ஞாயிறு, 22 நவம்பர், 2015

நீதிக்கட்சி 100 சுயமரியாதை இயக்கம் 90


உலகளாவிய இடத்திற்குச் சென்றுவிட்டார் தந்தை பெரியார்
சுயமரியாதைக்குப் போராடும் வரையில்
நம் இயக்கத்திற்கு வேலை உண்டு!
சு.ம. இயக்கம், நீதிக்கட்சி விழாவில் தமிழர் தலைவரின் ஆணித்தரமான உரை


சென்னை, நவ.27-  தந்தை பெரியார் உலகளவில் பேசப் படும் தலைவராக ஆகிவிட்டார்கள் - சுயமரியாதைக்காகப் போராடும் அவசியம் உள்ள காலகட்டம்வரை சுயமரியாதை இயக்கமாகிய நமது இயக்கத்திற்கு வேலை உண்டு என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார் 20.11.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற  நீதிக்கட்சியின் நூற்றாண்டு - சுயமரியாதை இயக்கம் 90 ஆம் ஆண்டு விழா கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
பகுத்தறிவு மழை, சமூகநீதி மழை அறிவுலகத்திற்குத் தேவையான அடர்த்தியான மழை!
மிகப்பெரிய மழை வெள்ளம்; தொடர்ந்து மழை, இப்போதும் வெளியில் மழை பொழிந்துகொண்டிருக்கிறது. அந்த மழையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அது மக்களைத் தாக்கக்கூடிய மழையாக இருந்தாலும், மக்களைக் காக்கக்கூடிய பகுத்தறிவு மழையை, சமூகநீதி மழையை அறிவுலகத்திற்குத் தேவையான அடர்த்தியான மழையை, கைம்மாறு கருதாது மழை பொழிகிறது; அதுபோல இந்த இயக்கமும் கைம்மாறு கருதாது அதனுடைய பணிகளைச் செய்துகொண்டிருக்கிறது என்கிற பெருமைக்குரிய ஒரு வரலாற்றுக்கு நாம் சொந்தக்காரர்கள் என்று - அரிமா நோக்கு என்று சொல்வார்கள் - திரும்பிப் பார்க்கும்பொழுது அந்த அரிமா நோக்கு எப்படி இருக்கும் என்று சொல்லக்கூடிய அந்தப் பெரிய வாய்ப்பைப் பெறக் கூடிய நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழாவிற்கு நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று இங்கே வந்து, நீண்ட நேரம் அமர்ந்து, நான்கூட நீதியரசர் அவர்களிடத்திலே சொன்னேன், பகவான் அவர்களுடைய உரையைக் கேட்பதற்காக நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள்; நீண்ட நேரம் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் சென்றாலும் நாங்கள் தவறாக நினைக்கமாட்டோம் என்றேன். இல்லை, இல்லை நான் இருக்கிறேன் என்று சொன்னார்.
நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று இந்த விழாவிற்கு வந்திருக்கக்கூடிய பேராசிரியர் பகவான் அவர்களே, கழக துணைத் தலைவர் அவர்களே, பகவான் அவர்களின் உரையை மொழியாக்கம் செய்த பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஒளிவண்ணன் அவர்களே, பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் அவர்களே, இணைப்புரை வழங்கிக்கொண்டிருக்கக்கூடிய வீரமர்த்தினி அவர்களே,
குடும்பம் குடும்பமாக இந்த விழாவிற்கு வருகை புரிந்து காலையிலிருந்து இந்த நிகழ்வில் கலந்துகொண் டிருக்கக்கூடிய அருமை கழகக் குடும்பத்தவர்களே, அன்பர்களே உங்கள் எல்லோருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
It is my first bounded duty to whole heartily thank you my younger brother Professor K.S.Bhagavan, (audience applause) and we feel honoured. (audience applause). We are the people who always denied the Bhagavans. (audience laughing) But this Bhagavan is very special category; because those Bhagavans are not real Bhagavans, he is real Bhagavan, that’s why we have invited him. And we are honouring him.
The very purpose of inviting our professor Bhagavan is to say there is no other Bhagavan except this Bhagavan. And the very purpose of inviting him is twofold. One is to get his wonderful thought provoking scintillating speech on this great occasion of the Centenary of the Justice Party the Dravidian Movement and the ninety years of history of ours self-respect movement. Sir, we feel honoured, we feel privileged and we will be benefiting you and because you are our fellow traveler and co-fighter.
we are always fighting abbended against the obscurity, against the orthodoxy, against the brahminical cunning forces; against the fundamentalist religious regards the very object of inviting, we are invited him long time back at the same dais, he has released sankaracharya english translation Saint or Sectarian. He was first person we are inviting him from Mysore long time back. After the book everybody as concurred, he was not a saint, he was not even a sectarian he is below average man, who committed who was loitering for jail and bail. This was proved later on. Because always rationalist prove many things.
Sir, you are having threats. Last time when we invited, you came solo. But, now you came along with the Karnataka’s protection. We have invited you solely for one purpose, one is to felicity you and see the very important object of inviting you is that the entire Tamilnadu is for you and we’ll protect you (audience applause) from obsession, from the threats (audience applause). You know this is the land of Periyar.
Many many happenings have done, When I was subjected to this kind of subjective all these conspiracies, Five times they attempted my life. But I never bothered, you also never bothered. But one thing it is no wonder, that our Bhagavan, our real Bhagavan is being protected by the security. All the great Bhagavans are protected from time memorial from the securities.
And recently I have gone through news item. Now they are bringing back the idol of the shiva and parvathy from United States because Bhagavan with all they are escort him returning back. They went getting any visa? Without getting anything. Sir, that is why. My dear brother, our dear brother you are part and parts of our dravidian family where ever you are. You may be in Karnataka, but still you are  our closest committed co-fighter, and one of the members of the great Dravidian family.
So thank you!
இதன் தமிழாக்கம் வருமாறு:
என்னுடைய இளைய சகோதரர் பேராசிரியர் கே.எஸ்.பகவான் அவர்களுக்கு முதலில் உளமார்ந்த நன்றியைத் தெரிவிப்பது என்னுடைய கடமையாகும். அவர் வருகை மிகவும் சிறப்பானது. நாங்கள் எப்போதும் பகவான்களை மறுத்து வந்துள்ளோம். இந்த பகவான் சிறப் பானவர். ஏனென்றால், அந்த பகவான்கள் எப்போதுமே இருந்ததில்லை. இவர்தான் உண்மையில் இருப்பவர். ஆகவேதான், இவரை நாம் பாராட்டுகிறோம்.
இங்கே பகவான் அவர்களை அழைத்துள்ளதற்கு முக்கிய காரணம் இந்த பகவானைத்தவிர வேறு எவரும் இலர் என்பதுதான். அவரை அழைத்துள்ளமைக்கு முக் கியமான காரணங்களாக இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று திராவிட இயக்கமாகிய நீதிக்கட்சி நூற்றாண்டு மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் 90 ஆம் ஆண்டு விழாவில் அற்புதமான உணர்வுபூர்வமான பேச்சு. அருமை பகவான் அவர்களே, உங்கள் வருகை  சிறப்பானது. எங்களை பெருமைப்படுத்தி, உற்சாகப்படுத்துவது. உங்கள் வருகை எங்களுக்கு மிகவும் பயன்மிக்கது. ஏனென்றால், நீங்கள் எங்களோடு இணைந்து பயணிப்பவர்,  இணைந்து போராடக்கூடியவராக இருக்கிறீர்கள்.
நாம் எப்போதும் தொல்லைகளுக்கு எதிராக, பழைமைகளுக்கு எதிராக வஞ்சகமான பார்ப்பனீயத்துக்கு எதிராக, மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக போராடி வருகிறோம்.  ஆகவேதான் உங்களை அழைத்துள்ளோம்.
இதே நோக்கங்களுக்காகவே சகோதரர் பகவானை நீண்ட காலத்துக்கு முன்பாகவும் நாம் அழைத்துள்ளோம். அவர்தான் சங்கராச்சாரி குறித்த ஆங்கில நூலை (Saint or Sectarian) வெளியிட்டார். மைசூருவிலிருந்து நீண்ட காலத்துக்கு முன்பே நம்மால் அழைக்கப்பட்டவர்தான் கே.எஸ்.பகவான். அந்த நூலின்மூலமாக சங்கராச்சாரி துறவி அல்லர் என்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப் பட்டது. அதுமட்டுமன்றி ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான வர் என்பதும்கூட மாறி, சராசரியான மனிதனைப்போல் ஜெயிலுக்கும், பெயிலுக்குமாக அலைந்து திரிந்தவர். முன்பு நாம் கூறியது பின்னர் நிரூபணமானது. ஆகவேதான், பகுத்தறிவாளர்கள் இதுபோன்று பலவற்றை நிரூபித்து வருகிறார்கள்.
சகோதரர் கே.எஸ்.பகவான் அவர்களே. உங்களுக்கு அதிகமான அளவில் அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன.  கடந்த முறை நீங்கள் தனியாக வந்தீர்கள். இந்த முறை கருநாடக மாநிலத்தின் பாதுகாப்போடு வந்துள்ளீர்கள். உங்களை அழைத்தமைக்கு காரணங்கள் உண்டு. ஒன்று உங்களை வாழ்த்திட வேண்டும். அடுத்ததாக முக்கியமாக உங்களை அழைத்ததன் நோக்கமாக இருப்பது என்ன வென்றால்,  உங்களுக்கு பாதுகாப்பு அரணாக முற்றிலும் தமிழ்நாடு இருக்கிறது என்பதை உணர்த்துவதுதான். எப்படிப்பட்ட தொல்லைகள், அச்சுறுத்தல்கள் இருந்தாலும் நாங்கள் உங்களைக் காத்திடுவோம். (கைதட்டல் ஆரவாரம்). உங்களுக்குத் தெரியும் இது பெரியார் மண்.
எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபோன்ற சதிகள் என்னை மய்யப்படுத்தி அய்ந்து முறை கொலை முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால், அதற்காக நான் எப் போதுமே கவலைப்பட்டதில்லை. நீங்களும்கூட (கே.எஸ். பகவான்) கவலைப்பட மாட்டீர்கள். நம்முடைய பக வானுக்கு பாதுகாவலர்கள் பாதுகாப்பு அளிக்கிறார்கள். இதில் அதிசயம் இல்லை. உண்மையாக இருக்கின்ற பக வானுக்கு பாதுகாவலர்களால் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் சர்வ வல்லமையுடன் உள்ள பகவான்களுக்கும் காலாகாலமாக பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அண்மையில் ஒரு செய்தி படித்தேன். சிவன், பார்வதி சிலைகளை அமெரிக்காவிலிருந்து மீட்டு திரும்ப பாது காப்புடன் கொண்டு வருகிறார்கள். இங்கிருந்து அமெரிக் காவுக்கு சென்றபோது விசா பெற்றா சென்றார்கள்? எதுவுமே பெறவில்லை. அருமைச் சகோதரர் கே.எஸ்.பகவான் அவர்களே! நீங்கள் எங்கிருந்தாலும் திராவிடக் குடும்பத்தில் நீங்கள் ஓர் அங்கம். நீங்கள் கருநாடகாவில் இருக்கலாம். ஆனால், கொள்கைகளால் எங்களுடன் இணைந்த போராளியாக இருக்கிறீர்கள். சிறப்புவாய்ந்த திராவிடக் குடும்பத்தின் உறுப்பினர்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
Putting Centuries into a Capsule
நண்பர்களே, இந்தப் பெரிய வாய்ப்புக்கு ஒரு குறுகிய நேரத்தில் நம்முடைய தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், திராவிடர் கழகத் தோழர்கள், பெரியார் நூலக வாசகர் வட்டத்தைச் சார்ந்தவர்கள், நம்முடைய முன்னாள் மேயர் சா.கணேசன் போன்றவர்கள் இன்னும் பல பேர் இந்தக் குறுகிய காலத்தில், நான்கு நாள் விழாக்களை இன்று ஒரு நாளாக அடக்கினோம். இங்கே அருள்மொழி அவர்கள் கூறியதுபோல Putting Centuries into a Capsule என்று சொல்வதுபோன்று பலவற்றை இதில் உள்ளடக்கி விட்டனர். பெரியாருடைய பணியே அப்படிப்பட்டதுதான். அந்த வகையில் மிகச் சிறப்பாக இருந்தது.
இன்று காலையில் உச்சநீதிமன்ற நீதியரசர், உயர் நீதிமன்ற நீதியரசர், தொடக்க விழாவை நடத்தக்கூடியவர் குஜராத் மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதியரசர் - பெரியார் மண்ணிலிருந்து காந்தி மண்ணுக்கு அனுப்பப் பட்டவர் என்பதுதான் மிக முக்கியம்.
ஒத்துழைத்த அனைவருக்கும் என்னுடைய தலைதாழ்ந்த நன்றி!
அந்த வகையில் இந்த விழா மிகச்சிறப்பாக நடை பெறுவதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் என்னுடைய தலைதாழ்ந்த நன்றி.
என்னை அவர்கள் குறிப்பிட்டாலும், என்னை தனிப்பட்ட முறையிலே குறிப்பிட்டார்கள் என்று யாரும் தயவு செய்து எடுத்துக்கொள்ளவேண்டாம். என்னை குறிப்பிட்டது, ஒவ்வொருவரையும், நம் அனைவரையும் தனியாகச் சொல்லவில்லை என்பதற்காக, பெரியார் தொண்டன், உங்களுடைய தோழன் என்கிற முறையில் என்னை குறிப்பிட்டார்கள். ஆகவே, இந்த அத்துணை பெருமையும் ஏதாவது இருக்கிறது என்றால், அது முழுக்க முழுக்க இந்தக் கொள்கைக்காகவே வாழ்ந்து கொண் டிருக்கக்கூடிய கொள்கையில் சமரசம் காணாத, காண விரும்பாத உங்கள் அனைவருக்கும் இந்தப் பெருமை சேரும். எனவே, அவர்களுக்குத் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
We can have compromise with friendship but We cannot have any compromise with our principles
1917 ஆம் ஆண்டே டாக்டர்  டி.எம். நாயர் முழங்கினார்
இதுதான் தந்தை பெரியார் அவர்களுடைய அடித்தளமான கொள்கைகள். அந்த அடிப்படையில் எப்பேர்ப்பட்ட ஒரு நிகழ்ச்சி இது. இது ஒரு சிறிய நூல் - டாக்டர் டி.எம்.நாயர் அவர்களின் முத்துக்கள் என்பது. 1917 ஆம் ஆண்டு நம்மைப் போன்றவர்கள் பலர் பிறக்காத காலத்தில் டாக்டர் டி.எம்.நாயர் முழங்குகிறார். இன் றைக்கும் அந்தக் கருத்துத் தேவைப்படுகிறது; இன்றைக்கும் அந்த மருந்து தேவைப்படுகிறது. நீதிக்கட்சியினுடைய விழா என்பது நாம் ஏதோ ஒரு ஆடம்பரமான விழாவை நடத்திவிட்டு, திருப்தியடைந்து கொண்டு போகிறோம் என்பதல்ல நண்பர்களே!
திராவிடத்தினுடைய மிகப்பெரிய ஒரு தளபதி டாக்டர் டி.எம்.நாயர்
கடவுள் என்ற கற்பனைக் கருத்தை நிலைநாட்டி, தம் சூழ்ச்சிகளில் வெற்றி கண்ட ஆரிய வஞ்சகர்கள் தம்முடைய வெண்ணிறத்தைக் காட்டி, தாம் உயர்ந்தவர் என்றும்; திராவிடர்களின் கருப்பு நிறத்தைக் காட்டி, அவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்றும், கடவுளின் தலையிலிருந்து வெடித்து வந்தவன் நான் பார்ப்பனன் என்றும், கடவுளின் தோளிலிருந்து பிளந்து கொண்டு வந்தவன் சத்திரியன் என்றும், கடவுளின் வயிற்றிலிருந்து வெடித்து வெளியே வந்தவன்தான் வைசியன் என்றும், கடவுளின் காலிலிருந்து பிளந்து வெளிவந்தவன்தான் சூத்திரன் என்றும் கூறி, திராவிட அப்பாவி மக்கள் பலரையும் நம்ப வைத்தனர் என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, அடுத்ததாக சொல்கிறார்,
டாக்டர் நாயர் பெருமான் அவர்கள், திராவிடத் தினுடைய மிகப்பெரிய ஒரு தளபதி. இந்தப் பெருமான் என்ற வார்த்தையை தந்தை பெரியார் பயன்படுத்தினார்.
டாக்டர் டி.எம்.நாயர் சொல்கிறார்,
நான் நல்ல நகைச்சுவை உணர்வு படைத்தவன். நான் 30 ஆண்டுகளுக்கும்மேல் இங்கிலாந்திலும், இங்கும் மருத்துவப் பணி செய்து அனுபவம் பெற்றவன். ஆனால், இம்மாதிரியான உடலின் பல பகுதிகளில் பிள்ளை பேறு மருத்துவர்களை நான் இதுவரை என் வாழ்நாளில் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை.
இதைக் கேட்டு இன்றைக்கு நீங்கள் கைதட்டி சிரிப்பதுபோல, அன்றைக்கும் சிரித்திருக்கிறார்கள்.
பெரியாருடைய கொள்கைகள் என்று வரும்போது இவர்கள் அன்றைக்குச் சொல்கிறார்கள் மிகத் தெளிவாக, நம்முடைய மக்களையெல்லாம் ஏய்ப்பதற்காக ஒவ்வொரு ஜாதிக்காரர்களையும் உயர்த்தி பட்டங்களை மட்டும் கொடுத்துவிட்டு, தங்களுடைய அடிமைகளாக ஆக்கிக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னார். இன்னமும் ஜாதியை வைத்துக்கொண்டு வாழலாம் என்று பலர் நினைக்கின்ற நேரத்தில், இவர்களுடைய கருத்து மிக ஆழமானது என்று நீங்கள் நினைத்துக் கொண்டு, மிக முக்கியமாக செய்யவேண்டும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது ஏதோ தந்தை பெரியார் அவர்கள், அவருடைய சுயமரியாதை இயக்கத்தினுடைய ஜாதி ஒழிப்பினுடைய அம்சமாகக் கொண்டு வந்ததை, நீதிக்கட்சியினுடைய காலத்திலேயே டாக்டர் நாயர் சொல்லியிருக்கிறார்.
கோவிலை அமைக்கின்றவர்கள் நாங்கள்; ஆனால், எங்களுக்கு மணியாட்ட உரிமையில்லை, பூஜை செய்ய உரிமையில்லை என்று இருப்பதை மாற்றியமைக்க வேண்டும் என்று சொன்னார்.
1917 ஆம் ஆண்டில் நூறாண்டுகளுக்கு முன்னால், அந்தக் குரல் கேட்டது. ஆனால், நீதிக்கட்சி ஆட்சி, தந்தை பெரியார் அவர்கள் போராடியதினுடைய விளைவாக, அதனுடைய விளைவான திராவிட முன்னேற்றக் கழக,  அண்ணா அவர்கள் ஆட்சியில் மூன்று முப்பெரும் காரியங்களைச் செய்ததுபோல, கலைஞர் அவர்கள் ஆட்சியில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சொல்லக்கூடிய அந்த வாய்ப்பை உருவாக்கினார்.
எனவே, எங்கே ஆரம்பித்து எங்கே முடித்திருக் கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். நான் நேரத்தின் நெருக்கடி காரணத்தினால், தனியே சொல்ல விரும்பவில்லை.
1927 ஆம் ஆண்டுவரை நம் பெயருக்கு முன்னால் சூத்திரன் பட்டம் இருந்தது
1927 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நம்முடைய பெயருக்கு முன்பாக அரசாங்கத் தினுடைய பதிவேட்டில் சூத்திரன் என்று இருந்தது.
மனுதர்மம் எட்டாவது அத்தியாயம்; 415 ஆவது சுலோகத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள்.
சூத்திரன் என்றால், யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்; பக்தியினால் வேலை செய்கிறவன். தன் னுடைய தேவடியாள் மகன். விலைக்கு வாங்கப்பட்டவன்; ஒருவனால் கொடுக்கப்பட்டவன்; குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்; குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என ஏழு வகைப்படுவர்.
சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி நடத்திய மாநாடுகளில் இதை ஒழிக்கவேண்டும் என்று தீர்மானம் போட்டு நிறைவேற்றினார்கள்.
பகவான் அவர்கள் இங்கே உரையாற்றும்பொழுது சொன்னார்களே, சொத்துரிமையைப்பற்றி பாபா சாகேப் அம்பேத்கர் - இரண்டு கோட் வில்.
For the first time the self-respect conference from Chengalpattu Periyar was the first person to tell that women should have equal rights in all properties and all ways of life. and the wheel as come to a full circle. Baba Sahib in is life time he could to see it. but Periyar was able to see. that is idea translated in to action.
ஆகவே, அவருடைய கருத்துகள் மிகப்பெரிய அளவிற்கு வந்தபொழுது, சூத்திரர்கள் பட்டம் ஒழிய வேண்டும் என்று தீர்மானம் போடுகிறார்.
உடனே, அப்பொழுதிருந்த அரசாங்கம், நீதிக்கட்சி யின் ஆட்சியிலேயேகூட வெள்ளை அதிகாரிகள் கருத்து எழுதி வைத்திருக்கிறார்கள்.
The Non Brahmin Conference
இந்துலா-வின்படி சூத்திரர்கள் என்பதை நாங்கள் எடுத்துவிட முடியாது. பறையன், பஞ்சமன் என்பதை மாற்றி நாங்கள் அரசாங்க ஆணை வெளியிட்டுள்ளோம். ஆனால், சூத்திரர்கள் என்பதை மாற்ற அரசாங்க ஆணை போட முடியாது என்றனர்.
அரசு ஆணை போடவேண்டும் என்று வலியுறுத்தி, 1928 ஆம் ஆண்டு The Non Brahmin Conference என்று இங்கே போட்டு, அதில் தீர்மானம் நிறைவேற்றி, சுயமரியாதை இயக்கம் - பெரியார் நடத்திய மிகப்பெரிய போராட்டத்தினுடைய விளைவுதான் - அரசாங்க பதி வேட்டில் சூத்திரன் என்கிற பெயர் நீக்கப்பட்டது. 1928 ஆம் ஆண்டுவரை சூத்திரப்பட்டம் இருந்தது; பிறகுதான் ஒழிக்கப்பட்டது.
இன்னொரு செய்தியை இங்கே சொல்லுகிறேன், நான் சொல்கின்ற செய்தி பலருக்குத் தெரியாது. இன்றைய இளைஞர்களுக்கு இந்தச் செய்தியை கண்டிப்பாக சொல்ல வேண்டும். சற்சூத்திரர்கள் என்கிற பெயரும் இருந்தது.
சற்சூத்திரன் என்றால், நல்ல தேவடியாள் மகன்!
பெரியார்தான் கேட்டார், சூத்திரன் என்றாலே தேவடியாள் மகன் என்று எழுதி வைத்திருக்கிறான். நான் அதனை ஒழிக்கவேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கின்றேன். நம்மாளில் ஒருவன் சென்று, நான் சற்சூத்திரன் என்கிறானே, அதற்கு நல்ல தேவடியாள் மகன் என்று அர்த்தம் அல்லவா என்று மிகவும் பச்சையாகக் கேட்டார்.
அதற்குப் பிறகுதான் அரசாங்கப் பதிவேட்டிலிருந்து சற்சூத்திரன் பட்டத்தை இந்த இயக்கம் நீக்கியது. நாம், மானத்தோடு வாழ்வதற்குரிய இயக்கமாக இந்த இயக்கம் இருந்தது.
பெரியார் சொன்னார், பார்ப்பன நண்பர்களே உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். நாங்கள் அநியாயத்தை எதிர்த்துப் போராடுகிறோம்; நீங்கள் எங்களை அழிக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களே, உங்களுக்கும்தானே இது பெரிய லாபம்! உங்கள் பெண்களுக்கு லாபம் இல்லையா? ஆண்களான உங்களுக்கு லாபம் இல்லையா? என்று கேட்டார்.
சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி இயக்கம் நமக்கு மட்டுமல்ல, பார்ப்பனர்களுக்கும் பயன்பட்டிருக்கிறது.
ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பு, அக்கிரகாரத்தில் எங்கே பார்த் தாலும் மொட்டைப் பாப்பாத்தி இருப்பார்கள். விதவை யானால், மொட்டையடித்துக் கொண்டு, வெள்ளை நிறச் சேலை உடுத்திக் கொள்ளவேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றைக்கு எங்கேயாவது மொட்டைப் பாப்பாத்திகளைப் பார்க்க முடியுமா?
பெரியாரால், சுயமரியாதை இயக்கத்தால் வந்தது!
இந்நிலை எப்படி வந்தது? சரசுவதி பூஜை கொண் டாடியதினால் வந்ததா? நவராத்திரி விழா கொண்டாடிய தனால் வந்ததா? எப்படி வந்தது தெரியுமா நண்பர்களே, பெரியார்! பெரியார்!! பெரியார்!!! சுயமரியாதை இயக்கம்! சுயமரியாதை இயக்கம்!! சுயமரியாதை இயக்கம்!!!
இன்றைக்குப் பார்ப்பனர்கள் எவ்வளவோ வளர்ச்சி அடைந்துவிட்டார்கள். நம்மாள்தான் அப்படியே இருக்கிறார்கள். தவத்திரு அடிகளார் சொல்லியதுதான் எனக்கு நினைவிற்கு வருகிறது.
வீரமணி! பேயைவிட, பேய் பிடித்தவன்தான் மிகவும் ஆடுவான் என்பார்.
இன்றைக்கு இந்த இயக்கம் ஒரு சிறிய இயக்கம் போன்று ஓரிடத்தில் தோன்றுவதாக இருக்கும்; நாளைக்கு நான் சொல்கிறேன், சுயமரியாதை இயக்கத்தைத் தோற்று வித்ததைப்பற்றி குடிஅரசில் எழுதியிருக்கிறார். நாளை இது உலகளாவிய இயக்கமாக வரும் என்று.
அய்யா எழுதியதுபோல, உலகளாவிய இயக்கமாக வந்துவிட்டதே! இங்கே உரையாற்றிய சகோதரர் பகவான் அவர்கள் சொன்னாரே! அதேபோல, இந்தியாவில் பெரியார் மேளா! அதை மறைப்பதற்காகத்தானே பிள்ளையார் பால் குடிக்கிறார் என்கிற கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டனர். அதனைக் கண்டித்து, நாம் தானே தமுக்கடித்து, பிள்ளையார் பால் குடிப்பதை நிரூபித்தால், ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருகிறோம் என்று சொன்னோம், யாராவது நிரூபிக்க வந்தார்களா?
சுயமரியாதைக்குப் போராடுகிற நேரம் வரையில் நம்முடைய இயக்கத்திற்கு அவசியம் உண்டு!
ஆகவே, இப்படிப்பட்ட ஓரியக்கம் - இது ஒரு சாதாரணமான இயக்கமல்ல. எத்தனையோ போராட்டங் களை நடத்தியிருக்கிறோம்; நடத்திக் கொண்டிருக்க வேண்டும். இங்கே அவர் சொல்லியதுபோல, கடைசி மனிதன் இருக்கின்ற வரையில், சுயமரியாதைக்குப் போராடுகிற இறுதி நேரம் வரையில் நம்முடைய இயக்கத்திற்கு அவசியம் உண்டு.
இதோ என்னுடைய கையில் இருப்பது, National University of Singapore
அதில் ராஜேஷ் ராய் என்ற ஒருவர் Indians in Singapore 1819 to 1945 Diaspora in the Colonial Port-City  என்ற தலைப்பில் ஆய்வு செய்திருக்கிறார்.
அமெரிக்காவில், பெரியார் இண்டர்நேஷனல், பர்மாவில் பெரியார் சுயமரியாதை இயக்கம், மலேயாவிற்கு 1929 ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் முதல் முறை சென்றார்கள். பிறகு இரண்டாவது முறை சென்றார்கள் சிங்கப்பூருக்கு 1954 இல். அப்பொழுது அங்கே மிகப்பெரிய மாற்றத்தைப் பார்த்தார்கள். முதல் முறை சென்றபோது என்னென்ன கருத்தை அந்த மக்களுக்கு அறிவுரையாக சொன்னார்களே, அவை அத்தனையும் மாற்றப்பட்டதை பெரியார் அவர்கள் தன் வாழ்நாளிலேயே கண்டார்கள். அது அவருக்கு மிகப்பெரிய வெற்றியாகும்.
இவையெல்லாவற்றையும் அந்த ஆய்வாளர் எழுதிவிட்டுச் சொல்கிறார், நீதிக்கட்சி தமிழ்நாட்டிலிருந்து சுயமரியாதை இயக்கம் அங்கே மட்டுமல்ல, இங்கேயும் வந்து, தமிழர் சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி, குடிஅரசு செய்த புரட்சி, பெரியார் செய்த புரட்சி, சுயமரியாதை இயக்கம் செய்த புரட்சி உலகளாவிய நிலைக்கு வந்திருக்கிறது என்று சொன்னார்.
எனவே, இன்றைக்குப் பெரியார் பன்னாட்டமைப்பு என்பது உலகளாவிய நிலையில் இருக்கிறது. பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேசன் என்று ஆப்பிரிக்கக் கண்டத்தில் பெரியாருடைய கருத்துகள் இருக்கின்றன.
ஆகவே, தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும் - அவர்தாம் பெரியார்
என்று சொன்னார்களே, அந்த மனக்குகையில் எழக் கூடிய அந்தக் கருத்து, மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது என்று சொன்னதால்தான், உலகத் தலைவராக பெரியார் இருக்கிறார். யுனெஸ்கோ மன்றம் அவரை மிகப்பெரிய அளவிற்கு, Periyar the Prophet of the new Age
The socrates of South East Asia
Father of the social reform movement
and arch enemy of ignorance;
Superstitons; meaningless customs and base manners
பாராட்டியது. இந்திய அரசு பாராட்டியது. நேற்று நான் இங்கே பிகார் தேர்தல் முடிவைப்பற்றி உரையாற்றும் பொழுது சொன்னேன், பிகார் தேர்தலுக்காக வெறும் அரசியல் போராட்டமாக நடைபெறவில்லை. இன்றைக்கு நிதிஷ் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்று இருக்கிறார். நிதிஷ் அணிக்கே என்ன பெயர் சொன் னார்கள் என்றால், சுய அபிமான் என்று சொன்னார்கள்.
உலகளாவிய அளவிற்குச் சென்றிருக்கிறார் பெரியார்
பெரியார் தமிழ்நாட்டோடு நிற்கவில்லை, பெரியார் தென்னாட்டோடு நிற்கவில்லை. பெரியார் வடநாட்டிற்கும் சென்றிருக்கிறார்; உலகளாவிய அளவிற்குச் சென்றிருக் கிறார். எனவே, நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் தொடங்கப் பெற்றது இங்குதான்.
ஒரு மருந்தைக் கண்டுபிடிப்பது ஒரு நாட்டில்தான்; ஆனால், அந்த மருந்தின் பயன் உலகளாவிய நிலையில், நோய்கள் எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் அந்த மருந்தும் செல்கிறது. கண்டுபிடித்த நாட்டை விட்டு அந்த மருந்து செல்கிறது. அந்த மருந்து கண்டு பிடிக்கும்பொழுது அந்த நாட்டிற்குரியது. கண்டுபிடித்துப் பயன்பாட்டுக்கு வரும்பொழுது, அது உலகளாவியது.
அதைப்போன்றதுதான் சுயமரியாதை இயக்கம்; அதைப் போன்றதுதான் நீதிக்கட்சியினுடைய தத்துவங்கள். எனவே, சமூகநீதி என்பது செக்குலரிசம், மதச்சார்பின்மை என்று சொல்வது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், இந்தியா முழுவதும் ரத்தக் களறியாக மாறிய நேரத்தில், ஒரே ஒரு மாநிலம் மட்டும் அமைதிப் பூங்காவாக இருந்தது என்றால், அது தமிழ்நாடு என்பதை செய்தியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
அதனை எழுதிவிட்டுச் சொன்னார்கள்,  It is not a question of Law and Order; It is due to the impact of the Periyar Dravidian Movement; This soil is not available for any kind of this kind of religious derogatoryஎன்று தெளிவாகச் சொன்னார்கள்.
எதிர்ப்புகள் எல்லாம் நம்முடைய கொள்கைக்குப் போடப்படுகின்ற உரங்கள்!
ஆகவேதான், இந்த இயக்கம் வளரவேண்டும். எதிர்ப்புகள் நிறைய வரும் எங்களுக்கு. எதிர்ப்புகள் வரவேண்டும் என்பதுதான் மிக முக்கியம். அந்த எதிர்ப்புகள் எல்லாம் நம்முடைய கொள்கைக்குப் போடப்படுகின்ற உரங்கள், உரங்கள், உரங்கள்!
ஆகவே, எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும், அவற்றைச் சந்திக்க நாம் தயாராக இருக்கின்றோம். பெரியாரோடு இயக்கம் முடிந்துவிடும் என்று நினைத் தார்கள். இப்பொழுது நாம் அடுத்தபடியாக அடுத்த கட்டத்தைத் தாண்டி ஒரு அய்ம்பது ஆண்டு காலம் தாண்டி நிற்கக்கூடிய கட்டத்தில் இன்றைக்கும் இயக்கம் நிற்கிறது.
பெரியாருடைய சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை எதிர்த்து இன்றைக்கு நீதிமன்றத்தில் ஒருவர் முயற்சி செய்து பார்த்து, இந்த நேரத்தில் எப்படியாவது அதனை ஒழித்துவிடலாம் என்று நினைத்தார். ஆனால், நீதிமன்றம் அவருடைய தலையில் ஒரு குட்டு கொட்டி, சுயமரியாதைத் திருமணம் எப்பொழுதும் செல்லும் என்று ஆக்கியிருக் கிறார்கள் என்றால்,
சுயமரியாதைத் திருமணம் செல்லும்; சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் வெல்லும்!
சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்பது மட்டுமல்ல; சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் வெல்லும் என்பதுதான் அதற்கு அடையாளம் என்று சொல்லி முடிக்கிறேன்.
வணக்கம், நன்றி!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
-------------------
இந்த முட்டாள்களுக்கு ஸ்ட்ராங் டோஸ் என்ன? லைட் டோஸ் என்ன?
இராமாயணத்தைப்பற்றி தந்தை பெரியார் அவர்கள் மிகத் தெளிவாக காங்கிரஸ் தலைவராக அய்யா இருக்கின்றபோது 1922 ஆம் ஆண்டு திருப்பூரில் சொன்னார்கள்.
பகவான் அவர்கள் இங்கே சம்பூகன் கதையைச் சொன்னார்கள். இந்தச் சம்பூகன் கதையை வைத்துக்கொண்டு, கொடுமை நடத்தி, பார்ப்பனச் சிறுவன் பிழைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக, ராமன், யாரை வணங்கினான் என்றால், கடவுளை வணங்கவில்லை. பிராமணர்களை வணங்கினான் என்றுதான் வால்மீகி ராமாயணத்தில், துளசிதாஸ் ராமாயணத்தில் எல்லாம் எழுதப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் எடுத்துக்காட்டி, இந்த ராமாயணங்கள் இருக்கும்வரை ஜாதியும், தீண்டாமையும் ஒழியுமா? ஆகவே, இந்த ராமாயணத்தைக் கொளுத்தவேண்டும் என்று 1922 ஆம் ஆண்டில், காங்கிரசில் இருக்கும்பொழுது அய்யா அவர்கள் பேசினார்.
அதை அய்யா அவர்கள் சொல்லிவிட்டு, இன்னொரு கதையையும் சொன்னார். மேடையில் ராஜகோபாலாச்சாரியார் இருக்கிறார், இன்னொரு பக்கத்தில் திரு.வி.க. அவர்கள் இருக்கிறார். திருப்பூரில் நடைபெற்ற பெரிய கூட்டத்தில் உரையாற்றிவிட்டு வரும்பொழுது, பெரியார் அவர்கள் காரில் ஏறியவுடன், ஆச்சாரியார் பெரியாரின் நெருங்கிய நண்பர் அல்லவா, அவர் பெரியாரிடம் சொன்னாராம், என்ன நாயக்கர்வாள் என்றவுடன், தந்தை பெரியார் திரும்பினாராம், ரொம்ப ஸ்ட்ராங் டோசாக இருக்கிறதே, கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமே! என்றாராம்.
உடனே தந்தை பெரியார் அவர்கள், இந்த முட்டாள் பசங்களுக்கு ஸ்ட்ராங் டோஸ் என்ன, லைட் டோஸ் என்னங்க, ஒரே டோஸ்தான் என்னிடம் என்று சொன்னாராம்.
ஆச்சாரியார் எதுவும் சொல்லாமல், சிரித்துக்கொண்டாராம்.
ஆகவே, இதனுடைய அடிப்படை என்னவென்றால், நோய் நாடி, நோய் முதல் நாடவேண்டும். அந்த அடிப்படையில்தான் இந்த இயக்கம் இருக்கிறது.
சுயமரியாதை இயக்கத்தினுடைய விளைவுகளில் ஒன்று என்னவென்றால், பல பேருக்கு இது தெரியவேண்டும்.          - தமிழர் தலைவர்
-விடுதலை,27.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக