ஞாயிறு, 22 நவம்பர், 2015

சமற்கிருதத் துணைவேண்டாத் திராவிடத் தனித்தன்மை


- டாக்டர் கால்டுவெல்
திராவிட மொழிகள் வட இந்திய மொழிகளிலிருந்து பற்பல இயல் புகளில் வேறுபடுகின்றன. அவ்வாறி ருந்தும், அத்திராவிட மொழிகள், வட இந்திய மொழிகளைப் போலவே, சமற்கிருதத்திலிருந்து பிறந்தனவாகச் சமற்கிருதப் பண்டிதர்களால் கருதப்பட்டன. தாங்கள் அறிந்த எப் பொருளுக்கும் பார்ப்பன மூலம் கற்பிக்கும் இயல்பினர் அப்பண் டிதர்கள்.
அவர்கள் கூறும் அம் முடிவை, முதன் முதலில் வந்த ஐரோப்பிய அறிஞர்களும் அவ்வாறே ஏற்றுக் கொண்டனர். தங்கள் கருத்தை ஈர்த்த ஒவ்வொரு திராவிட மொழியும் சமற்கிருதச் சொற்களை ஓரளவு பெற்றிருப்பதை அவர்கள் காணாதிருக்க முடியாது. அவற்றுள் சில இவை எம்மொழிச் சொற்கள் என்பதை அரும்பாடுபட்டே அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் பெரிதும் சிதைவுண்டிருக்கும். எனினும் சில சிறிதும் சிதைந்து மாறுபாடுற்றிரா என்பது உண்மை. ஆனால், அம்மொழி ஒவ்வொன்றும் சமஸ்கிருதம் அல்லாத பிறமொழிச் சொற்களையும், சொல்லுருவங் களையும் அளவின்றிப் பெற்றிருப் பதையும் அவர்கள் தெளிவாகக் காண்பர் என்றாலும், அச்சொற்களே அம்மொழி வடிவில் பெரும் பகுதியை உருவாக்குகின்றன;
அச் சொற்களிலேயே அம்மொழியின் உயிர்நாடி நிற்கிறது என்ற உண்மையை உணர்ந்திருக்க மாட் டார்கள். அவ்வறியாமையின் பய னாய், அம்மொழிகளில் காணலாகும் அச்சமற்கிருதப் புறத்தன்மைகளுக்குக் காண முடியாத யாதோ ஒரு சில மூலத்திலிருந்து தோன்ற வேற்று மொழிக் கலவையாம் என்ற பெயர் சூட்டி அமைதியுற்றனர். உண்மையில் சமற்கிருத மொழிச் சிதைவுகளாய் கௌரிய இனத்தைச் சேர்ந்த வங்காளம் போலும் மொழிகளிலும், சமற்கிருதத்திற்குப் புறம்பான சில சொற்களும் சொல்லுருவங்களும் இடம் பெற்றுள்ளன; அப்பண்டி தர்கள் கருத்துப்படி, திராவிட மொழிகளுக்கும் அக்கௌரிய மொழிகளுக்கிடையே மதிப்பிடத்தக்க வேறுபாடு எதுவும் இல்லையாதல் வேண்டும். இவ்வாறு, திராவிட மொழியில் காணலாகும் சமஸ்கிருதப் புறத்தன்மைகளை, வேற்று மொழிக் கலவையாக மதித்து ஒதுக்குவது, உண்மை நிலையிலிருந்து உருண் டோடி வீழ்வதாகும். மேலும், திராவிடம் சமற்கிருதத்திலிருந்து பிறந்தது என்ற கருத்து முந்திய தலைமுறையினராக மொழி நூல் வல்லுநர்க்கு ஏற்புடையதாய் விளங்கினும், இக்காலை அறவே அடிப்படையற்றுப் போன கட்டுக்கதையாகி விட்டது. மேலே கூறிய பண்டிதர்கள் சமற்கிருத மொழியை ஆழக் கற்று, வட இந்திய மொழிகளை விளங்க அறிந்தவரே எனினும் அவர்கள் திராவிட மொழி களை அறவே கண்டறியாதவராவர்; அல்லது, ஒரு சிறிதே அறிந்தவராவர். ஒப்பியல் மொழி நூல் விதி முறைகளில் ஒரு சிறு பயிற்சியும் பெறாத எவரும், திராவிட மொழி களின் இலக்கண விதிகளையும் சொற்களையும் நன்கு கற்றுத் தேர்ந்து, அவற்றைச் சமற்கிருத இலக்கண முறைகளோடும் ஒப்புநோக்க அறியாத எவரும், திராவிட இலக் கண அமைப்பு முறையும், சொல் லாக்க வடிவங்களும், இன்றியமையாச் சிறப்பு வாய்ந்த அவற்றின் எண்ணற்ற வேர்ச் சொற்களும், எத்தகைய சொல்லாக்க, சொற்சிதைவு முறை களினாலேயாயினும், சமற்கிருதத்தி லிருந்து தோன்றியனவாகும் என்று கூற உரிமையுடையவராகார்.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
தமிழாக்கம்: புலவர் கா. கோவிந்தன்
-விடுதலை ஞா.ம,,12.1.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக