியும், மிஞ்சிகொதித்தெழுந்தும், தமிழையும்,தமிழரையும் காக்க முடியாமல் நாம் எதற்குவாழ வேண்டும்? என்று உணர்ச்சிகளைவெளியிட்ட உண்மையான ஒரு தமிழர்தலைவரை இந்தக் குணாக்கள்கொச்சைப்படுத்துகிறார்கள், குற்றம்சுமத்துகிறார்கள் என்றால், இவர்களைமுச்சந்தியில் நிறுத்தி முறைசெய்யவேண்டும்!

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 

- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக