பெரியார் நாடாளுமன்றத்தில் நுழைந்து விட்டார்
ஆரியர் - திராவிடர் போராட்டம்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் சாட்டையடி
புதுடில்லி நவ 27-_ நாடாளுமன்றத்தில் விபரம் தெரியாமல் பேசி மல்லிகார் ஜுன் கார்கேவிடம் உள்துறை அமைச்சர் ராஜ நாத்சிங் மாட்டிக்கொண் டார்.
ஆரியர் - திராவிடர் போராட்டம்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் சாட்டையடி
புதுடில்லி நவ 27-_ நாடாளுமன்றத்தில் விபரம் தெரியாமல் பேசி மல்லிகார் ஜுன் கார்கேவிடம் உள்துறை அமைச்சர் ராஜ நாத்சிங் மாட்டிக்கொண் டார்.
இந்தியாவில் சிலர் மதச்சார்பின்மை பற்றி தவறான கருத்தைக் கூறி யிருப்பதாகவும் அவர் களுக்கு மதச்சார் பின்மை என்றால் என்னவென்று தெரியவில்லை என்றும் கூறினார், மேலும் அம்பேத் கர் கூட மதச்சார்பின்மை என்ற வார்த்தையப் பயன் படுத்தவில்லை என்று கூறி யிருந்தார்.
மதச்சார்பின்மை என்றால் அனைவருக்கும் பொதுவாக இருப்பதாகும், இங்கு ஜாதிமத பேதம் என்று எதுவும் பார்க்காமல் பொதுவாக இருப்பதற்கு பக்கச் சார்பின்மை என்று பொருளாகும், ஆனால் இதை சிலர் மதச்சார்பின் மை என்று தவறான பொருளைத் தந்துவிட்டனர் என்று கூறியிருந்தார்.
மேலும் அவர் பேசும் போது:_ இஸ்லாமியர்களில் 72 பிரிவுகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் இஸ்லாமியர்களிடையே பிரிவுகள் அதிகம் இல்லை, மேலும் இஸ்லாமியர்கள் இந்தியாவில் ஒற்றுமை யுடன் வாழ்கின்றனர். ஆகவே கருத்துப் பிழை யுடைய மதச்சார்பின்மை என்ற வார்த்தையையே எடுத்துவிடவேண்டும் என்று கூறியிருந்தார். ராஜ்நாத் சிங்கின் இந்த கருத்தற்ற பேச்சால் காங் கிரஸ் தலைவரும் நாடா ளுமன்ற எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே சீறி எழுந்தார்.
ஆரியர் - திராவிடர் போராட்டம்
அம்பேத்கர் அரசிய லைப்புச் சட்டத்தில் மதச் சார்பின்மை என்ற வார்த் தையை சேர்க்க எவ்வள வோ முயற்சி செய்தார். ஆனால் நாடாளுமன்றத் தில் இருந்த பார்ப்பனர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
அம்பேத்கரும் நாங் களும் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள், மண் ணின் மைந்தர்கள், ஆனால் ஆரியக்கூட்டமே மாடு களை ஓட்டிக்கொண்டு இங்கு ஓடி வந்தது. எங்களுக்குத் தான் இந்த மண்ணின் மீது உரிமை உள்ளது; ஆயிரம் ஆண்டு களாக நாங்கள் ஆரியக் குடிகளின் கொடுமையைச் சகித்து வந்தோம் என்று அதிரடியாக கூறினார்.
நாடாளுமன்ற வரலாற் றில் முதல் முதலாக ஆரிய திராவிடர் பற்றி பேச்சு எழுந்துள்ளது. இதுவரை நூல்களிலும் பொது மேடைகளிலும் பேசிவந்த திராவிட ஆரியப் போராட் டம் பற்றிய கருத்து நாடா ளுமன்றத்திலும் வெடித்து கிளம்பியுள்ளது. ஆம் பெரி யார் நாடாளுமன்றத்திலும் நுழைந்து விட்டார்.
-விடுதலை,27.11.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக